Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் மகிந்த: வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை : விஜயகலா

Featured Replies

Vijayakala_CI.jpg

 

 
மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர  போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார்.
 
நேற்று கிளிநொச்சியில் பெண்களுக்கு வலுவூட்டல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார் .
  
மகிந்த அரசு பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கில் அப்பாவிகளை தான் கொன்று குவித்துள்ளது .போர் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் போரால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
மகிந்த அரசு விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என கூறி போர் நடாத்தி 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை தான் கொன்று குவித்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலமாக இருந்து வித்திட்டவர்கள் வடக்கு மக்களே :சந்திராணி
 
அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது .எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சியில் வடமாகாண பெண்களை வலுவுட்டும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
 
 30 வருடகாலமாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒரு பெண்களை வலுவூட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்து நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் 
 
மேலும் தற்போது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி நடைபெற்று வருகின்றது எனவே இந்த ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலபாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வடமாகாண மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு. வடக்கு மக்கள் மிகவும் தைரியமானவர்கள் மனவலிமையுள்ளவர்கள் எனவும் தெரிவித்த மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி. 
 
மேலும் எமக்கு முன்னர் ஒரு பயம் இருந்தது ஜெனீவா மனித உரிமைகள் பிரச்சனை தொடர்பாக ஆனால் இன்று அந்த விடயத்தில் தற்போது எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காண கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டுவர உத்தேசித்துள்ளோம்.
 
இதேவேளை இலங்கையில் 52 வீதமான பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது குறிப்பாக நாடாளுளமன்றத்தில் 5.7 வீதமே பெண்கள் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
மேலும் எமக்கு முன்னர் ஒரு பயம் இருந்தது ஜெனீவா மனித உரிமைகள் பிரச்சனை தொடர்பாக ஆனால் இன்று அந்த விடயத்தில் தற்போது எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காண கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

 

தமிழர் தலையில் ரனில் மிளகாய் அரைப்பார். 

பாவம் விஜயகலா, தண்ட பங்குக்கு ஏதோ கதைக்குது விடுங்கோ

இப்புடித்தான் விஜயகலாவின் ஆள் ஒருத்தர் வன்னியில் மாகணசபை தேர்தலில் UNP (Eksath Jathika Pakshaya) சார்பாக போட்டியிட்டார். அண்ணன் பேசும்போது கூறினார்...

"தயவுசெய்து எல்லாரும் UNPக்கு போடுங்கோ! இல்லைஎன்றால் கூட்டமைப்புக்கு போடுங்கோ"

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.