Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகரைக்கு அனுப்பப்பட்ட உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது -BBC சிங்களசேவை

Food supplies sent back from FDL

The security forces in Sri Lanka have sent back food supplies sent to refugees in the LTTE-held areas in the east.

Civil administrators in Batticaloa said the civilians are caught in the increasing fighting in the Vakarai area.

Food and medicine supplies are rapidly running out for nearly 30,000 residents and refugees, they said.

Essential supplies were earlier prevented as the Forward Defence Line (FDL) at Mankerny has not received authorisation though the Defence Ministry authorised District Secretary to provide supplies.

President's pledge

President Mahinda Rajapaksa has promised Tamil National Alliance (TNA) parliamentarians to remove all obstacles, MP P Ariyanethran said.

A group of TNA MPs met President Rajapaksa in Colombo on Thursday.

But the security forces on Friday have returned 10 lorry-loads of supplies provided by the District Secretariat at Cobra junction, officials said.

However the officials were allowed to travel to the FDL at Mankerny.

Sri Lanka Army (SLA) has told civil officers that the supplies were stopped due to security reasons.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...civilians.shtml

வாகரைக்குக் கொண்டு சென்ற அத்தியாவசியப் பொருட்கள் படையினரால் திருப்பியனுப்பு.

மட்டக்களப்பில் இருந்து வாகரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துச்செல்லப்பட்ட அத்தியாவசியபொருட்கள் நாவலடிமுகாமில் வைத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளன. 6 பாரஊர்திகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அணுசரணையுடன் இந்த பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

எனினும் வாகரை பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லை என்ற காரணம் கூறப்பட்டு அந்த பாரஊர்திகள் திருப்பியனுப்பப்பட்டதாக மட்டக்களப்பு செயலக தரப்புகள் தெரிவித்துள்ளன.

-பதிவு

மக்கள் யாழுக்கு விமான மூலம் கொண்டு செல்லும் உணவுப் பொதிகள் படையினரால் பறிமுதல்.மக்கள் யாழுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லும் சிறு உணவுப்பொருட்களும் சிறீலங்கா இராணுவத்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன. அண்மையில் யாழுக்கு அரச கடமை நிமிர்த்தம் கொழும்பிலிருந்து விமானம் மூலமாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்ற அரச உயர் அதிகாரி தனது குழந்தைக்காக 400கிராம் அங்கர் பால் மா பைக்கற்றுக்களில் 12 கொண்ட பொதி ஒன்றை எடுத்துச் சென்ற வேளையில் பலாலி உயர் விமானத்தளத்தில் பரிசோதித்த சிங்கள இராணுவத்தினர் பால் மா பைக்கற்றுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த அதிகாரி தனது குழந்தையைக் காரணம் காட்டி எவ்வளவோ வாதாடியும் பயன் கிடைக்கவில்லை. இறுதி 3 பைக்கற்றுக்களை மாத்திரம் கொடுத்துள்ளனர். மிகுதிப் பைக்கற்றுக்களை பறிமுதல் செய்துள்ளனர். இன்றை யாழிலுள்ள பட்டினிச்சாவினை அறிந்திருந்த அந்த அதிகாரி தனது குழந்தைக்காக எடுத்துச் சென்ற பால் மாவைக் கூட அனுமதிக்காத இந்த ஈவிரக்கமற்ற சிங்கள வெறியர்கள் தழிழனுக்கு என்ன தீர்வினைத் தரப்போகின்றானுகள்? இத்தனைக்கும் அந்த அதிகாரி தமிழன் எனும் ஒரே காரணத்தினால் தான் இந்த பறிமுதல் இடம் பெற்றுள்ளது.

இது போன்றே கொழும்பிலிருந்து மக்களுக்காக என ஊடகங்களில் பறை சாற்றி விட்டு சிங்கள இராணுவத்தினரின் தேவைக்காகவும் மேலும் சிங்கள இராணுவத்தினரால் நடாத்தப்படும் வியாபார நிலையங்களுக்காகவுமே உணவுப்பண்டங்கள் யாழுக்கு கப்பலில் அனுப்பப்படுகின்றன. வேறு மக்களுக்காக அல்ல. விரைவில் எத்தனையோ தழிழ் மக்கள் பட்டினியாலும், நோயாலும் உயிரை விடப்போகின்றனர் என இன்னுமொரு அரச அதிகாரி அழுத வண்ணம் எமக்குத் தெரிவித்தார்.

மேலும், கிணற்றுத் தண்ணீரை சூடாக்கி ஆறவைத்து பால்ப்போத்தல்களில் ஊற்றி அப்பால் போத்தல்களை வெள்ளைத் துணியால் சுற்றி விட்டு, பால் கேட்டு அழும் பச்சிளங்குழந்தைகளுக்கு கொடுக்கும் துன்பியல் சம்பவங்களும் இங்கு நடைபெறுகின்றன என இன்னுமொரு தாயார் அழுதவண்ணம் எமக்குத் தெரிவித்தார்.

-பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகரைப் பிரதேசம் ஆக்கிரமிக்கும் வரை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பமுடியாது - சிறிலங்கா இராணுவம் அறிவுப்பு

மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் நிர்வாக பகுதியான வாகரைபகுதியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமிக்கும் வரை தமிழ்மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்ல சிறிலங்கா இராணுவம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை வாகரைப்பகுதிக்கான அவசர அத்தியாவசியப்பொருட்களை அனுப்புவதற்கு மகிந்த ராஐபக்ஸ உறுதியளித்ததையடுத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் 35000 மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாகரைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மாங்கேணி படைமுகாமில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் திருப்பியனுப்பப்பட்டமை யாவரும் அறிந்ததே

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்திருக்கும் சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டுபகுதியான வாகரை பகுதியை ஆக்கிரமிக்கும் வரை தமிழ்மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல சிறிலங்கா இராணுவம் அனுமதிக்காது என சூளுரைத்துள்ளது.

- பதிவு

யாழ்குடாநாட்டில் மருந்துப்பொருட்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடும்நிலை

யாழ்குடாநாட்டிக்கான மருந்து விநியோகங்களை ஏ-9 நெடுஞ்சாலையை மூடியதன் மூலம் முடக்கியதன் விளைவாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பல மருந்தகங்கள் மூடப்பட்டுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-பதிவு

வாகரையில் மக்கள் மாங்காயும், சிலர் குரும்பெட்டிகள் கூட சாப்பிடுவதாக ஒருவர் மூலமாக கேள்வி பட்டேன். காடுகளுக்குள் சென்றும் கிழங்கு வகைகளை எடுத்து வந்து சாப்டுகிரார்கள். வெங்காயம், பச்சை மிளகாய் கூட இல்லையாம். என்ன கொடுமை இது? என்று தான் விடிவு காலம் பிறக்குமோ?

எல்லாம் இன்னும் 7 நாட்களுக்குதான் அண்ணாவின் பேச்சில் பயந்து எல்லாம் ஒழுங்காக நடக்கும் அல்லது ஒரு புரட்சி பிறக்கும்

போர்களத்தில் ஆயுதம் தொலைத்து நின்றவனைப்பார்த்து

இன்று போய் போர்க்கு நாளைவாவென சொன்ன பரம்பரையின் எச்சங்களே,

இன்று நீங்கள் எங்களை பட்டினி போட்டல்லவா போர்புரிய விளைகிறீர்கள்.

வென்றாலும் கோழைகள் நீங்கள், நாளை விழுந்தாலும் வீரர்கள் நாங்கள்.

புலி வீரருடன் போர்புரிய அஞ்சி மக்களுடன் போர் புரியும் சிங்கள சிறுபுத்திகளே,

வீரர்களாம் நீங்கள் உங்கள் தொலைக்காட்சியில் நீங்களே போடும் விளம்பரம் சொல்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணவு, குடிநீரின்றி தவிக்கும் வாகரை மக்கள்

ஒருவேளை வயிறாற உண்பதற்குக் கூட போதியளவு உணவின்றி யாழ். குடாநாட்டிலுள்ள 6 -1/2 இலட்சம் மக்களில் பெரும் எண்ணிக்கையானோர் தவித்துக் கொண்டிருக்கையில் கிழக்கில் இடம் பெற்று வரும் மோதல்களால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரவெளிப் பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் மக்கள் வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்குப் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.