Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்?

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது.

ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கும் படி உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவினால் தமிழருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை மாற்று சட்டமூலம் ஒன்றின் மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி ஆரம்பத்திலும்

பின்னர், வாகரையில் அப்பாவித் தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையைக் கண்டிக்கும் முகமாகவும்

நாடாளுமன்றின் கடந்த சில அமர்வுகளில் சபைக்குள்ளேயே சபை மண்டபத்தின் நடுவே தரையில் அமர்ந்து தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள்.

இன்று இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தினம். இச்சமயம் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் தங்கியிருந்து, நாடாளுமன்றின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளை சபைக்கு வருவார்களானால் அதுவும் தலைநகர் கொழும்பில், பட்டப்பகல் வேளையில், நட்ட நடு வீதியில் வைத்து கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் எழுந்துள்ள பெரும் சீற்றத்தோடு அவரின் சக எம்.பிக்கள் சபைக்குச் சமுகம் கொடுப்பார்களேயானால் நிலைமை களேபரமாகத்தான் அமைந்துவிடும்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் சமயத்தில் வழமையாகவே அங்கு பார்வையாளர் அரங்கு, வெளிநாட்டு இராஜதந்திரிகள், உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என நிறைந்திருக்கும்.

அதுவும் இப்போது வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பிக்கும் நிதி அமைச்சரின் பொறுப்பு நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் வசமுள்ளது. கடந்த வருடம் புதிய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியே சபையில் பிரசன்னமாகிச் சமர்ப்பித்திருந்தார். அவரே இம்முறையும் அதை இன்று சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படி அவர் அதைச் சமர்ப்பிக்கும்போது அதுவும் முக்கிய பிரமுகர்களால் நாடாளுமன்றப் பார்வையாளர் அரங்கு நிரம்பி வழியும் சமயத்தில் தமது சக எம்.பி. ஒருவரின் படுகொலையால் சீற்றமுற்றிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள், சபைக்குள் தமது தொடர் சத்தியாக்கிரகத்தை மேலும் ஆக்ரோஷத்துடன் முன்னெடுத் தால் நிலைமை எப்படி இருக்கும்?

இதை நாசூக்காகச் சமாளிக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் ரவிராஜ் எம்.பியின் நெருங்கிய உறவினர்களுக்கும் "தாராள மனதுடன்' விமான வசதி வழங்கி நடவடிக்கை எடுத்திருக்கின்றது அரசுத் தலைமை.

விரைந்து திரும்பி கொழும்பு வருவதற்குப் பயண வசதியோ அல்லது பாதை மார்க்கமோ இல்லாத யாழ். குடாநாட்டுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் பெரும்பாலான எம்.பிக்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்ததன் மூலம் நாடாளுமன்றுக்குள் இன்று தமக்கு எழக்கூடிய இக்கட்டை நெருக்கடியை அவமானத்தை அதி உத்தமர் தவிர்த்து விட்டார் என்றே கூற வேண்டும்.

ரவிராஜின் இறுதிக் கிரியைகள் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த எம்.பிக்கள் கொழும்பு மீளுவது பெரும்பாலும் துர்லபமே.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசின் செலவினம் 56 ஆயிரத்து 830 கோடி ரூபா. இம்முறை இன்று சமர்ப்பிக்கப்படும் திட்டத்தில் அது 80 ஆயிரத்து 464 கோடி ரூபாவாக எகிறி இருக்கின்றது.

இதில் பிரதானமாக இம்முறை அதிகரித்திருப்பது அரசின் பாதுகாப்புச் செலவினம்தான். அது இந்தத் தடவை இரட்டிப்பாகின்றது.

கடந்த தடவை பாதுகாப்புக்கு 6 ஆயிரத்து 950 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இம்முறை அது 13 ஆயிரத்து 956 கோடி ரூபாவாக இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை இராணுவத் தீவிரப் போக்குக் கண்ணோட்டத்துடன் கையாளும் அரசுத் தலைமையின் செயற்பாட்டை நோக்கும்போது, போர் எண்ணம் பொதிந்த "யுத்த வரவு செலவுத் திட்டம்' என்றே இது அமையப் போகின்றது என்பதைப் பாதுகாப்புத் துறைக்கான இந்த இரட்டிப்பு ஒதுக்கீடு எடுத்துக் காட்டுகின்றது.

மனித உரிமைகள், அமைதி முயற்சிகள் போன்ற விவகாரங்களில் மஹிந்தரின் அரசின் பெறுபேறுகள் மற்றும் போக்குகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகள் உட்பட சர்வதேச சமூகமே அதிருப்தியுற்றுள்ள நிலைமையில்

அமைதி முயற்சிகள் ஆக்கபூர்வமான திசையில் முன்நகராவிட்டால் நாட்டுக்கு உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள் வழங்கப்படமாட்டா என சர்வதேச சமூகம் கோடி காட்டியுள்ள பின்னணியில்

இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழப் போகின்ற பல நூறாயிரம் கோடி ரூபாவைச் சமாளிப்பதற்கான உதவிகளையோ, நன்கொடைகளையோ நிதி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படித் திரட்டப் போகின்றார்? நாட்டு மக்கள் மீது மேலும் சுமையைச் சுமத்தாமல், துண்டு விழும் தொகையை எதிர்கொள்வதற்கு "அவரது மக்கள் அரசு' முன்வைக்கும் தந்திரோபாயங்கள் எவை?

இன்று மாலை அவை தெரிந்து விடும்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் கறுப்புப் பட்டியணிந்து த.தே.கூ.வினர் போராட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவினால் நேற்று வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகர் லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது.

நாடாளுமன்றம் கூடியதும் கறுப்புப் பட்டியணிந்து வாசக அட்டைகளுடன் சபைக்கு நடுவே வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்துக்கு நடுவே நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தலைவரும் நிதியமைச்ருமான மகிந்த ராஜபக்ச, சபைக்கு வந்த போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனத்தை விட்டெழுந்து மேசையில் தட்டி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். எதிர்க்கட்சியினர் அமைதியாக ஆனத்தில் இருந்தனர்.

கறுப்புப் பட்டியணிந்து வாசக அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவைப் பார்த்தவாறு அரைவட்டவடிவில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ௯ பாதையை திறக்கப்பட வேண்டும்

படுகொலைகளை நிறுத்து

சர்வதேச சமூகமே இன்னும் ஏன் மௌனம்?

மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் 2005 இல் ஜோசப் பரராஜசிங்கம் 2006 இல் ரவிராஜ் அடுத்தது யார்?

எனும் வாகங்களை எழுதப்பட்ட வாசக அட்டைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது வாயினை கறுப்புத் துணியினால் கட்டியிருந்தார். வரவு - செலவுத் திட்ட உரை முடியும் வரையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வாழ்க்கைப் பளுவைக் குறைக்கும் உருப்படியான யோசனை எதுவும் இல்லை!

பட்ஜெட்

* சாராயம், நறுமணப் பொருள்களின் விலை உயர்வு

* தனியார் பஸ் கொள்வனவுக்கு வற் வரியிலிருந்து விதிவிலக்கு

* தோட்டத் தொழிலாளருக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை மா

* ஊழியர் சேமலாப நிதிக்கு வரி குறைப்பு

* மின்சார உற்பத்திக்கு வரி விலக்கு

* 5000 பட்டதாரிகளுக்கு நியமனம்

* அரச ஊழியருக்கு சம்பள உயர்வு இல்லை

கொழும்பு, நவ.17

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் நேற்று ஆற் றிய 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செல வுத்திட்ட உரையில் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு எந்த விதமான உருப்படியான யோசனையும் தெரிவிக்கப் படவில்லை.

வளர்ச்சித் திட்டங்கள், அபிவிருத்தி சம்பந்தமாகவும் சாதகமான முன்மொழிவு கள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவில் எடுத் துச் சொல்லப்படவில்லை.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக எந்த முன்மொழி வுகளும் இடம்பெறவில்லை.

எனினும், 2006 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச அலுவலகர் களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு மற்றும் நிலு வைக் கொடுப்பனவு என்பன 2007 இல் நடைமுறைப்படுத்தப்படும் என்று புதிய வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட் டிருக்கிறது. பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாட சாலைகள் மற்றும் பிரதேச செயலகங் களில் கற்பித்தல் மற்றும் திட்டமிடல், விரிவாக்கல் பணிகளில் அடையாளங் காணப்பட்டிருக்கின்ற சுமார் 5 ஆயிரம் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா சம் பளத்துக்கு 2 வருடங்களுக்கு பயிலுநர்க ளாக அவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்றும் நியமிக்கப்பட்ட இடத்தில் ஐந்து ஆண்டுப் பணியை பூர்த்தி செய்ய அவர் கள் கேட்டுக்கொள்ளப்படுவர் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செல வுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் சில முக்கியமான அம்சங்கள் வரு மாறு:

* ஒரே நாளில் விநியோகிக்கப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணம் 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிப்பு.

* சாதாரண கடவுச் சீட்டுக்கான கட் டணம் 3 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக குறைப்பு.

* தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை மா ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கப் படும்.

* நறுமணப் பொருட்கள், அழகு சாத னங்கள் மற்றும் குளியலறைத் தயாரிப்புப் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு.

* ஊடகவியலாளர்களுக்கான உப கரணங்கள் மற்றும் அவர்களது பாவ னைக்கான மோட்டார் சைக்கிள்களுக்கு, இறக்குமதித் தீர்வையிலிருந்து விலக்க ளிப்பு.

* சாராயத்தின் விலை லீற்றர் ஒன்றுக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* தனியார் பஸ் உரிமையாளர்கள் வழி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தால் பழைய பஸ்களுக்குப் பதிலாக புதிய பஸ்களைக் கொள்வனவு செய்ய வற்வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

* ஓய்வு பெறும்போது கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதிக்கு வரிக்குறைப்பு.

* வாகன இறக்குமதிக்கு 2.5 வீத புதிய வரிவிதிப்பு.

* மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு வரி விலக்களிப்பு.

வற் மற்றும் உற்பத்தி வரிகள் ஊடாக 306 பில்லியன் ரூபாவை அடுத்த வருடம் வருமானமாகப் பெற அரசு திட்டமிட் டுள்ளது.

இம்முறை துண்டுவிழும் தொகையான 655 பில்லியன் ரூபாவை வெளிநாடுகளி டம் கடனாகப் பெறவும் உத்தேசிக்கப்பட் டிருக்கிறது.

-உதயன்

நாடாளுமன்றத்தைச் சூழ நேற்றுத் தீவிர பாதுகாப்பு

ஹெலியில் வந்தார் மஹிந்த ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலை யில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ மாலை தனது அரசின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள திய வன்ன ஓயாவில் கடற்படைப் படகுகளில் ஆயுதம் தாங்கிய படையினர் ரோந்துசென்றனர். நாடாளுமன்றத் துக்குச் செல் லும் வழி நெடுகிலும் பொலி ஸார், இராணுவத்தினர் மற்றும் ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட் டிருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாது காப்புக் காரணங்களை முன்னிட்டு விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி கொப்டரில் நாடாளுமன்றத்துக்கு வந் தார்.

இதேவேளை, வழமைக்கு மாறாக செய்தியாளர்கள் அனைவரும் பொல்ஹேங்கொடவிலுள்ள அரச தகவல் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் துருவித் துருவிச் சோதனையிடப்பட்ட னர். அதன்பின்னரே விசேட பஸ்மூலம் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல் லப்பட்டனர்.

ஒருபோதுமில்லாதவாறு சபைக்குள் படப்பிடிப்பாளர்கள் அனுமதிக்கப் படவில்லை. அரச தொலைக் காட்சி யான ரூபவாஹினி தவிர்ந்த ஏனைய தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் களும் அனுமதிக்கப்படவில்லை. தக வல் திணைக்களப் படப்பிடிப்பாளர் மாத் திரமே சபைக்குள் அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.

வழமைபோலல்லாது இந்த வரவு செலவுத் திட்டத்தின்போது பொதுமக் கள் கலரியின் அரச அதிகாரிகள், வெளி நாட்டுத் தூதுவர்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர்.

-உதயன்

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை

அவர் முன்பாக கூட்டமைப்பினர் சபையில் சத்தியாக்கிரகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை, வாகரையில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றைக் கண்டித்தும் ஏ9 பாதையை உடனடியாகத் திறக்கக்கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்து சுலோகங்களை ஏந்தி நேற்று நாடாளுமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், ஜனாதிபதி அந்தப் பேராட்டத்தைச் சற்றும் பொருட்படுத்தாது ஏறெடுத்தும் பார்க்காது அவர் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த 2007ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

அரசின் 2007ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் மாலை 4மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது.

சபை கூடிய அடுத்த கணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கறுப்புப் பட்டிகளை அணிந்து அரசிற்கு எதிரான வாசகங்களைக் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு சபை நடுவில் வந்து அமர்ந்தனர்.

இவர்கள் வந்தமர்ந்து ஓரிரு நிமிடங்களில் சபைக்குள் நுழைந்தார் ஜனாதிபதி. அவர் வந்த வேகத்தில் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்.

ஜனாதிபதி முன்பாக அவர் தெளிவாகப் பார்க்கும்படியாகச் சுலோகங்களை ஏந்தி "ப' வடிவில் அமர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைதியான முறையில் கோஷங்கள் எதனையும் எழுப்பாது ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்கு இடையூறு விளைவிக்காது அவர்களது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

""சர்வதேச சமூகமே ஏன் மௌனம்'', ""மனிதப் படுகொலைகளை நிறுத்து'', ""ஏ9 பாதையைத் திற'', ""நேற்று ஜோஸப். இன்று ரவிராஜ். நாளை யார்?'', ""வடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் ஆரம்பி'', ""தமிழர்களை பட்டினியால் கொல்லாதே'', ""வஞ்சகமான முறையில் வடக்கு கிழக்கைப் பிரித்து தமிழ் மக்களை ஏமாற்றாதே'', ""2005இல் ஜோஸப், 2006 இல் ரவிராஜ், 2007இல் யார்?''

ஆகிய வாசகங்களைக் கொண்ட சுலோகங்களை கூட்டமைப்பு எம்.பிக்கள் ஏந்தியிருந்தனர். இவை அத்தனையையும் ஜனாதிபதியின் கண்ணில் படும்படியே ஏந்தியிருந்தனர். இருந்தாலும் ஜனாதிபதி அவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காது வரவு செலவுத்திட்ட உரையைத் தொடர்ந்து ஆற்றினார்.

-உதயன்

2007 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை 13 பில்லியன் ரூபா.

2007 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை 13 பில்லியன் ரூபாவென அறிவிக்கப் பட்டுள்ளது. 2007 ம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் 10 ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், நிதி அமைச்சர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, அரசாங்கத்தின் 2007 ம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வரும் வருமானம் 584 பில்லியன் ரூபாய்களாகும். செலவீனம் 597 பில்லியன் ரூபாவென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2007 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், கிராம அபிவிருத்தி, மின்சார உற்பத்தி, நீர் விநியோகம், வீடமைப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்தி என்ற ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் 2007 ம் ஆண்டு காலப்பகுதியில், வரி மூலமான வருமானமாக 306 பில்லியன் ரூபாவை சேகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானூர்தி வரி மற்றும் துறைமுக வரிகள் 2.5 சத வீதத்தில் இருந்து 3 சத வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் மூன்று வருடகாலப் பகுதியினில் நாடளாவிய ரீதியாக 60 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் மற்றும் மதுபான வகைகளைத் தவிர ஏனைய பொருட்களுக்கான வரிகளில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை.

பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான விவசாயிகளுக்கான கடன் வசதிகள் அதிகரிக்கப்படவுள்ளது.

இதுதவிர அவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு வழங்கும் கடனுக்கான வருடாந்தர வட்டி 8 சத வீதம் மட்டுமே அறவிடப்படும்.

வடக்குகிழக்கு அகதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுகென நிவாரணத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பெருந்தோட்டத்துறை சமூகத்திற்கு அரிசி மா போன்ற பொருட்கள் மானிய முறையில் விநியோகிக்கப்படவுள்ளன

பெருந்தோட்டங்களின் அனைத்து சுகாதார மையங்களின் தரங்கள் உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நுவரெலிய தொழில் பயிற்சி மையம தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் ஜனாதிபதி தமது வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& :lol::D:D:D

மக்களை எமாத்த நிதியமைச்சர் என்ற கதிரையில் குந்தியிருக்கும் படுகொலையின் மன்னன் மகிந்த பட்ஜெட்டை ஆய்வுசெய்கிராராம் பார்த்துக்கோங்கோ

budjat-magi-l3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த செலவீனமாக இலங்கையரசு 47% அதிகரிப்பைச் செய்திருக்கின்றது. நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? இங்கே எம் புகழ் பாடிக் கொண்டு காலத்தைக் கழிக்கப் போகின்றோமா?

ஏற்கனவே கொடூரக் கொலைகளை இலங்கையரசு செய்கின்றது. இவ்வாறன நிதி ஓதுக்கீடு செய்யும் போது, சோக நிகழ்வுக்கு அழுகை முகக்குறியும், துன்பத்தின் போது எதிரியைத் திட்டித் தீர்ப்பதும் நம் விடுதலைக்கு போதுமானதல்ல!

குறைந்த பட்சம் சமாதான பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டு, இப்படியான நிதி ஓதுக்கீட்டைச் செய்வது குறித்து உலக மக்களுக்கு, வெளிப்படுத்தியாக வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிக்கின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

S.Lanka President unveils '07 budget, markets confused

COLOMBO, Nov 16 (Reuters) - Sri Lankan President Mahinda Rajapakse unveiled his 2007 budget to parliament on Thursday, but his revenue, spending and deficit forecasts differed wildly from the budget text, confusing markets and analysts.

Rajapakse -- who is not an economist but has held onto the finance minister portfolio himself -- started out by saying spending would total 597 billion rupees ($5.5 bln) and revenues 584 billion rupees next year, leaving a deficit of 13 billion rupees.

But a table in the budget document seen by Reuters later said spending would rise sharply from 2006 levels to 834.9 billion rupees in 2007, while overall revenues would rise to 599.8 billion rupees.

The table also showed tax revenues, the biggest component of overall revenues, rising 25 percent to 540.9 billion rupees, including sharp increases in income tax and taxes on goods and services and external trade. But Rajapakse only made reference to a handful of levies.

Because of tight security at parliament amid fears of Tamil Tiger rebel attacks, all mobile phones are banned at the complex and no government officials were immediately contactable to explain the incongruities.

"I'm very confused. I didn't understand much," said Vajira Premawardhana, head of research at Lanka Orix Securities in Colombo, who listened to the speech on the radio. ADVERTISEMENT

"He didn't give any revenue proposals. He basically didn't say anything," he added. "He was basically setting out his policies for the next few years, that infrastructure has to be expanded and the SME sector has to be provided with certain new concessions, and apart from that he didn't say anything."

Several other analysts and traders voiced confusion, and said they would rather not comment.

Rajapakse did say the economy was set to grow over 7.0 percent in 2006, within the government's forecast bracket of 6.0-8.0 percent. He wants to see inflation brought down to around 9 percent in 2007 and economic growth next year at around 7.5-8.0 percent, the government's current target.

The budget text outlined proposals for all companies to distribute 50 percent of their profits as dividends or face a 15 percent tax, and proposed reducing exemptions on a financial transactions tax.

He said the agriculture sector would be exempt from income tax under in 2007 and announced a new $10 tax on air tickets as well as taxes on items from ink and soda to plastic bags.

The budget also aims to raise income tax revenue to 4.0 percent of GDP from 2.7 percent in 2006.

"Oil prices remain high and risks are high. Inflation is high. National security cannot be compromised, The development of much needed infrastructure can no longer be delayed," Rajapakse said.

"Therefore the government, the private sector and the trade unions must make some sacrifices to overcome these challenges."

He also used his speech to appeal to the Tamil Tigers to surrender arms and halt attacks as a new chapter of a two-decade civil war deepens.

International lenders have been urging Rajapakse's government to find ways to boost its tax take to help bring down the island's budget deficit, which analysts widely expect to come in at more than 8.0 percent of GDP this year.

The budget text forecasts the budget deficit will narrow to 7.2 percent of GDP in 2007 from 7.9 percent this year.

Rajapakse, who said his 2007 budget would focus on infrastructure and human resources development in the island's $23 billion economy, made no reference to defence spending.

There was no defence breakdown in the budget text either, though officials had earlier said defence spending would increase around 45 percent from 2006 levels purely because of a salary hike. (US$1 = 108.25 rupees)

தனக்கே விளங்காத வரவுசெலவுத்திட்டம் மற்றவர்களாலும் விளங்கிக் கொள்ள முடியாது என்பதால், மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தும்படி உரையாற்றியுள்ளார். தமிழர்களை வதைப்பதிலேயே குறியாயிருக்கிற சிங்களவர்களுக்கு இது பற்றி என்ன அக்கறையிருக்கப்போகிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏ-9 வீதியை திறந்து இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்: எம்.கே.சிவாஜிலிங்கம்

ஏ-9 வீதியை திறந்து இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அராங்கத்துக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் இல்லையேல் தமிழீழக்கொடி ஐ.நா.வில் பறக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:

சமாதானப் பேச்சை முன்னெடுப்பது ஏ-9 வீதியை திறப்பதிலேயே தங்கியுள்ளது. இனப் பிரச்சினைக்கு ஒரே நாட்டிற்குள் தீர்வு காண வேண்டுமாயின் இதுவே இறுதிச் சந்தர்ப்பமாகும். அச்சந்தர்ப்பத்தை அரசாங்கம் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏ-9 வீதி திறக்கப்படவில்லையென்றால் யுத்தம் வெடிக்கும். அது சகல இன மக்களையும் பாதிக்கும். அத்துடன் சிறிலங்காவில் இரண்டு தேசங்கள் இருப்பதை உணர்ந்து தமிழீழம் உருவாகும். அதன் சின்னமான புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபையில் பறக்கும்.

அடுத்த வரவு-செலவுத் திட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்குமா? என்பதில் சந்தேகமே எமது கூட்டமைப்பை அழிப்பதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

கொலைப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றன. பட்டியல்கள் குறித்து எங்களுக்கு தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். எங்களை அழித்தொழிப்பதில் கவனமாக இருக்கின்றீர்கள். அதற்காக தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை காட்டிக்கொடுக்க முடியாது.

ரவிராஜை படுகொலை செய்த போது தென்னிலங்கை திரண்டெழுந்தது. மக்கள் சமாதானத்தை விரும்புகின்ற போது அரசாங்கம் யுத்தத்தை நோக்கி பயணிக்கின்றது. இது அபத்தமானது படையினர்கள் கொலை செய்யப்படும் போது ஓரிரு தடவை அஞ்சலி செலுத்துவீர்கள் அவ்வளவுதான். ஆனால் படையினரின் குடும்பங்கள் காலா காலாமாக துன்பப்படுகின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தால் நிலைமை மோமடைந்திருக்காது. அரசியல் கட்சியை ஆரம்பிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் ஆயுதங்களை கையிலேந்தி கொண்டு அரசியல் நடத்த முடியாது. படையினர் மேற்கொண்ட தாக்குதலின் எதிரொலியாகவே படையினரும் கொல்லப்படுகின்றனர். அதற்காக மனம் வருந்துகின்றேன். விக்னேஸ்வரன் கொலைக்குப் பின்னரே தாக்குதல் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்தன.

ஏ-9 வீதியை மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்பதை அமரர் ரவிராஜின் இறுதிக் கிரியைக்கு யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் கண்டறிந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது பல கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனையிறவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். இவ்வாறான தாக்குதல்களை புலிகள் மேற்கொள்வதற்கு நீங்கள் கூறுவது போல பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்றனரா? அல்லது வரி அறவிட்டனரா? ஒன்றுமே இல்லாமலே ஆனையிறவு கைப்பற்றப்பட்டது. ஆனால் ஏ-9 வீதியில் செல்கின்ற மக்களிடம் புலிகள் இலஞ்சம் பெறுகின்றனர் என்று கூறி ஏ-9 வீதியை மூடிவிட்டு ஆனையிறவை மீண்டும் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள்.

ஏ-9 வீதி மூடப்பட்டதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரும் துன்பப்படுகின்றனர். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, புலிகள் மக்களிடம் இலஞ்சம் பெறவில்லை என்றால் நீங்கள் இங்கு வருவதற்கு வரி அறவிட வேண்டும் என்றார். இதற்கு சிவாஜிலிங்கம் பதிலளிக்கையில், எங்களுக்கு தெரியும் எங்களை விரட்டுவதற்கே நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். அடுத்த வரவு - செலவு திட்டத்தின்போது நாம் இருக்கின்றோமோ தெரியாது. ஆனால் எங்களை விரட்ட முடியாது என்பதனால் உங்களுடைய படுகொலைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

ஏ-9 வீதியை திறப்பதன் மூலமாகவே சமாதானத்தை ஏற்படுத்த முடியும். அதுவே வழி. அதற்கு பின்னர் திகதியை ஒதுக்கி பேச்சை ஆரம்பியுங்கள் என்றுதான் கோருகின்றோம். அகதிகளாகி மரநிழலில் வாழ்கின்ற மக்கள் மீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் படையினர் நடத்துகின்றனர். நீங்கள் சிந்திப்பது போல யுத்தத்திற்கு தயார் என்றால் நாடு சின்னாபின்னமாகும். அந்த யுத்தத்தில் சகல இன மக்களும் பாதிக்கப்படுவார்கள். வரவு - செலவு திட்டத்தின் மூலமாக தீவு சுபீட்மடைய வேண்டுமாயின் ஏ-9 வீதி திறக்கப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஆயுதங்களை களைந்து தீர்வொன்று ஏற்பட்டால் அந்த தீர்வை அரசாங்கம் மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாடாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் இன்மையினால் அங்கு கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை அராங்கத்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கும். அடுத்த வரவு - செலவு திட்டத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் போகலாம். ஆனால் ஏ-9 வீதியை திறக்காமல் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.

-வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் முகம் காட்டப்படுகிறது

அடுத்த வருடத்திற்கு உரிய வரவு செலவுத்திட் டத்தில், சென்ற ஆண்டை விட அதிக நிதி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பதவியை யும் வகிக்கும் நாட்டின் உயர் தலைவரான ஜனாதிபதியே வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்திருக்கிறார்.

இந்த வருடத்துக்கான பாதுகாப்புச் செலவுகளுக்கு 96.21 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த வருடத்துக்கான 2007ஆண்டுக்குரிய பாதுகாப் புத்துறைக்கான உத்தேச நிதி ஒதுக்கீடு 139.55 பில்லி யன் ரூபாவாகும். அதாவது 43.34 பில்லியன் ரூபா அதி கம்.

சமாதானப் பேச்சுக்கள், போர்நிறுத்த ஒப்பந்தம் என்ற பின்புலங்களின் மத்தியில் உத்தேச பாதுகாப்புச் செலவி னம் 45 சத வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையாகவே இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு காணவேண்டும் என்பதில் மனமார்ந்த, விசுவாச மான, விருப்பம் அரசுக்கும் அதன் தலைவருக்கும் இருக் குமாயின், அவர் பாதுகாப்புச் செலவை 45 சதவீதத்தால் அதிகரிக்க நினைத்திருக்க முடியாது; அல்லது ஒப்புதல் அளித்திருக்கமுடியாது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 வீதமாக உயர்ந் திருப்பதாக பெருமிதம் அடைந்திருக்கும் ஜனாதிபதி நிதி அமைச்சர் இந்த வருட இறுதியில் இன்னும் ஓரிரு மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 17.1 சத வீதமாக உயரும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருப்பதைக் கணக்கில் எடுத்ததாக இல்லை.

மொத்தத்தில் அடுத்த வருடத்துக்கான வரவு செல வுத் திட்ட யோசனை மக்கள் நலனோம்பும், அவர்களின் வாழ்கைச் செலவு சுமையை நாளாந்த வாழ்க்கையின் பளுவை குறைப்பதில் கவனம் செலுத்துவதை விட பாதுகாப்புச் செலவை உயர்த்துவதிலேயே அதிகமாக ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வெட்ட வெளிச்சமான உண்மையை நாடாளு மன்றத்தில் மறுத்துரைக்க முனைந்திருக்கிறார் சபை முதல்வரும் அரசாங்க சமாதானப் பேச்சுக்குழுவின் தலைவருமான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

பாதுகாப்புத்துறைக்கே ஏனைய துறைகளை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டு அவர் ஆற்றிய உரையில், மீண்டும் போரைத் தொடங்குவதற்காக அவ்வாறு செய்யவில்லை என்று சப்புக்கட்டியிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற் காகவே இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர மீண்டும் யுத்தத்தைத் தொடங்கு வதற்காக அல்ல.

யுத்தம் ஒன்றைத் தொடங்கும் திட்டம் அரசிடம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்ப் பதே அரசின் நோக்கம்.

இவ்வாறு ஒன்றுக்கு மற்றது ஒத்திணையாத, முரண் பாடான, முலாம் பூசப்பட்ட கருத்தை அவர் முன்வைத் துள்ளார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பயங்கரவாதி கள் என்று குறிப்பிடுவது யாரை? இனப்பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு காண்பதற்கான சமாதானப் பேச்சுக் களில் கலந்துகொண்ட, இனியும் கலந்துகொள்ள வேண் டும் என்று தாம் விரும்பும் தமிழீழ விடுதலைப் புலிகளை அன்றி, வேறெவரையும் அல்ல! இதனை பாடசாலை மாணவனால் கூட இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

இத்தகைய பின்னணியில்

கடந்த நான்கரை வருடங்களுக்கு மேலாக நடை முறையில் இருந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயரின் விசேட பிரதி நிதியாக இலங்கைக்கு வந்துள்ள அயர்லாந்தின் முன் னாள் அமைச்சர் போல் மேர்பி கூறியது அதனை ஊர்ஜி தம் செய்யும் வகையில் அமைகிறது.

போர்நிறுத்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது என்று அவர் கூறியிருப்பது மிகப் பொருத்தமான கூற்று உண்மையான நிலைப்பாடு.

அவ்வாறிருக்க, பேச்சு மூலம் பிரச்சினையைத் தீர்ப் பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் கூறுவதை உண்மையான சரியான வழிமுறை என்று எவ்வாறு கொள்வது?

சம்பந்தப்பட்ட இரு தரப்புகளிடையேயும் பரஸ்பர நம்பிக்கை இல்லை. அதனைக் கட்டி வளர்த்தாலே சமா தானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று அவர் முன்வைத்திருக்கும் கருத்து அமைச்சரிட மும் அரசாங்கத்திடமும் இல்லை என்பது மிகத் தெளிவாகி றது.

சமாதானம் மலரவேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருந்துவிட்டால், அது நிச்சயம் சித்திக் கும் என்று அயர்லாந்துப் பிரச்சினையில் தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு போல் மேர்பி கூறியிருக்கின் றார்.

இதனைத் தாம் விடுதலைப் புலிகள் தரப்பிடம் கூறிய தாக அவர் சொன்னபோதிலும் கூட, அரசாங்கத்துக்கும் இது சம அளவில் அல்லது பரிமாணத்தில் பொருந்தும்.

சமாதானம் மலரவேண்டும்; போர் ஒழியவேண்டும் என்பதில் இதய சுத்தியுடனான விருப்பம் இருக்குமானால், பாதுகாப்புச் செலவுக்கு அளவுக்கதிகமான நிதியை, அது வும் வெளிநாட்டுக் கடனில் தங்கி நிற்கும் ஓர் நாட்டின் அரசு, பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்குவது ஏன்? அதற்கான தேவை உண்டு என்று எந்த வகைக் காரணத் தைக் கூறினும் ஏற்புடையதல்ல.

பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க அரசு உத் தேசிக்கிறது என்ற நிலை அதன் போர்முகத்தையே வெளிக் காட்டுகிறது.!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.