Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார செயற்றிட்டம் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ab4ebe8137281068e0b7831b9be85cae.jpg

மாவீரர் குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது  வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின்  ஊடாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என  வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 
வடக்கு மாகாண சபையின்  வரவு -செலவுத்திட்ட அமர்வின் போது அமைச்சர் டெனீஸ்வரனால் குறித்த கொள்கைத் திட்டம் சபையில் வெளியிடப்பட்டது. 
 
அதற்கமைய நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/News_More.php?id=489043883420834125

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே புரியல இவர்களது அரசியல்...

யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும்...

சுதந்திரதினத்தில் கலந்து சங்கமமாகிறார்கள்

அப்புறம் போர்க்குற்றம் தேவை என்று தீர்மானம் போடுகிறார்கள்

தேர்தல் ஒன்று வரவிருக்கும் தருணத்தில் மாவீரர்கள் பற்றி பேசுகிறார்கள். செயற்படுகிறார்கள்.

மகிந்த வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும்

எந்த ஒரு அதிகாரமும் இல்லாத மாகாணசபையை  வைத்துக்கொண்டே இவ்வாறு நடந்து காட்டினால்

அதுவும் தேர்தல் வரும் நேரத்தில் 

சிங்களமக்களுக்கு இனவாதம் எதை முன்னுதாரணம் காட்டும்??

இதைக்கூட அறியாதவர்களா அரசியலில் இருக்கிறார்கள்...??

இங்கு மாவீரர்களுக்கோ குடும்பத்துக்கோ ஏதாவது செய்யவேண்டும் எனில்

இவ்வளவு ஆரவாரம் தேவையா??

புத்திசாலித்தனமாக எவ்வளவோ  செய்யலாம் என்பதே எனது கவலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே.. உங்களுக்கே விளங்கப்படுத்த வேண்டுமா?

தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் இந்த திட்டத்தை அறிவித்தால் சிரிக்க மாட்டீர்களா? அதுதான் 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்திருக்கிறார்கள் ‘கொள்கைத் திட்டம்’ என்று.

திட்டம் கொள்கையளவில் இருக்கு...  விண்ணப்ப முடிவுத் திகதி அடுத்த மாதம்... விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிக்க ஏப்ரல் மாதம்... அது பற்றி சபைக்கு அறிவிக்க மே மாதம்... அதன்பின் ஒப்புதல் பெற்று, நிதி ஒதுக்கீடு செய்து, இடம் பார்த்து..... ஏனண்ணே எந்த மாதம் தேர்தல்?

அது எனக்கும் தெரிகிறது ஐயா

தமிழர்களை விடுங்கோ

அவர்களுக்கு கூட்டமைப்பை வேறு வழியில்லை

ஆனால் இது சிங்களவரிடம் தேவையற்ற சீண்டுதல்களையும்

பகையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துமே தவிர வேறு என்ன லாபம்??

அப்படியென்றால் சாணக்கியம் என்னாச்சு..?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன்,  சுமந்திரன், விக்கினேஸ்வரன் சொல்வதுதான் ஓமந்தைக்கு தெற்கே போய் சேரும்.

மீதி பேர் என்ன சொன்னாலும், உதயன், வலம்புரி தாண்டாது. பா.டெனிஸ்வரன் யார் என்று மானிப்பாயிலேயே பாதிப் பேருக்கு தெரியாது. இவரது பேச்செல்லாம் மொழிபெயர்க்கப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் சாணக்கியம் என்னாச்சு..?

இங்கே இருக்கின்றது சாணக்கியம் 

சம்பந்தன்,  சுமந்திரன், விக்கினேஸ்வரன் சொல்வதுதான் ஓமந்தைக்கு தெற்கே போய் சேரும்.

மீதி பேர் என்ன சொன்னாலும், உதயன், வலம்புரி தாண்டாது. பா.டெனிஸ்வரன் யார் என்று மானிப்பாயிலேயே பாதிப் பேருக்கு தெரியாது. இவரது பேச்செல்லாம் மொழிபெயர்க்கப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்,  சுமந்திரன், விக்கினேஸ்வரன் சொல்வதுதான் ஓமந்தைக்கு தெற்கே போய் சேரும்.

மீதி பேர் என்ன சொன்னாலும், உதயன், வலம்புரி தாண்டாது. பா.டெனிஸ்வரன் யார் என்று மானிப்பாயிலேயே பாதிப் பேருக்கு தெரியாது. இவரது பேச்செல்லாம் மொழிபெயர்க்கப்பட மாட்டாது.

சிங்களவர்களை மீண்டும் மட்டமாக  எடை போடுகிறார்கள் என்பதே எனது ஆதங்கம்

ஒரு காலத்தில் நீங்கள் சொல்வது   போலிருந்தது  தான்

ஆனால் இன்று வடக்கிலுள்ள  இராணுவமுகாமுக்கு

அவர்களே கல்லை எறிந்து 

அதை செய்தியாக்கி

தெற்கே கொண்டு திரிகிறார்கள்

இது தான் களநிலை........

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் நலன்களில் உள்ள அக்கறையை விடக்

கூட்டமைப்பின் நலன்களைத் தக்க வைப்பதிலேயே அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களை மீண்டும் மட்டமாக  எடை போடுகிறார்கள் என்பதே எனது ஆதங்கம்

ஒரு காலத்தில் நீங்கள் சொல்வது   போலிருந்தது  தான்

ஆனால் இன்று வடக்கிலுள்ள  இராணுவமுகாமுக்கு

அவர்களே கல்லை எறிந்து 

அதை செய்தியாக்கி

தெற்கே கொண்டு திரிகிறார்கள்

இது தான் களநிலை........

மன்னிக்கவும் விசுகு.. பாதியில் சுடு பாண் வாங்க போய்விட்டேன்.

நீங்கள் சொல்லும் முகாமுக்கு கல்லெறிவது சென்சேஷனல் நியூஸ். இவர்களே உருவாக்கும் செய்தி. கல்லெறிவதற்கு முன்பே சிங்களத்தில் நியூஸ் எழுதி கொடுத்து விடுவார்கள். அது ஆங்கிலத்திலும் வரும்.

நான் குறிப்பிட்டது அரசியல் செய்தி. அதை சொல்லும் ஆளுக்கு ஒரு face value இருந்தால்தான் தெற்கே செய்தியாக மொழிபெயர்க்கப்படும். இங்கு தினமும் அனைத்து ஆங்கில பத்திரிகைகள் படிக்கிறேன். அதிலிருந்து இவர்கள் செய்தி போடும் பாணி புரிகிறது.

தமிழர் பற்றிய செய்திகள் என்றால் ஒரு வரிசை உள்ளது. 

1) சம்பந்தன்

2) சுமந்திரன்

3) விக்கினேஸ்வரன்

4) வைகோ

5) கே.பி.

6) உருத்திரகுமாரன் (தமிழீழ தேசியப் பிரதமர்)

மீதி ஆட்கள் என்று பார்த்தால், சில வேளைகளில் கருணாநிதி, ஜெயலலிதா.

இவர்கள் சொன்னால் செய்தியாகும். மீதி ஆட்கள் சொல்வதை கண்டுகொள்வதில்லை.

இலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளின் அபிமானத்தை பெற்ற புலம்பெயர் தமிழர், ‘மாண்புமிகு’ பிரதமர்தான்! செய்தி ஒரே தமாஷாக இருக்கும் என்பது வேறுவிஷயம்.

Edited by sabesan36

தாங்கள் பதிவு தளத்தை வாசிப்பதில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் பதிவு தளத்தை வாசிப்பதில்லையோ?

அந்த நல்ல பழக்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் பதிவு தளத்தை வாசிப்பதில்லையோ?

முன்னோர்கள் சொல்வார்கள்

எதை வெறுக்கின்றோமோ

 அதாகவே  நாம் ஆகிவிடுகின்றோம் என..

வெளியில் வாருங்கள் ஐயா..

மற்றவரை மட்டம் தட்டியது போதும்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்ல பழக்கம் இல்லை.

சத்தியமாக இது நல்ல பழக்கமில்லை... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாக இது நல்ல பழக்கமில்லை... :D

நீங்கள் சொன்னதற்காக நல்ல பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பி, அங்கே இன்று எட்டிப் பார்த்தேன். பார்த்துவிட்டு அதுபற்றி எழுதலாம் என்று இங்கே வந்தால், உங்கள் ப்ரொஃபைலில் உள்ள வாசகம் கண்ணில் பட்டது..
 
அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

முதுகில் அறை விழுந்தது அண்ணே! இனி எதைக் காட்ட?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதற்காக நல்ல பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பி, அங்கே இன்று எட்டிப் பார்த்தேன். பார்த்துவிட்டு அதுபற்றி எழுதலாம் என்று இங்கே வந்தால், உங்கள் ப்ரொஃபைலில் உள்ள வாசகம் கண்ணில் பட்டது..
 
அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

முதுகில் அறை விழுந்தது அண்ணே! இனி எதைக் காட்ட?

என்னத்தை சொல்ல... :(

இதுவும் கடந்து போகும்... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை சொல்ல... :(

இதுவும் கடந்து போகும்... :(

அண்ணே.. Frère être remonter le moral (எனது பிரெஞ்ச் கொஞ்சம் கத்திப்பிடிதான். பிழை திருத்த மகள் அருகில் இல்லை. எழுதியது சரியா?)

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. Frère être remonter le moral (எனது பிரெஞ்ச் கொஞ்சம் கத்திப்பிடிதான். பிழை திருத்த மகள் அருகில் இல்லை. எழுதியது சரியா?)

எதற்கு வேற்றுமொழி நமக்குள்??

நீங்கள் சொல்லவருவது வெளிநாட்டவன் என்பதால் எனக்குப்புரியுது

ஆனால் இது  பிரெஞ்சல்ல...

இப்படி வரலாம்...

Entre frère nous nous soutiendrons  et  nous nous remontrerons le moral.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கு வேற்றுமொழி நமக்குள்??

நீங்கள் சொல்லவருவது வெளிநாட்டவன் என்பதால் எனக்குப்புரியுது

ஆனால் இது  பிரெஞ்சல்ல...

இப்படி வரலாம்...

Entre frère nous nous soutiendrons  et  nous nous remontrerons le moral.

அதேதான். கொஞ்சம் தடக்கிவிட்டேன். மேலதிக பயிற்சி தேவை என்று புரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.