Jump to content

நெருப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பு

எனது தோழி ஒருத்தியின் கதை இது. (சந்தேகம் வேண்டாம் ஈழத்து தமிழ்ப் பெண்தான்)

அவாவுக்கு ஆண்களைக் கண்டால் பிடிக்காது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பொதுவாக ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் மையல் அவாவுக்கு பிரான்ஸ் நாட்டு பெண் ஓருத்தியின் மிது ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவாவை சென்றமுறை பிரான்சுக்கு நான் சென்றபோது தற்செயலாக சந்தித்தேன். தனது வீட்டில் எல்லோரும் காறித்துப்பினார்கள் என்றும் தன்னைக் கண்டபடி கண்மண் தெரியாமல் அடித்தார்கள் என்றும் கூறினா. அதன்பின், சட்டத்தின் உதவியுடன் தனும் அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவாதாகக் கூறினா. இருப்பினும் தமிழ்ச் சமூகத்திலிருந்து தன்னை விலக்கி வைத்தது தனக்கு கவலையாக இருப்பதாகக் கூறி தமிழ்ச் சமூகத்தை ஒரு வாங்கு வாங்கினா.

அவாவின் முடிவில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அந்தப் பெண்ணை விலக்கி வைலத்து அந்நியப்படுத்துவது எந்தவிதத்திலுத் நியாயம் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

இளங்கோ!

இதைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்ற அளவிற்கு எமது தமிழர்கள் முன்னேறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கின்ற உறவையே வெளிப்படையாக விவாதிக்க முடியவில்லை. இதில் பெண்ணுக்கும் பெண்ணுக்குமா?

Link to comment
Share on other sites

ஆமா..இது தேவையா....???

இதுவொரு மன நோய்...

இப்போ எதுககெடுத்தால் வாதம் விவாதம் என்றாகிவிட்டது...

இது உரு மன அழுத்தத்தின் ஊந்துதல்....

இவ்வாறான உறவின் மூலம் என்னத்தை சாதிக்கலாம்...???

சட்டத்தில் இடமுண்டு...ஆனால் சமுதாயத்தில்...??

நம்ம சமுதயாம் மட்டுமல்ல மேற்கத்தையரும் இதை 60 வீதமானோர் எதிர்கத்தான் செய்கின்றனர்...

எமது சமுதாய அடிப்படையில் பார்த்தால் இவருடன் இனைபவரும்...தப்பாண கண்ணோட பார்க்கப் படுபார்

ஏனெனில்...உன்று தெழிவில்லை...இல்லை எனின் அறிவில்லை..

அதற்கு மேலாக கலாச்சாரம் என்ற போர்வை தமிழரால் க0ட்டி எறிய முடியாது...

Link to comment
Share on other sites

இது மன நோய் சம்பந்தப்பட்டதோ, மன உந்துதல் சம்பந்தப்பட்டதோ அல்ல.

என்னுடைய பார்வையில் இது அருவருக்கத்தக்க விடயமும் அல்ல.

நான் வலது கைப் பழக்கம் உள்ளவன் என்பதற்காக, எல்லோருமே வலது கைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பர்க்க முடியாது.

இயல்பாகவே ஒருவருக்கு தன்னினத்தின் மீது ஈடுபாடு வருகின்ற பொழுது, நாம் என்ன செய்ய முடியும்?

புலம்பெயர்ந்து வந்த ஆரம்ப காலங்களில் தங்கள் பிள்ளைகள் தாம் சொல்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்தார்கள்.

இன்றைக்கு யாரென்றாலும் பறவாயில்லை, வேறு நாட்டுக்காரரை செய்யாது தமிழ் இனத்தை சேர்ந்த யாராவது ஒருவரை திருமணம் செய்தாலே போதும் என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாளைக்கு எந்த நாட்டுக்காரர் என்றாலும் பரவாயில்லை, ஓரினச் சேர்க்கையாக இல்லாவிட்டால் சரி என்று நிலை வரப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்தவரை இதை எதிர்க்கும் மேலை நாட்டவர்கள் வலு குறைவு. பெண்ணே அதை விரும்பும்போது தனிமனித விருப்பத்திற்குமாறாக கற்பு கலாச்சாரம் போன்ற பத்தாம்பசலித்தனங்களை திணிப்பது மடமையல்லவா?. தனிப்பட்ட முறையில் எனக்கு ஓரினச்சேர்க்கையில் கடுகளவும் உடன்பாடில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இதைப்போல் அந்தப் பெண்ணிற்கு இன்னொரு பெண்ணை மனதால் மட்டுமல்ல உடலாலும் பிடித்திருக்கிறது. இதில் என்ன தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் நட்பை போண்றுதான் ஆணுக்கும் ஆணுக்கும் கூட ஏற்பட்டிருக்கின்றது. பல நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது. ஏன் திருமணம் செய்தும் இருக்கிறார்கள்.

அதற்காக எங்கள் தேசத்தவரும் அப்ப்டி செய்ய வேண்டுமா என்று கேட்காதீர்கள். அது அவர் அவர்களின் வாழ்வியல் பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பகுத்தறிவை பக்காவா பாவித்து வரவேற்க வேண்டிய முக்கிய முன்னேற்றம்.

இயற்கைக்கு மாறான உறவுகள். ஒழுக்கத்துக்கு இடமளிக்காத பாலியல் தொடர்புகள், தொழில்கள். விலங்குகளுக்கு போட்டியாக அதை விட கீழுறங்கி மனிதன் தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்து வாழவும் வேண்டுமா வேண்டாமா? பாலியல் இச்சையை இயற்கைக்கு மாறான வகையில் வக்கிரமாகத் தீர்க்காததும் ஒரு வாழ்வா? வேஸ்ட் ஒவ் லைவ். இவைதான் மனித இனத்தின் முன்னேற்றமல்லவா? நிச்சயம் பகுத்தறிவுள்ளவர்கள் வரவேற்கத் தயங்கமாட்டார்கள்.

அதுவும் ஈழத்தில் நடைமுறைப்படுத்தினால் 7:1 என்றுள்ள ஆண் பெண் விகிதத்தில் திருமணமாகாதுள்ள பெண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்து ஒரு சந்ததிப் பெருக்கத்தையே செய்து காட்டலாம் அல்லவா. எல்லாளன் படைக்கு இந்த உதாரணங்களைக் காட்டி ஒரு விண்ணப்பம் செய்தால் என்ன? எவ்வளவு முற்போக்கான ஒரு விடயத்தை மக்கள் சிந்திக்கத் தவறுகின்றனர். மக்கள் மந்தைகளாகி விட்டனர்.

பாவம் இயற்கை மட்டும் கண்ணீர் வடிக்கிறது அட ஏன் தான் ஆணென்றும் பெண்ணென்றும் அதுவும் ஆணுக்கு பெண் 1:1 என்ற பால் விகிதத்திலும் அநாவசியமா இரண்டு பிறப்புக்களை உண்டு பண்ணினேனே என்று. பேசாமல் பெண்ணென்ற ஒன்றையே படைத்திருந்தால் போதுமே என்று. இயற்கைக்கு புத்தி காணாது. மனிதன் பகுத்தறிந்து புகட்டும் புத்தியை இயற்கை மட்டும் கேட்க மறுப்பதுதான் இப்போ மனிதனுக்குள்ள வேதனையே? இயற்கை கூட மனித பாலியல் உரிமைகளை விளங்க மறுக்கிறது. புத்தி பேதலித்த இயற்கை. மனித செயற்கைக்கு முன் இயற்கை வேஸ்ட். :rolleyes:

Link to comment
Share on other sites

ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களை என்ன செய்யலாம்?

கொலை செய்து விடலாமா? சங்கிலியால் கட்டி வைக்கலாமா?

இது ஒரு நோய் அல்ல என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது.

இதற்கு மரபணுக்களும் காரணம் அல்ல என்று சொல்கிறார்கள். வளர்ப்பு என்பதும் எப்போதும் காரணமாக இருப்பதில்லை.

மாவீரன் அலெக்ஸாண்டர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர் என்று சொல்கிறார்கள். அதற்காக அந்த மனிதனை மாவீரன் என்று புகழாமலா இருக்கிறோம்.

இது அவரவருடைய தனிப்பட்ட விவாகாரம். இதில் சமூகம் தலையிடத் தேவை இல்லை.

20 வருடங்களுக்கு முன்பு தமிழ் ஆண்கள் வேற்றினத்து பெண்களை துணையாக்கிக் கொண்ட பொழுது சமூகம் பதறியது. ஆனால் இன்றைக்கு அது பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை.

10 வருடங்களுக்கு முன்பு தமிழ் பெண்களும் வேற்று நாட்டவரை துணையாக தேர்ந்தெடுக்க தொடங்கிய பொழுதும், எமது சமூகம் பதறித் துடித்தது.

இன்றைக்கு டிஸ்கோ போன்ற இடங்களிற்கு சென்று பாருங்கள். வேண்டாம், வீதிகளில் கூட பாருங்கள். எமது பெண்கள் வேற்று நாட்டவர்களுடன் தைரியமாக கைகோர்த்து செல்கிறார்கள்.

நான் இருக்கும் நகரத்திலேயே மூன்று குடும்பங்கள் தங்கள் மகள்களின் வேற்று நாட்டவர்களுடனான காதலை அங்கீகரித்தும் விட்டன.

இதோ! இப்பொழுது பிரான்ஸ் நாட்டில் ஒரு தமிழ் பெண் பெண்ணுடனேயே வாழச் சென்று விட்டாள். மீண்டும் சமூகம் பதறி துடிக்கிறது.

நாளை???????!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை இதில் எனக்கு உடன்பாடு இல்லை

ஒத்தகாந்தமுனைகள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும்

அதேபோல ஒவ்வாத காந்தமுனைகள் ஒன்றை ஒன்று கவரும்

அதே போலத்தான் இந்தவிடயமும் ஆணுக்குப் பெண்ணும்

பெண்ணுக்கு ஆணும் என்பதே நியதி இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

இது புறநடையானது இயற்கைக்கு மாறக நடை பெறுகின்றமாற்றம்

இரண்டு கைகளுக்குப்பதிலாக மூன்று அல்லது நான்கு கைகளுடன் பிறக்கும் குழந்தைகள் போல இந்த நிகழ்வுகளும் புறநடையே என்பது என் வாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களை என்ன செய்யலாம்?

கொலை செய்து விடலாமா? சங்கிலியால் கட்டி வைக்கலாமா?

அவர்களைக் கணக்கில் எடுக்காமல் விடுவதே அவர்களின் உரிமையை நீங்கள் பாதுகாக்க முயல்வதாக உறுதிப்படுத்தும். அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பேசுவதே முற்போக்காகப் போச்சு உலகத்தில. எதுக்கு அநாவசியமா... அவர்களை வைச்சு ஓசி விளம்பரம். ஏதோ உலக சாதனை செய்பவர்கள் போல.

இது ஒரு நோய் அல்ல என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது.

இதற்கு மரபணுக்களும் காரணம் அல்ல என்று சொல்கிறார்கள். வளர்ப்பு என்பதும் எப்போதும் காரணமாக இருப்பதில்லை.

மாவீரன் அலெக்ஸாண்டர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர் என்று சொல்கிறார்கள். அதற்காக அந்த மனிதனை மாவீரன் என்று புகழாமலா இருக்கிறோம்.

இது அவரவருடைய தனிப்பட்ட விவாகாரம். இதில் சமூகம் தலையிடத் தேவை இல்லை.

20 வருடங்களுக்கு முன்பு தமிழ் ஆண்கள் வேற்றினத்து பெண்களை துணையாக்கிக் கொண்ட பொழுது சமூகம் பதறியது. ஆனால் இன்றைக்கு அது பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை.

20 வருடங்களுக்கு முன்னரே கலப்பின நாய்களை உருவாக்கினர். அதற்காக தெரு நாய் எல்லாம் பெமேரியன் ஆகிவிட்டதாக முடியுமா?

10 வருடங்களுக்கு முன்பு தமிழ் பெண்களும் வேற்று நாட்டவரை துணையாக தேர்ந்தெடுக்க தொடங்கிய பொழுதும், எமது சமூகம் பதறித் துடித்தது.

இன்றைக்கு டிஸ்கோ போன்ற இடங்களிற்கு சென்று பாருங்கள். வேண்டாம், வீதிகளில் கூட பாருங்கள். எமது பெண்கள் வேற்று நாட்டவர்களுடன் தைரியமாக கைகோர்த்து செல்கிறார்கள்.

நாய்களைக் கூட்டுக்குள் வீட்டுக்குள் அடைத்து விட்டதால் இவர்கள் நாய்களின் தொழிலை வீதிகளில் செய்கின்றனர். இதையெல்லாம் செய்தியாக்கும் உங்களைச் சொல்ல வேணும்...??! எவள் எவனோட போனாத்தான் மற்றவருக்கு என்ன நட்டமா இலாபமா? சும்மா செய்தி காவுற உங்களுக்கு வேலையில்லை.

நான் இருக்கும் நகரத்திலேயே மூன்று குடும்பங்கள் தங்கள் மகள்களின் வேற்று நாட்டவர்களுடனான காதலை அங்கீகரித்தும் விட்டன.

அப்படியே விவாகரத்தையும் சிங்கிள் மதர் சிங்கிள் பாதரையும் ஆதரிக்கச் சொல்லி விடுங்கள். இன்றேல் எப்படி Ex 1, Ex 2, Ex3............Ex n என்று கஸ்பண்ட் அண்ட் வைவ்வை..போய் பிரண்டை கேர்ள் பிரண்டை மனம் போன போக்கில் அதிகரிச்சுக் கொண்டே போகலாம்?..சொல்லுங்க. கூட்டல் விருத்தி அல்லது பெருக்கல் விருத்தி ஆளுக்கு ஏற்ற மாதிரி தெரிவு செய்து கொள்ள வேண்டியதுதானே. இதனால் சமூகத்துக்கு என்னாகப் போகிறது. மரணம் என்ற ஒன்றுக்கிடையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்திடச் சொல்லுங்கோ.இவை மனித இனச் சாதனைகள் நீங்கள் நிச்சயமா இவை பற்றி எழுதத்தான் வேணும். பாவம் குரங்கு நாய் பூனை என்று அதுகளும் Ex1 Ex 2 என்று சொல்ல காலங்காலமா அசைப்படுகுதுகள் குரல் கொடுத்தான் யாருமில்லையாம்.

இதோ! இப்பொழுது பிரான்ஸ் நாட்டில் ஒரு தமிழ் பெண் பெண்ணுடனேயே வாழச் சென்று விட்டாள். மீண்டும் சமூகம் பதறி துடிக்கிறது.

சமூகம் பதறித் துடிக்கவில்லை. அப்படியாக சிலர் காட்டிக்கொண்டு தங்களின் செயற்பாடுகளை சமூகத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். அவ்வளவுந்தான். இதுதான் நல்லதோ கெட்டதோ எல்லாத்துக்கும் விளம்பரம் தேடும் உலகாச்சே.

நாளை???????!!!!!!!!!!!!!!!!!!!!

இதென்ன வினாக்குறி..யாழ் கள ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடல் நடக்கும் மெல்பேன் நகரில். பொறுங்கள் திகதி குறிப்பது பற்றி கலந்தாலோசிக்கப் போயினமாம்.

Link to comment
Share on other sites

இந்தச் செயற்பாடுகளும் ஒரு காரணம் எயிற்ஸ் நோய்பரம்பலுக்கு

இதனால் எதனை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செயற்பாடுகளும் ஒரு காரணம் எயிற்ஸ் நோய்பரம்பலுக்கு

இதனால் எதனை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் :D

சும்மா எயிட்ஸைக் காட்டி பயப்பிடுத்தாதேங்கோ. மனித பாலியல் உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரு நடவடிக்கையில தீவிரமா செயற்பட்டுக் கொண்டிருக்கிற குஷ்பு அம்மா பரம்பரையினருக்கு வழி விடுங்கோ. அவைக்கு எயிட்ஸ் வராமல் தடுப்பது என்பது பற்றித் தெரியுமாம். பாவம் குஷ்பு அம்மாக்கு கொண்டோம் 100% பாதுகாப்பளிக்காது என்பது தெரியாத விசயம் போல.

ஆணும் பெண்ணும் கட்டினா பிள்ளை குட்டி குடும்பம் என்று எத்தனை சுமைகள். இது சுமையுமில்ல சுற்றமில்ல..என்ன சுதந்திரமான சுகமான வாழ்க்கை. சனத்தொகையும் பெருகாது. வாழட்டும் விட்டுவிடுங்கள். உலகில் எது சீப் அதுதான் செக்ஸ்.

அறிவோ பணமோ பகட்டோ எதுவும் தேவையில்ல. வெறும் செயற்படக் கூடிய உடல் போதும். செக்ஸ் இஸ் சீப். Sex is cheap every where in the world.

இது கூந்தலையே சுமை என்று கத்தரிக்கிற காலம். நாளைக்கு கையில என்ன பத்து விரல்.. வேஸ்ட் அந்த சின்னவிரல். ஒரு யூசும் இல்ல. வெட்டியும் எறிவம் என்றாலும் அது அவர்களின் உரிமை. காப்பாற்ற வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்கள் விரல்களை என்றாலும் பத்திரப்படுத்திக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். :D

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் எழுதியது:

"இதென்ன வினாக்குறி..யாழ் கள ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடல் நடக்கும் மெல்பேன் நகரில். பொறுங்கள் திகதி குறிப்பது பற்றி கலந்தாலோசிக்கப் போயினமாம்."

நெடுக்காலபோவான்! நான் மெல்பேர்ன் சபேசன் இல்லை. நான் ஜேர்மனியில் இருக்கிறேன்.

வேண்டுமென்றால் ஜேர்மனியில் அப்படி ஏதாவது சந்திப்பு நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் எழுதியது:

"இதென்ன வினாக்குறி..யாழ் கள ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடல் நடக்கும் மெல்பேன் நகரில். பொறுங்கள் திகதி குறிப்பது பற்றி கலந்தாலோசிக்கப் போயினமாம்."

நெடுக்காலபோவான்! நான் மெல்பேர்ன் சபேசன் இல்லை. நான் ஜேர்மனியில் இருக்கிறேன்.

வேண்டுமென்றால் ஜேர்மனியில் அப்படி ஏதாவது சந்திப்பு நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.

மெல்பேனில தான் நடக்கப் போகுதாம். நீங்கள் எந்தச் சபேசன் என்றாலும் பிரச்சனையில்ல. போய்ச் சேர்ந்தால் சரி. அப்படியே அரவாணிகள் (ஆரணிகள் என்பது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதால் மாற்றப்பட்டுள்ளது) மீற்றிங்கும் நடக்கும். கை கோர்த்துக்கொள்ளுங்கள். விதிவிலக்கென்று புறக்கணித்தால் தான் பிரச்சனை. ஏதோ கூத்துக் காட்டடும் என்று விட்டால் காட்டிப் போட்டு அடங்கிடுவினம். இவையை தடுக்கிறது தட்டிக் கொடுக்கிறது அவையை உசுப்பிவிடுறாப் போல. :D

Link to comment
Share on other sites

ஆரணிகள் அல்ல. அரவாணிகள் என்பதுதான் சரி

இப்பொழுது "திருநங்கைகள்" என்ற புதிய சொல்லையும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

20-22 வருடங்கள்...பின்னோக்கி பார்க்கிறேன்......தாயகத்தில் ஓரின சேர்க்கை நடக்கவில்லை என்று கூறு பவருக்கு.... யாழில் உள்ள ஆண்கள் பெண்கள் பாடசாலையில் உள்ள hostel சுவர்களை சில வேளை கேட்டு பார்த்தால் கதை கதையாய் சொல்லும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20-22 வருடங்கள்...பின்னோக்கி பார்க்கிறேன்......தாயகத்தில் ஓரின சேர்க்கை நடக்கவில்லை என்று கூறு பவருக்கு.... யாழில் உள்ள ஆண்கள் பெண்கள் பாடசாலையில் உள்ள hostel சுவர்களை சில வேளை கேட்டு பார்த்தால் கதை கதையாய் சொல்லும்..

அப்ப எல்லாம் அது சுவரோட மூலைகளுக்குள்ள குசுகுசுக்கப்பட்டிருக்கும். இப்ப தான் மூலையே இல்லையே உலகமே மூலைக்குள்ள அடக்கப்பட்ட பின்னர் எப்படிக் குசுகுசுக்கிறது. அதுதான் வெளில பூதாகாரமாகக் காட்டப்படுகிறது. மற்றும் படி இலக்கியன் சொன்னதே சரி. புறநடைகள் மனிதருக்குள் குறிப்பிட்ட சத வீதத்தில் உண்டு. எல்லா மனித உருவம் கொண்டோரும் மனிதரில்லைத்தானே. அது இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலந்தொட்டு உண்மை. புறநடைகளுக்கு அதிகம் முக்கியம் கொடுப்பதில்லை. இப்போ கொடுக்கிறார்கள். ஆனால் இது புறநடை என்று சொல்வதில்லை. இப்போ அதையும் சேர்த்துச் சொல்ல வசதி ஏற்பட்டிருக்கிறது. அதையும் புறநடைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். திருந்த சந்தர்ப்பம் கிடைத்தால் திருந்திக் கொள்ள வேண்டும். மற்றும் படி அவர்களை உதாரணமாக்கி புறநடைகள் அவர்கள் பின் போகலாம். மனிதன்...?? நிச்சயமாக இருக்க முடியாது. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எதிர்பார்த்தமாதிரி விவாதங்கள் நல்ல போகின்றன. வேற்று நாட்டு ஆண்களை மணம் செய்யும் பெண்களை பலர் குறை கூறுகின்றனர். இதை நான் வரவேற்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை நாம் ஆராயவேண்டும்.

வழக்குரைஞர் அருள்மொழியை அறிந்திருப்பீர்கள். நல்ல சிந்தனையாளர், தமிழீழப்பற்றாளர். நான் மிகவும் மதிக்கும் பெண்களில் அவரும் ஒருவர். அவரை சந்தித்து உரையாடும் இனிய வாய்ப்பு நான் சென்ற முறை தமிழ்நாடு சென்றபோது கிட்டியது. எது தொடர்பான வழக்குகளை நீங்கள் அதிகமாக சந்திக்கின்றீகள் என நான் கேட்டபோது, தான் விவாகரத்து வழக்குகளைத்தான் அதிகமாக சந்திப்பதாகக் கூறி ஓர் உண்மைக் கதையையும் சொன்னார்.

இரு சகோதரிகள். அதில் ஒருவர் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளைக்கார இளைஞரைக் காதலித்தார். மற்றவர் ஒரு தமிழரைக் காதலித்தார். தமிழரைக் காதலித்தவருக்கு எந்த எதிர்ப்புமில்லாமல் திருமணம் நடந்தது. மற்றவர் பல எதிர்ப்புக்களைமீறி காதலனுடன் சேர்ந்தார் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் நினைத்தார்கள் தமிழரைக் காதலித்தவர் நல்லா வாழுவார் என்றும் மற்றவர் வெகு விரைவில் விவாகரத்து பெற்றுவிடுவர் என்று. ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்தது. அவுஸ்திரேலியரைத் திருமணம் செய்தவர் இன்றுவரை நல்லா வாழ்கிறார். மற்றவருக்கு அடுத்த ஆண்டே விவாகரத்து ஆகிவிட்டது. காரணத்தை அவர் கூறும்பொழுது எனக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தமிழரின் அற்பத்தனமான ஆணாதிக்கப் போக்கே விவாகரத்துக்கு அடிப்படைக் காரணம். தமிழ் உணர்வு அத்தனை தமிழர்களுக்கும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று. ஆனால் கற்பு, காலாச்சாரம், சாதியம். சமையம் போன்றவற்றை தமிழோடு தொடர்பு படுத்தும் குறுந்தேசியவாதப் போக்கு ஒரு போதும் தமிழினித்தை மீட்டெடுகாது.

Link to comment
Share on other sites

புறநடை என்ற சொல் சில வேளைகளில் சரியாக இருக்கலாம்.

ஆனால் மூன்று, நான்கு கைகளுடன் பிறக்கின்ற பிள்ளைகளுடன் இதை ஒப்பிட முடியாது.

ஓரினச் சேர்க்கை ஒரு ஊனம் அல்ல.

இது வரை "இது இயற்கைக்கு முரணானது, விலங்கினங்கள் இது போல் நடப்பது இல்லை" என்று சொல்லி வந்தார்கள்.

ஆனால் அண்மையில் சில விலங்கினகளிலும் ஓரினச் சேர்க்கை இருப்பது குறித்து கண்டுபிடித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

இளங்கோ தமிழுக்கும் இந்த குறுகிய போக்குக்கும் என்ன சம்பந்தம்.தமிழர்கள் தங்கள் பார்வையை விரிவுபடுத்த வேண்டிய நிலையில் இருகிறார்கள்.உலகளாவிய ரீதியில் தமிழர்கள் பரவி இருக்கும் இந்தத் தருணத்தில் தமிழில் சிந்னைகளும் உலகளாவியதாகப் பரிணமிக்கும்.அல்லாது விடின் அடுத்த சந்ததி தமிழை மறப்பதும் தமிழ் இனம் புலத்தில் இருப்பதும் கேள்விக் குறியாகும்.இந்த மாற்றம் தமிழரின் மனங்களில் உருவாக வேண்டும்.அதற்கான எழுதுக்களும் தமிழ்ச் சூழலில் உருவாக வேண்டும்.ஆனால் துரதிர்ச்சிஸ்ட்ட வசமாக அவ்வறு தூர நோக்கில் எழுதுபவர்கள் எவரையும் நான் இன்னும் காணவில்லை.

இனி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.இந்த வகையில் யாழ்க் களத்தில் பல முன் மாதிரியான கருதாடல்கள் நடை பெறுவது நம்பிக்கையைத் தருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பார்த்தமாதிரி விவாதங்கள் நல்ல போகின்றன. வேற்று நாட்டு ஆண்களை மணம் செய்யும் பெண்களை பலர் குறை கூறுகின்றனர். இதை நான் வரவேற்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை நாம் ஆராயவேண்டும்.

வழக்குரைஞர் அருள்மொழியை அறிந்திருப்பீர்கள். நல்ல சிந்தனையாளர், தமிழீழப்பற்றாளர். நான் மிகவும் மதிக்கும் பெண்களில் அவரும் ஒருவர். அவரை சந்தித்து உரையாடும் இனிய வாய்ப்பு நான் சென்ற முறை தமிழ்நாடு சென்றபோது கிட்டியது. எது தொடர்பான வழக்குகளை நீங்கள் அதிகமாக சந்திக்கின்றீகள் என நான் கேட்டபோது, தான் விவாகரத்து வழக்குகளைத்தான் அதிகமாக சந்திப்பதாகக் கூறி ஓர் உண்மைக் கதையையும் சொன்னார்.

இரு சகோதரிகள். அதில் ஒருவர் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளைக்கார இளைஞரைக் காதலித்தார். மற்றவர் ஒரு தமிழரைக் காதலித்தார். தமிழரைக் காதலித்தவருக்கு எந்த எதிர்ப்புமில்லாமல் திருமணம் நடந்தது. மற்றவர் பல எதிர்ப்புக்களைமீறி காதலனுடன் சேர்ந்தார் அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் நினைத்தார்கள் தமிழரைக் காதலித்தவர் நல்லா வாழுவார் என்றும் மற்றவர் வெகு விரைவில் விவாகரத்து பெற்றுவிடுவர் என்று. ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்தது. அவுஸ்திரேலியரைத் திருமணம் செய்தவர் இன்றுவரை நல்லா வாழ்கிறார். மற்றவருக்கு அடுத்த ஆண்டே விவாகரத்து ஆகிவிட்டது. காரணத்தை அவர் கூறும்பொழுது எனக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தமிழரின் அற்பத்தனமான ஆணாதிக்கப் போக்கே விவாகரத்துக்கு அடிப்படைக் காரணம். தமிழ் உணர்வு அத்தனை தமிழர்களுக்கும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று. ஆனால் கற்பு, காலாச்சாரம், சாதியம். சமையம் போன்றவற்றை தமிழோடு தொடர்பு படுத்தும் குறுந்தேசியவாதப் போக்கு ஒரு போதும் தமிழினித்தை மீட்டெடுகாது.

அருமையான கருத்து. ஒரு உதாரணத்தை வைத்தே முழு உலகையும் அளந்து விட்டீர்களே. மிகவும் அற்புதமான கருத்தியல்.

இதையும் கேளுங்கள். ஒரு மலேசிய தமிழ் இளைஞர் படிப்பதற்காக வெள்ளைக்கார நாடு வந்தார். வந்தவர் பாடம் படித்தாரோ இல்லையோ வெள்ளைக்காரப் பெண்களைப் படித்தார். இறுதியில் மொத்தம் 6 காதலிகள் அரையாண்டுக்கு ஒரு காதலி என்ற வகையில். காலம் முடிந்ததும் பணமும் முடிய காதலிகள் கழன்றுவிட மீண்டும் மலேசியாவில் தமிழ் பெண்ணொருத்தியைத் தேடி மணமுடிக்கப் பறந்துவிட்டார்?

இந்த அளவில் எமக்குத் தெரிந்தது...எங்கள் வீட்டுச் சேவல் அடுத்த வீட்டுக் கோழியைச் சைற்றடிச்சதும் மட்டுமில்லாமல் ஊர் பூராவும் திரிஞ்சு சைற்றடிக்கும். இறுதில் கூட்டோடு நின்றவை பரவிய நோயிலின்றும் தப்பின..அலைந்தவர் நோயெடுத்த இறந்தார் விரைவே.

இன்னுமென்று சொன்னீர்கள் ஆணாதிக்கம் என்பது ஏதோ தமிழர்களின் சொத்துப் போல. உலகம் பூராவும் ஆணாத்திக்கமும் இருக்கிறது மறு புறம் பெண்ணாதிக்கமும் இருக்கிறது. ஆண்களால் மேற்குலகில் கூட பெண்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். பிரித்தானியாவில் நிமிடத்துக்கு 3 தொலைபேசி அழைப்புக்கள் வீட்டுச் சண்டை என்று வருகிறதாம். அதேபோல் பெண்களால் வதைபடும் ஆண்களும் மேற்கில் உண்டு. ஆக.. பாலாதிக்கம் என்பது எல்லாச் சமூகத்திலும் உண்டு. அது ஆளாளுக்கு மட்டும் வேறுபடலாம். அந்த வகையில் உங்கள் உதாரணம் சுத்தப் பம்மாத்து.

மனிதன் விலங்கிலின்றும் நடத்தையில் வேறுபடுமிடமே மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் தான் தாங்கியுள்ளது. மனிதனைப் பிரிக்கையில் கற்களைப் பாவித்த மனிதன் நெருப்பைப் பாவித்த மனிதன் சடங்குகளை செய்த மனிதன் என்று அவனை விலங்கிலின்றும் வேறுபடுத்தப் பலத்த பாடுபடுகின்றோம்.

நீங்கள் வெகு இலகுவாக மனிதா நீ மிருகமாகவே இருந்து விடு. அதற்குள் பாவம் தமிழை ஏன் புகுத்துகிறீர்கள். வெள்ளைக்காரனை மணக்கவும் வெள்ளைக்காரியை மணக்கவும் தமிழ் எதற்கு? அது செத்தே போகட்டும். தமிழ் நாடெதற்கு. அது அவசியமில்லை. நாம் தான் வெள்ளைக்காரனோடு வாழப் போறமே அவன் நாட்டில் ஒரு மூலையில் தங்கிக் கொள்வதால் எங்கள் தேவைகள் தீர்ந்துவிடாதா என்ன?

பிறகெதற்கு குறுந்தேசியம் நெடுந்தேசியம். எல்லாம் அநாவசியம். தமிழர்களைப் பொறுத்தவரை. ஒன்று புரிகிறது பரா அண்ணன் சொன்னது போல தமிழீழம் விரைந்து மீட்கப்பட வேண்டும் இன்றேல் தமிழர்கள் அங்கு வாழ இருக்கமாட்டார்கள் என்று.

தமிழர்கள் யூதர்களாக முடியாது. தமிழர்கள் மேடைக்கு ஏற்ப வேசம் போடக்கூடிய கோமாளிகள். அவர்களுக்கு போகும் மேடையே போதும் வேசம் மாற்றி வாழ்ந்து கழித்திட.

Link to comment
Share on other sites

நேடுக்கால போவான் எழுதியது:

"நீங்கள் வெகு இலகுவாக மனிதா நீ மிருகமாகவே இருந்து விடு. அதற்குள் பாவம் தமிழை ஏன் புகுத்துகிறீர்கள். வெள்ளைக்காரனை மணக்கவும் வெள்ளைக்காரியை மணக்கவும் தமிழ் எதற்கு? அது செத்தே போகட்டும். தமிழ் நாடெதற்கு. அது அவசியமில்லை. நாம் தான் வெள்ளைக்காரனோடு வாழப் போறமே அவன் நாட்டில் ஒரு மூலையில் தங்கிக் கொள்வதால் எங்கள் தேவைகள் தீர்ந்துவிடாதா என்ன?"

தமிழர்கள் தமிழர்களை மணம் முடிப்பதற்கா தமிழ் மொழியும், நாடும்?

நல்ல கண்டுபிடிப்பு

தமிழ் பெண்ணை மணம் முடித்தவர்கள் தமிழ் இனத்திற்கும், மொழிக்கும், நாட்டிற்கும் செய்ததை விட மிக மிக அதிகமாகவே எங்களின் மதியுரைஞர் செய்து இருக்கிறார்.

(இது உங்களுடைய கருத்து தவறு என்று காட்டுவதற்கான ஒரு உதாரணம் மட்டுமே. இதை வைத்து யாரும் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேடுக்கால போவான் எழுதியது:

"நீங்கள் வெகு இலகுவாக மனிதா நீ மிருகமாகவே இருந்து விடு. அதற்குள் பாவம் தமிழை ஏன் புகுத்துகிறீர்கள். வெள்ளைக்காரனை மணக்கவும் வெள்ளைக்காரியை மணக்கவும் தமிழ் எதற்கு? அது செத்தே போகட்டும். தமிழ் நாடெதற்கு. அது அவசியமில்லை. நாம் தான் வெள்ளைக்காரனோடு வாழப் போறமே அவன் நாட்டில் ஒரு மூலையில் தங்கிக் கொள்வதால் எங்கள் தேவைகள் தீர்ந்துவிடாதா என்ன?"

தமிழர்கள் தமிழர்களை மணம் முடிப்பதற்கா தமிழ் மொழியும், நாடும்?

அப்படி எங்கிறீர்கள். அப்போ சிங்களவர்களை தமிழ் பெண்கள் மணமுடித்தால் சிங்களப் பெண்களை தமிழர்கள் மணமுடித்தால் மொழி நாடு என்ற தேவையே எழாதேங்கோ. அதென்ன வெள்ளைக்காரனோட இருக்கேக்க ஒரு நியாயம் சிங்களவனோட இருக்கேக்க இன்னொரு நியாயம்.

அதுதான் சிங்களப் படையினரோடு தமிழ் பெண் வைத்திருந்த பாலியல் தொடர்ப்பை வற்புறுத்தினீர்களாக்கும்.

இதைத்தான் பண்டாரநாயக்கா சொன்னவர். தமிழர்கள் சிங்களம் கற்று சிங்களவர்களோடு கலந்து விட்டால் இலங்கையில் இனப்பிரச்சனையே இருக்காதென்று. என்ன தமிழர்களுக்கு அப்ப புரியவில்லை. இப்போ வெள்ளைக்காரனையும் வெள்ளைக்காரியையும் அவங்கட வரியையும் வசதிகளையும் வாய்ப்பையும் அனுபவிக்கேக்க வருகுது ஞானம். நல்லது நீங்கள் அப்படியே மணந்து கொண்டு ஒரு ஆங்கிலேயனாக அல்லது டொச்காரனாக அல்லது நோர்வேயினாக மாறிவிட்டால் சிறீலங்காவது உருப்படும்.

நல்ல கண்டுபிடிப்பு

தமிழ் பெண்ணை மணம் முடித்தவர்கள் தமிழ் இனத்திற்கும், மொழிக்கும், நாட்டிற்கும் செய்ததை விட மிக மிக அதிகமாகவே எங்களின் மதியுரைஞர் செய்து இருக்கிறார்.

அவர் போராட்ட களத்தில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர். 1996-8 காலப்பகுதியில் தான் தாயகத்தை விட்டுப் புறப்பட வேண்டியதானது. அவரது மனைவி கூட தோலில் தான் வெள்ளை. மற்றும்படி அவர் தமிழ் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பவர் என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது. ஏன் யாழ்ப்பாணத்தில் சராசரி யாழ்ப்பாணத் தமிழ் பெண் போல வாழ்ந்தவர் அவர். அதுவும் போர் சூழலுக்குள் பொருளாதாரத் தடைகளுக்குள். அப்படி வெள்ளைக்காரியை மணமுடித்து தமிழிச்சி ஆக்கினீர்கள் என்றால் அது திறமை. ஆனால்..உங்களிடம்...????!

(இது உங்களுடைய கருத்து தவறு என்று காட்டுவதற்கான ஒரு உதாரணம் மட்டுமே. இதை வைத்து யாரும் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்)

தவறான உதாரணமல்ல. உங்களின் நோக்கு மட்டுமே தவறானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்

Link to comment
Share on other sites

மதியுரைஞர் ஈழத் தமிழர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அடேல் அவர்களை திருமணம் செய்து விட்டார். அப்பொழுது நீங்கள் அங்கு இருந்திருந்தால், அவரையும் கண்டபடி திட்டி இருப்பீர்கள்.

இப்பொழுது வெளிநாடுகளில் ஈழத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் சிலர் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.

நான் இவைகளை உதாரணம் காட்டுவது, எந்த நாட்டு பெண்ணை திருமணம் செய்தாலும், தமிழ் உணர்வு என்பது மாறி விடாது.

அதே வேளை தமிழர்களை மணம் முடித்த தமிழர்கள் எத்தனையோ பேர் கொஞ்சம் கூட தமிழ் உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆகவே தமிழனாகவோ, தமிழச்சியாகவோ இருப்பது தமிழுணர்வில்தான் தங்கியிருக்கிறது. எங்களுக்கு காதல் எந்தப் பெண்ணில் அல்லது ஆணில் வருகிறது என்பதில் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சபேசனின் கருத்துடன் 100 விழுக்காடு உடன்படுகிறேன். அதேநேரம் நெடுக்காலபோவானின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இந்தக் கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.

மறைமலை அடிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மாபெரும் தமிழ் அறிஞர். தனித்தமிழ் உணர்வு அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான். அந்தத் தமிழ் கடலின் மகள் நீலாம்பிகை. தமிழ்ப் பற்றில் தனது தந்தைக்கு சளைத்தவர் அல்ல. அந்த நீலாம்பிகை அம்மையார் காதலித்தது ஒரு வெள்ளைக்காரரை. அதுவும் வெள்ளையனே வெளியேறு என்று காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் வலுப்பெற்றிருந்த காலத்தில் மிகத் தைரியமாக அவரைக் காதலித்தார். தந்தையார் மட்டுமல்ல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., போன்றவர்களும் அவரது காதலை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் பலரது எதிர்ப்பை மீறி காதலனைக் கைப்பிடித்தார் நீலாம்பிகை அம்மையார். அதன்பின் என்ன நடந்தது தெரியுமா??? அவரும் அவரது வெள்ளைக்கார கணவரும் தங்கள் இறுதி மூச்சு அடங்கும்வரை தமிழுக்கும் (அதுவும் வடமொழி கலப்புக்கு எதிரான தனித்தமிழ் யுத்தம்) தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவிட்டு மறைந்தார்கள்.

தமிழுணர்வு என்பது தமிழை உயிராக எண்ணும் மனத்தன்மையில்தான் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.