Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுசில் பயங்கரம்: குத்திவிட்டான் டார்லிங்... சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியாளர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.

வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற போது தனது கணவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சரிந்து விழுந்த நிலையில், தனது கணவரிடம் 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என்று செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார்.

அடுத்த சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாவை, அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரின் உடலில் இருந்து அதிகான ரத்தம் வெளியேறிவிட்டதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் சென்றுவிட்டது. சம்பவம் நடந்த பூங்கா பகுதி ஆபத்தானது என்பதை பிரபாவுக்கு அவரது தோழி ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பிரபா படுகொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வழிப்பறி கொள்ளை முயற்சியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39514


  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான  இடங்களை தவிர்த்திருக்கலாம்

அதிலும் தொலைபேசியில் பேசியபடி...

 

படித்து

பட்டம் பெற்று என்ன பலன்...??

 

ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூங்கா எனது வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில் இருக்கிறது. நானும் எனது குடும்பமும் அடிக்கடி இங்கே போவதுண்டு. மதிய வேளைகளில் போனால் ஒரே சனமும் சந்தடியுமாக இருக்கும். இந்தப் பூங்காவிற்கு வருவபர்களில் 90 வீதமானவர்கள் இந்தப் பகுதியெங்கும் எழும்பிநிற்கும் பல்மாடி அடுக்கு வீடுகளில் வசிக்கும் புதிதாக இங்கே குடியேறிய இந்தியர்கள் அல்லது இலங்கையர்கள். கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றவுடன் அவர்களது பிள்ளைகளைப் பார்க்க 6 மாத, ஒரு வருட விசாவில் வந்திருக்கும் அவர்களது பெற்றோர்களை இங்கே காணலாம். அவர்கள் தமது நண்பர்களுடனோ அல்லது பேரக் குழந்தைகளுடனோ இந்தப் பூங்காவில் பொழுது போக்குவதை எப்போதும் கண்டிருக்கிறேன். இந்தப் பூங்காவை சுற்றியுள்ள பாதையில் கார்களும், சைக்கிள் ஓட்டிகளும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்களும் எப்போதுமே சென்றுகொண்டிருப்பார்கள். இரு பிரதான கிராமங்களான பரமட்டா மற்றும் வெஸ்ட்மீட் ஆகியவற்றின் நடுவே இந்தப் பூங்கா அமைந்திருப்பதால் பலரும் இந்தப் பூங்காவின் உற்பாதையைப் பாவித்தே இரு கிராமங்களுக்குமிடையே பயணிக்கின்றனர். இந்தப் பூங்காவை சுற்றிப் போவதென்றால் ஒருவருக்கு குறைந்தது 20-25 நிமிடங்கள் எடுக்கும், இதே பயணத்தை பூங்காவின் உற்பாதை வழியாகச் செல்வதென்றால் 10-15 நிமிடங்கள்தான் எடுக்கும். அடுத்தது இந்தப் பூங்காவின் உற்பாதை அருகில் நெடுத்து வளர்ந்திருக்கும் மரங்களினால், கடும் கோடை காலங்களில் நிழல் கருதி இந்தப் பூங்காவினூடு நடப்பதை பலரும் விரும்புகின்றனர்.

 

ஆனால் இப்படி மதிய வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இந்தப் பூங்கா இரவானதும் சன நடமாட்டமே இல்லாது ஓய்ந்துகிடக்கும். மின்சாரத் தெருவிளக்குகள் இல்லாத இந்தப் பூங்காவினுள் இரவு வேளைகளில் நான் செல்வதைத் தவிர்த்தே வருகிறேன். சனநடமாட்டம் இல்லாததால் உதவிக்குக் கூப்பிடுவதற்குக் கூட யாரையும் பார்க்க இயலாது. இங்கு வீடற்ற மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் புழக்கம் இரவு வேளைகளில் அதிகமாகக் காணப்படும். அவப்போது என்னிடம் பணம் கேட்டிருக்கிறார்கள். இல்லையென்று சொல்லாது கொஞ்சச் சில்லறைகளைக் கொடுத்துவிட்டு நிற்காமல் நடந்துவிடுவேன். 

 

பொதுவாகவே இந்தியர்கள் என்றால் பணம் வைத்திருப்பவர்கள், விலை உயர்ந்த கைய்யடக்கத் தொலைபேசி வைத்திருப்பவர்கள் என்று சமூகத்தில் அபிப்பிராயம் இருக்கிறது. இதனாலேயே பலமுறை இந்தியர்கள், குறிப்பாக மாணவர் விசாவில் வந்து, இரவில் அதிகநேரம் வேலை செய்து வீடுவரும் பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருசிலர் அவர்களின் பணத்துக்ககவோ அல்லது கைத்தொலைபேசிக்காகவோ கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொதுவாகவே எமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்லும் இந்தியர்களை இலகுவான குறியாக இப்படியான வழிப்பறிகள் பார்க்கின்றனர். 

Edited by ragunathan

இந்திய பெண் பிரபா கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு

 

Tamil_News_large_1202284.jpg

 

சிட்னி: ஆஸ்திரேலியாவில், பெங்களூருவைச் சேர்ந்த பிரபா, 41, படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
 
ஆஸ்திரேலியாவில், மைண்ட் ட்ரீ என்ற நிறுவனத்தில், ஐ.டி., வல்லுனராக பணியாற்றி வந்தவர், பிரபா. இவரது கணவர் அருண்குமார், 9 வயது மகள் ஆகியோர், பெங்களூரில் வசிக்கின்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், பிரபா, சிட்னி புறநகர் பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது, மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
 
கடும் அதிர்ச்சி:
 
இந்த சம்பவம், ஆஸ்தி ரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாவின் கொலை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் மைக் பெயர்டு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'கொடூர குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர் என, இந்தியாவிற்கு உறுதி கூறுகிறேன்,' என்று அவர், சிட்னியில் உள்ள இந்திய துணை தூதர் சஞ்சய் சுதீரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ''இந்தியர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது, இந்தியரான பிரபா கொல்லப்பட்டதாக கிடைத்த தகவல், எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,'' என்று, மைக் பெயர்டு கூறினார். 
 
இதனிடையே, இலங்கையில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டுவிட்டரில், ''பிரபா உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது; இது தொடர்பாக, சிட்னியில் உள்ள இந்திய துணை தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்,'' என்று கூறியுள்ளார். 
 
டில்லியில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது பக்ருதீன் கூறியது: பிரபாவின் கணவர் அருண்குமார், துணை தூதர் சஞ்சய் சுதீர், பிரபா வேலை பார்த்த மைண்ட் ட்ரீ நிறுவன பிரதிநிதி ஆகியோரிடம், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த படுகொலைக்கு, நிறவெறி காரணமா என்பதை, இப்போது கூற முடியாது. 
 
விசாரணை:
 
இவ்வழக்கு தொடர்பாக, தேசிய மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகளை கொண்ட, 'ஸ்டிரைக் போர்ஸ் மார்கோலா' என்ற புலனாய்வு குழு, விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிவு அடைந்த பின்னரே எதுவும் தெரியவரும். இவ்வாறு, அவர் கூறினார்.
 
மிக திறமையான மாணவி:
 
பெங்களூரிலுள்ள, 'மைண்ட் ட்ரீ' ஐ.டி., நிறுவனத்தில், 15 ஆண்டுகள் பணியாற்றிய பிரபா, அவரது திறமை காரணமாக, கடந்த, 2012ல், அயல்நாட்டு ஆலோசகராக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார். இவர், மங்களூரு அருகிலுள்ள கல்லாட்காவைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் வசித்து வரும் மகாபாலா ஷெட்டியின், இரண்டாவது மகள், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, மங்களூரு கே.வி.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி யில் படிக்கும் போதே, மிகவும் திறமையான மாணவியாக விளங்கியதால், பெங்களூரிலுள்ள, 'மைண்ட் ட்ரீ' அலுவலகத்தில் வேலை கிடைத்தது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்ட இவர், தன் கணவர் அருண்குமாருடன், பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள பிரசாந்த் நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு, 9 வயதில் மேகனா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐ.டி., நிர்வாக பணி நிமித்தமாக, 3 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆஸ்தி ரேலியா சென்ற இவர், சிட்னியில் உள்ள நியூசவுத் வேல்ஸ் பகுதியில் தங்கியிருந்தார். அப்பகுதியில் ஏராளமான இந்தியர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். அங்குள்ள புறநகர் பகுதிகளான வெஸ்ட் மீட் மற்றும் பாராமட்டா பகுதிகளில், இரவுநேர மதுபான விடுதிகள் எப்போதும் திறந்திருப்பதால், அவ்வழியே வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அங்கு இருந்தன. எனவே, இரவு நேரத்தில் அந்த பக்கமாக செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டதை மீறி பிரபா சென்றார் என,சொல்லப்படுகிறது. 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை இந்தப் பூங்காவிற்கு அருகில் இரவு 7 மணியளவில் தனது காருக்குச் சென்றுகொண்டிருந்த எனது மனைவியும் வழிப்பறி ஒருவனால் தாக்கப்பட்டிருக்கிறார். அவன் கத்தியால் மனைவியினது கைப்பையை அறுக்க எத்தனித்தபோது இவர் கூக்குரலிட்டுவிட்டு, கைப்பறியைப் பறித்துக்கொண்டு தெருவுக்கு ஓடியிருக்கிறார். தெருவில் வேறு சிலர் போவதைப் பார்த்த வழிப்பறியும் தன்வழியே சென்றுவிட்டான். ஆக, இந்தப் பகுதி இரவுகளில் நடைபயணிகளுக்கு மிகவும் ஆபத்தான பகுதியென்பது பரவலாகத் தெரிந்த விடயம். 

 

சரி, கடந்த சனிக்கிழமை நடந்த கொலைக்கு வருவோம்.

 

நாம் மறுநாள் காலை அந்தப் பூங்காவின் வெளிவீதிவழியே காரில் செல்லும்போது அதிகளாவான பொலிசாரையும், தடயவியல் நிபுணர்களையும் கண்டேன். வழக்கத்துக்கு மாறாக பல வாகனங்களில் அவர்கள் வந்திருந்தார்கள். மாலை வீடு பந்து செய்தியைப் பார்த்தபோதுதான் நடந்தது கொலை என்பது தெரிந்தது.

 

பெங்களூரைச் சேர்ந்த இந்தப் பெண் தனியாக தனது நண்பி ஒருத்தியுடன் வெஸ்ட்மீட்டில் தங்க்யிருந்தார், கணவனும் மகனும் இந்தியாவில் தங்கியிருந்தனர். வழமை போல தான் வேலைசெய்யும் கணனி அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு பரமட்ட ரயில் நிலையத்திலிருந்து இரவு 9:

 மணியளவில் தனது வீடுநோக்கி வழமையான பூங்காவின் உற்பாதையூடாக நடந்து வந்திருக்கிறார். வரும் வழியில் தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே வந்திருக்கிரார். அப்படி அவர் நடந்துவரும்போது யாரொ ஒருவர் தன்னைப் பிந்தொடர்ந்து வருவதை அவதானித்த அந்தப் பெண் அதை தனது கணவருக்கும் சொல்லியிருக்கிரார். சில நிமிடங்களில் அந்தப் பெண்ணைப் பிந்தொடர்ந்து வந்தவன் அவரைத் தாக்குவதை கனவர் தொலைபேசியுன்னுடு கேட்டிருக்கிரார்."என்னைக் கோல்லாதே, உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கொள், தயவுசெய்து என்னைக் கொல்லாதே" என்று தனது மனைவி மன்றாடுவது அவள் கணவர்க்கு தொலைபேசினுடு கேட்டிருக்கிறது. சிறிது நிமிடத்தில், "என்னைக் குத்திவிட்டான்" என்று சொல்லிவிட்டு அவளது தொலைபேசி அமைதியானது. 

 

சில மணிநேரத்தில் அந்தப் பாதையால் நடந்துவந்த ஆண் ஒருவர், வழியில் ஒரு பெண் வீழ்ந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு அருகில் சென்று பார்த்திருக்கிரார். அப்போது அவள் குத்தப்பட்டு குருதி வழிந்தோடக் கிடந்தைப் பார்த்துவிட்டு பொலீசுக்குச் செய்தி சொல்லியிருக்கிறார்.

 

பொலிசார் விசாரனையை ஆரம்பித்துள்ளனர். அவளது கணவனும் உரவினர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.

 

அநியாயக் கொலைகாரன் ஒருவனினால் ஒரு அப்பாவித்தாயின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. 

 

ஆழந்த அனுதாபங்கள். வேறுஎன்னதான் செய்ய முடியும் எம்மால் ?? மனிதவுரிமை பற்றி வாய்கிழியப் பேசும் மேற்கு நாடுகள், இந்த அநியாயக் கொலைகளுக்கு தமது நாட்டவரே  காரணமாக இருப்பதை எப்படித் தடுக்கப் போகிறார்கள். 

 

இந்தத் தாயைப் போன்றே ஈழத்தைச் சேர்ந்த ஈசன் என்பவரும் ஒரு போதைவஸ்த்துப் பிரியனால் கடந்தவருடம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
praba-murder-bengalure-100315-200-india.

ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர், கொலைகாரனிடம், நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடுமாறு கெஞ்சிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரபா அருண் குமார் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

   

வழக்கம் போல கடந்த 7ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு பிரபா திரும்பிக்கொண்டிருந்த போது மர்ம ஆசாமி ஒருவன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிவிட்டான். கத்தியால் குத்தப்பட்ட பிரபா உயிரிழந்தார். இது தொடர்பாக சிட்னி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. தற்போது சிட்னியில் இருக்கும் அருண் குமாரிடம் காவல்துறையினர் நடந்ததை கேட்டு அறிந்துள்ளனர்.

 

டி.வி. ஒன்றுக்கு அருண்குமார் அளித்த பேட்டியில், எனது மனைவி, கொலைகாரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார். நீ சொல்வதை கேட்கிறேன், என்னை உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார்.

 

பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. பின்னர் எதுவும் செல்போனில் கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. பிரபாவின் தோழியும் காவல்துறையினரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127976&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.