Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா

Featured Replies

மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா APR 22, 2015 | 3:01by கார்வண்ணன்in செய்திகள்

gotabhaya-rajapakse-300x200.jpgநாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும்.

ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும்.

அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்.

மகிந்த ராஜபக்சவை இலங்கையர்கள் விரும்புகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவருக்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஒரு பக்கத்தில் பிரதமராக இருந்து ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை நடத்துகிறார். இன்னொரு பக்கத்தில், சந்திரிகா குமாரதங்க, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் அரசாங்கத்துக்குள் அதிகாரம் செலுத்துகின்றனர்.

எனினும், அரசாங்கம் செயற்படு நிலையில் இல்லை என்று மக்கள் உணர்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானத்துறையில் பணியாற்றிய ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து போயுள்ளனர்.

இதேநிலையை நீடிக்க அனுமதித்தால்,  ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சரிந்துவிடும். அது மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நான் மட்டும் வெற்றி கொள்ளவில்லை. முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்யாதவாறு கொழும்புக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தேன்.

தானே போரை வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா இந்தியாவில் தெரிவித்தார். ஆனால், அவர் இராணுவத்தில் 30 ஆண்டுகள் இருந்தார். ஆனால் அப்போது போரை வெற்றிகொள்ளத் தவறியிருந்தார்.

நாங்கள் (ராஜபக்ச சகோதரர்கள்) பதவிக்கு வந்த பின்னரே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.  அதற்கும் கூட 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சந்திரிகா குமாரதுங்க தானே 75 வீதமான போரை வெற்றி கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் அவரது பதவிக் காலத்தில், எந்த பிரதான வெற்றிகளும் அடையப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/04/22/news/5424

 

அப்பு கோத்தா , நீங்கள் ஒன்றும் கிழிக்கவில்லை .... என்ன எல்லாநாடுகளும் ஒன்று சேர்ந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தினீர்கள் அவ்வளவுதான் ..... இந்தியா புலிகளின் ஆயுத விநியோகத்தை தடுத்திராவிட்டால் தெரிந்து இருக்கும் புலிகளின் பதிலடி எப்படி இருந்திருக்கும் என்று .... இன்னும் முடியவில்லை உன் வாழ்நாளில் அதனையும் பார்ப்பாய் .....

  • தொடங்கியவர்
கோத்தபாயாவை ஒரு தமிழனாக வெறுக்கும் நான் சிறிலங்காவின் சிங்கள பிரஜையாகவிருந்தால் தலை வணங்குவேன்
 
  அவரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு இனப்படுகொலையையும் ஒரு புறத்தில் வைத்து விட்டு நாட்டுக்கு என்ன செய்தார்? நாடு பாதுகாப்பில் தன்னிறைவடைந்துள்ளது. நாட்டின் எந்த பகுதிக்கும் சிங்களவரால் செல்ல முடியும். உலக நாடுகளின் தராதரத்துக்கு நாட்டின் சகல நிலைகளும் உயர்த்தப்பட்டன.ஆனால் மக்களின் நிலையை உயர்த்த முடியவில்லை.இங்கே பாதுகாப்பு என்பது பத்து அடுக்கு என்பதாகும். நாடு பாதுகாப்பு அமைச்சின் செயளாளரால் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு புத்தம் புதிய தொழில் நுட்பங்களோடு கூடிய கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.2009கு பின்னர் ராணுவமும் புலனாய்வாளர்களும் இணைந்து குறைந்தது25 வருட தகவலைத்திரட்டித் தரவேற்றியுள்ளார்கள்.அத்துடன் அனேகமானவை கை ரேகையுடன் கூடிய தரவேற்றங்களாகும்.இது நாட்டிற்கும் உலகிற்கும் அவர் செய்த பாரிய பங்களிப்பாகும். இந்த கணனி மயப்படுத்தப்பட்ட தகவல்கள் தான் விமான நிலைய கைதுக்கு முதற்காரணம். அங்கு நீங்கள் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களில் எத்தனை கடவுச் சீட்டு பெற்றீர்கள் எதற்காக என்று ஆரம்பிக்கப்படுகிறது? உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் போராளிகளாகவிருந்தாலோ அல்லது இள வயது மரணம் சம்பவித்து இருந்தாலோ...அவர்களிடம் விபரம் இருந்தால் அல்லது இல்லாவிட்டாலும் விசாரணையை மேர்கொள்ளுவார்கள் இது சிங்கள முஸ்லீம்  மக்களுக்கும் வழக்கமாக நடை பெறுகின்றது.இப்படியான நிலைக்கு இலங்கையை தரமுயர்த்தியவர் கோத்தபாயா என்பதை யாராலும் மறுக்கமுடியாது
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சகோதரர்களின்... குறிப்பாகக் கோத்தாவின் செயலானது.. புத்த மதத்தின் மீது தீராத 'இரத்தக்கறை' படிய வைத்துள்ளது!

 

அத்துடன் எத்தனையோ தலைமுறைகள் இணங்கி வாழ்ந்த இரு இனங்களுக்கிடையே, நிரந்தரமான பிளவு ஒன்றை வெட்டி வைத்துள்ளது!

 

அத்துடன், சிங்களத்தைத் ' தமிழர்களின் வெளிநாட்டு பணத்தில்' தங்கி வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது!

 

உண்மையில், இந்தப் போரினால் வெற்றியடைந்தவர்கள்.. சில புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே!

 

நாட்டுச் சிங்களவனுக்கும்...நாட்டுப் பொருளாதாரத்துக்கும் ' கோத்தாவும், மகிந்த குடும்பமும்' விட்டுச் செல்வது பல நூற்றாண்டுகளுக்குத் திருப்பிச் செலுத்தவேண்டிய 'கடன் சுமை' மட்டுமே! :icon_mrgreen:  

கோத்தா உண்மையான புத்தனாக இருக்க முடியாது அவ்வளவு இரத்தகறை உள்ளது . ஒரு மனித பிறவி என்று இவனை சொல்ல முடியாது புராணங்களில் வருகின்ற மாதிரி ஒரு அரக்கன் ,
 
ராஜபக்ச அன்கோ இந்த நாட்டினை மொத்தமுமாக சூறையாடுவதட்கு இனவாதத்தை கையில் எடுத்தவன் .
போரினை நடத்தியது உலக நாடுகள் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.