Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்

Featured Replies

கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம் APR 11, 2015 | 1:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

TNA-press-300x200.jpgசிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், கையெழுத்திட்டு, சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“ 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியனவே அந்தக் கட்சிகளாகும்.

அதன்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க, அடுத்து அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக தெரிவானது.

இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் சிறிலங்கா அதிபர் திகழ்கின்றார்.

இந்த அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 7 ஆசனங்களைக் கொண்ட ஜனநாயக தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஐக்கிய தேசிய கட்சி யில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான எந்த உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது.

இதுவே தெளிவான சட்ட நிலையாகும். எமது நாட்டிலும் கொமன்வெல்த் அமைப்பிலும் நாடாளுமன்ற மரபுகளின் படி இதுவே நிலையாகும்.

அதன் அடிப்படையில், தற்போது நாடாளுமன்றில் 14 ஆசனங்களைக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சியே எதிர்கட்சியாக இருக்க தகுதியுடையது.

எனவே இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்” என்று சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/11/news/5135

ஆசை யாரை விட்டது? சிங்களவன் விரும்பியிருந்தால் எப்போதே வழங்கியிருப்பான்.உங்கள் நடவடிக்கைகள் யாவும் தமிழனின் போராட்டம் சிறுக்கப்பட்டு இலங்கைக்குள்ளேயே என்ற ரணிலின் கனவை பூர்த்தி செய்யும் படியாகிவிடக்கூடாது

 

  • தொடங்கியவர்
வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அரசுடன் இணைந்து செயற்படுவோம்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 02:16.32 AM GMT ]
cv-vikki.jpg
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை கட்டம் கட்டமாக அகற்றினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

 

இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக இன்றைய சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றி படையினரை வெளியேற்றுவதாக உறுதியான வாக்குறுதியொன்றை வழங்கினால், அந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்ததாகவும், இதனால் வடக்கு வாழ் தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyESVSUkv1A.html#

 

எதிர்கட்சி பதவிக்கு துடிக்கும் சப்பந்தன்;அரசுடன் இணைய நிற்கும் முதலமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி பதவிக்கு துடிக்கும் சப்பந்தன்;அரசுடன் இணைய நிற்கும் முதலமைச்சர்
ஐக்கிய இலங்கைக்குள் அரைகுறை தீர்வை திணிக்க துடிக்கும் அமேரிக்கா
  • தொடங்கியவர்

ஐக்கிய இலங்கைக்குள் அரைகுறை தீர்வை திணிக்க துடிக்கும் அமேரிக்கா

 

அதைக்கூட சிங்களம் கொடுக்காதே!

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வை சிங்களம் தரப்போவதில்லை. தொடர்ந்து தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு வேட்டைகளை தொடர்கிறது.

  • தொடங்கியவர்
சம்பந்தனிற்கு பதவியா? கொதிக்கிறார் தினேஷ்…

 

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை தமக்கு வழங்­கு­மாறு கோரு­வ­தற்கு கூட்­டமைப்­புக்கு எந்த தகு­தியும் இல்லை என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன குமுறியிருக்கிறார்.

தேசிய நிறைவேற்றுசபையில் அங்கம் வகித்து, ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்து எப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்க முடியும் என்றும் கேட்டுள்ளார்.

எந்­த­வி­த­மான அடிப்­படைக் கார­ணங்­களும் இன்றி தமது கட்­சிக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வழங்­கு­மாறு இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி கோரி­யுள்­ளது. 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் முடி­வுகள் மற்றும் அர­சியல் கட்­சிகள் குறித்து சம்­மந்தன் பேசு­வா­ராயின் 46 உறுப்­பி­னர்­க­ளுடன் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்­றதை எவ்­வாறு அனு­ம­தித்தார் என்­ப­தனை விளக்­கு­வாரா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி கோரிக்கை விடுத்­துள்ள நிலையில் அது தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தமி­ழ­ரசு கட்­சிக்கே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரி கடந்­த­வாரம் சபா­நா­ய­க­ருக்கு கடி­தமும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதுபற்றி முன்னாள் அமைச்­சரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன மேலும் குறிப்­பி­டு­கையில்-

“எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யா­னது எமது தரப்­புக்கு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் நாங்கள் இருக்­கின்றோம். காரணம் எமது தரப்­புக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று 70 க்கும் மேற்­பட்ட எம். பி. க்கள் கையொப்பம் இட்டு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். எனவே சபா­நா­ய­கரின் தீர்ப்­புக்­காக நாங்கள் காத்­தி­ருக்­கின்றோம்.

இதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி கடந்­த­வாரம் சபா­நா­ய­க­ருக்கு கடி­தமும் அனுப்­பி­யுள்­ளது.

இல­ஙகை தமி­ழ­ரசுக் கட்சி எவ்­வி­த­மான அடிப்­ப­டை­யு­மின்றி இவ்­வாறு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி விவ­கா­ரத்தில் சபா­நா­ய­க­ருக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ளது என்­ப­தனை தெரி­விக்­க­வேண்டும்.

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் மற்றும் அதில் போட்­டி­யிட்ட கட்­சிகள் கட்­சி­க­ளுக்கு கிடைத்த ஆச­னங்­களின் கட்­ட­மைப்பு என்­ப­ன­வற்றை சுட்­டிக்­காட்டி இலங்கை தமி­ழ­ரசு கட்சி எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோரி­யுள்­ளது.

அவ்­வாறு 2010 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலை சுட்­டிக்­காட்டும் கூட்­ட­மைப்பு 46 எம்.பி. க்களுடன் இருக்­கின்ற ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்­றதை எவ்­வாறு அனு­ம­தித்­தது? என்று கேட்­கின்றோம்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்தே தற்­போ­தைய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மன்றி புதிய அர­சாங்­கத்தின் உயர்ந்த அமைப்­பான தேசிய நிறை­வேற்று சபையில் தமிழ்க் கூட்­ட­மைப்பு அங்கம் வகி­கின்­றது.

அவ்­வாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் தேசிய நிறை­வேற்றுச் சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அங்கம் வகிக்­கின்ற நிலையில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை தமக்கு வழங்­கு­மாறு கோரு­வ­தற்கு கூட்­ட­மைப்­புக்கு என்ன தகுதி இருக்­கின்­றது என்று வின­வு­கின்றோம்.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி விட­யத்தில் காணப்­ப­டு­கின்ற நிலை­மையை குழப்­பு­வ­தற்கே சம்­மந்தன் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். மீண்டும் ஒரு செய்தியை உலகுக்கு காட்டுவதற்காக இந்த செயற்பாட்டை அவர் மேற்கொள்கின்றார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று சிரேஷ்ட அரசியல்வாதியான ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது” என்றார்.

http://www.jvpnews.com/srilanka/105343.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.