Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான்

 

'''450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்’னு அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் 'அகர முதல எழுத்தெல்லாம்...’னு சொன்னான். ஹைட்ரஜன் இரண்டு சதவிகிதமும் ஆக்ஸிஜன் ஒரு சதவிகிதமும்  இருந்தா  H2O என்கிற நீர் உருவாகும். இதைத்தான் என் முப்பாட்டன் 'நீரின்றி அமையாது உலகு’னு சொன்னான். அந்தத் தண்ணியை, இயற்கையை வழிபட்ட அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஓட்டை. நம்  மொழியை, பண்பாட்டை, இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா, காட்டுல வாழும் மானும் மயிலும் சிங்கமும் புலியும் எங்கிட்டுப்போய் தண்ணி வாங்கிக் குடிக்கும்? உங்களுக்கு நான் சொல்றது விளங்கும்னு நினைக்கிறேன்...'' - இப்படித்தான் ஆரம்பித்தார் சீமான். 

'நாம் தமிழர் கட்சி’ தலைவர் என்பது, சீமான் பற்றி இதுவரை நாம் அறிந்துள்ள அடையாளம். இப்போது நாம் தமிழர் கட்சி சார்பாக 'வீரத் தமிழர் முன்னணி’ என்ற அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பச்சைச் சீருடை அணிந்துகொண்டு கையில் வேலுடன் 'முருகன் என் முப்பாட்டன்’ என அறிவித்துள்ள சீமான், 'தமிழம்’ என்ற புத்தம் புதிய மதத்தைத் தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த மதத்தின், கடவுள் முருகன்; மறைநூல் திருக்குறள். 'பண்பாட்டுப் புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி சாத்தியம் இல்லை’ என முழங்குகிறார் சீமான்.

'என்ன இது... ஏன் திடீரென இப்படி?’ எனக் கேட்பதற்காகப் போயிருந்தேன். சீமானோ, தமிழகத்தையே கைப்பற்றும் பெரிய திட்டத்தோடு  இருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சீமான்.

 

 

p14a.jpg

''ஆரம்பத்தில் பெரியாரையும் அம்பேத்கரையும் சுமந்து அலைந்த கடவுள் மறுப்பாளரான நீங்கள், திடீரென ஆன்மிகவாதிபோல பச்சை ஆடை உடுத்தி, கையில் வேலோடு பழநியில் காவடி எடுக்கிறீர்களே... ஏன் இந்த மாற்றம்?''

'' 'என்ன... சீமான் திடீர்னு ஆன்மிகவாதி மாதிரி கிளம்பிட்டான்?’னு சிலர் கேட்கிறாங்க. இதை இன்னைக்கு நேத்தா செய்றேன். பெரியாரிய, மார்க்ஸிய மேடைகள்ல பேசும்போதுகூட 'முப்பாட்டன் முருகன்... எம்பாட்டன் சிவன்’னுதான் பேசியிருக்கேன். உலகத்துலேயே மூத்தகுடியான இந்தத் தமிழ்க்குடியோடு அழிந்துபோன ஆன்மாவை மீட்க வேணாமா? நாலு சுவரை வெச்சுத்தான் கட்டடம் கட்ட முடியுமே தவிர, மூணு சுவரை வெச்சா கட்டுவாங்க? 'பண்பாட்டுப் புரட்சி, சமயப் புரட்சி இல்லாம அரசியல் புரட்சி இல்லை’னு அம்பேத்கர் சொல்றார். நம்ம அய்யா நம்மாழ்வார் பச்சை உடுத்தினார். அது என்ன பக்தியா? பாட்டன், காட்டில் வாழ்ந்தான். அதனால் பசுமையை அடையாளப்படுத்த பச்சை அணிகிறோம். தலைவர் பிரபாகரன், வான்படைக்குக் கருமை நிறத்தையும், காவல் படைக்கு ஊதா நிறத்தையும் வைத்தார். அதேபோல இதுவும் அடையாளப்படுத்த செய்கிற முயற்சிதான். காவடி என்பது, என் தொன்மக் கலை. அதை எல்லாம் இழிவு படுத்தாதீங்க.''

 

 

''பெரும்பான்மையான மக்களின் கடவுள் நம்பிக்கையை அரசியல் அறுவடை செய்யப் பார்க்கிறீர்களா?''

''யாரை பெரும்பான்மைனு சொல்றீங்க? இந்தக் கேள்வியே இழிவானது. இதை மீட்டெடுக்க வேண்டியது என் கடமை. இது அரசியல்னு நினைச்சா, ஆமா... அரசியல். ஈழத்தைப் பற்றிப் பேசினப்பவும் இதைத்தானே சொன்னீங்க. இந்த மண்ணுல சிறுபான்மைனு ஒண்ணு கிடையாது. எல்லோருமே பெரும்பான்மைதான். ஆரியன் மட்டும்தான் சிறுபான்மை. மத்த எல்லோரும் பெரும்பான்மை. ஆரியன், அவனைப் பெரும்பான்மையாகக் காட்டிக்க 'வீ ஆல் ஆர் ஹிண்டூஸ்’ங்கிறான். இந்த மண்டூஸ் எல்லாம் அவன் பின்னாலேயே ஓடுதுங்க. ஆக, நம்மை நாம் மீட்டெடுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை இங்கே செய்யவேண்டியிருக்கு. அதைத்தான் செய்திட்டிருக்கோம். இந்து, கிறிஸ்துவம், பௌத்தம்போல என் மதம், தமிழம். என் மறை, திருக்குறள். என் குடி, தமிழ்க்குடி!''

 

 

''முருகன், குறிஞ்சி நிலத்தின் கடவுள். அவரை எப்படி மொத்தத் தமிழர்களுக்கும் கடவுளாக முடியும்?''

''தமிழனின் ஐந்து திணைக் கடவுளையும் நாங்க ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 50 ஆயிரம் மாவீரர்களின் படங்களுக்குப் பதிலா நடுகல் வழிபாட்டை ஒரு குறியீடா தலைவர் கொண்டுவந்ததுபோல, நாங்க தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகனை முதன்மைப்படுத்துகிறோம். ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைத்த சூழ்ச்சியில் இருந்து வெளியேறி வந்தவன் என் முப்பாட்டன். 'எனக்கென ஓர் உலகம், என் நாடு, என் மக்கள்’னு அவன் தனியா வந்ததைப் பார்க்கணும்!''

 

 

''நீங்க ராவணப் பெருவிழா கொண்டாடப்போவதாகச் செய்தி வருதே?''

''என் பாட்டன் ராவணன், கலைகள் பத்திலும் தலைசிறந்தவன்; திசை எட்டிலும் புகழ் அடைந்தவன். ஆனா, இவங்க என்ன பண்ணினாங்க? கலை பத்தை, தலை பத்தாப் போட்டு அவனை மாற்றுத்திறனாளியாக்கி, 'ஜண்டுபாம்’ விளம்பரத்துல கொண்டுவந்து நிப்பாட்டிட்டாங்க. ஒவ்வொரு வருஷமும் ராம்லீலா மைதானத்துல எங்க பாட்டன் மேல அம்பு விடுற... பாடை கட்டித் தூக்கிட்டுப் போய் எரிக்கிற... இதெல்லாம் ஒரு தேசிய இனத்துக்கு அவமானம் இல்லையா? இனிமேல் நீ ராமன் லீலா கொண்டாடு; நான் ராவணப் பெருவிழா கொண்டாடுறேன். உனக்கு உன் அப்பன் உசத்தினா, எனக்கு என் அப்பன் உசத்தி.''

 

''உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்துத்துவ அமைப்புகளை நோக்கிச் சென்றதால், அதைத் தடுத்து நிறுத்தவே முருகனைக் கையில் எடுத்திருக்கிறீர்கள்...''  

 

 

''அப்படினு யாரு சொன்னா? உங்க ஆளுங்களே இப்படித்தான். 'குஷ்புவுக்கு வர்ற கூட்டம் உங்களுக்கு வர்றது இல்லையா?’னு கேப்பீங்க. அப்படின்னா நீங்க கூட்டத்தையே பார்த்தது இல்லைனு அர்த்தம். என் கட்சியில இருந்து யாரும் வெளியில் போகலை. நாங்க ஒரு தத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறோம்.''

 

 

''மதம், கடவுளை வைத்து பா.ஜ.க அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அதே வழியில் நீங்களும் செல்கிறீர்களா?''

''மதமும் கடவுளும் இல்லாமலேயே தமிழர்களை ஒன்றுபடுத்த என்னால் முடியும். கடவுள் நம்பிக்கையே இல்லாத பெரியார்தான் வழிபாட்டு உரிமையை தமிழனுக்குப் பெற்றுக்கொடுத்தார். அந்த அடிப்படையில்தான் நீங்க இதைப் பார்க்கணும். அனைத்து உயிர்களுக்கான தேவையும் அதை நிறைவுசெய்வதற்கான சேவையும்தான் 'நாம் தமிழர்’ அரசியல். சாதி, மத அடிப்படையில் செய்யும் அரசியலை நாங்கள் வெறுக்கிறோம். என்னைப் பெற்ற தாய்கூட எனக்கு இரண்டு மார்பகத்துலதான் பாலூட்டினா. ஆனா வள்ளுவர், அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்னு மூன்று மார்பகங்கள்ல பாலூட்டியிருக்கார். அந்தப் பாட்டனுடைய வழியில் நடப்பதுதான் என் மார்க்கம்; மதம்.''

 

 

''40 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்; சமூக நீதி சாத்தியமாகி இருக்கிறது என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?''

''ஏத்துக்கிறோம். ஆனா, சமூக நீதி பயனற்றுப்போகக் காரணம் யார்? போராடி வென்ற சமூக நீதி பயனற்றுப்போகுது. நல்ல கல்வி இல்லை, கனிமக்கொள்ளை நடக்குது. இயற்கை வளம் சூறையாடப்படுகிறது. நாம எப்பவுமே எய்தவனை விட்டுட்டு அம்பை நோகுறோம். தாதுமணல் எடுக்கவும், கிரானைட் குவாரிக்கு அனுமதி கொடுத்ததும் யாரு? இந்த நாட்டுல ஒருத்தன் தனியா ரௌடி ஆகிட முடியுமா? உதாரணத்துக்கு, அய்யா பி.ஆர்.பி-யை எடுத்துக்கங்க. 'காலையில்தான் கடப்பாறை, மண்வெட்டியோட கிரானைட் வெட்டி எடுக்கப்போனார். கைது பண்ணிட்டோம்’னு சொன்னா அது கண்ணியமான அரசு. ஏழு முறை சிறந்த குடிமகன் விருது வாங்கின அவரை, 25 வருஷங்களா வெட்டி எடுக்க விட்டுட்டு... அவரிடமே வாங்கித் தின்னுட்டு... இப்போ கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் அவர் மட்டும் குற்றவாளினா எப்படி? எங்க அய்யா சீயான் வீரப்பனுக்கும் இதைத்தானே செஞ்சீங்க!''

 

 

''சட்டமன்றத் தேர்தலுக்கு எப்படித் தயாராகிறீர்கள்?''

''திருச்சியில் மே 12-ம் தேதி மாநாடு. முதன்முதலா தமிழ்த் தேசிய இனத்துக்காகத் தமிழர்கள் கூடுகிறார்கள். இந்த வேலைத் திட்டத்துக்கு 'புலிப்பாய்ச்சல்’னு பேர் வெச்சிருக்கோம். 234 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டிபோடுறோம்.''.

 

''நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளரா?''

''பின்ன என்ன... முச்சந்தியில நின்னு கத்திக்கிட்டே சாகிறதுக்கா கட்சி ஆரம்பிப்பாங்க? இப்ப என்னமோ புதுசா 'நீங்க கட்சி ஆரம்பிச்சது முதலமைச்சர் ஆகிறதுக்கா?’னு கேட்கிறாங்க. என் மக்களுக்கு என்ன தேவை, என்ன செய்யணும்னு ஒவ்வொண்ணுக்கும் என்கிட்ட திட்டம் இருக்கு. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா... அதை நிரூபிச்சுக் காட்டுவேன்!''

 

''சமூக வலைதளங்களில் வைக்கும் விமர்சனங்கள் மீது நடவடிக்கை கோரி விஜயகாந்த் காவல் துறையை நாடியிருக்கிறார். உங்களுக்கு அப்படி எதுவும் திட்டம் உள்ளதா?''

''விமர்சனம் என்பது, ஆக்கபூர்வமாக இருக்கணும். விஜயகாந்தின் அரசியலை விமர்சிக்கலாம். அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது, நாகரிகமாகாது; பண்பாடு ஆகாது; பகை உணர்வை தூண்டவே செய்யும். அது அவரை காயப்படுத்தி இருப்பதால் அவர் காவல் துறையை நாடியிருக்கலாம். ஆனால், என் மீதான விமர்சனங்களை நான் பக்குவமாக எடுத்துக்கொள்கிறேன். என் தலைவன் தாங்கி நிற்காத அவமானம் இல்லை. தன்னை 'ராமசாமி’ என்றோ, 'மயிராண்டி’ என்றோ கூப்பிடும் உரிமையை பெரியார் தன் எதிரிகளுக்கு கொடுத்திருந்தார். எனக்கும் அந்தப் பக்குவம் இருக்கிறது!''

 

''உங்களுடைய தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தி மிக மோசமாக எழுதுகிறார்களே? உங்களுக்கு எதிரி, இந்துத்துவமா... திராவிட இயக்கமா?''

'' 'யார் மீதும் எந்த இழிவான விமர்சனத்தையும் வைக்கக் கூடாது’ என தம்பிகளிடம் சொல்லியிருக்கிறேன். இந்தியம், ஆரியம், திராவிடம், சாதியம் எல்லாவற்றுக்கும் எதிராகப் போராடியதுதான் தமிழியம். திராவிடத்துக்கு முன்னாடியே தமிழியம் இருந்திருக்கு. இப்போது என் வழிபாட்டில், வழக்காட்டில், பண்பாட்டில் தமிழ் இல்லை. திராவிடம் இதைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறதா? இங்கே மதுவைக் கொண்டுவந்து விட்டது யார்? இந்தத் திராவிடக் கொள்கைதானே! படிக்கவெச்சு அழகு பார்க்கிறதை விட்டுட்டு குடிக்கவெச்சு அழகு பார்க்கிற அரசுகள்தானே இங்கே இருக்கு. அரை நூற்றாண்டு காலம் எங்களை ஆட்சி செய்து இப்படி மோசமாக்கிவிட்டுப் போன திராவிடத்தை நான் எப்படி எதிர்க்காமல் இருப்பேன்

 

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=103970

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான பேட்டி இங்கே.. இதில் ஈழம் என்பதை ஒரு வீதம்தான் பேசியிருக்கிறார். மிகுதி எல்லாம் தமிழ்நாட்டின் பிரச்சினைகள்தான் பேசப்பட்டுள்ளன. இவர் எழுப்பும் கேள்விகள் ஒவ்வொன்றும் மறுதலிக்க முடியாதவை. குறிப்பாக 1:00:00 நேரத்தில் இருந்து நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலின் பின்னர்  சீமான் முதலமைச்சர்
பின்னர் பழனியில் மொட்டை... பஞ்சாமிர்தம்
அப்பா.. நினைக்கவே மெய் சிலிர்க்கின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலின் பின்னர் சீமான் முதலமைச்சர்

பின்னர் பழனியில் மொட்டை... பஞ்சாமிர்தம்

அப்பா.. நினைக்கவே மெய் சிலிர்க்கின்றது :D

"மொட்டை போட்டால் அறிவு வளராது; முடிதான் வளரும்."

இதைத்தான் இந்தப் பேட்டியில் சொல்கிறார். முருகனை கடவுளாக வணங்காமல் முன்னோர் என்கிற அடிப்படையில் போற்றுவதில் தவறில்லை என்கிறார்.

"பண்பாட்டு மீட்சி இன்றி இன மீட்சி இல்லை."

- அண்ணல் அம்பேத்கர்

தமிழரின் இயற்கை வழிபாட்டு முறையை மீட்டெடுக்காமல் இன விடுதலையை வென்றெடுக்க முடியாது. அவ்வகையில் முருகன், அம்மன், வைரவர், வீரபத்திரர் போன்ற முன்னோர்களை வணங்கும் முறையை மீட்டெடுக்க வேண்டும்.. முருகனில் திணிக்கப்பட்ட பூணூலைக் கழட்ட வேண்டும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இயற்கை வழிபாட்டு முறையை மீட்டெடுக்காமல் இன விடுதலையை வென்றெடுக்க முடியாது. அவ்வகையில் முருகன், அம்மன், வைரவர், வீரபத்திரர் போன்ற முன்னோர்களை வணங்கும் முறையை மீட்டெடுக்க வேண்டும்.. முருகனில் திணிக்கப்பட்ட பூணூலைக் கழட்ட வேண்டும்.. :D

 

ஆக மொத்தத்தில் சாமிக்குற்றம்...

இதிலிருந்து விடுபட முருகன்... எம் பாட்டன்... உதவுவாரா??

பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும் :o:D

 

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழர்கள் இயற்கையை தொழுது.. தங்களை காத்தவர்களை கும்பிட்டு நின்றார்கள். எம்மைக் காத்து நின்ற எமது மாவீரர்களை நாம் கைவிடும் நிலையில் இருக்கும் இன்றைய காலத்தில்.. அண்ணன் சீமானின்.. தமிழர்கள் தமிழரின் விழுமியங்களை மேன்மைகளை விளங்கிக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளை உண்மையில் வரவேற்கத்தக்கன.

 

இதே யாழ் களத்தில் தான் 2005/6 இல் திராவிடத்துக்கும் தமிழியத்துக்கும் இடையிலான.. காரசாரமான விவாதம் நடந்தது. இன்று அது திராவிட மாயையை அழித்து தமிழர்களை தமிழர்களாக இனங்காட்டும் பொறியாகி மாறி இருப்பதற்கு சீமான் போன்றவர்களின் நடவடிக்கைகள் நல்ல உதாரணம். தமிழர்களுக்கு ஆரியம்.. திராவிடம் இரண்டும் சம எதிரிகள். தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக இன அழிப்புச் செய்வதே இவற்றின் நோக்கம். :icon_idea:

Edited by nedukkalapoovan

பாவம்  முருகன்  அந்தாளே  கோமணத்தோட  நிக்கு  அதையும்  உருவ  பிளான்  பண்ணியாச்சு  போல ..சாமிகளுக்கு  வருமானம்  அதிகம்  என்னும்  வித்தையை  சைமன்  அவர்களுக்கு  யாரோவா சொல்லிட்டான்  போல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையான பேட்டி இங்கே.. இதில் ஈழம் என்பதை ஒரு வீதம்தான் பேசியிருக்கிறார். மிகுதி எல்லாம் தமிழ்நாட்டின் பிரச்சினைகள்தான் பேசப்பட்டுள்ளன. இவர் எழுப்பும் கேள்விகள் ஒவ்வொன்றும் மறுதலிக்க முடியாதவை. குறிப்பாக 1:00:00 நேரத்தில் இருந்து நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்.

 

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். ஆறுதலாக ஆரம்பம் முதல் இறுதிவரை பார்த்தேன் / கேட்டேன். தனது முன்னெடுப்புகளை சீமான் அவர்கள் அருமையாக சொல்லியுள்ளார். புரட்சியாக வளர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.