Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

செய்த தப்பால் திசை மாறும்

வாழ்வை

தப்புகளை வட்டியும்

குட்டியும் வளர விட்டு..

கலங்கும் மானிடா..

உன்

ஒரு தப்புக்கு மனம் வருந்தி..

ஒருமுறை பிராயச்சித்தம்

பண்ணிக்கொள்..

வாழக்கை செழிக்கும் சிறக்கும்

சிறகடிக்கும்..

சந்தோசமாக..

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

சந்தோசமக

ஆடிப்பாடிய காலங்கள்

கனவுகளாக என்னுள்

உயிர் இருந்தும்

இறந்த உடலாக

இன்னமும்

நீ

சந்தோஷமாய்

சில நிமிடங்கள்

சங்கடமாய்

சில நிமிடங்கள்

புரியாமல்

சில நிமிடங்கள்

வேடிக்கயாய்

சில நிமிடங்கள்

வேதனையாய்

சில நிமிடங்கள்

மறக்கமுடியாத

சில நிமிடங்கள்

மறந்திட

சில நிமிடங்கள்

வாழ்கையென்னும்

நிமிடத்தில்

அத்தனையும் நமக்காய்

ஹீ ஹீ முந்திட்டேங்க :mellow::D:D

நீ

கனவு

கயிறு...

பாறாங்கல்.. நீ

அனல்க் கனவு

பூக்கயிறு

மனதால் பாறாங்கல்.. நீ

வேர்க்கவைக்கும் அனல்க் கனவு

கட்டிக்போட நினைக்கும் பூக்கயிறு

எனக்கு மட்டும்

நமக்காய்..

அழகிய உலகம்...

நாம் மட்டும்..

உலகை எரிக்கிறோம்..

பொறுமை கடந்த உலகம்..

வாய் பிளந்துஎம்மை எரிக்கும்..

Edited by vikadakavi

எரிக்கும் நெருப்பாய்

போராடும் வீரனே

உனது கனவுகள்

நனவுகளாகும் நாள்

வெகு தூரத்திலில்லை

எனக்கு மட்டும்

முள்ளாய் குத்திம்

காதல்

நமக்கு

மலராய் மணம்வீசும் நாள்

வெகுதூரத்திலில்லை

எரிக்கும் நெருப்பாய்

போராடும் வீரனே

உனது கனவுகள்

நனவுகளாகும் நாள்

வெகு தூரத்திலில்லை

எனக்கு மட்டும்

முள்ளாய் குத்திம்

காதல்

நமக்கு

மலராய் மணம்வீசும் நாள்

வெகுதூரத்திலில்லை

தூரத்தில் இல்லை-நீ

தூரத்தில் இருந்தும்

உன்னினைவுகளால் நான்

உன்னருகில் வாழ்கிறேன்...!

வடித்திடும் கவிதைகளில்

கருப்பொருளாய் - காதல்

எழுதிய எழுத்துக்களில்

உன்பெயர்தான் அதிகமென்பேன்..!

எழுத்துக் கூட்டி படிப்பவரும்

எனைக் கேட்பார்

இதைத் தவிர- உனக்கு

ஒன்றுமே தெரியாதா....??

பாவம்

அவர்களுக்குத் தெரியவில்லை

என் எழுத்துக்களின்

இடை வெளிகளில் கூட

நீதான் ஒழிந்திருப்பதை....!! :P

:lol:

Edited by gowrybalan

ஒழிந்திருப்பது

நீ கண்டு

ஒழித்தேன் போனாய்

ஒழிந்தவள் தெரியாது

ஒழித்து போனவனே

ஒழிந்தவள் உள்ளம்

கண்டுவா?

ஒருவழிப் பாதை

கனவுகள் சுமக்கும்

பெண்ணென்றால்.........

ஒழிந்திருப்பது

நீ கண்டு

ஒழித்தேன் போனாய்

ஒழிந்தவள் தெரியாது

ஒழித்து போனவனே

ஒழிந்தவள் உள்ளம்

கண்டுவா?

ஒருவழிப் பாதை

கனவுகள் சுமக்கும்

பெண்ணென்றால்.........

பெண்ணென்றால்

முதலில் வருவது

அவள்..!

பிறக்கும் போது

புரியாத பல முகங்கள்

அழுதுகொள்வேன்

அணைத்துக் கொள்வாள்.....

அவள்...!

தட்டித் தடவி

தவளும் போதும்

எட்டிப் பாதங்கள்

பதிக்கும் போதும்

தடக்கி வீழ்வேன்

தாங்கிக் கொள்வாள்......

அவள்...!

கண்கள் விழிக்க வைத்து

கதைகள் கேட்ட போதும்

உள்ளே இருக்கையிலே

எட்டி உதைத்த போதும்

சற்றும் சலிக்காமல்-எனை

வருடி வளரவைத்தாள்......

அவள்...!

காய்ச்சல் வந்து

படுக்கும் போதும்

கற்கள் முட்கள்

தைக்கும் போதும்

எனது நோயால்

தானே நோவுறுவாள்.....

அவள்...!

முற்றத்து மண்ணில்

சுண்டுவிரல்- தான் - பிடித்து

''அ'' சொல்லித்தந்த

முதல் ஆசிரியை....

அவள்...!

ஆம்.....

கண்கண்ட தெய்வம்

அவள் !

கற்பிக்கும் ஆசான்

அவள் !

பத்துமாதம் மடியிலும்

மிச்சக்காலம்

மனதிலும் சுமக்கின்ற

தாய் அவள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்றால்

முதலில் வருவது

அவள்..!

பிறக்கும் போது

புரியாத பல முகங்கள்

அழுதுகொள்வேன்

அணைத்துக் கொள்வாள்.....

அவள்...!

தட்டித் தடவி

தவளும் போதும்

எட்டிப் பாதங்கள்

பதிக்கும் போதும்

தடக்கி வீழ்வேன்

தாங்கிக் கொள்வாள்......

அவள்...!

கண்கள் விழிக்க வைத்து

கதைகள் கேட்ட போதும்

உள்ளே இருக்கையிலே

எட்டி உதைத்த போதும்

சற்றும் சலிக்காமல்-எனை

வருடி வளரவைத்தாள்......

அவள்...!

காய்ச்சல் வந்து

படுக்கும் போதும்

கற்கள் முட்கள்

தைக்கும் போதும்

எனது நோயால்

தானே நோவுறுவாள்.....

அவள்...!

முற்றத்து மண்ணில்

சுண்டுவிரல்- தான் - பிடித்து

''அ'' சொல்லித்தந்த

முதல் ஆசிரியை....

அவள்...!

ஆம்.....

கண்கண்ட தெய்வம்

அவள் !

கற்பிக்கும் ஆசான்

அவள் !

பத்துமாதம் மடியிலும்

மிச்சக்காலம்

மனதிலும் சுமக்கின்ற

தாய் அவள்..!

தாய் அவள்..! துடித்திருப்பாள்

சேய் அவள் அழுகை கண்டு

ஆய் கொடுத்து அள்ளியே

அணைத்திடுவாள்

ஒய் யாரமாய் கைகள்தனை

ஊஞ்சலாக்கி அழுதைதனை

ஆற்றிடுவாள் அன்பாலே

அன்பால் எனை

அணைத்து

தன்

இதயக்கோவில்

என்

உருவம் பதித்தவனின்

சிதறுகின்ற

கற்பனையும் உதிர்கின்ற

பூக்களும்

அவன்

நினைவைச் சொல்ல

இவள்

கனவுகளை

தென்றல் காற்றிடம

சொன்னால்

அவன்

காற்றாய் இருப்பதால்

Edited by கஜந்தி

மாறியதால் மயங்கிவீழ்ந்தேன்

மரணத்திலும் மறக்கமாட்டேன்

கூறிய வார்த்தையினை

கூடிவாழ்ந்த காலங்களை

சுற்றும் பூமி சுற்றட்டும்

சூரியன் எரிந்து வீழட்டும்

எச்சமரிலும் எம்படை தோற்காது

கைகொடுத்த அண்ணனை

தோள்கொடுத்த நண்பர்களை

துரத்தி துரத்தி கொன்றவனே

நீ மாறியதால் மயங்கிவீழ்ந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயங்கி வீழ்ந்தேன் உந்தன் மார்பில் மலர் மாலையாய்

சயணித்து கண'மூடி சங்கமிக்கும் அந்திப் பொழுதில்

உந்தன் உள்ளத்து உஷ்ண சுவாசம் வெப்பமாய்

எந்தன் மீது பட்டே கண் விழித்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழித்தேன்! என் இரவுகள்

சமாதியாக்கப்பட்டன! தோழா!

காலங்கள் நம்மைக் கட்டிபோட

அனுமதியாதே!. இன்றாயினும்

நீயும் விழித்தெழு!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழித்தெழு நெஞ்சில் உரங்கொண்டு விழித்தெழு

விழித்தெழு எண்ணங்கள் செயலாகும் வரை

விழித்தெழு விதைகள் விருட்சங்கள் ஆகும்வரை

விழித்தெழு பெண்ணே அடிமை வாழ்வு நீங்கும்வரை

விழித்தெழு தமிழினமே உரிமைக்காய் போராடு

போராடு போராடு தமிழர் தம் உரிமைகாய் போராடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடு! போராடும் மனிதன்

தான் வரலாறு! மண்ணோடு

போராடும் விதைதான்

விருட்சமாகின்றது!

போராடும் விந்துதான்

கருவாக உருவாகும்! நீ

பேர் பொறிக்க

பிறந்தவன்!துணிந்து எழு!.

துணிந்து எழு

துயிலெழுப்பு

துயரச்சுமைகளை தாங்கிமடியும்

தூரத்துப்பச்சைகளை

அடுக்கடுக்காய் அரிநதெடுக்க

வயலில் விளையும் அருவிகளா நாங்கள்

வம்சத்திலேயே வன்மம் கொண்ட

சிங்களப் பேடைகளா நாங்கள்

இல்லை

இல்லவே இல்லை

ஓடும் குருதியிலும்

வீரம் காணும் மறவர்கள் நாங்கள்

தமிழர்களடா தமிழர்கள்

தமிழர்கள் நமக்காய்

ஒர் இடமின்றி

தவித்திட் காலம்

வென்று எமக்காய்

வரைத்திட்ட தேசத்தின்

புதிய பூபாலம்

எமக்காய் பிறக்க

நம் வீரர் உறுதிகொண்டு

இணைந்திடுவோம்

ஈழத்தின் தாகத்தோடு

Edited by கஜந்தி

ஈழத்தின் தாகம் தீர்க்க

இணைவோம் மழைமேகமாய்

மண்ணோடு வீழ்ந்து மறையாமல்

வீழ்கின்ற துளிகள் யாவும்

விதையாக

விருட்சத்திற்கு உரமாக

வென்று சேரட்டும்

வென்று சேரட்டும்

கைகள்

ஒன்று கூடட்டும்

இதயங்கள்

வெடித்து சிதறிய

மனிதநேயத்தால்

சிதறிக் கிடக்கும் எம்

உறவின் துயர்காத்து

இருளில் புதையும்

மண்ணின்

விடியலைத் தேடி

ஒன்று சேரட்டும்

கைகள்

கைகள் ஓங்கட்டும்

கனவுகள் பலிக்கட்டும்

வென்றது புலி என

புவி அதிரட்டும்

தேசம் ஆளட்டும் புலிக்கொடி

தேசியம் தேசியம் என

தமிழினம் தினம் தினம்

குதூகலிக்கட்டும்

கும்மாளமிடட்டும்

எம்மவர் வெற்றிச்செய்தினை

எங்கு சென்றினும்

வாழ்த்தி வணங்கட்டும்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கட்டும் உலகம்! உலக

சுகம் துறந்து மண்ணுக்காய்

உடல் தந்த உத்தமரை

வாழ்த்தட்டும் பூமி! பருவக்

காதலில் பிழறுண்டு போகாமல்

விடுதலைப்பயிருக்காய்

வித்தான வீரர்களை!.

துதிக்கட்டும் வையகம்!

துணிவோடு களமாடிய

எம் காவிய நாயகரை!.

பாடட்டும் பலபாக்கள்!

சுதந்திர காற்றுக்காய்!

தம் உயிர் கொடுத்த

மறவர்களை!.

மறவரடா தமிழர்

மண்மீது உயிர்கொண்டு

மண்ணிற்காய் உயிர் தந்து

மண்மானம் காத்த

மறவரடா தமிழர்

பெருமையடா தோழா

பேருவகை கொள்ளடா

தமிழராய் நாம் பிறக்க

என்ன தவம்தான் செய்தோமோ

ஆயிரம் மொழிகள் கற்று

அன்னிய தேசம் பல கண்டு

ஊடுருவி உலகை ஆண்டு - இன்று

உலகை எம் பக்கம் ஈர்த்து

வென்று நிற்கின்றோம் தமிழா

நாம் வெற்றி கொள்கின்றோம்

கொள்கின்றேன் நான்

ஏதோ சிந்தனை

ஏதோ கற்பனை

விடியா இரவு

ஏக்கங்கள் சொல்ல

பிரிவின் துயர்

நெஞ்சோடு வாட்ட

உணர்வின் தவிப்பில்

எரிகின்ற நெருப்பில்

துடிக்கும் இதயத்தின்

சுவாசத் தீண்டலில்

தெரியா கவிதையாய்

காய்கின்றேன்

குளிர் நிலவில்

குளிர் நிலவில்

குதுகலமாக

நீயும் நானும்

கை கோர்த்து

நடந்து சென்று

புளியங்காய் பொறுக்கிய

நினைவுகள் இன்றும்

என் நெஞ்சில்

பசுமரத்தாணியாக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.