Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மக்கள் மீதான இந்தியயாவின் நிலை..

Featured Replies

யாழ்பாணத்தில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் 6 இலட்சம் மக்களின் நிலையைக்கண்டு இந்தியா என்னும் மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுன்வரவில்லை. அன்று இலங்கை அரசின் அனுமதியில்லாமலே வான்வழியாக உணவுப்பொதிகளைக் போட்டவர்கள் இன்று மெளனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டு முதலமைச்சரும் குரல் கொடுக்காதது எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அரபுநாட்டில் இருந்து உணவுப்பொருட்கள் விமானமுலம் அனுப்பிவைக்கிறார்கள் ஆனால் இந்தியா என்ன செய்தது? இந்தியா தமிழ்நாட்டில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் தமது இனம் அயல் நாட்டில் அழிந்துகொண்டிருப்பதை இன்னும் பார்துகொண்டிருப்பார்களா?? இதற்கு அவர்கள் தான் செயல்முலம் பதில் செல்லவேண்டும்....

எதிர்வரும் காலத்தில் இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கையில் எமக்கு சார்பான மாற்றங்கள் ஏற்படுமா??????

அன்புடன்

சரா

Tamil Nadu State government is not doing anything How can you expect Indian Government to act ???

சிங்களவனுக்குத் தலையையும் தமிழனுக்கு வாலையும் காட்டும் இந்திய வெளியுறவுக் கொள்கை இருக்கும் மட்டும் இந்தியாவின் கதி அதோகதி தான் ஏதோ ஒரு பக்கத்துக்கு சார்பாகவோ அல்லது மனசாட்சிக்கு ஏற்றாப்போல் தமிழருக்கு சார்பாகவோ முடிவு எடுத்தால் தம்நாட்டின் பல பிரச்சனைக்கு முடிவு காணலாம். அன்றேல் இந்தியாவின் நிலை பரிதாபத்துக்குரியது. காலந்தாழ்த்தாது எடுக்கும் முடிவிலேயே அந்நாட்டின் நன்மையும் தீமையும் தங்கியுள்ளது.

மத்தியில் இருப்பவர்களுக்கு முன் மாநிலத்திலிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றினைந்தால் எம் பிரச்சனைகளுக்கு எப்போதோ விடிவு கிடைத்திருக்கும். பதவி ஆசையும் அரசியல் லாபங்களும் முன்னிலைப்படுத்தும் வரை இவர்களை நம்ப முடியாது நம்பவும் கூடாது.

ஈழத்திலிருந்து

ஜானா :mellow:

  • தொடங்கியவர்

இந்தியாவின் தலையிடில்லாமல் எமக்கு விடிவு இல்லை என்று எமக்குத்தெரியும் ஆனால் இன்றைய நிலையைபார்த்தால் இந்தியாதான் எமது நிலைக்கு காரணம் போல தெரிகிறது. அவர்கள் எமதுக் கென்றொரு தனிநாடு உருவாகிவிட்டால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பாகவிருக்கும் மற்றும் இந்தியதமிழர்களும் எங்கே தனிநாடு கேட்டுவிடுவார்கள் என்ற பயம் காரணத்தால் இந்நிலையில் உள்ளார்கள். ஆனல் இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள்களின் வெறுப்பால் இந்திய அரசு எது நடக்கக்௬குடாது என்று நினைக்கிறார்களோ அது மேலும் உரப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கையில் மாற்றத்தை எற்படுத்தவைக்கவேண்டியவர்கள

மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?

வீதிகளில் இறங்கி புரட்சி செய்ய வேண்டும் என்றா?

அவர்களால் தேர்தலில் உள்ள தெரிவுகளில் ஒன்றறைத் தெரிவு செய்வதை விட வேறோன்றும் செய்ய இயலாது.

தற்போது அவர்களுக்க உள்ள தெரிவுகளும் இலவச தொலைக்காட்சி பெட்டி, காணித் துண்டு, வேட்டி சேலை என்று அறிக்கை விட்டு வாக்குகளை அள்ளும் நிலையில் இதுவெல்லாம் சாத்தியமா?

மத்திய அரசை எம்பக்கம் திருப்புவதற்கு நாம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது முன்றையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

1) பொருளாதார பலம் (சிதைக்கப்பட்டுவிட்டது)

2) இராணுவ பலம் (மேலோங்கிய பலம் தேவை)

3) அரசியல் பலம் (ஒட்டு மொத்த தீவை கருதுகையில் சிறுபான்மை என்ற வகையில் அரசியல் பலமும் இல்லை)

இவையனைத்தையும் விட இன்னுமொரு குறுக்கு வழியுள்ளது. அது 80 களில் இந்திய அரசு எதிர்பார்த்தது போன்று சரணாகதியடைவது. அதாவது ஒரு கைப்பொம்மையாக மாறுவது. நாம் அதற்கு மறுத்துவிட்டோம்.

ஆனால் எதிரி அதற்க்கு உடன்பட்டு (மட்டுப்படுத்தப்பட்ட அளவில்) இந்திய முதலீடுகளுக்கு வாய்பளித்துள்ளான். இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம், அப்பல்லோ வைத்தியசாலை, வாகனங்களுக்கு சந்தை வாய்ப்பு என இன்னும் பல.

ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. அண்மையில் கூட இந்தியா ஆயுதம் வழங்க மறுத்தபோது இங்கே அரசு இந்திய அனுமதிகளை பறிமுதல் செய்ததோடு, இந்திய பெற்றோலிய நிலையங்களுக்கு குண்டு வீசப்பட்டன. சில தீவைக்கப்பட்டன. இப்போது அப்பல்லோ மருத்துவமனையும் பறிபோய்விட்டது.

சிறிலங்காவின் பிரச்சனை எப்போது முடிவுக்கு வருகின்றதோ அன்றே அது இந்தியாவிற்கு முழு எதிரிநாடாகிவிடும். இது இந்தியாவுக்கும் தெரியும் இருந்தபோதும் யாரை நண்பனாக்குவது யாரை எதிரியாக்குவது என்ற தெரிவில் தற்போதைக்கு சொற்ப நலன்களை கருத்தில் கொண்டு இந்தியா எமக்கு எதிரான கொள்கையையே கொண்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.