Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரைமுறை இல்லா வாழ்வில்

கரை காணா உலகமதில்

இரை தேடும் பறவைகளாய்

ஊர் விட்டு ஊர் வந்த

ஊர்க்குருவிகளா நாங்களா

நிறைவு தேடி அலையும் பயணத்தில்

குறை என்ற காற்புள்ளியில்

அக்கரை பச்சைக்கு இக்கரையாயும்

இக்கரை பச்சைக்கு அக்கரையாய்

அலையும் ஊர்க்குருவிகளா நாங்கள்

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பறக்கின்றோம்,

எங்களுக்கு இறக்கைகள்

இயல்பாக முளைக்கவில்லை!

வாழ்விழந்த எங்கள் மீது,

வலிந்து கட்டப் பட்டவை அவை!

அக்கரைப் பச்சை தேடி

அலைந்து திரிந்ததில்லை!

எக்கரையாயினும் போதுமென்று,

ஏதிலிகளாய் அலைகிறோம்!

இரை தேடும் பறவைகள் அல்ல,

இரையாகும் பறைவைகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறைவைகள் பறந்து திரிகையில்

இறைக்கைகள் எனக்கிருந்தால்

சிறைக்குள் அடங்கா வாழ்வாய்

மண்ணை விட்டு தொலைவில்

விண்ணைக் தொட்டு விளையாடும்

கண்சிமிட்டும் விண்மீனின் ஒளியில்

பா வரையும் பாவலனை ஒருமுறை

பார்த்திட வேண்டும் ஒரு நொடியில்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நொடியில் உயிர் உலுக்கும்,

உனது விழிகளின் அசைவு கண்டு,

பெரு நெருப்பாய்க் கொதிக்கும்,

மூச்சுக்காற்றின் அனலில்,

முழுவதுமாய் எரிந்து,

கரியாகிப் போனாலும்,

ஒரு முறையேனும்,

உனது மலரிதழ் கவ்வின்,

பிறவியெடுத்த பெரும் பயனைப்,

பெற்றதாய் மகிழ்ந்து,

உன் மடியில்,

உயிர் விடுவேன்!!!

(வயது வந்தவர்களுக்கு, மட்டும் :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுவேன் உயிரை உனக்காக

உயிர் மூச்சின் வலி

அனலாய் கொதித்தெழுகையில்

ஸ்பரிசங்கள் தந்திடும்

நரம்புநாளங்களின் துடிப்பினில்

மயக்கத்தின் விளிம்பில்

வார்த்தைகள் சங்கீதமாய்

ஒலிக்கின்ற வேளையிலும்

எப்படி மறப்பேன் உன்னை நான்

என் இதயம் உயிரோடு இருக்கும்வரை

வாழ்வதும் வீழ்வதும் விதியின்

கைகளில்.........

  • கருத்துக்கள உறவுகள்

கைகளின் விரல்கள்,

காரிருள் நேரத்திற்காகக்

காத்திருந்து,

கருங்கூந்தல் தடவிக்

காதல் மொழி பேசுகையில்,

கனவுலகில் மிதக்கும் களிப்பில்,

ஓவியத்தின் கோடுகள் போல்,

ஒளிரும் உனது முகத்தின்,

உருவத்தின் வடிவமைப்பில்,

பிரமதேவனின் கைவண்ணம் கண்டு,

பித்துப் பிடித்தவனாய்,

பிரமிப்பின் உச்சத்தில்,

படைப்பின் மூலத்தைப்

புரிந்தும், புரியாதவனாய் நான்!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நானாகி என்ன கண்டேன்

எப்போது நாமாகி நாங்களாகி

எழுவோமென்ற எதிர்பார்ப்பில்

இப்போதும் வாழுகின்ற

தமிழீழப் பக்தர்களோ

ஏக்கத்தோடு வாழுகின்றார்

வாழ்க்கை வழமாக

வசமாக வேண்டுமெங்கள்

தமிழீழ தேசமன்றோ

தேசமது வசமாகத் தமிழருக்குத்

தேவையின்று ஒற்றுமையே!

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையே உயர்வென்று,

ஓலமிட்டு, உரத்துக் கத்துகையில்.

காற்றில் பறந்து அந்த வார்த்தை,

கரைந்து விடும் முன்பே,

உறவா அன்றிப் பகையா எனப்

பிரித்துணர முடியாத வடிவங்களில்,

உருவெடுக்கும்,

உள் வீட்டுத் துரோகிகளை,

அடையாளம் கண்டு,

அவர்களது அடிக்கருத்துக்களின்,

ஆழங்கள் தெரிகையில்,

வானத்தில் தோன்றும்,

விடுதலையின் விடிவெள்ளி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி தந்ததோ வெளிச்சம்

விருட்சமாய் பற்றிப் படர்ந்து

வேருண்டிய வேளைதனில்

விடிவெள்ளியும் விடைபெற்றுச் சென்றதே

அசையா மனங்களின் நம்பிக்கைகளும்

அடி வேரும் அல்லற்பட்டு அசைந்ததுவே

அச்சாணி இழந்த வண்டிச் சக்கரங்களிடையே

ஆடிப்போன வாழ்க்கை

விடுதலை நிரப்பப்படாத ஓர்

இடைவெளிதனில் வாடிக்கையாகிப்போன

சோகங்களின் மத்தியில் உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் இருப்புக்காய்

உயிரீந்தோர் நிழலாக

உலகத் தமிழ் உறவுகளே

ஒருகொடியாய் திரண்டெழுந்தால்

பகைப்புலமே பொடியாகும்

பாரிலெங்கள் கொடியாடும்

கொடியாடும் நிலையென்று

இவ்வுலகில் வருகிறதோ

அன்றுதான் எங்களுக்கோர்

அர்த்தமுள்ள வாழ்வாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு என்ற கானகத்தில்,

வாடிப் போய்ச் சருகுகளாகி,

வேர்களுக்கு உரமாகி,

கொம்புகள் வெட்டப் பட்ட,

கொப்பிழந்த மரங்கள் நாங்கள்!

புதிதாய் வளரும் கொப்புக்கள் கூடப்,

புத்தபெருமானின் பெயரால்,

பிடுங்கி எறியப் படுகின்றன!

காய்ந்த போன ரணங்களும்,

தீய்ந்து போன உடல்களுமாய்,

வானம் பார்த்துக் காத்திருக்கும்,

வாழ்விழந்த மரங்களாய் நாம்!

காலதேவனின் அழுங்குப் பிடிகள்,

விலகும் வேளையில், எங்கள்

பொழுதும் ஒரு நாள் விடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

விடியுமென்ற நம்பிக்கையே

விடாமுயற்சியென்ற பொறியாக

ஒன்றுபட்டு உயர்ந்தெழுந்தே

விழுதூன்றிய தமிழர்களோ

வேருக்கு நீரானால்

பழுதேதும் இல்லாது

எம் தேசம் எமதாகும்!

எமதாகும் வேளைவரை

கரங்கோர்த்து நிரையாகிக்

காலமதை எமதாக்கி

எம் மக்கள் வாழ்வினிலே

இன்ப ஒளி ஏற்றிடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றிடலாம்,

இதுவரை காலமும்,

எரிமலையாய்க் குமுறும்,

எமது விடுதலை என்னும்,

அணையாத தீபத்தை!

இடும்பன் கொடிபோல,

இணைந்து,

இறுக்கமாகப் பிணைந்து,

ஒரே மரமாகி,

அறுத்தெறிய முடியாத,

பெரு மரமாகும் போதில்,

ஏற்றிடலாம்,

எமது விடுதலை என்னும்,

அணையாத தீபத்தை!

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்தை ஏற்றுதற்கு

திடமான மனம் வேண்டும்

விலைபோகாக் குணம் வேண்டும்

அயராத உழைப்பு வேண்டும்

அலுக்காத செயல் வேண்டும்

அனைவரும் இணைய வேண்டும்

அயலகமும் உதவ வேண்டும்

புயலாக எழ வேண்டும்

அறிவோடு அணுக வேண்டும்

ஆற்றல்கள் அணியாக வேண்டும்

தூற்றல்கள் ஒழிய வேண்டும்

தூய்மையோடு பேச வேண்டும்

நாற்றிசை ஏக வேண்டும்

நாமெல்லாம் ஒற்றாக வேண்டும்

நமக்கானதைப் பெற வேண்டும்

நம் உள்ளமெல்லாம் மகிழ்ந்தாடும்

நாளொன்று மலராதோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலராதோ மங்கையின் புன்னகை

மலர்ந்திடாதோ அழகின் தரிசனம்

எல்லாம் நீயே என பாதந் தொட்டு

வெல்லம் போல அன்பைச்செறிந்து

மெல்ல கதைகள் பல பேசி பேசியே

வெல்லத்தான் முயல்கிறேன் நிதமும்

வலைத்த வலையில்தான் விழுவாயா

  • கருத்துக்கள உறவுகள்

வலையில் தான் விழுவாயா பெண்ணே

வஞ்சகரின் பொய் முகம் அறியாது

போர் தந்தவடுக்களும் சுமைகளும்

முடிவில்லாத வேதனைகளும்

தந்தை இழந்த சோகமும்

கண் காணாத பிள்ளையின் ஏக்கமும்

தாயாய் தந்தையாய் வழி நடத்த

வேண்டிய நிர்பந்தமும் கண்டு

பெண்மையை சூறையாடும்

நெஞ்சு நிறை ந்த வஞ்சகரின்

சகவாசம் கண்டு விழித்தெழு பெண்ணே

பெண்ணே விழுவாயா?

இல்லையடி.......

இன்று உன் செவ்வாய்

தனிமைதான்

என் தொல்லையடி

Edited by thappili

தொல்லை செய்த

உன் செவ்வாயில்

விழுந்தேனே,

வடிந்த

கள்ளுண்டு மயங்கித்

தள்ளாடிப்போனது என் மோகமடி.....

:D

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

கவிதை அந்தாதி

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை அல்லது எழுத்தை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

மாத்தினாப் போச்சு கறுப்பி..இப்ப சரியா..? கவிதை மேலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தினாப் போச்சு கறுப்பி..இப்ப சரியா..? கவிதை மேலே

நன்றி நெருப்பு. :)

கறுப்பி

ஆரம்பத்திலேயே நான்தான் பிழை விட்டேன். இனி திருத்தி பதிவுகளிடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி

ஆரம்பத்திலேயே நான்தான் பிழை விட்டேன். இனி திருத்தி பதிவுகளிடுகிறேன்.

நன்றி நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

மோகமடி, உன்மீது!

முகத்தில் சிரிக்கும்,

முல்லைப்ப் பூக்களாய்,

ஒளிரும் உன் பற்கள் கண்டு!

காதலடி, உன்மீது,

கருக்கொண்ட நீல மேகமாய்,

கழுத்தை மறைத்துப்,

புரளும் கருங்கூந்தல் கண்டு!

நேசமடி, உன்மீது, நீ,

நிலாமதியாய் மாறி,

மலரொன்றின் மென்மையுடன்,

முகில் தடவும் போது,

நொச்சி இலைகளின் அசைவுகள்,

நீவி விடும் வாசத்தில்,

தாகத்தின் கொதி நெருப்பில், நான்

தப்பிலியாய் மாறமுன்பு, என்

கண்ணில் இருந்து மறைந்து,

கனவாக மாறிவிடு 'கறுப்பி!:

கறுப்பி இருளரசியைக்

கலைத்துவிட்டு

வானேறி வலம்வந்த

கதிரவனின் கண்பட்ட

கணம்தொட்டுத் தனையிழந்து,

வான்நோக்கி

மோகித்து ஆவியாகித்

தானிருந்த நிலைமறந்து

திசைதொலைத்து,

வானலையும்

மேகத்துள் சிறைப்பட்டு

தப்பிலியாய்த் தானலைந்து,

மோகப்பித்தொழிந்து,

நிலாமதியின் குளிர்விப்பில்க்

கருக்கொண்டு

மழையாகி நிலம்நோக்கி

நொச்சிகள் தாலாட்டும்

புங்கையூரான் முற்றத்தில்

புகுந்தது தஞ்சமென்று,

தாய்வீடு நோக்கித்

தப்பித்த மழைத்துளி ஒன்று...

:D

Edited by நீலமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.