Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதங்கேணியிலும் மக்கள் காணி சுவீகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ARMY-SriLanka.jpg

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 
பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
 
மருதங்கேணி பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 11 யஹக்டேயர் காணியை, இராணுவத்தினர் விஜயபாகு ரெஜிமென்ட் படைத்தளம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 
 
காணி உரிமையாளர்கள், தமது காணிகளில் எல்லையை நிலஅளவையாளர் திணைக்களத்துக்குக் காட்டவில்லை. ஆயினும் நடைமுறைக்கு மாறாக, காணிகள் எல்லைப்படுத்தப்பட்டு குறித்த காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 
 
news.jpg
 
மஹிந்த அரசின் ஆட்சிக் காலத்திலேயே இது நடைபெற்றது. கடந்த ஆண்டு, ஜுலை மாதம் 3 ஆம் திகதி வர்த்தகமானி அறிவித்தலில் 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப்படுவதாக, அப்போதைய காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கையயழுத்திட்டிருந்தார். 
 
இந்த நிலையில் குறித்த காணியை, உரிய முறையில் இராணுவத்தினரிடம் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவரான விக்கிரம கொடவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
காணி உரிமையாளர்களை அழைத்து இராணுவத்திற்கு காணி கையளிப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://onlineuthayan.com/News_More.php?id=273863905007254469

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எங்கள் நாட்டாமை

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எங்கள் நாட்டாமை

 

அவருக்கு

எச்சரிச்சனான்

எங்கையும் கைவையுங்கொ

எங்க முருகனோட வேண்டாம் என்று...

  • கருத்துக்கள உறவுகள்
வந்தோருக்கு வாழ்வு கொடுக்கும் ஊர் மருதங்கேணி !
இங்கு பதியும்போது கூட அந்த பெருமையால்தான் அந்த பெயருடன் இணைந்தேன்.
தண்ணீர் .....
நிலம் ............!
யாருக்கு எது தேவையோ ....
அதை அள்ளி தர மருதங்கேணி எப்போதும் தாங்கியது இல்லை.
 
(விட்டுகொடுப்பு அரசியல் என்ன சுமந்திரன் வீட்டு சொத்தா ? நாமும் அப்ப அப்ப செய்வமில்லே ?)
  • கருத்துக்கள உறவுகள்

ரனில் தங்களின் வீட்டுக்குள் அத்து மீறுபவரை சுட வேண்டும் என கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.