Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!

Featured Replies

தந்து விடு.....!!! (01)

என்னவனே

என்னவனே

என்னருகில்

வந்து விடு....

உன்

உள்ளமதில்

குந்திவிட

எனக்கு

இடம்

தந்து விடு....

உந்தன்

கொஞ்சு மொழி

வார்த்தை

எல்லாம்

கொட்டி வந்து

தந்து விடு....

நான்

கண்ணு மூடி

உறங்கி விட

கண்ணாளனே

தந்து விடு.....!!!

விட்டு விடு.....!!! (02)

மங்கையவள்

கவிதைகளை

மணமில்லை

என்றவனே.....

அவள்

சொர்ப்பணத்து

வரிகளையே

சொர்கம்

இல்லை

என்றவனே....

கிணத்து

தவளை

என்றவரை

கிண்டலடிக்க

வந்தவரே....

உந்தனுக்கு

கவி

தெரிந்தால்

வந்துயிங்கு

பாடி விடு...

பெண்ணவளை

கிண்டலடிக்கும்

வேலைதனை

விட்டு விடு....!!!

இறந்து விடுகிறேன்....!!! (03)

உன்

இதயமதில்

இருப்பதற்கு

இடம் ஒன்று

கேட்டலைந்தேன்....

இன்று வரை

பதில்

இல்லை

எந்தனுக்கு

நீ

சொல்லவில்லை.....

வேண்டாம்

என்றென்னை

வீசி

என்னை

எறிந்து விட்டாய்...

பாவம்

நான்

உடைந்து போன

இதயமுடன்

வெம்பி வெம்பி

அழுகிறேன்....

இனி என்ன

வாழ்வெனக்கு

நான்

இறந்து

விடுகிறேன்....!!!!

என்னால் ஏன் முடியவில்லை....??? (04)

கவி பாட

நினைக்கிறேன்

முடியாம

தவிக்கிறேன்....

இருந்தும்

என்

செய்வேன்

இன்னும்

முயல்கிறேன்...

எண்கணக்கில்

எத்தனையோ

கவிதனை

புணைந்து

வைத்தார்....

இருந்தும்

என்ன

இன்னும்

இங்கு

எழுதிவிட்டார்....

எப்படித்தான்

இத்தனையும்

எழுதியின்று

தள்ளுராரோ...???

இற்றுவரை

முணைந்து

விட்டேன்

நான்

இன்னும்

ஒண்ணு எழுதலயே....

ஏனோ

இன்னும்

என்னால்

முடியலயோ....???

எப்படி முடிகிறது இப்படி பேச....??? ( 05)

நேற்று தான்

நீ வந்து

உன் மனசில்

நானென்று

என்

மனசில்

நீ என்றாய்....

இன்று

வந்து

எந்தனுக்கு

என்ன

இன்று

நீ சொன்னாய்....???

என்

மனசில்

உன்

நினைப்பு

எள்ளலவு

இல்லையென்றாய்....

எள்ளி நடை

ஆடிவிட்டு

என் மனசை

நீ எறிந்தாய்.....

உந்தன் பசி

தீர்த்திடவா

என்

மனசை

தேடி வந்தாய்....???

காதல்

என்ற

தேன் மொழியை

பேசியன்று

நீ இருந்தாய்....???

எப்படி

முடிகிறது

உன்னால்

இப்படி பேச....????

புரியவில்லை எப்படி.....??? ( 06)

புராண

கதை எல்லாம்

பொய்யென்று

புலம்பியவா....

புளுகு

கதையென்று

புலம்பியன்று

திரிந்தவா....

புறநாணுறை

நிஜம்

என்றேன்

இயம்பியவா....???

பண்டைய

வரலாறு

காப்பியங்கள்

பலவல்லாம்

பொய்யென்று

செப்பியவா....

இந்து

மதத்திலே

எத்தனை

இன்னல்கள்

என்றன்று

இழித்தவா....

ஆரியரு

திரவிடரு

என்றெல்லாம்

ஜயோகோ

எத்தனை

அலம்பியவா.....

அட

இன்று மட்டும்

உனக்கு

புறநாணுறு

புளுகில்லை

என்று பட்டதோ....???

புரியவில்லை

எப்படி....???

காதல்....(07)

உனக்குள்

என்னை

எனக்குள்

உன்னை

எழுதி வைத்த

உயில்

இது தான் காதல்.....!!!

இதில் மூவருடய கவிகள் உள்ளது எத்தனை ஆணுடயது...??

எத்தனை பெண்களுடயது...???

விரைவாய் பதில் தாருங்கள்...

உடன் விரந்து ஆக்கமதை தந்த உறவுகளுக்கு என் நன்றிகள்....

வன்னி மைந்தன்

  • Replies 78
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலாய் பாட கவிதை நல்லா இருக்கு வன்னிமைந்தன் சார்.

உங்களுக்கு என்னுடைய கட்டுரை சரியாக விளங்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

நான் என்ன கேட்டேன்? ஆண்களும், பெண்களும் எழுதிய நூறு கவிதைகளை கொண்டு வாருங்கள் என்று கேட்டேன். நூறு வேண்டாம், ஒரு 20 கவிதைகளாவது கொண்டு வாருங்கள். அதாவது 20 கவிஞர்கள் எழுதிய 20 கவிதைகள். வேண்டாம், 10 கவிதைகளை கொண்டு வாருங்கள். 10 கவிஞர்கள் எழுதிய 10 கவிதைகளை கொண்டு வாருங்கள். 5 பெண்களும், 5 ஆண்களும் எழுதிய கவிதைகள்.

நான நூறு பேர் எழுதிய நூறு கவிதைகள் என்று சொன்னதற்கு காரணம், உங்களைப் போன்றவர்கள் தேடிப்பிடித்து ஒரே பாணியில் உள்ள கவிதைகளைக் கொண்டு வந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான்.

;ஆயினும் நீங்கள் நேர்மையான முறையில் "பரீட்சை" வைத்தால், 10 கவிஞர்களின் கவிதைகளில் முயன்று பார்க்க நான் தயார்.

அத்துடன் 10 விழுக்காடு அளவிற்கு தவறு வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு என்று சொன்னேன்.

நீங்கள் 3 பேர் எழுதிய கவிதைய தந்தால் எப்படி?

இன்னும் ஒன்று! எனக்காக எழுதித் தாருங்கள் என்று கேட்கவில்லை. எழுதிய கவிதைகளை தாருங்கள் என்று கேட்டேன்.

ஒன்று செய்யுங்கள். பத்திரிகைகளில் வருகின்ற இரு பாலரின் கவிதைகளை சேகரியுங்கள். ஒரே பாணியில் உள்ள கவிதைகளை சேகரிக்காது, பொதுவாக அனைத்தையும் சேகரியுங்கள். அக் கவிதைகள் என்னுடைய சவாலுக்காக எழுதப்பட்டிருக்க மாட்டாது. அவரவர் அவரவருக்கு தெரிந்த மாதிரி எழுதி இருப்பார்கள். அதில் நான் சரியான முறையில் தரம்பிரித்துக் காட்டுகிறேன்.

சரி! இப்பொழுது நீங்கள் தந்த கவிதைகளுக்கு வருவோம்.

அனைத்து கவிதைகளும் ஒரே பாணியில் ஒரே வரிசையில் எழுதப்பட்டிருக்கிறது.

வஞ்சகம் இன்றி அனைத்துக் கவிதைகளிலும் சொற்பிழைகள், பொருட்பிழைகள் காணப்படுகின்றன.

ஏழு கவிதையில் 5 கவிதைகள் காதற் கவிதைகள். ஒரு கவிதையை புராணத்திற்கும் புறநானூற்றிற்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலி ஒன்று எழுதியிருக்கிறது.

ஆனேகமாக அனைத்துக் கவிதைகளையும் ஒருவரே எழுதியிருக்கலாம். அல்லது கவிதைகள் எழுதியவர்கள் ஒன்றாகவே கவிதை எழுதப் பழகியிருக்கலாம்.

காதல் கவிதைகளை படிக்கின்ற பொழுது, கவிஞர்கள் ஆரம்பகட்டத்தில் இருக்கிறார்கள் என்று புரிகிறது. காதல் வருகின்ற பொழுது, அனேகமாக எல்லோரும் கவிதை எழுதுவார்கள். பத்து வருடம் கழித்து கவிதை எழுதுவதை விட்டு விடுவார்கள். இது இருபாலருக்கும் பொருந்தும்.

காரணம், அந்தக் கவிதைகள் ஏதோ வேகத்தில் எழுதப்படுபவைகள். அதில் இருக்கும் சில வரிகள் கடன் வாங்கப்பட்டிருக்கும். அவைகளின் அர்த்தம் சில வேளைகளில் அவர்களுக்கு புரியாது இருக்கும்.

இவர்கள் சில ஆண்டுகள் கழித்து கவிதைகள் எழுதப் போவதில்லை.

நான் உங்களை கவிஞர்களின் கவிதைகளை தாருங்கள் என்றுதானே கேட்டேன்.

சபேசனுக்கு மட்டும் தானா? :rolleyes:

  • தொடங்கியவர்

மீண்டும் தங்களுக்கு...வணக்கம்..

தாங்கள் வரைந்த கட்டுரையை தாங்களே வடிவாக

வாசியுங்கள். அப்போது தான் உங்களுக்கு நீங்கள் என்ன

பேசுகிறீர்கள் என்பது புரியும்..

அது நிற்க...

தாங்கள் கூறியதுக்கு அமைய இதில்

தரப்பட்டுள்ள கவிதைகள் எத்தனை ஆணுடயது...???

எத்தனை பெண்ணுடயது என்பதை கூறுங்கள்...

இவர்கள் கவிஞரா...கவிஞர் இல்லையா

என்பதல்ல இங்கு முக்கியம்...

இது யார் எழுதியது என்பதே கேள்வி....

முடிந்தால் பதில் சொல்லுங்கள் கண்டு பிடியுங்கள்

இல்லை என்றால் இனி இவ்வாறான இழி நிலை செயலை

மேற் கொள்ளாதீர்கள்...இது என்னுடைய

தாழ்மையான கருத்து...

மீண்டும் சொல்கிறேன்...ஒரு கவிதையை விமர்சிக்க

முன் அதை விமர்சிப்பவர் கவிதையை அறிந்து...

தானுமதை எழுதியவராக இருக்க வேண்டும்...

அப்போது தான் அதை எழுத படும் கடினத்தையும்

பொருளையும் அறியமுடியும்

அது என் வாதம்..

சும்மா அவருடைய கவிதை சரியில்லை..இது என்ன கவிதை என்றுவிட்டு

போனால்...அதை என்னால் ஏற்று கொள்ள முடியாது....

தான் எழுதிய கவிதைகளை தான் வடிவாக படிக்க வேண்டும்..ஆரய வேண்டும்

அதுவே முறை...

கவிதையை அறியாமால் ..எழுத தெரியாமால் எப்படி கவிதையை விமர்சிக்க முடியும்....??

சரி அப்படி நீங்கள் விமர்சிக்கையில் உங்களை ஒருவார்

கேட்கிறார் எங்கே நீ ஒரு கவி எழுது பார்க்கலாம் என்றால் என்ன செய்வீர்கள்....???

காலத்திற்கு ஏற்ப கவிதைகள் மாறு படுகின்றன...

எமது ஈழ கவிதைகள் அந்த மக்களையும்..அந்த மக்களினது

துயரங்களை...அடக்கு முறையாளனினுடய..நடவடிக்கைகளைய

நான்தான் சொல்ல முடியாது என்ற சொல்லி விட்டேனே.

பிறகெதற்கு மீண்டும் கேட்கிறீர்கள்.

நீங்கள் நேர்மையான முறையில் என்னை பரிசோதிக்க விரும்பினால் நான் சொன்ன படி செய்யுங்கள்.

ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை சரிசமமாக சேகரியுங்கள்.

ஒரு கவிஞருடைய ஒரு கவிதை என்று கணக்கில் சேகரியுங்கள்.

பொதுவான ஒருவருக்கு அந்த கவிதைகள் யாருடையவை என்ற அறிவியுங்கள்.

அதன் பிறகு என்னைக் கேளுங்கள்.

நான் சொல்வது சரியா தவறா என்று அந்த பொதுவான ஒருவர் சொல்ல வேண்டும்.

அதற்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

தங்களின் இயலாமையின் வெளிப்பாடு இதில் இருந்து தெரிகிறது...

எனவே இனி பெண்களின் கவிதைகளையோ அல்லது அவர்களின்

படைப்புகளையோ சாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்....

எனவே இதில் இருந்து தங்களின் உள் நோக்கம் வெளி வந்து விட்டது...

எனவே இனியாவது இவ்வாறான சிறு பிள்ளை தனமான செயல்களை நிறுத்துங்கள்...

இது தங்களை தாங்களே இழிவாக்கும் செயல்...

நன்றி

வன்னி மைந்தன் -

வன்னி மைந்தா! அந்தாள் சொல்வதை முதலில் ஒழுங்காக செயல்ப்படுத்திவிட்டு அவ்விடயத்தில் சபேசன் மண்கவ்விய பிற்பாடு நாங்கள் முடிசூட்டிக் கொள்ளலாம் புரியுதா? முதலில் நான் சொல்வதைச் செய்யுங்கள். ஒரே பாணியில் அமைந்திருக்கும் மேலே அமைந்திருக்கும் கவிதை வடிவங்களை மாற்றிவிட்டு பழைய தாயகக் கவிஞர்கள், தென்னகக் கவிஞர்களுடைய ஆக்கங்கள் பத்தைத் தெரிவு செய்து வையுங்கள். அதற்குப் பிறகு மிஸ்டர் சபேசனுடன் சவால் விடுங்கள்!

நாங்க ஓட்டைப்பானையை வச்சிருந்தாலும் எதிராளிக்கு விளங்கப்படாது புரியுதோ?

முதலில் பத்துக் கவிதைகளையும் அணிவகுக்க வையுங்கள்.

  • தொடங்கியவர்

அட..ஜயா ஆதிவாசி...ஒரே பாணியாய் இருந்த என்ன...??

இரண்டு பாணியாய் இருந்தா என்ன...??

படிச்சவன் எழுதினா என்ன...

படிக்காதவன் எழுதினா என்ன...??

தான் கண்டு பிடிப்பன் என்றார் ..இப்ப கவிஞருடைய கவிதையை கொண்டு வரட்டாம்...

அதுவும் நடுவர் ஒருத்தர் தேவையாம்...

போற போக்க பாத்த கண்காணிப்பு குழுவ கேட்டாலும்

கேட்பார்...

இந்த விதமுறைகளை இவர் என்ன முதல் சொன்னவரே....

அப்படியேன் இவர் கவிஞருடைய கவிதையை கேட்கிறார்...??

அதை படிச்சு போட்டு வந்து இங்க சொல்லவோ....??ஃ

அதுகும் புதிதாய் எழுதின வேண்டாமாம்...

இப்ப ஏன் முழி பிதுங்கிறார்....ஃ???

இங்கேயும் சிலர் கவிஞர் என்று சொல்லினம்...இவையள்

நிலத்தில கொடுமையள் நடக்கும் போது அதை பாட ஏன் மறந்தவையள்....???

அந்த பெண்கள் பாடுற பாவை கூட ஏன் உவையாள பாட முடியல....???

ஏன் ஆதிவாசி தாங்கள் கூட அதை செய்யல....???

கடன் வேண்டி கவி எழுதினமாம்...தேவராம் திருவாசகங்களை மாத்தி கவி பாடிறவையள்...

கவிஞர்..மற்றவன்..யார்....??? முட்டாளே....??

அப்படின்னு உவை மாதிரி கொஞ்ச பேர் சொல்லினம்...

ஆக மொத்தம் உவையளுக்கு வைத்தெரிச்சல்...

அது மட்டும் புரியுது...

கடைசியாய் ஒண்ணு சொல்லுறன் ஆதி..

கடிகாரம் நேரத்தை மாறி மாறி காட்டும்

அதை போலவே கவிதையும் வடிவம் மாறும்...அதை புரிஞ்சா சரி...

நன்றி

வன்னி மைந்தன்-

ஏன் ஆதிவாசி தாங்கள் கூட அதை செய்யல....???

ஆதியை எதைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுறீங்க வன்னி மைந்தன்? :lol::D:D

  • தொடங்கியவர்

மேற்கோள் காட்டி வந்து

மேம்படுத்தி சொல்லும் தாங்கள்...

அவருடைய கருத்துகளை ஏற்று கொண்ட

தாங்கள் ஏன் நிலத்தில் கோரங்கள் நடைக்கையில்

மக்கள் இன்னல்கள் சுமைக்கையில்

அவர்களுடைய..கண்ணீரை..மனத்தாங்

மேற்கோள் காட்டி வந்து

மேம்படுத்தி சொல்லும் தாங்கள்...

அவருடைய கருத்துகளை ஏற்று கொண்ட

தாங்கள் ஏன் நிலத்தில் கோரங்கள் நடைக்கையில்

மக்கள் இன்னல்கள் சுமைக்கையில்

அவர்களுடைய..கண்ணீரை..மனத்தாங்

  • தொடங்கியவர்

அடடா..ரெம்ப நல்லாய் இருக்கு என் வாழ்த்து....

இது கவிதை.....ஆமா..இன்னு தானே நான் படிக்கிறன் என்ன பெயரில் போட்டீங்க....???

இந்த வரி பெண்ணை இழிவு படுத்துறவருக்கு பொருந்தும்...

முடக்க முடக்க எழுதுகோல்கள்

எழுந்து நடக்கும் சொல்க!-

நான் உள புர்வமாக இது கவிதை என ஏற்று கொள்கிறேன்...

ஆனால் இதை விமர்சிப்பவரை கேட்டால்...உப்பாரி என்று தான் சொல்வார் கேட்டு பாருங்கள்...

புலம் பெயர் வாழ் பெண்களின் கவிதை எல்லாம் உப்பாரியாம் என்கிறார் அது பற்றி தங்கள் கருத்தென்ன...???

வன்னி ஆதிவாசிதான் கொஞ்சக் காலத்திற்கு முன்பு யாழில் ஒரு கருத்துக்களத்தில் இணைத்த கவிதை... என்ன பெயரில் என்றால் ஆதிதானய்யா...

களத்திற்குள் வந்து கவிதை கொட்டினா மட்டும் போதாது மற்றவர்கள் என்ன கொட்டுகிறார்கள் என்றும் பார்த்துப் பேச வேண்டும். ஆமா யாரு யாருடைய கவிதையை உப்பாரி என்றாக.....? இங்கு ஆண்கள், பெண்கள் எழுதும் கவிதையை இனம்கண்டு சொல்லச் சொல்லித்தானே எழுதப்பட்டிருக்கு!....

  • தொடங்கியவர்

ஆமா...அப்படித்தான்...

வன்னிமைந்தன்! மீண்டும் ஒரு முறை விளங்கப்படுத்துகிறேன்.

இதில் ஆண்கள், பெண்கள் என்ற சொற்களுக்கு முன்னால் "பெரும்பாலான" என்று சொல்லை இணைத்து வாசிக்கவும்.

ஆண்கள் ஒரு பாணியிலும், பெண்கள் ஒரு பாணியிலும் எழுதுகிறார்கள் என்று நான் கருதுகிறேன் என்பது என் கட்டுரையில் இருந்து உங்களுக்கு விளங்கி இருக்கும்.

அதுவும் பெண்கள் ஒரு வட்டத்திற்கு நின்று எழுதுகிறார்கள் என்பதும் என்னுடைய கருத்து.

இதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்பதற்காகவே நான் கூறினேன்.

ஆண்கள், பெண்கள் எழுதிய கவிதைகளை தாருங்கள், நான் தரம் பிரிக்கிறேன் என்று.

நீங்கள் நேர்மை உள்ளவர் என்றால் என்ன செய்திருக்க வேண்டும். பொதுவான கவிதைகளை சேகரித்து என்னிடம் தந்திருக்க வேண்டும்.

ஒரு கவிதை எழுதியது ஆணா, பெண்ணா என்பதை அக் கவிதை எழுதப்பட்ட பாணியிலும், அதில் உள்ள சொற்களின் மூலமும் என்னால் அறிய முடியும்.

ஆனால் வேண்டும் என்றே ஒரே பாணியில் கவிதையை எழுதித் தந்தால், எப்படி கண்டு பிடிப்பது.

நான் கம்பி மீது நடப்பேன் என்று சொன்னால், ஒரு துருப்பிடித்த கம்பியை தந்து, அதில நட என்று சொன்னால், நான் என்ன செய்வது?

சவால் விட்டது நான். நீங்கள் அல்ல.

சவால் எப்படிப்பட்டது என்று நான் விளங்கப்படுத்தியும் இருக்கிறேன். அதற்கான நிபந்தனைகளை சொல்லி இருக்கிறேன்.

விதிவிலக்குக்குள் அடங்குகின்ற தாமரை, மாலதிமைத்ரி, குட்டிரேவதி போன்றவர்களின் கவிதைகளை சேகரித்துக் கொண்டு வராதீர்கள்.

சாதரணமாக பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் வருகின்ற கவிதைகளை கொண்டு வாருங்கள்.

அப்பொழுது என்னால் முடியாது விட்டால், நான் தனித்து பெண் கவிஞர்களை குற்றம் சொன்னதை திருப்பி எடுக்கிறேன்.

  • தொடங்கியவர்

தங்கள் பதிலை பார்க்கையில் எனக்கு

விழுந்தனான் மீசையில் மண்படவில்லை

வேலை கள்ளிக்கு பிள்ளை பிராக்கு....

ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை...

என்ற பழமொழிகள் ஞாபகத்திற்கு வருகிறது....

அன்புள்ள அக்கா மகள் இந்துவுக்கு,

பிரியமுடன் உன் தாய் மாமன் வரையும் மடல் என்னவென்றால்,

உன் இதயமதில் இருப்பதற்கு இடம் ஒன்று கேட்டலைந்தேன். இன்று வரை பதில் இல்லை. எந்தனுக்கு நீ சொல்லவில்லை. வேண்டாம் என்று வீசி என்னை எறிந்து விட்டாய். பாவம் நான். உடைந்து போன இதயமுடன் வெம்பி வெம்பி அழுகிறேன். இனி என்ன வாழ்வெனக்கு? நான் இறந்து விடுகிறேன்.

உன்னுடைய

அன்புத் தாய்மாமன்

காளிங்கன்

குறிப்பு: கவிதை என்று நினைத்து யாரோ ஒருவர் மேற்கண்ட கடிதத்தை என்னிடம் அனுப்பி விட்டார். நான் அதை சரி செய்து திருப்பி அனுப்பி உள்ளேன். எழுதியவர் பெற்றுக் கொள்ளவும்.

இது எல்லாம் கவிதையாம். இதில் நான் எழுதியது ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிக்க வேண்டுமாம். நல்ல விளையாட்டு.

  • தொடங்கியவர்

காகங்களே! மேகங்களே!...

காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது

மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது

ஆயினும் காகங்களே! மேகங்களே!

குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும்

நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும்

அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை

இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன

ஆகவே காகங்களே! மேகங்களே!

கூவுகின்ற ஆவலையும்

வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும்

விட்டு

கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்

யாரோ ஒருவருடன் உரையாடிய வசனமதை கவிதையென்று போட்டு உள்ளார்...

சிறு வயதில் தனக்கு பாட்டி சொன்ன கதைபோல் இருக்குதென்றும்...

காகம் அன்ன நடைபயில போய் தன் நடையை மறந்ததாக சொல்லி அனுப்பியிருந்தார்....

நான் என்ன பண்ண தங்களுக்கு அதை அனுப்புகிறேன்...

என்னுடைய கவிதை விளங்கவில்லை என்றால் தாராளமாக என்னைக் கேட்கலாம்.

அல்லது அந்தக் கவிதை படித்துக் கருத்து எழுதியவர்களையும் கேட்கலாம்.

காகங்களே! மேகங்களே!" என்ற கவிதைக்குள் எத்தனை எதுகைமோனைகளும் தமிழில் உள்ள மற்றைய அணி வகைகளும் இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அது பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், நாளை வகுப்பெடுக்கிறேன்.

இன்று என்னுடைய தளத்தில் ஒரு குறுங்கதையை இணைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

ஜயா தாங்கள் எனக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை

எனக்கது தேவையும் இல்லை.....

எனக்கும் தெரியும் ஜயனே....கவிதை அறிவேன்...

நீங்கள் உங்களை மேம்படுத்த மாற்றானை

சாடுவதை என்னால் ஏற்க முடியாது..

அதற்கு நான் அனுமதிக்க போவதும் இல்லை....

எனக்கு உவமானம்.உருவக. அணிகள் பற்றி அறிவேன்...எனக்கு பாடம்

எடுப்பதை விட்டு முதல் கவிதை புத்தகங்கள் வேண்டி படியுங்கள்..

எதுகை மோனை...சொல் கட்டு..புதுக்கவிதை

மரபுக்கவிதை...நாட்டுபுற ..வட்டார மொழியில் வரும் பாக்களை

தேடி வேண்டி படியுங்கள்...உங்களை மாதிரி அடி முட்டாள்தனமாய் வானொலி .தொலை காட்சியில்

கவிதை படிப்பவரை...நயப்புடைப்பதென்ப

:lol: வன்னி மைந்தன் நீர் கூறியவற்றிற்கும் உமது தலைப்பில் உள்ள மரியாதையையும் பாரும்.வெட்கமாக இல்லை.மட்டுறுதினர்களுக்கு இது ஒருமையாகத் தெரியவில்லையா? அதிலும் கவித்துவம் இருப்பதாக விளக்க வேண்டாம்.
  • தொடங்கியவர்

வன்னி மைந்தன் நீர் கூறியவற்றிற்கும் உமது தலைப்பில் உள்ள மரியாதையையும் பாரும்....????

.வெட்கமாக இல்லை....????

.மட்டுறுதினர்களுக்கு இது ஒருமையாகத் தெரியவில்லையா? ??????????

அதிலும் கவித்துவம் இருப்பதாக விளக்க வேண்டாம்.????????????

????????????????????????????????????????????????????????????????????? நாரதர்...?????????????????

வன்னி மைந்தன் நீர் கூறியவற்றிற்கும் உமது தலைப்பில் உள்ள மரியாதையையும் பாரும்....????

.வெட்கமாக இல்லை....????

.மட்டுறுதினர்களுக்கு இது ஒருமையாகத் தெரியவில்லையா? ??????????

அதிலும் கவித்துவம் இருப்பதாக விளக்க வேண்டாம்.????????????

????????????????????????????????????????????????????????????????????? நாரதர்...?????????????????

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!, சவால் உனக்கு....
:angry:
  • தொடங்கியவர்

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!இ சவால் உனக்கு....

அதற்குள் விடயம் இருக்கிறது...

அவர் சொல்வதை விட இதுவொன்றும்...கீழ்நிலை இல்லை..நாரதரே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.