Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கி.பி 2050 இல் என்னவாகும் சித்திரை புத்தாண்டு

Recommended Posts

இன்னொரு சாதாரண நாள் போல் இந்த புத்தாண்டு தினமும் தேய்ந்து கொண்டிருக்கிறது.எனது கிராமத்தை பிரிந்து தொலை தூரத்தில் இருப்பதனாலோ அல்லது வேறு காரணத்தினாலோ இந்த நாளுடன் என்னால் இலகுவில் ஒட்டி கொள்ள முடிவதில்லை.

என்னை பொறுத்தளவில் நான் நன்கு அனுபவித்த சித்திரை புத்தாண்டு கி.பி.2000 உடன் முடிந்து போனது.அதன் பின் நான் கண்ட சித்திரைக்களெல்லாம் தேய்முகமாகவே இருந்திருக்கிறது கிராமங்களிலும் நகரங்களிலும்.இப்போது வாணவேடிக்கைகளும் இல்லை வாணலியில் வறுத்தெடுத்த பட்சணங்களும் இல்லை.எல்லாமே ஒரு இயந்திரத்தனத்துடன் நகர்கிறது.

கிராமங்கள் முற்றுகைக்கு உட்பட்டிருந்த அந்த நாட்களில் அண்மையில் இருக்கும் இராணுவ முகாம்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ சென்று இந்த புத்தாண்டு நாட்களில் வெடி சுடுவதக்கான அனுமதியை பெற்று கொள்வார்கள் கிராமத்து பெரிசுகள்.பிறகென்ன விடிய விடிய வெடி போடுவதிலேயே சிறிசுகளின் மகிழ்ச்சி பிரவகிக்கும்.

புத்தாண்டுக்கான ஆயத்தம் என்பது சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னே தொடங்கி விடும்.மா இடித்தல்,மிளகாய் வறுத்தல் என்பவற்றில் பெண்மணிகள் நேரங்களை தொலைக்க ஆண்களின் நேரம் வேலி அடைத்தல்,விறகு கொத்துதல் போன்றவற்றில் கழியும்.

பண்டிகைக்கான ஆடைத்தேர்வுகளுக்காய் மிகவும் நெரிசல் பட்டு நகருக்கு சென்ற பயணங்களின் நினைவுகள் இப்போதும் இனிக்கிறது.வேலை கிடைத்து வந்த முதல் புத்தாண்டில் நான் வாங்கிய ஊதா நிற சட்டையும் பிறகொரு புத்தாண்டில் இன்று முகவரி தெரியாமல் போன ஒருத்தி வாங்கி தந்த நீல நிற சட்டையும் நான் எழுதி பிரசுரிக்காமல் போன அமரகாவியம் போல இன்னும் மிஞ்சி கிடக்குது இந்த நெஞ்சுக்குள்ளே.

அம்மாக்களும் ஆச்சிகளும் மாமிகளும் நெருப்பில் மூழ்கி சுட்டெடுத்த பட்சணங்கள் பலவற்றின் பெயர் கூட இந்த தலைமுறைக்கு தெரியாது போய் விட்டது.அடுக்கு பானைக்குள் அமுது போல இருக்கும் சீனிப்பலகாரம்,போத்தல்கள் நிறைய அடைத்து வைத்து சாப்பிடும் லட்டுக்கள்,முறுக்குகள் விளையாட்டு போட்டிகளுக்கும் திரைப்பட திடல்களுக்கும் உடன் வரும் சோகிகள் என்று இன்னும் எத்தனையோ.இன்று அவற்றின் இடத்தில் கேக் மற்றும் ஐஸ் கிரீம் வகையறாக்கள். புத்தாண்டின் முதல் ஆகாரம் சர்க்கரைப்பொங்கல் என்பது எமது பகுதியில் எழுதப்படாத விதியாய் இருந்தது அந்நாட்களில்.

மருத்துநீர் வைத்து குளித்து கோயில் போய் பிறகு விருந்துண்டு அப்பால் தோப்புகளுக்கு மாமாக்களுடன் போய் வந்து வீட்டில் கால் வைக்கும் போது யாரோ உறவுக்கார பெண்ணொருத்தி வந்திருப்பாள் வீட்டுக்கு.பெரிசுகள் பல கதைகள் பேச சிறிசுகளின் ஆடல்களில் வீடும் காணியும் அதிரும்.நன்கு மூக்கு முட்ட சாப்பிட்டு மாலைகருக்கலில் வயிற்று பிசைதலுடன் தோப்புகளுக்கு அப்பால் இருக்கும் புதர்களுக்குள் பாரம் இறக்க ஒதுங்கும் போது(அது இன்றைய பாஷையில் open defecation) இந்த சித்திரை தினமும் வராதா போன்றிருக்கும்.

அன்றைய இரவு குடிகார மாமாக்களின் பாட்டுக்கச்சேரிகளுடன் நிறையும்.அதற்கு பின்னரான பதினைந்து நாட்களும் ஏறக்குறைய பள்ளிகள் விடுமுறையிலிருந்து உயிர்ப்பு பெறும் வரை விளையாட்டு போட்டிகள்,நாடகங்கள்,கூத்துக்கள்,மகுடியாடல்கள் போன்ற நிகழ்வுகளில் நாட்கள் பறக்கும்.இடையில் ஒரு நாளில் குடும்பத்தின் மூத்த உறவு வீட்டில் இருக்கும் அத்தனை இளைய உறவுகளுக்கும் விருந்தளிக்கும்.எங்கள் ஆச்சி மாமாக்களுக்கும் சித்திகளுக்கும் எங்களுக்கும் இன்னும் வேறு உறவுகளுக்கும் தந்த விருந்தின் சுவை இன்னும் மறக்கவேயில்லை..

பள்ளிக்கு போகும் போது விழிநீர் வடியும் இந்த சித்திரையாளை விட்டு போகிறோம் என்று.ஆனாலும் சித்திரை நினைவுகளும் பகிர்வுகளும் மே பதினைந்து வரை நீடித்திருக்கும்.கண்ணகை அம்மன் சடங்குக்கு காப்பு கட்டும் போதுதான் சித்திரை புத்தாண்டின் கதையாடல்கள் ஓயும்.

இன்று உலக்கை உளியாகி பிறகும் தேய்ந்து சின்ன ஆணியாகி போனது போல ஆகி விட்டது இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.போரின் தாக்கம்,நவீன வாழ்க்கை என்ற போர்வையில் எமது மரபுகளை தொலைத்து விட்டு திரியும் நிர்வாண மனிதர்களாய் போய் விட்டோம்.இடையில் கருணாநிதி போன்ற மெத்த படித்த “நியுட்டன்களின்” விவாதம் வேறு.இது தமிழ் புத்தாண்டல்ல என்று.அந்த கறுப்பு கண்ணாடியை உடைக்க வேணும் போல ஒரு கடுப்பு எனக்குள்.

இன்று தொலைக்காட்சி பெட்டிகளுள்ளும் செல்போன் திரைகளுள்ளும் இந்த புத்தாண்டு கொலை செய்யப்பட்டுள்ளது.யாரும் யார் வீட்டுக்கும் போவதுமில்லை.யாரையும் வரவேற்ப்பதுமில்லை.இந்தநாட்களில் தொலைக்காட்சி நிலையங்களுக்கும் அலைபேசி கோபுரங்களுக்கும் விடுமுறை அளித்தால் நல்லம் போல் தோன்றுகிறது.

எமது நாளைய சந்ததி என்னவாகும் என்ற கவலையுடன் இந்த கட்டுரை நிறைகிறது.அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-லலிதாவின் பக்கங்கள்--

Link : https://m.facebook.com/photo.php?fbid=421591204680471&id=100004887851294&set=a.144139845758943.1073741827.100004887851294&refid=28&_ft_=qid.6138008943970822191%3Amf_story_key.5059766892209514272&__tn__=E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி விஷ்வா...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.