Jump to content

நெருப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதியுரைஞர் ஈழத் தமிழர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அடேல் அவர்களை திருமணம் செய்து விட்டார். அப்பொழுது நீங்கள் அங்கு இருந்திருந்தால், அவரையும் கண்டபடி திட்டி இருப்பீர்கள்.

மதியுரைஞர் ஈழத்தமிழ் அரசியலுக்குள் நுழைந்த ஆண்டையும் திருமண ஆண்டையும் ஒருக்கா தெளிவாகக் குறிப்பிட்டு எழுதினீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும்.

இங்கு யாரும் வெள்ளையர்களைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லையே. இளங்கோ அவர்கள் தான் தமிழ் ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் என்பது போலவும் வெள்ளையர்கள் ஆணாதிக்கமே அறியாத அப்பாவிகள் போலவும் ஒரு கதையைப் புனைந்திருந்தார். தமிழ் ஆண்களை விட வெள்ளையர்கள் கட்டிய பெண்கள் சிறப்பாக உள்ளனர் என்று தான் எழுதி இருந்தார். அதில் அப்பெண்கள் தமிழுணர்வோடு வெள்ளையர்களை தமிழுணர்வாக்கிய நிகழ்வொன்றை என்றாலும் குறிப்பிட்டாரா?

நீங்கள் வெள்ளையை முடியுங்கள் கறுப்பை முடியுங்கள். எவரும் எதுவும் கேட்கப் போறதில்லை. நீங்களா சமூகம் பதறுது துடிக்குது என்று படம் காட்டுவதை நிறுத்துங்கள்.

நீங்கள் வெள்ளையர்களை முடிக்கலாம் என்று வாதத்தை முன் வைக்கும் போது பண்டாரநாயகாவின் சிங்கள மொழியும் சிங்கள தமிழ் இனக்கலப்பும் என்ற கொள்கை இலாவகமாக தமிழர்களுக்குப் பொருந்தும் என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழுணர்வு என்பது தமிழ் பேசுவது. தமிழில் எழுதுவது. எங்கோ இருந்து கொண்டு தமிழீழம் காண்பது அப்படி என்று நீங்கள் நினைப்பது போல தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் தமிழீழம் என்பதை கனடா ரொரண்டோவிலும் லண்டனிலும் சிட்னியிலும் நியோர்க்கிலும் தான் நிறுவ வேண்டி இருக்கும். ஈழத்திலாக இருக்காது.

இப்பொழுது வெளிநாடுகளில் ஈழத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் சிலர் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.

நான் இவைகளை உதாரணம் காட்டுவது, எந்த நாட்டு பெண்ணை திருமணம் செய்தாலும், தமிழ் உணர்வு என்பது மாறி விடாது.

அதே வேளை தமிழர்களை மணம் முடித்த தமிழர்கள் எத்தனையோ பேர் கொஞ்சம் கூட தமிழ் உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

தமிழர்களை மணம் முடித்த தமிழர்களே தமிழ் உணர்வை இழக்கும் போது வெளிநாட்டவரை மணம் முடித்த தமிழர்களின் தமிழுணர்வு மட்டும் வாழ்ந்திடும் என்று எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கின்றீர்கள்????? லொஜிக்கே தவறா இருக்குதே...! :P

ஆகவே தமிழனாகவோ, தமிழச்சியாகவோ இருப்பது தமிழுணர்வில்தான் தங்கியிருக்கிறது. எங்களுக்கு காதல் எந்தப் பெண்ணில் அல்லது ஆணில் வருகிறது என்பதில் அல்ல.

காதல் எந்தப் பெண்ணில் எந்த ஆணில் வருவகிறது என்று பார்த்து வந்தால் அது காதல் அல்ல. அது தேவை. தமிழுணர்வு என்பது தமிழ் ஆண் பெண்ணின் இடையேயான உறவு நிலையிலேயே அதிகம் வலுப்படச் சாத்தியக் கூறுகள் உண்டு என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. சிங்களவரைத் திருமணம் செய்த கதிர்காமரிடம் ஏன் தமிழுணர்வு எழவில்லை? அன்ரன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை அவர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்ற வகையில் அவரது துணைவியாருக்கு அவருடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி வாழக் கூடிய விட்டுக் கொடுக்கும் குணம் இருந்திருக்கிறது. ஆனால் நீங்கள் மணம் முடிக்கும் எல்லா வெளிநாட்டவருக்கும் அப்படிக் குணம் அமைந்திடுமா? உங்களிடம் தமிழுணர்வு இருந்தாலும் அதை அவர்கள் மதிக்கவும் வெளிப்படவும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஈழத்தில் நடப்பதையே அறியாத பல வெளிநாட்டவர்களுக்கு தமிழ் என்பதே என்னென்று அறியாதவர்களுக்கு உங்கள் தமிழுணர்வு என்பது சாதாரண மனிதக் காதல் உணர்வு போல வந்திடுமா? நிச்சயமாக நீடித்த புரிந்துணர்வும் ஆழமான தேசப் புழக்கமும் இல்லாமல் அது வர முடியாது.

எனவே தான் தமிழன் தமிழிச்சியை மணமுடிக்கும் போது அதில் தமிழுணர்வு இயல்பாகவே எழும். வருந்திப் பெற வேண்டிய சூழல் இருக்காது. பிள்ளைகளுக்கும் அது தானாகவே ஊட்டப்படும். ஆனால் வெளிநாட்டவர்களை மணம் முடிக்கும் போது அது தேர்ந்து புகட்டுதலாக மாறுபட்டதாக இருக்கும். சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் தமிழர்களின் பெரிய சனத்தொகையில் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் தொகை மிகச் சொற்பம். வெள்ளையர்கள் ஈழத்தை ஆண்ட போது கூட ஈழத்துப் பெண்கள் வெள்ளை ஆண்களைத் திருமணம் செய்தது மிகக் குறைவு. அதேபோல் வெள்ளையர்களும் திருமணம் செய்ய முன் வந்தது குறைவு.

ஆனால் நம்மவர்கள் வெள்ளையரின் காலடியில் வாழும் போது தங்கள் அடையாளங்களை தாங்களே மறந்து போவதும் வேற்றுநாட்டவரை மணப்பதை நாகரிகம் என்று கருத முனைவது முற்போக்கல்ல. அது நீண்ட கால நோக்கில் தமிழினத்தின் இனச் சுத்தி என்பது இழக்கப்பட பின்னர் தமிழருள் ஆரியக் கலப்பு என்று இன்னும் 200 வருட காலத்தின் பின் தமிழர்களுக்குள் புதிய பிரச்சனையாக தலை தூக்கி நிற்கும். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வெகு குறைவு. காரணம் அநேகம் தமிழ் ஆண்கள் தமிழ் பெண்களையே திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்காக வேற்றுநாட்டுப் பெண்களிடம் உள்ள பாலியல் கட்டுப்பாடற்ற தன்மையை பயன்படுத்த முனைகின்றனர். அது தனிமனித சுதந்திரம். ஆனால் அதையே சமூகத் தேவை என்பதாகக் காட்டுதல் அபந்தமானது. வெகு சிலரே வேற்றுநாட்டுப் பெண்களோடு வாழ்ந்தாலும் அவர்களையும் தமிழுணர்வோடு கலக்கச் செய்துள்ளனர். அதை வரவேற்கலாம். ஆனால் வேற்றுநாட்டு ஆண்களையோ பெண்களையோ மணம் முடிக்கும் எல்லோருக்கும் தமிழுணர்வு எளிதில் சாத்தியப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணத்துக்கு லக்ஷமன் கதிர்காமர் போன்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

நெடுக்காலபோவான் சொன்னது:

"தமிழர்களை மணம் முடித்த தமிழர்களே தமிழ் உணர்வை இழக்கும் போது வெளிநாட்டவரை மணம் முடித்த தமிழர்களின் தமிழுணர்வு மட்டும் வாழ்ந்திடும் என்று எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கின்றீர்கள்????? லொஜிக்கே தவறா இருக்குதே...

காதல் எந்தப் பெண்ணில் எந்த ஆணில் வருவகிறது என்று பார்த்து வந்தால் அது காதல் அல்ல. அது தேவை."

நெடுக்காலபோவான்! என்னால் உங்களுக்கு விளங்குகிறது போன்று எழுத முடியாது இருப்பதற்கு மன்னிக்கவும்.

நான் மீண்டும் ஒரு முறை விளங்கப்படுத்துகிறேன்.

தமிழர்களை மணம் முடித்த தமிழர்கள் தமிழுணர்வை இழக்கிறார்கள் என்று நான் எங்குமே எழுதவில்லை.

தமிழுணர்வோடு இருக்கின்ற தமிழர்கள் வேற்று நாட்டவர்களை மணம் முடித்தும் தொடர்ந்து தமிழுணர்வோடு இருக்கிறார்கள்.

தமிழுணர்வு இல்லாத தமிழர்கள் தமிழர்களை மணம் முடித்தும், தொடர்ந்தும் தமிழுணர்வு இல்லாமலேயே இருக்கிறார்கள்.

ஆகவே நாங்கள் தேர்ந்து எடுக்கின்ற துணை எந்த நாட்டை சேர்ந்ததாக இருந்தாலும், அதற்கும் தமிழுணர்வுக்கும் சம்பந்தம் இல்லை.

காதல் என்பது யார் மீதும் வரக்கூடும். இனம், மொழி பார்த்து அது வருவதில்லை. நீங்கள் இப்பொழுது சொன்னதைத்தான் நானும் சொன்னேன்.

ஆகவே நீங்கள் முதலில் வேற்றுநாட்டவர்களை துணையாக்கி கொள்பவர்களை நாய்களுக்கு ஒப்பிட்டு எழுதியது தவறு அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சபேசனின் கருத்துடன் 100 விழுக்காடு உடன்படுகிறேன். அதேநேரம் நெடுக்காலபோவானின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இந்தக் கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.

மறைமலை அடிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மாபெரும் தமிழ் அறிஞர். தனித்தமிழ் உணர்வு அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான். அந்தத் தமிழ் கடலின் மகள் நீலாம்பிகை. தமிழ்ப் பற்றில் தனது தந்தைக்கு சளைத்தவர் அல்ல. அந்த நீலாம்பிகை அம்மையார் காதலித்தது ஒரு வெள்ளைக்காரரை. அதுவும் வெள்ளையனே வெளியேறு என்று காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் வலுப்பெற்றிருந்த காலத்தில் மிகத் தைரியமாக அவரைக் காதலித்தார். தந்தையார் மட்டுமல்ல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.இ போன்றவர்களும் அவரது காதலை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் பலரது எதிர்ப்பை மீறி காதலனைக் கைப்பிடித்தார் நீலாம்பிகை அம்மையார். அதன்பின் என்ன நடந்தது தெரியுமா??? அவரும் அவரது வெள்ளைக்கார கணவரும் தங்கள் இறுதி மூச்சு அடங்கும்வரை தமிழுக்கும் (அதுவும் வடமொழி கலப்புக்கு எதிரான தனித்தமிழ் யுத்தம்) தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவிட்டு மறைந்தார்கள்.

தமிழுணர்வு என்பது தமிழை உயிராக எண்ணும் மனத்தன்மையில்தான் தங்கியுள்ளது.

மொழியில் கலப்படம் கூடது அதுதான் முக்கியம். தன்னுடன் ஒரு வெள்ளைக்காரரை கலக்க அனுமதித்த நீலாம்பிகை அம்மையார். தனது மொழியில் பிற மொழிகளைக் கலக்க அனுமதிக்கவில்லை.

இதற்குச் சரியான பதில் இதுவாத்தான் இருக்க முடியும்.

எனவே தான் தமிழன் தமிழிச்சியை மணமுடிக்கும் போது அதில் தமிழுணர்வு இயல்பாகவே எழும். வருந்திப் பெற வேண்டிய சூழல் இருக்காது. பிள்ளைகளுக்கும் அது தானாகவே ஊட்டப்படும். ஆனால் வெளிநாட்டவர்களை மணம் முடிக்கும் போது அது தேர்ந்து புகட்டுதலாக மாறுபட்டதாக இருக்கும். சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.

ஆகவே நீங்கள் முதலில் வேற்றுநாட்டவர்களை துணையாக்கி கொள்பவர்களை நாய்களுக்கு ஒப்பிட்டு எழுதியது தவறு அல்லவா?

வெளிநாட்டவர்களை மணம் முடிப்பது என்பது இன்றல்ல பல காலந்தொட்டு இருக்கிறது. முன்னர் தென்னிலங்கைக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் சிங்களப் பெண்களை மணந்தனர். இன்று மேற்குலகெங்கும் அகதியாய் மற்றும் குடிபெயர்ந்திருக்கும் தமிழர்கள் இதர நாட்டுக்காரர்களை திருமணம் செய்யக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் திருமணம் முடிக்கும் வேற்றுநாட்டுக்கார ஆண்களோ பெண்களோ இவர்களின் தமிழுணர்வுக்கு எந்தளவு மதிப்பளிப்பார்கள் என்பது வினாக்குறியே? அது போக கலப்பின நாய்கள் என்பது மாறுபட்ட இன நாய்களைக் கலத்தல். அப்படியான நாய்களைக் கலந்த போது கிடைக்கும் பொமேரியன் நாய்களாக எல்லா நாய்களும் அமைவதில்லை. தெருநாய் தெருநாயாத்தான் தோற்றமளிக்கும். அதுவும் போக வெள்ளையர்கள் பலரின் பாலியல் நடத்தை என்பது அவர்களே உச்சரிக்கும் Bitch போல அமைந்திருப்பதால்..இதற்குள் தமிழுணர்வைப் புகுத்தி அவரவர் செய்யப் போகுதும் தவறுகளுக்கு தமிழுணர்வின் பெயரால் பாதுகாப்புக் கவசம் இடுவதிலும் அவரவர் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பும் படி அமைத்துக் கொண்டு மிச்சம் மீதிக்கு தமிழுணர்வைப் பற்றி யோசிக்கட்டும். அதைவிடுத்து ஏதோ வெள்ளைக்காரியைக் கட்டி அல்லது வெள்ளைக்காரனைக் கட்டி அவளுக்கு அல்லது அவனுக்கு தமிழுணர்வை பொங்கி எழச் செய்யப்போவதாக பிளீஸ் பிளிங் காட்டாதேங்கோ. எங்களுக்கும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரிண்ட குணங்கள் கொஞ்சம் என்றாலும் தெரியும் பாருங்கோ. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சபேசனின் கருத்துடன் 100 விழுக்காடு உடன்படுகிறேன். அதேநேரம் நெடுக்காலபோவானின் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இந்தக் கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.

மறைமலை அடிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மாபெரும் தமிழ் அறிஞர். தனித்தமிழ் உணர்வு அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான். அந்தத் தமிழ் கடலின் மகள் நீலாம்பிகை. தமிழ்ப் பற்றில் தனது தந்தைக்கு சளைத்தவர் அல்ல. அந்த நீலாம்பிகை அம்மையார் காதலித்தது ஒரு வெள்ளைக்காரரை. அதுவும் வெள்ளையனே வெளியேறு என்று காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் வலுப்பெற்றிருந்த காலத்தில் மிகத் தைரியமாக அவரைக் காதலித்தார். தந்தையார் மட்டுமல்ல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.இ போன்றவர்களும் அவரது காதலை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் பலரது எதிர்ப்பை மீறி காதலனைக் கைப்பிடித்தார் நீலாம்பிகை அம்மையார். அதன்பின் என்ன நடந்தது தெரியுமா??? அவரும் அவரது வெள்ளைக்கார கணவரும் தங்கள் இறுதி மூச்சு அடங்கும்வரை தமிழுக்கும் (அதுவும் வடமொழி கலப்புக்கு எதிரான தனித்தமிழ் யுத்தம்) தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவிட்டு மறைந்தார்கள்.

தமிழுணர்வு என்பது தமிழை உயிராக எண்ணும் மனத்தன்மையில்தான் தங்கியுள்ளது.

மொழியில் கலப்படம் கூடது அதுதான் முக்கியம். தன்னுடன் ஒரு வெள்ளைக்காரரை கலக்க அனுமதித்த நீலாம்பிகை அம்மையார். தனது மொழியில் பிற மொழிகளைக் கலக்க அனுமதிக்கவில்லை.

ஏன் கூடாது. ஆட்கள் கலக்கலாம் என்றால் மொழியும் கலந்தால் சிறப்பாக இருக்கும். புதுவடிவம் பிறக்கும். தனித்துவம் இழக்கப்படலாம். ஆனால் புரட்சிகரமான வடிவம் எடுக்கும்.

ஆக மொத்தத்தில் அவரவர் ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிக்கிறதுக்கு அல்லது வெள்ளைக்காரனைக் கட்டிக்கிறதுக்கு தமிழுணர்வு தடையாகிடுமோ என்ற பயத்தில் இப்படி போட்டு வாங்கிறீர்களே தவிர 50 வருட காலப் பழமையை உதாரணம் காட்டி முற்போக்கு வாதம் பேசும் திறமை உங்கள் சிலரிடம் மட்டுமே உண்டு. அந்த அம்மையாரைப் போல பல அம்மையார்களை நாங்களும் கண்டுதான் உள்ளோம். அவர்களை விடக் கேவலமாப் போன ஐயாக்களையும் அம்மையார்களையும் கண்டுதான் உள்ளோம். கதையளப்பு வேண்டாமே. ஏதாவது உருப்படியா கதைக்கலாமே.

உதாரணத்துக்கு ஈழத்தமிழர்கள் நடத்தும் விழாக்களுக்கு ஒரு வெள்ளைக்காரனைக் கூட மருந்துக்கும் காணக் கிடைப்பதில்லை. இவையாப் போய் வலிஞ்சு அழைத்துப் பொன்னாடை போர்த்தி மாலை போட்டு..சா சா...வெட்கம். வெள்ளையனே வெறியேறு என்றவர்கள் இன்று மிளகாய்த்தூளைப் போட்டே வெள்ளையனை வெளியேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளைக்காரி வெள்ளைக்காரனைக் கட்டிக்கொண்டு யாழ் சந்தை மீன் பொரிக்க வரட்டாம். ஐயா வெள்ளைக்காரிக்கு நீங்கள் தமிழுணர்வு ஊட்டுவதற்கிடையில் அவள் உங்களை விவாகரத்துச் செய்து போய்விடுவாள். நீங்கள் கட்டிறதென்றால் கட்டுங்கள். கட்டிவிட்டு அவள் போற போக்கில் போங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கை நீடிக்க உதவும். வெள்ளைக்காரப் பையங்களைப் பாருங்கள். அவள்கள் இருக்கும் வரை எப்படி நடிக்கிறார்கள். போன பின்னர் எப்படி நடக்கிறார்கள் என்று.

Link to comment
Share on other sites

இங்கே வெள்ளைக்காரர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டப் போவதாக யாரும் சொல்லவில்லை.

நாம் ஏதோ சொல்ல, நீங்கள் ஏதோ சொல்கிறீhகள்.

உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதற்கு எம்முடை தமிழறிவு போதாது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அன்ரன் அடேலுக்கு ஊட்டி உள்ளாரே. அன்ரனை விட அடேல் அழகாக ஈழத்துப் பெண்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை அனுபவித்து எழுதியுள்ளார் அவரின் விடுதலை வேட்கையில் ஒரு பகுதியைத் தானும் நீங்கள் கட்டப் போகும் வெள்ளைக்காரன் அல்லது காரியூடு வெள்ளைக்காரனுக்கு ஊட்ட முடியுமா?

தமிழுணர்வு என்பது எட்ட இருந்து நாலு எழுத்து தமிழில் இணையத்தில் எழுதிவிட்டு வெள்ளைக்காரியோடு குடித்தனம் நடத்துவதல்ல. தமிழுணர்வின் வெளிப்பாடு என்பது தமிழினத்துக்கான பயனளிப்பாக அமைய வேண்டும். நேரடி ஈடுபாடு இருக்க வேண்டும். அதற்கு வெள்ளைக்காரியோ காரணுக்கோ தமிழினத்தின் வாழ்வியல் அரசியல் பண்புகளை விளங்கக் கூடிய பொறுமை நிதானம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

நண்பன் ஒருவன் கூட ஒரு மேலைநாட்டுப் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளான். ஒரு தடவை அவன் வீட்டுக்குச் சென்ற போது ரிரிஎன் போட்டு செய்தி பார்த்திட்டிருக்கும் வேளையில் ஓடோடி வந்த நண்பன் உடனே ஸ்கை ரிவிக்கு மாற்றிவிட்டு இருந்தான். ஏன் ஏது என்று கேட்பதற்குள் அவரின் வெள்ளைக்கார மனைவி வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தினார். போய் கதைவைத் திறந்து விட்டு அவர் வர, அந்தப் பெண்ணோ வந்ததும் வராததுமாய் ரிவியின் சனலை வேறொரு ஆங்கில சனலுக்கு மாற்றிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு நண்பர் வந்து அறிமுகப்படுத்தும் வரை அந்த அம்மணிக்கு ஒரு உணர்வே இல்லை. விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார் என்றது. அவனின் அறிமுகத்தின் பின்னரே அந்தப் பெண்மணி சொறி சொன்னார்.

இத்தனைக்கும் அந்த நண்பன் ஈழத்தில் இந்திய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்தவன். அவனுக்குள் உள்ள அந்த தமிழ் உணர்வை அந்தப் பெண் அனுபவரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பில்லை. அதுவே அவள் சில விடயங்களை இலகுவாகக் கருதி புறக்கணித்துவிட வாய்ப்பளிக்கிறது. அவனும் தனது தமிழ் உணர்வை திணிப்பதில்லை. ஆனால் அவனின் தமிழுணர்வு என்பது அங்கு பயனற்றுப் போய்க் கிடக்கிறது. அந்த நிலையில் தமிழுணர்வு இருந்தால் என்ன விட்டால் என்ன? அதனால் தமிழுக்கோ தமிழ் சமூகத்துக்கோ தேசத்துக்கோ எந்தப் பயனுமில்லை.

காதலன் காதலி எங்கிறார்கள் ஆனால் காதலனுக்குள் இருக்கும் ஒரு உணர்வை சரிவரப் புரிந்து கொள்ள ஆர்வம் காட்டாதவர்கள் எப்படி நெருக்கமான உறவுகளாக கணிக்கப்படக் கூடியவர்கள். இப்படித்தான் பலரும். பல உதாரணங்கள்.

வார்த்தையளவில் விளாசுவதற்கும் நடைமுறைக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. அதைப் புரிய வைக்க முயலுங்கள். வெறும் ஏட்டுச்சுரக்காய்களை அள்ளி விதைத்து நாலு கருத்து யாழில் எழுதினேன் அதன் மூலம் நான் முற்போக்கான தமிழுணர்வை வெளிப்படுத்தினேன் என்பதல்ல தேவை. சமூகத்துக்கு உதவக் கூடிய பயன்படக் கூடிய கருத்துக்களும் உணர்வின் வெளிப்பாடுகளுமே அவசியம். அதைத் தேடுவதற்கு ஒரு தமிழ் ஆணைப் போன்று அதே சூழலில் வாழ்ந்த அல்லது வாழும் தமிழ் பெண்ணால் தான் அதிகம் அவனின் உணர்வுகளை உள்வாங்க முடியும். அதேபோல் தமிழ் பெண்ணின் உணர்வுகளையும் ஒரு தமிழ் ஆணாலேயே அதிகம் சரிவர உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களால் முடியாதென்றல்ல. முடியும். ஆனால் அதற்காக ஈடுபாடு என்பது வலிந்து பெறப்பட வேண்டி இருக்கும். அது சிக்கல் நிறைந்ததாக இருக்கும். இன்றேல் இருவரும் இப்படியான உணர்வுகளைத் தவிர்த்து பொது உணர்வோடு பயணிக்க வேண்டி இருக்கும். எனவே எழுதுவதை யதார்தப் புறநிலைகளோடு பயனளிக்க கூடிய வகையில் எழுதுவதே சிறப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் தனிமனித தாக்குதலை தொடுக்க முனைகிறார். வேற்று நாட்டவரை மணப்பதால் தமிழ் உணர்வாளர் ஒருவரின் தமிழ் உணர்வு மங்கிவிடாது என்பதே நான், சபேசன் போன்றவர்கள் வலியுறுத்தும் வாதம். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன்.

என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே நமது பச்சைத் தமிழச்சிகள் எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா எனத் திட்டத் தொடங்கிச்சினம். ஆனால் அந்த செக் நாட்டுக்காரிக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. தனது நாடு விடுதலை அடைந்த வரலாற்றை எனக்குக் கூறினா. அதைப்போல் ஒரு வாக்கெடுப்பு வழியாக உங்கள் நாட்டுக்கு விடுதலை கிடைக்காத என ஆதங்கத்துடன் கேட்டா. இந்த ஆதங்கம் நம்ம பச்சைத் தமிழச்சிகளுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது எனக்கு வேதனைதான் மிச்சம். நானும் அந்தப் பெண்ணும் தற்போது வெறும் நண்பர்கள்தான். ஒருவேளை எங்களுக்குள் காதல் மலர்ந்தால் நான் அந்த செக் நாட்டுக்காரியை திருமணம் செய்வது நல்லதா அல்லது அந்தப் பச்சைத் தமிழச்சிகளில் ஒருத்தியைச் செய்யவா??? நெடுக்காலேபோவான் போன்றவர்கள் இதய சுத்தியுடன் பதில் தரட்டும்.

இங்கு யாரையும் தனிப்படத் தெரியாது. இதில் பகிரப்படும் கருத்துக்கள் பொதுவானவை. எவரையும் குற்றம்சாட்டும் படியானதல்ல. அதைப் புரிந்து கொள்ளுங்கள். விளக்கங்களை ஏற்படுத்த முனைவதே நிகழ்கிறது.

என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே நமது பச்சைத் தமிழச்சிகள் எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா எனத் திட்டத் தொடங்கிச்சினம். ஆனால் அந்த செக் நாட்டுக்காரிக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. தனது நாடு விடுதலை அடைந்த வரலாற்றை எனக்குக் கூறினா. அதைப்போல் ஒரு வாக்கெடுப்பு வழியாக உங்கள் நாட்டுக்கு விடுதலை கிடைக்காத என ஆதங்கத்துடன் கேட்டா. இந்த ஆதங்கம் நம்ம பச்சைத் தமிழச்சிகளுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது எனக்கு வேதனைதான் மிச்சம். நானும் அந்தப் பெண்ணும் தற்போது வெறும் நண்பர்கள்தான். ஒருவேளை எங்களுக்குள் காதல் மலர்ந்தால் நான் அந்த செக் நாட்டுக்காரியை திருமணம் செய்வது நல்லதா அல்லது அந்தப் பச்சைத் தமிழச்சிகளில் ஒருத்தியைச் செய்யவா??? நெடுக்காலேபோவான் போன்றவர்கள் இதய சுத்தியுடன் பதில் தரட்டும்.

நட்பு ரீதியா அந்தப் பெண் தனக்குப் புதிதாக தென்பட்ட சில விடயங்களைக் கேட்டறிந்திருக்கலாம். ஆனால் அதற்காகவே காதல் மலர்ந்தால் என்று காத்திருந்து மலரும் அளவுக்கு காதல் ஒன்றும் நேரம் கணித்து மலரும் மலரல்ல.

தமிழிச்சிகளுக்கு சொந்த நாட்டு விடயம் தானே என்ற சலிப்பு அதில் இருந்திருக்கும். ஆனால் அவர்களிடம் தமிழுணர்வு என்பது இயல்பானது. எனவே அது தேவையான போது அந்தச் சலிப்பையும் மீறி வெளிப்படும். செக் காரிக்கோ வியப்புக்குரிய விடயம் பழகிப் போனதும் வரும் சலிப்பு தமிழுணர்வாக உருவெடுக்காது. வேணும் ஒன்றால் ஒன்றைச் செய்து பாருங்கள். தினமும் அந்த செக் காரியிடம் சென்று தமிழீழத்து நிலவரங்களைச் சொல்லி மக்கள் படும் துயரைப் பற்றிக் கதையுங்கள். ஒரு கட்டத்தில் அவளே சலிப்போடு இந்தக் கதையை விடவே மாட்டீங்களா என்பாள். ஆனால் தமிழிச்சி சலிப்பை வெளிப்படுத்தினாலும் தமிழின உணர்வு அவளின் ஆழ்மனதோடு கலந்தது. அது தேவையான கட்டத்தில் வெளிப்படும் அல்லது சரியான வகையில் உங்களின் தமிழுணர்வைப் புரிந்து கொள்ள முனையும். ஆனால் செக்காரிக்கு புரிய வைக்கவே தனி ஒரு பாடமெடுக்க வேண்டி இருக்கும். இதுதான் நிலைமை.

Link to comment
Share on other sites

சபேசன் நெடுக்காலபோவனுக்கு தான் என்ன நினைக்கிறன் என்ன எழுதிறன் எண்டு தெரியாம ஒரு பரவச நிலையில தான் எழுதிறவர்.எழுதின முதல் வசனத்துக்கும் பின்னர் எழுதிற வசனத்துக்கும் முரண்பாடு இருந்து எண்டா அதற்கு நீங்கள் தான் கரணம்,அதாவது உங்கள் விளக்கமின்னமை. நீங்கள் இதச் சீரியசா எடுத்து தலையப் பிச்சு கொள்ளப் போறியள். :D:lol::lol::D

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் தனிமனித தாக்குதலை தொடுக்க முனைகிறார். வேற்று நாட்டவரை மணப்பதால் தமிழ் உணர்வாளர் ஒருவரின் தமிழ் உணர்வு மங்கிவிடாது என்பதே நான், சபேசன் போன்றவர்கள் வலியுறுத்தும் வாதம். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் உணர்வுள்ள ஈழத் தமிழச்சியை வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளவே விருப்பம். ஆனால் நான் கண்ட தமிழ் பெண்களுக்கும் தமிழுணர்வுக்கும் வெகு தூரம். என்னுடன் படிக்கும் தமிழ் பெண்களுக்கு நான் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போனேன்.

என்னுடன் படிக்கும் செக் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களிடம் வந்து எங்களின் நாட்டைக் கேட்டா. நான் உடனே தமிழீழம் என்றேன். கூட இருந்த தமிழ்ப் பெண்கள் இல்லை இல்லை சிறிலங்கா எண்டிச்சினம். எனக்கு விசர் வருமா வராதா. நான் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கப் படுத்தும்போது அந்தப் பெண் மிக ஆர்வமாய் கேட்கத் தொடங்கினா. உடனே நமது பச்சைத் தமிழச்சிகள் எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா எனத் திட்டத் தொடங்கிச்சினம். ஆனால் அந்த செக் நாட்டுக்காரிக்கு என்னைப் பிடித்துப்போய் விட்டது. தனது நாடு விடுதலை அடைந்த வரலாற்றை எனக்குக் கூறினா. அதைப்போல் ஒரு வாக்கெடுப்பு வழியாக உங்கள் நாட்டுக்கு விடுதலை கிடைக்காத என ஆதங்கத்துடன் கேட்டா. இந்த ஆதங்கம் நம்ம பச்சைத் தமிழச்சிகளுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது எனக்கு வேதனைதான் மிச்சம். நானும் அந்தப் பெண்ணும் தற்போது வெறும் நண்பர்கள்தான். ஒருவேளை எங்களுக்குள் காதல் மலர்ந்தால் நான் அந்த செக் நாட்டுக்காரியை திருமணம் செய்வது நல்லதா அல்லது அந்தப் பச்சைத் தமிழச்சிகளில் ஒருத்தியைச் செய்யவா??? நெடுக்காலேபோவான் போன்றவர்கள் இதய சுத்தியுடன் பதில் தரட்டும்.

நீங்கள் சொல்வது உண்மை தான். நாம் ஒரு இனத்தை அல்லது மேற்குலகத்தவரை ஒரு குடையின் அல்லது ஒரு தாராசின் கீழ் நிறுத்தி விடுகிறோம்.எவ்வாறு ஒரு கறுப்பினத்தவரை அறிவற்றவர் எனவும் ஒரு வெள்ளை இனத்தவரை அறிவு உள்ளவர் எனவும் நினைக்கிறோமோ அதே போல் எமது கணிப்புக்கள் எல்லாம் பக்கச்சார்பானவை.(prejudices)

மேற்குலகத்தவரிற்குள் பல்வேறு வகையினரான மனிதர்கள் பல்வேறு குணாதிசியங்களுடன் இருப்பார்கள், எம்முள் உள்ளத்தைப் போலவே.இங்கே எல்லோரையும் ஒருங்கு படுத்திக் கூறுவதை ஸிடிரியோ டைபிங் (stereo typing)என்று கூறுவார்கள்.அது தான் இங்கு நடக்கிறது.

மேலும் அறிவியல் ரீதியாக ஓரினச் சேர்க்கை என்பது இயல்பானது என்றே நிறுவப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலையே மேற்குலகில் சட்டங்களும் அதனை அங்கீகரிக்கின்றன.அதனை ஒரு குறைபாடாகவோ அல்லது விசித்திரமான ஒன்றாகவோ எங்குமே அறிவியல் ரீதியாகவொ அன்றி மருத்துவ ரீதியாகவோ கூறப்படவில்லை.இந்து மதத்திலையே கடவுளர்களுக்குள் ஓரினச்சேர்க்கை பற்றிக் கூறப்பட்டுள்ளதாக படித்த நாபகம்.கிரேக்க இலக்கியத்திலும் இது கூறப்படுள்ளது.மனிதன் உருவானதில் இருந்து இது இருக்கிறது.இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெருவிக்கும் மத நிறுவனக்களிலையே அதிலும் குறிப்பக கத்தோலிக்க பாதிரிமார்களைடையே இது பரவலான ஒரு பழக்கமாக இருக்கிறது.அண்மையில் அமெரிக்காவில் ரிப்பளிக்கன் ஆதரவான ஒரு மத நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு பாதிரியார் ஆண் விபச்சாரியிடம் சென்றதாக அம்பலப் படுத்தப்பட்டது.இதில் விசித்திரம் என்ன வென்றால் இந்த மத நிறுவனமே ஓரினச் சேர்க்கைக்கு எதிராக அமெரிக்காவில் பலத்த பிரச்சரத்தை மேற் கொள்ளும் நிறுவனமாக இருகிறது என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நெடுக்காலபோவனுக்கு தான் என்ன நினைக்கிறன் என்ன எழுதிறன் எண்டு தெரியாம ஒரு பரவச நிலையில தான் எழுதிறவர்.எழுதின முதல் வசனத்துக்கும் பின்னர் எழுதிற வசனத்துக்கும் முரண்பாடு இருந்து எண்டா அதற்கு நீங்கள் தான் கரணம்,அதாவது உங்கள் விளக்கமின்னமை. நீங்கள் இதச் சீரியசா எடுத்து தலையப் பிச்சு கொள்ளப் போறியள். :D:D:D:rolleyes:

இவை அநாவசியமாக குழப்பங்களை விளைவிக்கவென வைக்கப்படும் கருத்துக்கள். இவற்றைத் தவிர்த்து நீங்கள் கண்ட முரண்பாடுகளை முன் வைக்கும் போது அவை என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டன என்பதை தெளிவு படுத்த முடியும். எமது கருத்தாடல் பாணியைப் பற்றி விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எமது கருத்தாகும். அவை அநாவசியமானவை கூட.

Link to comment
Share on other sites

ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?

அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரே பாலினரிடம் தோன்றுகிறது. இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று நினைக்க வேண்டுமென்பதில்லை.

நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?

இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும் பிறக்கிறது.

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல் மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடி நிச்சயித்துத் திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர் என்று ஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச் சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்த மட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது பற்றியும் கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதி சீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில், ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவு பிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமான செயல்தான். உங்கள் பெற்றோர் உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச் சமாளிப்பது சிரமமானதே. நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலை அல்ல. வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர் காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே. வாழ்வை ஓர் இன்பப் பூங்காவெனக் கருதுவது ஆகும்.

காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல் பாடல்களே.

நூற்பெயர் : பருவமானவர்கள்

ஆசிரியர் : பெக்கி மோகன்

தமிழில் : க. நடனசபாபதி

நன்றி : தமிழ்நாடு அறிவியல் கழகம் மற்றும்

இந்திய சுகாதார தொண்டர் நிறுவனம்

பதிப்பு : செப்ரம்பர், 2002

வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை

http://www.noolaham.net/library/books/01/39/39.htm

நிலப்பிரபுத்துவ சிந்தனைகளின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளில் அல்லது சமூகங்களில் மதரீதியான அணுகுமுறைகளுக்குட்பட்ட நிலையில் பாலியல் பிரச்சினைகளுக்குட்பட்டவர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மை தான். நாம் ஒரு இனத்தை அல்லது மேற்குலகத்தவரை ஒரு குடையின் அல்லது ஒரு தாராசின் கீழ் நிறுத்தி விடுகிறோம்.எவ்வாறு ஒரு கறுப்பினத்தவரை அறிவற்றவர் எனவும் ஒரு வெள்ளை இனத்தவரை அறிவு உள்ளவர் எனவும் நினைக்கிறோமோ அதே போல் எமது கணிப்புக்கள் எல்லாம் பக்கச்சார்பானவை.(prejudices)

மேற்குலகத்தவரிற்குள் பல்வேறு வகையினரான மனிதர்கள் பல்வேறு குணாதிசியங்களுடன் இருப்பார்கள், எம்முள் உள்ளத்தைப் போலவே.இங்கே எல்லோரையும் ஒருங்கு படுத்திக் கூறுவதை ஸிடிரியோ டைபிங் (stereo typing)என்று கூறுவார்கள்.அது தான் இங்கு நடக்கிறது.

மேலும் அறிவியல் ரீதியாக ஓரினச் சேர்க்கை என்பது இயல்பானது என்றே நிறுவப்பட்டுள்ளது.

அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது எங்கிறீர்கள் அதற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா? அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள். வெறும் முருகானந்தத்தின் கட்டுரைகள் அல்ல அவசியம். அறிவியல் ஆதாரங்கள்.

அதன் அடிப்படையிலையே மேற்குலகில் சட்டங்களும் அதனை அங்கீகரிக்கின்றன.

எல்லா மேற்குலக நாடுகளிலும் இவை சட்டங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவில் கூட புஷ் நிர்வாகம் இந்த ஓரினச் சேர்க்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

அதனை ஒரு குறைபாடாகவோ அல்லது விசித்திரமான ஒன்றாகவோ எங்குமே அறிவியல் ரீதியாகவொ அன்றி மருத்துவ ரீதியாகவோ கூறப்படவில்லை.

மீண்டும் மருத்துவ அறிவியல் ஆதாரங்களை சமர்பியுங்கள்.

இந்து மதத்திலையே கடவுளர்களுக்குள் ஓரினச்சேர்க்கை பற்றிக் கூறப்பட்டுள்ளதாக படித்த நாபகம்.கிரேக்க இலக்கியத்திலும் இது கூறப்படுள்ளது.மனிதன் உருவானதில் இருந்து இது இருக்கிறது.இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெருவிக்கும் மத நிறுவனக்களிலையே அதிலும் குறிப்பக கத்தோலிக்க பாதிரிமார்களைடையே இது பரவலான ஒரு பழக்கமாக இருக்கிறது.அண்மையில் அமெரிக்காவில் ரிப்பளிக்கன் ஆதரவான ஒரு மத நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு பாதிரியார் ஆண் விபச்சாரியிடம் சென்றதாக அம்பலப் படுத்தப்பட்டது.

இது அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளில் அதிகம் இருக்கலாம். உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தினரே இப்படியான இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் ஈடுபடுகின்றனர்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இப்பழக்கம் மட்டுமல்ல பல மனிதப் புறநடைகள் கூட இருந்துதான் வருகின்றன. ஆனால் அவையெல்லாம் வழக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. ஒரு மருத்துவமனையில் இருக்கும் எயிட்ஸ் நோயாளிக்குக் கூட அனைத்து வித மனித உரிமைகளுக்கும் காப்பளிக்கப்படுகிறது. அந்த வகையிலேயே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கு காப்பளிக்கப்படுகிறது. ஆனால் இவை மனித வழமைகளாக பிரகடனப்படுத்தப்பட்டவை அல்ல.

இதில் விசித்திரம் என்ன வென்றால் இந்த மத நிறுவனமே ஓரினச் சேர்க்கைக்கு எதிராக அமெரிக்காவில் பலத்த பிரச்சரத்தை மேற் கொள்ளும் நிறுவனமாக இருகிறது என்பதே.

இயற்கைக்கு மாறான பாலியல் சேர்க்கைகள் என்ற வகையில் இவை எதிர்க்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

இது சம்பந்தமாக வலைப்பூக்களில் பெட்டை எழுதியது.

வித்தியாசங்கள்’ உறுத்தலாக இருக்கின்றன; அவை கேலிக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகுகின்றன.

இந்த முறையும், ஒவ்வொருமுறையும் போல, விடுமுறையில் உறவுக்காரர் -ஆண்கள் குடிவகைளுடன் நிலக்கீழ்அறைகளுள்ளும் (Basement) பெண்கள் குழந்தைகளுடனும்- குழுமினார்கள். பலவகைப்பட்ட கதையாடல்கள். நீண்டநாளைக்குப் பிறகான சந்திப்பாகையால், இடையிடையே, ‘வியித்திரக்’ கதைகளை கேட்கமுடிந்தது. “சில கதையளக் கேட்க நம்பவும் முடியேல்ல’ என ஆரம்பிக்கின்றன அவை; இறுதியில் அவை, பெண்/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலுறவாளர்கள் (bisexuals), transgendered persons, நபுஞ்சகம் (hermaphrodite) (இவற்றுக்கான ‘அரசியல்ரீதியாகச் சரியான’ தமிழ் சொற்கள் தெரியவில்லை), இப்படி இவர்களில் யாரோ ஒரு சிறுபான்மையினர் பற்றியதாய் இருக்கும்.

இவற்றைச் சொல்கிறவர்களில் பலபேர் 20 வருடங்களாக கனடாவில் இருப்பவர்கள்கூட; தமது பிறந்த மண்ணைவிட, மேற்குலகவாசிகளாகவே உணர்கிற, சிறிய வயதில் கனடா வந்த மாணவ, மாணவியரும்கூட.

கொழும்பில் இருந்தபோது இந்த மனிதர்கள் பற்றி வருகிற கதைகளின் வியித்திரத்தன்மையில் மூழ்கியிருக்கிறேன்தான் - ஒரு நகைச்சுவையாய், புதினமாய், மிருகக்காட்சிசாலையின் வெவ்வேறு மிருகங்களைப் பார்வையிடுவதுபோல ‘இப்படியும் நடக்கிறது’ பகுதியிலோ ‘இப்படியும் உள்ளார்கள்’ என்றோ ‘முன்பு” “பின்பு’ என படங்கள் போடுவார்கள்; பார்த்து வியப்புற்றதுண்டு. அதே தொனிதான் எவ்வளவோ காலத்திற்குப் பிறகும் கனடாவில் உள்ள தமிழ் பத்திரிகைகளிலும் உள்ளது என்பதை என்னவென்பது?

கனடாவைப் பொறுத்தளவில், இவர்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் ‘பாரபட்சமாக’ சித்திரிப்பதில் அவதானமாக இருக்கின்றன (இருக்கின்றன என்றால் சம்மந்தப்பட்ட சிறுபான்மை ஆதரவுக் குழுக்கள் அதைக் கவனத்தில் கொண்டுவரும்/எதிர்க்கும் என்பது கருதி; அத்தகைய ‘சட்ட பலம்’ ஓரளவுக்காவது இருக்கிறது.) இவைகள் Star, National post, Globe and mail போன்ற ‘படித்தவர்களது’ பத்திரிகைகளில்தான். பெரிதும் யூதர்களால் ஆளப்படுகிற பத்திரிகையுலகம் சிறுபான்மை அகதிக் குழுக்கள் மீது பாரபட்சமான பார்வைகளை தமக்குரிய தந்திரங்களில் வெளியிட்டுவந்தாலும், இத்தகைய சிறுபான்மைக் குழுக்கள் தொடர்பாய் கவனமாய் இருப்பார்கள். ‘தொழிற்சாலை’ அல்லது கீழ்த்தட்டு மக்களால் படிக்கப்படுகிற எனப்படுகிற (கொச்சையான மொழிப் பாவனை) Sun போன்ற பத்திரிகைகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவர்களது பத்திரிகையை பலர் எடுப்பதே மூன்றாவதோ நான்காவதோ பக்கத்தில் பெரிய அளவில் வருகிற அரைநிர்வாணப் பெண்உடலின் படத்திற்காகத்தான் (அந்தப் படம் ‘படிக்காத/கீழ்த்தட்டு’ மக்களுக்குத்தான் தேவை என நீங்களும் நம்பினால், கட்டாயம், இங்குள்ள பெருநிறுவனங்களின் ஆண்களின் கழிப்பறைக்கு ஒருமுறையாவது போய் வாருங்கள்!). Sun இலுங்கூட பாரபட்சமான செய்திகள் வந்தால் அதைத் தட்டிக் கேட்கிற உரிமை, நஸ்டஈடு கேட்கிற உரிமை இங்கே உள்ளதாகையால் முடிந்தளவு எதிர்க்கிற, போராடிற பலம் இன்றைக்கு உள்ளது. எங்களது நாடுகளில் இதற்கு எவ்வளவு காலங்கள் ஆகுமோ. முடிந்தவரையில் ஒவ்வொருவருக்கும் அறிவூட்டப்பட்டால் (இது உயிரியல்ரீதியானது, ‘இது ஒரு வருத்தம் அல்ல’, இயற்கையாகவே ஒருவர் ஒரே பாலான மற்றவரை நேசிக்கிறார் என்ப பற்றி முக்கியமாக) அதுவே பெரிய விடயம்.

உறவினர் கூடுகிற விருந்துவிழாக்களில் எப்போதும் இத்தகைய உறவுகள் பற்றிய உரையாடல்கள் 'இத்தகையவர்கள்' மற்றவர்களுக்கு இழைக்கிற 'துரோகங்கள்' பற்றியதாய்த் தொடரும்.

“எங்கடவீட்டு basement இல இப்ப இருக்கிற அக்காவ husband விட்டிட்டார். நல்ல அக்கா! அவட பிள்ளையைத் தரச் சொல்லி கொடுமைப் படுத்திறாராம்... அவர் வந்து... அவருக்கு வந்து ஒரு ... ஆம்பிளையோடைதான் தொடர்பாம்.’

இதைச்சொன்ன பெண், ஒரே பாலர்கள் திருமணம் செய்வது ‘நடக்கிற’ ஒரு நாட்டில் 15 வருடங்களிற்குமேலாய் வாழ்ந்து வருகிறார்.

நாங்கள்: எல்லாவிதமான துரோகங்களைப் பற்றியும் பேசலாம். எதுதான் துரோகமில்லை? காலங்காலமாக ஆண்களும் பெண்களுமாய் மனித இனமே தமக்கு நேர்ந்த துரோகங்களைப் பற்றிய வெஞ்சினத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது.

தற்சமயம் 50களில் இருக்கிற ஒரு பெண்மணி, கணவர் தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துக்கொண்டபோது சொல்கிறார்: “ம்ம்ம்... நான் ஏமாற்றப்பட்டேனா? தெரியவில்லை. இ ப்போது என் 50களில் இருக்கிறேன். நான் இளமையாய் இருந்தபோது, துக்கமாய் இருந்தெனென்றும் இல்லை. பிள்ளைகள், இனிய கணவன்.. நான் மிகழ்ச்சியான பெண்தான். எனினும், எனது கணவருடான திருமண உறவில் ‘ஏதோ ஒன்று’ குறைவாய் இருப்பதுபோலவே இருக்கும். அவருக்கு நான் கவர்ச்சியாய் இல்லாததுபோல...! இந்த உணர்வுடன்தான் 25 வருடங்களிற்கு மேலாய் நான் அவருடன் இருந்தேன். இப்போது அதற்கான ‘காரணம்’ தெரிகிறது. வேறை என்ன சொல்ல?”

பார்த்துக்கொண்டிருந்தபோதே மிக வருத்தமாய் போய்விட்டது. அந்தப்பெண், அந்த 'ஏதோ ஒன்றை’யும் அனுபவித்தபடி, அவளை சர்வநிச்சயமாய் நேசித்தவனுடன், sexy ஆய் உணர்ந்தபடி வாழ்ந்திருக்க வேணாமோ?!

காதலித்து, தன்னுடன் கூடி இருந்து, பிள்ளைகள் பெற்று, பிறகு அவர்கள் வளர்ந்துவருகையில் -இவளது மத்திய வயதில்- பெண்ணாக பால்மாற்றம் செய்துவந்திருக்கிற கணவனை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணினது முகத்தில் அதிர்ச்சி மறையவில்லை. அவர்கள் இன்னமும் ஒன்றாய்த்தான் வாழ்கிறார்கள். அவளில் 'புதிய அவளிற்கு' நேசமும் இருக்கிறது. ‘(பால்மாற்றத்திற்குப் பிறகு) எனது குறியற்ற உடலோடு உறவுகொண்டபோது எனது மனைவி அழுதாள்; எனக்கும் வலித்தது. என்ன செய்வது? அவள் லெஸ்பியன் இல்லையே.”

எதிர்பால் உறவாளர்களான இந்தப் பெண்கள், அவள்கள் விரும்புகிற ஒரு குடும்பத்தை சிருஸ்டிப்பதோ, தாம் காதலித்த ஆணை திருப்பப் பெறுவதோ, தன்னை ‘கவர்ச்சியாய்’ உணர்கிற ஒருவனுடன் வாழவோ இனிமேல் அவர்களுக்கு கால அவகாசமில்லை, 'காதலிக்கப்பட்டதாய்' நம்பி , ஏதோ வகையில் ‘பயன்படுத்தப்பட்ட’ அந்தப் பெண்களது வலியை இவர்களது ‘தாமாக வாழ்தல்’ அழுத்துகிறது.

ஆனால் என்ன செய்வது?

இந்த சிறுபான்மையினரால் தாமாக வாழ முடிந்திருந்தால் இத்தகைய துரோகங்கள் நடந்திருக்கப் போவதில்லை. அவர்களைப் பற்றிய குற்றஉணர்ச்சிகள், வசைகளில், கேலிகளில் சமூகம் பிரித்து வைத்திருக்காதிருந்திருந்தா

Link to comment
Share on other sites

சிவனும் விஸ்ணும்..கலந்து......ஜயப்ப சுவாமி பிறந்தது...... எந்த கணக்கிலை.... இயற்கையா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனும் விஸ்ணும்..கலந்து......ஜயப்ப சுவாமி பிறந்தது...... எந்த கணக்கிலை.... இயற்கையா..

இப்படி ஒரு கதை இருப்பதே இன்றுதான் தெரியுது

Link to comment
Share on other sites

இயற்கைக்கு மாறான பாலியல் சேர்க்கைகள் என்ற வகையில் இவை எதிர்க்கப்படுகின்றன.

மேற்கூறிய கூற்றிற்கு அதாவது இயக்கைக்கு மாறானது என்பதற்கு ஆதாரத்தை முன் வைக்கவும்.

சிவனும் விஸ்ணும்..கலந்து......ஜயப்ப சுவாமி பிறந்தது...... எந்த கணக்கிலை.... இயற்கையா..

அதே தான் இப்போது நாபகம் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக வலைப்பூக்களில் பெட்டை எழுதியது.

posted by ஒரு பொடிச்சி at 2/19/2005 03:19:00 AM

http://peddai.blogspot.com/2005/02/i.html

பெட்டை குட்டை என்று யாராவது மென்ரல் எழுதுவதை எல்லாம் இங்கு ஒட்டாதீர்கள்...

இது உலகெங்குமே சர்ச்சைக்குரிய விடயங்கள். எதிலும் பூரணத்துவமான ஆய்வுகள் நடந்து இறுதி வரைபுகள் எட்டப்படவில்லை. ஆனால் இது இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தை என்பது மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் தற்போதைய வடிவில் உள்ள உயிரியல் விளக்கம்.

Prenatal hormonal theory

Main article: Prenatal hormones and sexual orientation

The neurobiology of the masculinization of the brain is fairly well understood. Estradiol, and testosterone, which is catalysed by the enzyme 5-reductase into dihydrotestosterone, act upon androgen receptors in the brain to masculinize it. If there are few androgen receptors (people with Androgen insensitivity syndrome) or too much androgen (females with Congenital adrenal hyperplasia) there can be physical and psychological effects.[2] It has been suggested that both male and female homosexuality are results of variation in this process.[3] In these studies lesbianism is typically linked with a higher amount of masculinization than is found in heterosexual females, though when dealing with male homosexuality there are results supporting both higher and lower degrees of masculinization than heterosexual males.

http://en.wikipedia.org/wiki/Homosexuality...osexual_persons

இதன் பிரகாரம் சில சின்றோம்ஸ் ( குறைபாடுகள்) சார்ந்து இதன் தாக்கம் சிறிய சத வீதமான மக்களின் மத்தியில் பரவியுள்ளது. உலகில் பருமட்டாக 9% மட்டுமே இப்படியான இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருக்கின்றனர். இவை சில விலங்குகள் பறவைகள் மத்தியிலும் சிறிய அளவில் அவதானிக்கப்பட்டுள்ளன. வெறி பிடித்தல் போன்ற ஒரு மனித வரலாற்று நெடுகிலும் பரவி வரும் ஒருவகைத் தாக்கமே இது.

Link to comment
Share on other sites

இப்ப மரபு அணுக்கள் மூலமாக ஓரின ஆக்களை அடையாளம் காணக்கூடியதாய் இருக்காம்... இதனால் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.... இது குற்றமோ..குறைபாடோ..துர்நடத்தை

உமது மொழி பெயர்ப்பே அலாதியானது அந்தக்கட்டுரையில் குறைபாடு என்று ஒன்றும் குறிப்பிடப்படவில்லை,அது இயற்கைக்கு மாறுபாடானது என்றும் குறிப்பிடப்படவில்லை.உமது புரிதல் எவ்வளவு குறைபாடானது என்று விளங்குகிறது.

Physiological differences in homosexual persons

Several recent studies, including pioneering work by neuroscientist Simon LeVay, demonstrate that there are notable differences between the physiology of a heterosexual male and a homosexual male. These differences are primarily noted in the brain, inner ear and olfactory sense. LeVay discovered in his double-blind experiment that approximately 10% of homosexual male brains were physiologically different from their heterosexual counterparts, [4] some people take this as showing that people are born as homosexuals, however in LeVay's own words:

"

Main article: Prenatal hormones and sexual orientation

The neurobiology of the masculinization of the brain is fairly well understood. Estradiol, and testosterone, which is catalysed by the enzyme 5-reductase into dihydrotestosterone, act upon androgen receptors in the brain to masculinize it. If there are few androgen receptors (people with Androgen insensitivity syndrome) or too much androgen (females with Congenital adrenal hyperplasia) there can be physical and psychological effects.[2] It has been suggested that both male and female homosexuality are results of variation in this process.[3] In these studies lesbianism is typically linked with a higher amount of masculinization than is found in heterosexual females, though when dealing with male homosexuality there are results supporting both higher and lower degrees of masculinization than heterosexual males.

அதில் குறிப்பிடப் பட்டுள்ளது ஓர் இன சேற்க்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கும் ஈரினச்சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கும் இருக்கக்கூடிய பொவுதீக வியல் வேறுபாடுகள் சம்பந்தமான ஆராச்சிகளே.இதுவே இந்த ஓரினச்சேர்க்கை நிலை என்பது இயற்க்கையில் பொவுதீக ரீதியாக உருவானது என்பதற்கான ஆதாரம்.

நீர் சொல்வதைப் போல் இது இயற்க்கைக்குப் புறம்பானதோ என்றோ குறை பாடனது என்றோ எங்குமே சொல்லப் படவில்லை.

இவ்வாறான் கோமோ போபியாக் கருதுக்களை கூறுவது பிரித்தானிய ஈகுவாலிடி சட்டங்களுக்கு முரணானது என்பதையும் புரிந்து கொள்ளும்.

Behaviour modification

Main article: Ex-gay

Some therapists, institutions, and groups contend they are able to assist homosexuals to overcome their homosexual tendencies. Most of these are conservative Christian organizations which interpret the Bible as holding homosexuality to be unnatural or sinful, and which consider homosexuality to be an undesired orientation. Reparative therapy is psychotherapy aimed at the elimination of homosexual attractions and is employed by people who claim that homosexuality is a disorder or a sin. A "transformational ministry" claims that homosexual behavior is essentially a sin that can be overcome through a religious approach employing repentance and faith.

There is no credible, scientific evidence supporting successful "treatment" of homosexual orientation, and some persons have reported that great harm was inflicted on them by such "treatments".[21] "Ex-gay" supporters point to others[22] who they say have experienced what they consider success; however, most mainstream medical and psychological organizations reject such claims and consider attempts to change sexual orientation to be ineffective and potentially harmful.

மேற் கூறிய உமது இணைப்பிலையே மருத்துவ மற்றும் உளவியல் துறையினர் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது எனக் கூறும் கிரிஸ்தவ மதனிறுவனக்களின் கூற்றை முற்றிலுமா மறுக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.இணைப்புக்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமது மொழி பெயர்ப்பே அலாதியானது அந்தக்கட்டுரையில் குறைபாடு என்று ஒன்றும் குறிப்பிடப்படவில்லை,அது இயற்கைக்கு மாறுபாடானது என்றும் குறிப்பிடப்படவில்லை.உமது புரிதல் எவ்வளவு குறைபாடானது என்று விளங்குகிறது.

there are few androgen receptors (people with Androgen insensitivity syndrome) or too much androgen (females with Congenital adrenal hyperplasia) there can be physical and psychological effects.[2] It has been suggested that both male and female homosexuality are results of variation in this process.[3] In these studies lesbianism is typically linked with a higher amount of masculinization than is found in heterosexual females, though when dealing with male homosexuality there are results supporting both higher and lower degrees of masculinization than heterosexual males.

இதைப்படியுங்கள் சார். ஓரினச்சேர்க்கையாளர்களின் உயிரியல் மூளை இரசாயன வேறுபாடுகள் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமன்றி இவைதான் உடற்றொழிலியல் ( physiology - பெளதீகவியல் அல்ல உடற்றொழிலியல் சார்ந்தது) சார்ந்து செல்வாக்குச் செய்யும். சாதாரண உயிரியல் அறிவுள்ளவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.

Physiological differences in homosexual persons

Several recent studies, including pioneering work by neuroscientist Simon LeVay, demonstrate that there are notable differences between the physiology of a heterosexual male and a homosexual male. These differences are primarily noted in the brain, inner ear and olfactory sense. LeVay discovered in his double-blind experiment that approximately 10% of homosexual male brains were physiologically different from their heterosexual counterparts, [4] some people take this as showing that people are born as homosexuals, however in LeVay's own words:

"

Main article: Prenatal hormones and sexual orientation

The neurobiology of the masculinization of the brain is fairly well understood. Estradiol, and testosterone, which is catalysed by the enzyme 5-reductase into dihydrotestosterone, act upon androgen receptors in the brain to masculinize it. If there are few androgen receptors (people with Androgen insensitivity syndrome) or too much androgen (females with Congenital adrenal hyperplasia) there can be physical and psychological effects.[2] It has been suggested that both male and female homosexuality are results of variation in this process.[3]

In these studies lesbianism is typically linked with a higher amount of masculinization than is found in heterosexual females, though when dealing with male homosexuality there are results supporting both higher and lower degrees of masculinization than heterosexual males.

அதில் குறிப்பிடப் பட்டுள்ளது ஓர் இன சேற்க்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கும் ஈரினச்சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கும் இருக்கக்கூடிய பொவுதீக வியல் வேறுபாடுகள் சம்பந்தமான ஆராச்சிகளே.இதுவே இந்த ஓரினச்சேர்க்கை நிலை என்பது இயற்க்கையில் பொவுதீக ரீதியாக உருவானது என்பதற்கான ஆதாரம்.

என்ன சார் வாசிக்கிறீங்கள். பெண்களில் ஏற்படும் அதிக அன்ரோஜன் சுரப்பும் - Congenital adrenal hyperplasia ( வழமையான பெண்களை விட) ஆண்களில் ஏற்படும் குறைந்த எண்ணிக்கையிலான அன்ரோஜன் வாங்கிகளும் -people with Androgen insensitivity syndrome ( வழமையான ஆண்களை விடக் குறைவு - இரண்டும் சின்றோமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன வாசிக்கவும் அவதானமாக) இவர்களில் மேற்குறிப்பிட்ட வேறுபாடுகளை வழமையான இருபால் சேர்க்கையாளர்களைக் காட்டினும் வேறுபடுத்துகிறது. இதில் எதுவும் பெளதீக வேறுபாடுகள் அல்ல. உடல் இரசாயன மற்றும் உடற்தொழில் வேறுபாடுகளே கதைக்கப்பட்டுள்ளன.

நீர் சொல்வதைப் போல் இது இயற்க்கைக்குப் புறம்பானதோ என்றோ குறை பாடனது என்றோ எங்குமே சொல்லப் படவில்லை.

இவ்வாறான் கோமோ போபியாக் கருதுக்களை கூறுவது பிரித்தானிய ஈகுவாலிடி சட்டங்களுக்கு முரணானது என்பதையும் புரிந்து கொள்ளும்.

சார் நீங்கள் அழகாக சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லலாம். நாங்கள் எந்தச் சட்டத்தையும் எதிர்கொள்ளத் தயார். மனித இனத்தில் வளர்ந்து வரும் சில குறைபாடுகள் உள்ளவர்களினாலான அநாகரிகங்களுக்கு முடிவு எட்டுவதில் நமக்கு அலாதிப் பிரியம்.

Link to comment
Share on other sites

பெட்டை குட்டை என்று யாராவது மென்ரல் எழுதுவதை எல்லாம் இங்கு ஒட்டாதீர்கள்...

நான் எதை எங்கு இருந்து போடுவது என்பதை நீர் தீர்மானிக்கமுடியாது.அதோடு யாருக்கு மென்ரல் என்பதையும் உமது உள நல வைத்தியர் தான் தீர்மானிக்கமுடியும். சுயதடைக்கு முன்னர் வலைப்பூக்களே தரமானவை என்று யாரோ சொல்லிச் சென்றதாக நாபகம்.யாழ்க்களம் குப்பை ,வலைப்பூக்கள் சிறந்தவை என்றும் யாரோ கூவிச் சென்றதாக நாபகம். :rolleyes::D:D

இதைப்படியுங்கள் சார். ஓரினச்சேர்க்கையாளர்களின் உயிரியல் மூளை இரசாயன வேறுபாடுகள் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமன்றி இவைதான் உடற்றொழிலியல் ( physiology - பெளதீகவியல் அல்ல உடற்றொழிலியல் சார்ந்தது) சார்ந்து செல்வாக்குச் செய்யும். சாதாரண உயிரியல் அறிவுள்ளவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.

நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீரா? நான் தான் சொன்னேன் அது வேறுபாடு என்று நீர் தான் இல்லை குறை பாடு என்று.வேறு பாட்டிற்கும் குறைபாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமலா கருத்துக்களை எழுதுகிறீர்? :D:D:D

அது தானே ஓரினச்சேர்க்கைக்கு உடற்தொழிலியியல் ரீதியான காரணங்கள் இருக்கும் போது அது இயற்கையானதாகத் தானே இருக்கமுடியும், அது ஒரு நோய் அல்லவே?இதனை சாதாரண உயிரியல் அறிவுள்ளவர்களால் விளங்கிக் கொள்ளமுடியும் அல்லவா? ஏன் உம்மால் முடியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Behaviour modification

Main article: Ex-gay

Some therapists, institutions, and groups contend they are able to assist homosexuals to overcome their homosexual tendencies. Most of these are conservative Christian organizations which interpret the Bible as holding homosexuality to be unnatural or sinful, and which consider homosexuality to be an undesired orientation. Reparative therapy is psychotherapy aimed at the elimination of homosexual attractions and is employed by people who claim that homosexuality is a disorder or a sin. A "transformational ministry" claims that homosexual behavior is essentially a sin that can be overcome through a religious approach employing repentance and faith.

There is no credible, scientific evidence supporting successful "treatment" of homosexual orientation, and some persons have reported that great harm was inflicted on them by such "treatments".[21] "Ex-gay" supporters point to others[22] who they say have experienced what they consider success; however, most mainstream medical and psychological organizations reject such claims and consider attempts to change sexual orientation to be ineffective and potentially harmful.

மேற் கூறிய உமது இணைப்பிலையே மருத்துவ மற்றும் உளவியல் துறையினர் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது எனக் கூறும் கிரிஸ்தவ மதனிறுவனக்களின் கூற்றை முற்றிலுமா மறுக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.இணைப்புக்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.