Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட வீமன்காமத்தில் பிள்ளையார் ஆலயத்தைக் காணவில்லை!

Featured Replies

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் தற்போது மக்கள் மீள் குடியேற்றத்திற்கு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மக்கள் தமது குல தெய்வமான பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

veemankamam_pillaiyar_01.png

குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும் அமைந்துள்ளது. ஆனாலும் கூட இந்தப் பகுதி வீமன்காமம் பகுதியின் வடக்குப் புறத்தில் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் அமைந்துள்ளன.

வீமன்காமம் வடக்கு தெற்கு பகுதியில் தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்கள் தமது காணிகளுக்கு நேர் எதிரே காணப்பட்ட குமாரத்தி பள்ளத்தில் அமைந்து இருந்த குமார கோவில் என அழைக்கப்படும் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள அரச மரத்துடன் தற்போது பாரிய பௌத்த கோவில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடை பெற்ற வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமது பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தமது கோவில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றார்கள்.

http://www.pathivu.com/news/39300/57//d,article_full.aspx

சில வேளைகளில் இடம் பெயர்ந்திருப்பார் போல....

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்திருப்பார்.......விகிதாசாரப்படி பார்த்தால் சிறிலங்கா புத்தரை விட சிறிலங்கா சைவசாமிமார் புலம்பெயர்ந்தது அதிகம்.....புத்தர் இராணுவத்தின் துணையுடன் இடம்பெயர்ந்தவர்...ஆனால் எங்கன்ட சாமி ஜனநாயக முறைப்படி மக்களின் விருப்படி சட்டரிதியாக விசா(பக்தி விசா எண் 777) எடுத்து புலம்பெயர்ந்தவர்.சோ எங்கன்ட சாமி த கிரேட்...:D

  • 1 year later...
On 17/04/2015 at 5:18 PM, sudaravan said:

veemankamam_pillaiyar_01.png
தமது பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தமது கோவில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றார்கள்.

இந்த படத்தில் வலது பக்கம் தெரிவது கோவிலின் மடைப்பள்ளி. வசதியாக கோவிலை எடுக்காமல் விட்டு விட்டார்கள் போல.  

On 17/04/2015 at 5:18 PM, sudaravan said:

குமார கோவில் என அழைக்கப்படும் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில்

அட பாவி,  குமார கோவில் என்பது குமாரவேள் என்று அழைக்கப்படும் முருகனின் ஆலயம். இந்த அரச மரம் முன்பே இருந்தது. இதுக்கு கீழ பிள்ளையார் முந்தி குந்தி இருந்தாரா என்று எனக்கு ஞாபகமில்லை. எனது நண்பனின்  வீடு ஒன்று  அருகிலிருந்தது, கேட்டுப் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு நக்கலும் நளினமும்.தின்டது செமிக்க.அங்குள்ள மக்களுக்கு எரியிற வீட்டில் பிடுங்கிறது லாபம் என்ற நிலை.நியாயம் அனியாயம் என்று பார்த்தால் கதை வேறு தான்.

7 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு நக்கலும் நளினமும்.தின்டது செமிக்க.அங்குள்ள மக்களுக்கு எரியிற வீட்டில் பிடுங்கிறது லாபம் என்ற நிலை.நியாயம் அனியாயம் என்று பார்த்தால் கதை வேறு தான்.

நான் இது பொய் என்றால் அரச ஆதரவாளன், அல்லது இராணுவத்தின் கை ஆள் என்று சொல்வார்கள். எனக்கு தெரிய 7 கோவில்கள், 3 தேவாலயங்கள் அத்திவாரத்துடன் இருந்த இடம் தெரியாம புடுங்கி எறியப்பட்டுள்ளது. அதைப்பற்றி எவரும் மூச்சே விடுகிறார்கள் இல்லை. ஆனால் இருக்கும் கோவிலை இல்லை என்று சொல்பவர்கள் மீதுதான் எனது கோபம். ஏன் இந்த பொய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நான் இது பொய் என்றால் அரச ஆதரவாளன், அல்லது இராணுவத்தின் கை ஆள் என்று சொல்வார்கள். எனக்கு தெரிய 7 கோவில்கள், 3 தேவாலயங்கள் அத்திவாரத்துடன் இருந்த இடம் தெரியாம புடுங்கி எறியப்பட்டுள்ளது. அதைப்பற்றி எவரும் மூச்சே விடுகிறார்கள் இல்லை. ஆனால் இருக்கும் கோவிலை இல்லை என்று சொல்பவர்கள் மீதுதான் எனது கோபம். ஏன் இந்த பொய்கள்.

எனக்கு வீமன்காமம் எங்கு இருக்குது என்றே தெரியாது ....ஆனாலும் ஒரு பிள்ளையார் கோவில் அழிக்கப்பட்டுவிட்டது என்றவுடன் என்னை அறியாமலயே ஒரு வித உணர்வு ஏற்படுகிறது எமது மண்ணிலிருந்த பிள்ளையாரை இராணுவ பலத்துடன் தூக்கிபோட்டார்கள் என்று.....அத்துடன் வீமன்காமம் பிள்ளையார் கோவிலை நன்றாக அறிந்தவர்கள் எல்லோரும் இடம்பெய்ர்ந்திருப்பார்கள் அல்லது புலம்பெயர்ந்திருப்பார்கள் மற்றும் சிறு வயதில் அந்த இடத்தை விட்டு வந்திருப்பார்கள்...ஐந்து வயதில் கண்ட கோவிலை முப்பதைந்து வருடங்களின் பின்பு போய் பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாமல் இருக்க கூடும்.....7 கோவில்கள் 3 தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது உண்மை என்றமையால் இதுவும் நடந்திருக்கலாம் என்று அந்த மக்கள் நினைத்திருக்கலாம்...

ஒரு கோவிலின் உண்மைக்காக குரல் கொடுக்கும் நாம் 7 கோவில்கள் 3 தேவாலய‌ங்களின் அழிவுக்கு கருத்து எழுதவில்லை என்பது கவலையளிக்கின்றது......

குமார கோவில்.

1990 இல் கோவிலை புதுப்பிப்பதற்காக மூலஸ்தானத்தை வெளியே எடுத்து பாலஸ்தானம் செய்து வைத்துவிட்டு கோவிலை இடித்து புதிதாக கட்டிக்கொண்டிருந்த வேலையிலேயே இவ் இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு தெரியும் பாதிக் கட்டிடம் இடிபடவில்லை. மாறாக கடடப்பட்டதே அவ்வளவுதானாம். இன்று போனபோது அங்கே அருகில் வசித்த ஒருவரும் வந்திருந்தார் - அவர் சொன்ன தகவல்கள்தான் இவை.

பத்தைக்குள்ள ஆதிமூலமும் கருவறையும் இருக்கு. ஆனால் நோ முருகன்.

படங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் எடுத்தது. (இனிமேல் செக் பண்ணலாம் - பாட்டரி மாத்திட்டேன்)
 
13557825_1341851439161529_69773309242106

13592361_1341851592494847_63490649568185

13600071_1341851325828207_88310767151649

13600112_1341852039161469_35979478320165

13606931_1341852075828132_16401726878421

13501749_1341852252494781_86217836119342

13557663_1341852709161402_58630069282972

13566919_1341852635828076_71891883387526

13590287_1341852705828069_21685471701317

13615011_1341852832494723_50944266422049

ஜீவன். இணைப்புகளுக்கு நன்றி.
(திகதியை பரிசீலித்து இவற்றை நம்ப வேண்டிய தேவை இல்லை)

அந்த ஆலமரத்தின் கீழ் திரிசூலமும் (வைரவரும்), பிள்ளையாரும் எதிர் எதிர்ப்பக்கங்களில் இருந்தாக ஒருவர் இன்று கூறினார். மக்கள் கற்பூரம் ஏற்றி சுற்றி வழிபட்டது உண்டாம். அதையும் விசாரித்து உறுதி செய்தால் நல்லது.

4 minutes ago, போல் said:

உண்மை, இங்கு ஒரு வைரவர் கோவிலும் அருகில் இருந்தது. ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. தவிர இன்று படம் எடுப்பதிலும் கெடுபிடிகள் இருந்தது. அங்கு வந்திருந்தவர் என்னை தெரியும் தனது சொந்தம் என்றதால் விட்டார்கள். இவ்விடம் கையளிக்கப்பட்ட அடுத்தநாள் இவ்வாறான கெடுபிடிகள் இருக்கவில்லை. சுற்றிவர உடைக்கப்படாத வீடுகளில் போலீஸ் உள்ளது. அவர்கள் காணியை பார்க்க மட்டும் மக்களை அனுமதிக்கிறார்கள். மக்கள் காணியை திருத்தவோ, வேலி போடவோ அனுமதிக்கிறார்கள் இல்லை.  
 
அநேகமாக அது மடைப்பள்ளி அருகே உள்ள மரமாக இருக்கலாம் - படம் 6. இவர்கள் கட்டிய புத்தர் கோவில் ஆதிமூலத்துக்கு நேர் எதிரே உள்ளது. 
புத்த கோவிலினுள் இருக்கும் அரசமரம் வயதில் குறைந்ததாகவுள்ளது.

7 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை, இங்கு ஒரு வைரவர் கோவிலும் அருகில் இருந்தது. ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. தவிர இன்று படம் எடுப்பதிலும் கெடுபிடிகள் இருந்தது. அங்கு வந்திருந்தவர் என்னை தெரியும் தனது சொந்தம் என்றதால் விட்டார்கள். இவ்விடம் கையளிக்கப்பட்ட அடுத்தநாள் இவ்வாறான கெடுபிடிகள் இருக்கவில்லை. சுற்றிவர உடைக்கப்படாத வீடுகளில் போலீஸ் உள்ளது. அவர்கள் காணியை பார்க்க மட்டும் மக்களை அனுமதிக்கிறார்கள். மக்கள் காணியை திருத்தவோ, வேலி போடவோ அனுமதிக்கிறார்கள் இல்லை.  
 
நன்றி ஜீவன்!
வெற்றிகரமாக தொடரட்டும் உங்கள் அடையாளம் காணும் முயற்சிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.