Jump to content

காலிஃப்ளவர் 65


Recommended Posts

காலிஃப்ளவர் 65

 

மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள்.

29ej2nc.jpg

இது செய்வது மிகவும் ஈஸி. இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

 

 தேவையான பொருட்கள்:

 

காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது)

 

தயிர் - 100 மி.லி

 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

 

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

 

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

 

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

 

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை:

 

முதலில் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை நீரில் போட்டு, சிறிது நேரம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பாக இந்த கலவை அதிக நீராகவோ, கெட்டியாகவோ இருக்கக்கூடாது. பின் அதில் காலிஃப்ளவரை போட்டு நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் 65 ரெடி!!!

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2015/yummy-tummy-gobi-65-dry-recipe-007937.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக மேலே தூவிய வெங்காயத் தாளையும் சேர்த்திருக்கலாம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன 65 ?

 

Fotolia_10343740_XS.jpgBlumenkohl1_Meyer_200.jpg

 

"சிக்கன் 65" என்பது.... தமிழ் நாட்டில் பிரபலமான உணவு.

இதனை 65 நாட்கள் வயதான, கோழியில் செய்யும் போதுதான், அதன் சுவை அதிகம் என்று சொல்வார்கள்.

அப்போது தான், கோழியின் எலும்புகள் முத்தாமலும், தசைகள் மென்மையாகவும் இருக்குமாம்.

 

இது மரக்கறியில் செய்வதால் அதனுடன், இலவச இணைப்பாக 65 சேர்த்துள்ளார்கள்.

அது "கோழி 65".... இது "புரோக்கோழி 65" (BROCCOLI) :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது கோழி பிளவர் ... அதாவது பூக்கோழி  65...!  :D

Link to comment
Share on other sites

அதென்ன 65 ?

 

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சில உணவு வைகைகளுக்கு ஒரு ஸ்டைல் ஆன பெயர் வைப்பதில்லையா? :D:lol: அது மாதிரிதான் இதுவும் 65.

நல்ல காலம் உங்கள் கண்ணனுக்கு 69 ஆக தெரியவில்லை :icon_mrgreen::lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fotolia_10343740_XS.jpgBlumenkohl1_Meyer_200.jpg

 

"சிக்கன் 65" என்பது.... தமிழ் நாட்டில் பிரபலமான உணவு.

இதனை 65 நாட்கள் வயதான, கோழியில் செய்யும் போதுதான், அதன் சுவை அதிகம் என்று சொல்வார்கள்.

அப்போது தான், கோழியின் எலும்புகள் முத்தாமலும், தசைகள் மென்மையாகவும் இருக்குமாம்.

 

இது மரக்கறியில் செய்வதால் அதனுடன், இலவச இணைப்பாக 65 சேர்த்துள்ளார்கள்.

அது "கோழி 65".... இது "புரோக்கோழி 65" (BROCCOLI) :D  :icon_idea:

 

65வது மணி அடிச்ச ஆக்களுக்கு மட்டும் இந்த ஸ்பெசல் எண்டெல்லே நான் நினைச்சன்  :lol:  :D

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சில உணவு வைகைகளுக்கு ஒரு ஸ்டைல் ஆன பெயர் வைப்பதில்லையா? :D:lol: அது மாதிரிதான் இதுவும் 65.

நல்ல காலம் உங்கள் கண்ணனுக்கு 69 ஆக தெரியவில்லை :icon_mrgreen::lol:

 

69 எண்டு போட்டிருந்தால் முதல்லை அதை செய்து பார்த்துப்போட்டுத்தான் மிச்ச அலுவல்  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.