Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது?

Featured Replies

தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? 

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். ஊழல் மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே.

அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? ‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சே நாடு கடத்தப்படக் கூடும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் வேறு வழியில்லாமல் இன்று பசில் ராஜபக்சே கொழும்பு திரும்பியுள்ளார். பிடிவாரண்ட் நிலுவையில் இருப்பதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/basil-rajapaksa-faces-imminent-threat-arrest-225160.html

  • தொடங்கியவர்

பஸில் ராஜபக்ஷ வந்தடைந்தார்
 
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/144398#sthash.Djyqz5cz.dpuf

நான் ஏன் வந்தேன்: பஸில்
 
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும்  (வி.ஐ.பி), வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச்சேர்ந்த பிரபல்யமானவர் என்றபோதிலும் அவரை வரவேற்பதற்கு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/144408#sthash.XTNrhMgB.dpuf

தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? 

தப்பியோடியவன் எப்படித்தான் திரும்பி வருவான்? 

அவசரமா போனவர் திரும்பி வந்தார் எண்டு போடுங்கோ... உதுகளை வாசிச்சு கருத்தெழுத ஒரு கோட்டமே இருக்கம் மறந்திடாதிங்க.

புதிய அரசு உதரவாதமளித்தமையால் தான் பசில் திரும்பி வந்தார்.சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் இருக்கும் மகிந்த குடும்பத்தினரை கைது செய்து புதிய அரசால் ஆட்சி நடத்தமுடியாது.

நாடு திரும்பினார் பசில் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெளியார் நுழையத் தடை APR 21, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

basil-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, அமெரிக்காவுக்குச் சென்ற அவர், இன்று பிற்பகல் 1.45 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த  எமிரேட்ஸ் விமானம் மூலம், நாடு திரும்பினார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் குறித்து இவர் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில்,  விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, பசில் ராஜபக்சவை வரவேற்பதற்கான சுமார் 1000 வரையான ஆதரவாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளியே ஒன்று கூடியுள்ளனர்.

Aiport-road.jpg

அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் விருந்தினர் வரவேற்பு பகுதி இன்று மதியத்துடன் மூடப்பட்டுள்ளது.

அதேவேளை விமான நிலைய வீதிகளில் தடுப்புகளுடன் சிறிலங்கா காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய பசில் ராஜபக்ச, வெளியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Basil-1.jpg

Basil-3.jpgbasil.jpgbasil-2.jpg

இதன்போது சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற வகையில்  குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்குப் பதிலளிக்கவே நாடு திரும்பியதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, பசில் ராஜபக்சவை வரவேற்க முன்னைய அரசாங்கத்தின் பிரமுகர்கள் எவரும் விமான நிலையத்துக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/21/news/5406

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.