Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்ப மாறும் ஆணாதிக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணாதிக்கம் உலகின் வரலாற்றின் கறுப்பு புள்ளி.பெண்ணுக்கென தனியான விகிதாசார அடிப்படையில் இட ஒதுகீடு என குரல் வந்ததிலிருந்தே பெண்ணாணவள் எப்படி அடக்கப்படுகிறாள் என்பது புலனாகிறது ஏன் இங்கு யாழ்களத்தில் வரும் சிலர் கூட பச்சை பச்சையா ஆணாதிக்கத்தை புடம்போடுகினர்.அண்மையில் உங்கள் கருத்து பகுதியில் ஒருவர் சாதாரணமாக பொலிவு பெற்ற யாழில் கூட ஆணாதிக்கத்தை அதாவது நீலம் ஆண்களின் நிறமாம்ஆஆ அதுக்கு பல பதில் கருத்துகள் வேறு சுத்த சின்னப்பிள்ளைத்தனமாகவில்லை

அந்த நபரின் வீரதீரவசனத்தில் இதுவும் ஒன்று

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

ஆக ஆணானவன் அவிழ்த்துவிட்ட மாடுபோல ஊர் மேயலாம் என்பதை இக்கருத்து மெய்ப்பிக்கின்றது

இப்படியான வசனத்துக்கு யாழ்களத்தில் ஒரு சகோதரி ஆதங்கத்தில் எழுதிய முற்றிலும் சரியாணதே

சிறகினை முறித்துவிட்டு..!

சந்தி சந்தியாய்...

மேடை போட்டு...

பெண்ணியம் பற்றி..

பேசி என்ன??

இன்னும் சிந்திய...

மூக்குடன் தான்...

பெண்மை!

கதை பல சொல்வார்!

கண்ணகியும் என்பார்!!

ஊரை எரித்தாள் என்பார்

உன்னதம்-உத்தமி

என்றும் உரைப்பார்..

வெளியில்!!

உள்வீட்டில் ??

சிறகினை முறித்து விட்டு,,,

சிறை...

மனைவிக்கும்

மகளுக்கும்

வைத்த பின்னே!

பிராணவாயுக்கு தடை!

நெருப்பு எரிவது

பற்றி நீண்ட பேச்சு!!

காறி உமிழடி-பெண்ணே

அவர் முகத்தில்!!

உன் கவலை அதில்

தூர்ந்து போகும்!!!

இப்படி பெண்களை கேவலப்படுத்தும் பலபேர் யாழிலேயே உலாவருகின்றனர் நண்பர்களே நண்பிகளே உங்களின் கருத்துக்களை இங்கு முன்வையுங்கள் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறும் எண்டு நீங்க வானத்தப் பாத்தண்டு கொட்டாவி விடவேண்டியதுதான். இளைய புலம்பெயர்ந்து வாழுறவங்களிட்டயே இது நிறையக்கிடக்கு. எல்லாத்துக்கும் வெள்ளையளப் பாருங்க வெள்ளையளப் பாருங்க எண்டு சொல்லுறவங்க குறைஞ்சது இந்த விசயத்திலயாவது அவங்களப் பாக்கிறாங்களா எண்டா இல்ல. மற்றவங்களுக்கு மட்டும் ஏதோ தாங்கதான் எல்லாம் அறிஞ்சவை மாதிரி சொல்லுவினம். ஆனா ஒழுங்க ஒரு சக மனித உறவ சரியாக புரிஞ்சு மதிக்கத் தெரியாது. எத சொல்லவெண்டு தொடங்கினாலும் பெண்களைத் தாக்கிற மாதிரி சொல்லுவாங்க.

இவ்வளாத்துக்கயும் பெண்கள் தங்கட துன்பங்களச் சொன்னா தங்கட பிரச்சினையள வெளிக்கொண்டு வருவம் எண்டு வெளிக்கிட்டா அதக்குக்கூட நக்கலடிப்பினம். ஏதோ தங்களுக்கு கொம்பு முளைச்ச மாதிரி.

எல்லாத்துக்கும் பெண்கள தங்களுக்கு அடிமையா வைச்சிருக்கணும் எண்டு நினைக்கிறவை என்ன சதைப்பிண்டங்களா மட்டும் தான் பாக்கினமா :rolleyes:

இவ்வாறான ஒரு உலகத்தில இருந்து எப்படி அவர்கள் தங்கள் திறனை வெளியே கொண்டுவரமுடியும். எடுத்ததுக்கெல்லாம் சொல்லுவினம் தாயகத்தில பெண்களும் களத்தில நிண்டு போராடினம் நீங்க என்ன செய்யிறீங்க எண்டு. நீங்க செய்ய விட்டாத்தானேயய்யா அவங்க தங்கட திறனக் கொண்டு வாறதுக்கு. தாயகத்தில திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுறத்துக்கு களம் சமைக்கும் தலைவன் இருக்கிறான். அதால அங்க இருக்கிறவையால முடியுது. இங்க உங்களுக்கிடையில இருந்து எப்பிடி முன்னுக்கு வாறது.

இன்னொராள் சொல்லுறார் ஏதாவது நடந்திட்டா கவிதைதான் எழுதுவினமாம். நீங்க அதுவும் இல்லாம பக்கத்தில நிக்கிறவனுக்கு குடிச்சுப்போட்டு அடிக்கிறதில திரியிறீங்களே :)

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப மாறும் ஆணாதிக்கம் நல்ல கேள்வி சிவக்கொழுந்து சார்.

பெண்கள் இந்த உல்கில் இல்லாது போனால் ஆணாதிக்கம் மாறும். சரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்பட்ச்சொல்லக்காரணம் கறுப்பி விரிவாகக் கூறுங்களேன் உங்கள் கருத்தை

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இல்லை என்றால் அதிகாரம் காட்ட யாரும் இல்லையே. ஆணாதிக்கத்தை மாற்ற முடியாது அதுதான்.

(ஒருவரியில் கருத்து சொல்லித்தான் என்க்கு பழக்கம் சிவக்கொழுந்து சார்)

திருந்தாத ஜென்மன்களை (ஆண்கள்) பற்றி பேசி பேசி எங்கள் நேரத்தை என் வீணடிப்பான்?

சிவக்கொழுந்து ம்ம் அதுதான் கவிதைலயே சொல்லீட்டனே.எழுச்சிகள் நடந்தால் என்ன புரட்சிகள் நடந்தால் என்ன காலங்காலமாய் பெண்ணை இரண்டாந்தரப் பிரசையாக நினைக்கும் மனப்பாங்கு எம் சமூகத்தில் இருந்து விலகவில்லை என்றே கூற வேண்டும். பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையைப்போடும் நிலையும் மாறவில்லை சிவக்கொழுந்து. ஏன் அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. அவள் உடைகள் பற்றிக் கூடப் பேசப்படுகின்றன. அவள் அணியும் அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. அது மட்டுமா?? பெண்களை வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். ஏன் வேலை செய்ய விடுகிறோம். இன்னும் என்ன வேண்டுமென்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடமிருந்து எழுகின்றன.

இதை விட பெண்ணென்றதால் விட்டுத்தாறன் பெண்ணென்றதால் மன்னிக்குறன் இது எல்லாம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஏன் இப்படி நோக்குகிறீர்கள். பெண்ணையும் ஒரு மனுசியாக மதியுங்கள் அவளின் சுதந்திரத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்???உண்மையை சொன்னப்போனால் இன்னும் பெண்ணுக்கு பூரண விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயமாக சிந்தித்துச் செயற்பட சுதந்திரம் கிடைக்க வேண்டும். காலங்காலமாக சமுகத்தின் மனதில் தோன்றிய "பெண் இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற எழுதாத சட்டங்கள் களையப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். அந்த தைரியத்தை அவளுக்கு அவளது சமுகத்தினர்தான் கொடுக்க வேண்டும்.

சிவக்கொழுந்து பரீட்சைக்கு படிப்பதால் நிறைய எழுத நேரம் கிடைக்கலை. உங்க தலைப்பை பார்த்த உடனே பதில் எழுதணும் போல இருந்துச்சு அதுதான்.

All men are Animals, Some Just Make Better Pets :P

  • கருத்துக்கள உறவுகள்

சிவக்கொழுந்து ம்ம் அதுதான் கவிதைலயே சொல்லீட்டனே.எழுச்சிகள் நடந்தால் என்ன புரட்சிகள் நடந்தால் என்ன காலங்காலமாய் பெண்ணை இரண்டாந்தரப் பிரசையாக நினைக்கும் மனப்பாங்கு எம் சமூகத்தில் இருந்து விலகவில்லை என்றே கூற வேண்டும். பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையைப்போடும் நிலையும் மாறவில்லை சிவக்கொழுந்து. ஏன் அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. அவள் உடைகள் பற்றிக் கூடப் பேசப்படுகின்றன. அவள் அணியும் அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. அது மட்டுமா?? பெண்களை வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். ஏன் வேலை செய்ய விடுகிறோம். இன்னும் என்ன வேண்டுமென்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடமிருந்து எழுகின்றன.

இதற்கு ஆண்களை விடப் பெண்கள் தான் காரணம். பாருங்கள் பெண் விண்வெளிக்குப் போய்விட்டாள் என்றால் அது விசேட செய்தியாக உலகெங்கும் வருகிறது. எத்தனை ஆண்கள் போகிறார் வருகிறார்கள் தெரிகிறதா? இல்லை..?

பல பெண்கள் வேலைக்குப் போவதைக் கூட ஏதோ சாதிக்க முடியாததை தான் சாதிப்பதாக எண்ணியே மற்றவர்களோடு வழமைக்கு மாறாகப் பழகுகின்றனர். நானும் வேலைக்குப் போறன் தானே என்னை எண்ண கேட்கிறது. இப்படியான மனநிலைகள் பொதுவாக வேலைக்குப் போகும் ஆண்களிடம் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் வேலையை முடித்ததும் தங்களின் நாளாந்தக் கடமைகளை வீட்டு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக பெண்கள் தங்கள் ஆழ்மனதில் கொண்டுள்ள எண்ணங்களின் அடிப்படையில் தான் சாதிக்க முடியாதவற்றை சாதிப்பதாகவே சாதாரண விடயங்களில் கூட தங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க முயல்கின்றனர். இதற்கும் சமகாலச் சமூகத்தை குறை கூறிக்கொண்டிருக்க முடியாது. சமூகத்தில் பல முன்னேறாரமான சிந்தனைப் போக்குகள் நடைமுறையில் உள்ளன. இப்படியான எண்ணப் பிரதிபலிப்புக்களின் தாக்கமே ஆணாதிக்கம் என்ற உச்சரிப்பும் அதன் மூலமாக தன் மனப் பலவீனங்களை மறைக்க முற்படுதலும் என்பது நிகழ்கிறது. இது பெண்கள் தங்களைத் தாங்களே சரியாக மதிப்பிடாத நிலையின் பிரதிபலிப்பு.

ஒரு விடயத்தை அணுகும் போது கூட இவன் இப்படிச் சொல்லுறானே இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்று அதற்கு தேவையற்ற வடிவங்கள் கொடுத்து சின்ன விடயத்தையும் பூதாகரமாக்கி தங்களின் பலவீனங்கள் வெளிப்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதில் பெண்கள் கில்லாடிகள். பாவம் ஆண்கள் இதை அறிந்து கொள்ளாத சூழ்நிலைக் கைதிகளாக ஏதோ சொல்லப் போய் எதுக்கோ ஏச்சுவாங்கி அவமானப்பட்டு நிற்பார்கள். இது எதனால்... தன்னைத் தானே பெண்கள் முழுமையாக உணரத்தவறியதால் தான். அத்தோடு ஆண்களைப் பற்றிய கீழ்த்தரமான அல்லது அதீத மதிப்பீடும் தான்.

ஒரு ஆண் பெண்கள் தொடர்பில் தனது அபிப்பிராயத்தைச் சொல்வது ஆணாதிக்கமல்ல. அது அவனின் சுதந்திரம். அந்த அபிப்பிராயம் தனக்கு சாத்தியப்பாடானதல்ல என்றால் பெண் அது குறித்து தனது நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டு தனது கொள்கைப்படி நடந்து கொள்வதை விட்டுவிட்டு ஏன் அதை ஆணாதிக்கம் என்று ஊதிப்பெருப்பித்து தாங்கள் ஏதோ பல தடைகளைத் தாண்டியே சாதனைகளைச் செய்ய வேண்டி உள்ளது போல பாசாங்கு செய்கிறார்கள்.

இன்றைய உலகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எங்கும் எதிலும் இலகுவாக கருமமாற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஏன் அவர்கள் தாங்கள் செய்யும் சிறுசிறு காரியங்களைக் கூட ஏதோ ஆண்களை வெட்டி வீழ்த்தி செய்வதாக எண்ணத் தலைப்பட வேண்டும்.

பாருங்கள் எந்த ஆணாவது தனது காரியச் சாதிப்புக்கு பெண் தடை என்று அல்லது பெண்ணாதிக்கம் தடை என்று முணுமுணுத்தபடி இருக்கிறானா. வெகு குறைவு.

ஏன் பெண்களால் அப்படி இருக்க முடியாது. எல்லாவற்றையும் சாதாரண மனிதர்களுக்கு உரித்தான வகையில் செய்ய சிந்திக்கவும் செயற்படவும் பெண்கள் கற்றுக்கொள்ளும் போது ஆணாதிக்கம் என்ற மாயைத் தோற்றத்துள் அடிமையாகி உள்ள பெண்களின் மனநிலையில் நல்ல மாறுதல் தென்படும்.

பெண்கள் ஆணாதிக்கம் என்று சொல்லிச் சொல்லி ஆண்களை உசுப்பேத்தி விடுகிறார்களே தவிர அவர்கள் ஆண்களை சாதாரணமானவர்களாகக் கருதும் நிலையை இன்னும் எய்தவில்லை.

தமிழ் பெண்கள் மட்டுமல்ல உலகில் பல இடத்திலும் இதைக்காணலாம். சில இடங்களில் தங்களால் இயலாதென்று ஆண்களைக் கொண்டு வேலை வாங்கும் பெண்களும் உண்டு.

இப்படியான செயற்பாடுகளே பெண்கள் தரந்தாழ்த்தி தங்களைப் பற்றிய இரண்டாந்தர மனநிலையில் வாழ வகை செய்கிறது. இதுவே ஆண்களுக்கும் பெண்களை இரண்டாந்தரப் பிரஜையாகக் காட்டுகிறது. ஆக ஆணாதிக்கம் என்பது பெண்களின் மனதில் இருந்து எழும் சிந்தனையாலும் செயற்பாட்டாலும் தோற்றுவிக்கப்படும் ஒரு மாயைத் தோற்றமே அன்றி ஆண்களின் செயற்பாடுகளை அதில் குற்றம் சுமத்த முடியாது.

இதை விட பெண்ணென்றதால் விட்டுத்தாறன் பெண்ணென்றதால் மன்னிக்குறன் இது எல்லாம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஏன் இப்படி நோக்குகிறீர்கள். பெண்ணையும் ஒரு மனுசியாக மதியுங்கள் அவளின் சுதந்திரத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்???உண்மையை சொன்னப்போனால் இன்னும் பெண்ணுக்கு பூரண விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயமாக சிந்தித்துச் செயற்பட சுதந்திரம் கிடைக்க வேண்டும். காலங்காலமாக சமுகத்தின் மனதில் தோன்றிய "பெண் இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற எழுதாத சட்டங்கள் களையப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். அந்த தைரியத்தை அவளுக்கு அவளது சமுகத்தினர்தான் கொடுக்க வேண்டும்.

பிறக்கும் மீன் குஞ்சில் ஆண் பெண்ணென்று செயற்பாட்டு வேறுபாடில்லை. எல்லாமே எல்லாம் பெறுகிறது. ஆனால் பிறக்கும் போது சம ஆளுமையோடு பிறக்கும் ஆணிலும் பெண்ணிலும் வெறும் சமூகம் மட்டுமா ஆளுமைக் குறைவை ஏற்படுத்துகிறது. பெண்களின் சிந்தனைப் போக்குத்தான் அதிகம் அவர்களைப் பாதிக்கிறது. இப்போ உதாரணத்துக்கு ஆண்பிள்ளைகளுக்கும் தான் வீட்டை விட்டு வெளியில் திரிய கட்டுப்பாடு போடுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகளுக்கு அது அதிகம். பெண் பிள்ளைகளை தங்கள் உடல்வலிமையை பிரயோகித்து தங்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க முனைபவர்களைச் சமாளிக்கக் கூடிய வகையில் இருப்பின் நிச்சயம் பெற்றோர் அதற்கு அனுமதிப்பர். இதில் பெற்றோரில் தவறு சொல்ல முடியாது.

என்னதான் கராட்டிக்கு அனுப்பினாலும் 9 மணி என்றவுடன் வீட்டுக்குள் பதுங்கி விடுகிற பெண்கள் தான் அதிகம். காரணம் பெண்களுக்கு உள்ள உடல்வலிமை என்பது ஆண்களை எதிர்த்து நிற்க்க போதுமானதில்லை என்பது வெளிப்படை உண்மை. உடல் வலிமை என்பதால் பெளதீக அழுத்தங்களை பெண்கள் மீது திணிக்க ஆண்கள் முயலக் கூடும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த வேண்டின் வன்முறைகளைப் பிரயோகிக்க எண்ணும் ஆண்களைப் பெண்களே எதிர்கொள்ளக் கூடிய தயாரிப்புக்களைச் செய்ய வேண்டும். அதை மனிதப் பெண்கள் அநேகர் செய்வதில்லை. சிங்கங்களில் ஆண் சிங்கம் வலுவானதாக இருப்பினும் சண்டை என்று வரும் போது பெண் சிங்கமும் எதிர்த்துத் தன் பலப்பிரயோகத்தைக் காட்டும். மனிதப் பெண்களோ வெறும் வாயால் கூச்சலிட்டு விட்டு அடங்கிவிடுவார்கள். பலர் ஆண்களின் சேஷ்டைகளுக்குப் பயந்து ஒதுங்கி ஒளிந்து வாழ முனைகிறார்களே தவிர எதிர்கொள்ளக் கூடிய மனோதிடத்தை வளர்ப்பதில்லை. அதற்கு சமூகத்தை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. பெண்களின் தனிமனித ஆளுமையும் அதில் பங்களிப்புச் செய்கிறது.

பெண் என்பவள் மென்மையானவள் என்ற கோட்பாட்டை ஆண்களின் மனதில் வளர்ப்பது பெண்களின் நடவடிக்கைகளே அன்றி வேறில்லை. லேடிஸ் முதல் என்ற சலுகைகள் வழங்கலை அல்லது சலுகைகளை எதிர்பார்க்கும் நிலையை பெண்கள் தவர்த்துக் கொண்டு தாங்கள் சாதிக்க வேண்டியவற்றை தாங்களாகவே சாதாரணமாக சாதித்து விட வேண்டும்.

இதை நான் செய்யுறன் எனக்கென்ன உதவி தேவை. இப்படியான வீராப்புக்கள் காட்டும் போதே ஆணும் பதிலுக்கு வீராப்புப் பேசுகிறான். ஒரு சிறிய ஆண் பிள்ளை தன் தாயிடம் தன் வீரத்தைக் காட்டும் போது தாய் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வாள். அவளுக்குத் தெரியும் அவனுடைய வீரம் தன்னை எதுவும் செய்யப் போவதில்லை என்று. காரணம் அந்த இடத்தில் அவளுக்கு அந்தப் பிள்ளையைச் சமாளிக்க கூடிய திறன் இருக்கிறது என்ற மனத்திடந்தான் முக்கிய காரணம். அதேபோலத்தான் வளர்ந்த பெண்களும் வளர்ந்த ஆண்களிடம் தங்களின் மனோபலத்தைக் காட்டினாலே உடற்பலவீனத்தைச் சரிக்கட்டி உலகில் பெண்கள் நிச்சயம் தங்கள் மனதில் தங்களை அறியாமலே புதைத்து வைத்திருக்கும் இரண்டாம் பட்ச எண்ணத் தோற்றத்தைக் அகற்ற முடியும்.

பெண்களுக்கு மட்டும் என்ற பெண்களின் சிந்தனையே அவர்களின் தாழ்வுமனப்பான்மையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஒதுங்கி இருந்து தங்களைப் பற்றி தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு திருப்திப்பட்டுக் கொள்வது தான் இது.

இதுவல்ல சமூகத்தில் பெண் தன்னம்பிக்கையும் மனோபலமும் மிக்கவளாக உலகில் வலம் வரத் தேவை. அவள் எந்தச் சூழலிலும் எந்த வகையான சந்தர்ப்பங்களையும் சர்வசாதாரணமாக சமாளிக்கக் கூடியவளாக தனது மனோவலிமையை மாற்றிக் கொள்வாள் என்றால் ஆண்களோடு போட்டி மனப்பான்மையும் எழாது ஆணாதிக்கம் என்று கூச்சலிட்டு ஆண்களிடம் இரஞ்ச வேண்டிய தேவையும் எழாது.

அதை விடுத்து ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று உச்சரித்து சும்மா கிடக்கும் ஆண்களையும் உசுப்பேற்றிக் கொண்டிருப்பது பெண்களின் மனப் பலவீனத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. ஆண்களிடம் கேட்டுப்பெறுவதல்ல பெண்ணுரிமை.

அவளிடம் இயற்கையாக அது உள்ளது, அதை கண்டு அனுபவிக்கத் தெரிந்தவளே சுதந்திரமான பெண். சுதந்திரப் பெண் என்றால் ஏதோ ஆண்களை எதிர்க்கும் திமிர் கொண்டவள் என்பதாக பல பெண்ணிலைவாதிகள் உசுப்பிவிடுகின்றனர். உண்மையில் அதுவல்ல பெண் சுதந்திரம். இயற்கையாக உள்ள சமூகத்தால் மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை இனங்கண்டு சமூகத்தில் எழும் எந்தச் சூழ்நிலையிலும் தன்னையும் தன் சார்ந்தோரையும் பாதுகாத்து.. தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய உரிமைகளைப் பாவிக்கும் உயர்ந்த மனோனிலையை அடைதலே விடுதலை என்பதாகும்.

பெண்களுக்கு யாரும் விடுதலை அளிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களா தங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் பலவீனமான எண்ணங்களுக்கு அளிக்கும் விடுதலையே அவர்களுக்கு சமூகத்தில் அவர்களின் விடுதலையை பெற்றுத்தந்து அவர்களின் நிலையை உறுதி செய்யும்.

அந்த விடுதலை என்பது ஆண்களையோ சமூகத்தையோ பாதிக்கவல்லனவாக அமைவதில் அல்ல கிடைப்பது. தன்னை மட்டுமன்றி எல்லோரையும் மதிக்கவும் பாதுகாக்கவும் உரிமை கொண்டதாக இருப்பதாக இருக்க வேண்டும். அப்போதான் பெண்ணும் மதிப்பிடப்படுவாள் அவளின் உரிமைகளும் மற்றவர்களால் பாதுகாக்கப்படும் மதிக்கப்படும். இதற்காக பெண்கள் ஆண்கள் என்ற உறவுகளுக்கிடையே எழும் அன்பு பாசம் பந்தம் என்ற நிலைகளை அறுத்தெறிய வேண்டும் என்றில்லை. அவை பெண்களின் ஆண்களின் ஆளுமைக்கு மேலும் மேலும் பலம் சேர்க்கும் விடயங்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியதுடன் புரிந்து தெரிந்து உணர்ந்து வாழவும் பழகிக் கொள்ளவும் வேண்டும். எதற்கும் தன்னையும் பிறரையும் சரிவரப் புரிந்து கொள்ள பெண்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் சிவக்கொழுந்து வணக்கம். . நான் ஒன்றும் பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்களை அடங்கிப்போக வேண்டும் என்று நினைப்பவனோ அல்ல. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேற என்னாலான உதவிகள் பல செய்து வருகின்றேன்.

உங்களிடம் ஒரு தயவான வேண்டுகோள். கருத்தை எழுத முதல், மற்றவர்களால் எழுதப்பட்ட கருத்துகள் அவர்களது சொந்தக்கருத்துகளா அல்லது வாசித்த கருத்துக்களா என்று சரியாக வாசித்து அறிந்து விட்டு கருத்தை எழுதுவது சிறந்தது. உங்கள் பாணியில், அந்த வீரதீர வசனம் ஒன்றும் எனது சொந்த கருத்து அல்ல. நானே வேற்று மொழி புத்தகத்தில் படித்தது என்றும், அந்த வசனங்களுக்கும் பெண் அடிமைக்கும் அல்லது ஆணாதிக்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் அல்ல என்பதையும் தெளிவு படுத்தி, அந்த இரு வரிகளின் உளவியல் சார்பான கருத்தையும் எழுதி இருந்தேன். அவை எதுவும் உங்கள் கண்களில் படவில்லையா? மனதில் ஆணாதிக்கம் என்ற சொல்லை நினைத்து இருந்தால் தான் அப்படி எண்ணப்பாடு தோன்றும். அதே போல பெண்களும் பெணடிமை என்று நினைத்தால் தான் அப்படி ஒரு எண்ணப்பாடு தோன்றும்.

இந்த இரு வரிகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் வித்தியாசங்களை எடுத்தியம்புகின்றன. உங்கள் முகவரி கொடுங்கள் அந்த புத்தகம் தபாலில் அனுப்பி வைக்கின்றேன்.

உண்மையை சொல்லப்போனால், எனக்கு ஆணாதிக்கத்தை அல்லது பெண் அடிமைத்தனத்தை பார்த்து அனுபவம் இல்லை.. அல்லது அப்படி ஒரு சூழ் நிலையில் நான் வளரவும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோரும் சரி சமமாக நடத்தப்பட வேண்டியவர்கள் தான். எனது மேலதிகாரி கூட ஒரு பெண் தான். என் மனதில் ஆணதிக்கம் என்ற எண்ணப்பாடோ அல்லது பெண் அடிமைத்தனம் என்ற எண்ணப்பாடோ இருந்தது இல்லை.. இருக்கப்போவதும் இல்லை..

இறுதியாக, அந்த இரு வரிகளின் கருத்துகளை மீண்டும் தருகின்றேன்.

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது

பெண்களின் மனதை பொறுத்தவரை அவர்கள் மனதில் ஒருவனை நினைத்தால், வாழ் நாள் முழுதாக அவர்களால் அந்த நபரை மறக்க முடியாது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை இலகுவாக மறந்து விட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க முடிகின்றது... பெண்கள் பழைய நினைவுகளுடனேயே புது வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இது ஆண் பெண் மன நிலை.

சும்மா சும்மா சும்மாவை வம்பில மாட்டுறது.....யாரப்பா நீங்கள்...?

All men are Animals, Some Just Make Better Pets :P

முதலில் இப்படியான எண்ணங்களை உங்கள் மனதை விட்டு தூக்கி எறியுங்கள். இப்படிப்பட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு ஆண்களோடு சமமாக பழக நினைக்கும் ( நடிக்க நினைக்கும்) பெண்களை எப்படி ஒரு ஆண் சரி சமமாக நடத்த முடியும். பிழை பெண்களிலும் இருக்கின்றது. திருந்துங்கள். திருந்துவார்கள்.

நெடுக்காலபோவான், உங்கள் கருத்துக்கள் பலருக்கு தெளிவு படுத்தி இருக்கும் என நினைக்கின்றேன்.

ன்க்ன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவக்கொழுந்து ம்ம் அதுதான் கவிதைலயே சொல்லீட்டனே.எழுச்சிகள் நடந்தால் என்ன புரட்சிகள் நடந்தால் என்ன காலங்காலமாய் பெண்ணை இரண்டாந்தரப் பிரசையாக நினைக்கும் மனப்பாங்கு எம் சமூகத்தில் இருந்து விலகவில்லை என்றே கூற வேண்டும். பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையைப்போடும் நிலையும் மாறவில்லை சிவக்கொழுந்து. ஏன் அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. அவள் உடைகள் பற்றிக் கூடப் பேசப்படுகின்றன. அவள் அணியும் அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. அது மட்டுமா?? பெண்களை வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். ஏன் வேலை செய்ய விடுகிறோம். இன்னும் என்ன வேண்டுமென்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடமிருந்து எழுகின்றன.

.

அக்கா இரசிகை, உங்கள் கருத்து மிக்க நியாயமானது. கவலைக்குரிய விடயம்... இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பது கூட உங்களுக்கு ஆணாதிக்கமாக தெரிகின்றது...

ஒத்துக்கொள்கின்றேன், இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பதை... எதனால் கேட்கின்றார்கள்? ஆண்களுக்கு நீங்கள் எதை ஆணாதிக்கம் என்கின்றீர்கள் என்பது இன்னும் புரியவில்லை.. அதனால் தான்... கொஞ்சம் புரிய வைப்பீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணாதிக்கம் பற்றி பேசுபவர்களிடமும் நண்பர் சிவக்கொழுந்துவிடமும் ஒரு கேள்வி. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்களும் பெண்களும் சரி நிகரா? இருவராலும் எல்லா காரியங்களையும் ஒரே மாதிரியாக செய்ய முடியுமா? ஆம் என்று பதில் சொன்னால்....மனித ஆண் பெண் இயல்புகளை நன்றாக படியுங்கள்.

உள் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் பார்க்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வேறுபாடுகள். பெண்கள் இழகிய மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள், இலகுவாக அனுதாபங்களை காட்டி ஏமாற்றிவிட முடியும்.

ஒரு பெண் தூரதேசத்துக்கு சென்று படிப்பதை குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் தடுத்தால் அதை ஆணாதிக்கம் என்கின்றார்கள். எதனால் தடுக்கின்றார்கள் என்பதை ஒரு கணமாவது யாரவது சிந்தித்தது உண்டா? பெண்கள் பாதிக்கப்பட்டால் பாதிப்பு பெண்களுக்கே. உதாரணமாக ஒரு பெண் தப்பான வழியில் ஏமாற்றப்பட்டு கருத்தரித்தால், பாதிக்கப்படுவது அந்த பெண்தான், கருவை அழித்தாலும் பாதிக்கப்படுவது பெண் தான். அது தான் இறைவனின் படைப்பு. அப்படியானல் எம்மை எல்லாம் படைத்த இறைவன் ஆணாதிக்க காரன் என்று சொல்லப்போகின்றீர்களா?

இந்த தப்பான வழியில் கற்பமடைவது யார் தப்பு என்பதை விரிவாக எழுதுகின்றேன்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களின் பல பலவீனக்களை அறிந்து அவர்களை அதற்கேற்ப நடக்க சொன்னால் அதை பெண்கள் ஆணாதிக்கம் என்றால் பாதிப்பு பெண்களுக்கே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சும்மா உம்முடைய கருத்து இன்னமும் எங்கட காலத்திலயே இருக்கு ராசா உமக்கு இப்ப ஒரு 20-28 வயதுக்குள்ள இருக்குமெண்டு நினைகிறன்.தம்பி உம்முடைய கருத்துடன் நான் ஒத்துப்போகமாடேனப்பு

1.எமாற்றபட்டு கருத்தறிக்கப்பட்டால்-யாரால் ஒரு பெண் எமாற்றப்பட்டு கர்ப்பமாக்கப்படுவாள் ஒரு பெண்ணாலா இல்லையே ஆணாலதானே அதுவே ஆணாதிக்கத்தின் ஒரு இயல்பு அப்பு

2.தம்பி ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்சியில் வித்தியாசம் எதுவுமில்லையப்பு பெண்கள் ஆண்களைவிட இப்போது நிர்வாகத்த்ல் திறமையை காட்டுகிறார்கள் ஏன் கொலைகாரி சந்திரிகா பெண்தானே அவரின் தாயர் சிறீமாவும் பெண்தானே தற்போதய புஸ்ஸின் பாதுகாப்பு செயலாலரான கொண்டலின ரைஸும் பெண்தானே அப்படி உணர்சி வேறுபாடுமில்லையப்பு

3.அது சரியப்பு நான் உம்முட்டை கேக்கிறன் ஆணால ஒருவனை அல்லது ஒருத்தியை உலகத்துக்கு அறிமுகப்படுத முடியுமோ 10 மாதம் சுமப்பது என்பது ஆணால முடியுமோ தம்பி.ஊரில 10 13 பிள்ளைகளை பெற்ற தாய் மார் இருப்பினம் 18 வயதிலிருந்து 40 வயது காலத்துல் அதாவது 22 வருடத்தில் 13 பிள்ளை எண்டால் 130 மாசம் சுமையோட உம்மால இருக்க ஏலுமோ அப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் புடவை கட்டி பெண்ணானது....

பெண்கள் என்றால் பொய்கள் என்று விளிக்கும் இதன் பொருள்தான் யாது :lol:

அக்கா இரசிகை, உங்கள் கருத்து மிக்க நியாயமானது. கவலைக்குரிய விடயம்... இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பது கூட உங்களுக்கு ஆணாதிக்கமாக தெரிகின்றது...

ஒத்துக்கொள்கின்றேன், இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பதை... எதனால் கேட்கின்றார்கள்? ஆண்களுக்கு நீங்கள் எதை ஆணாதிக்கம் என்கின்றீர்கள் என்பது இன்னும் புரியவில்லை.. அதனால் தான்... கொஞ்சம் புரிய வைப்பீர்களா?

இது ஆணாதிக்க நிலையில்லையா??? :lol:

இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பது கொடுக்காமல் பிடித்து வைத்திருப்பதில் இருந்து தானே கேக்கிறீங்க :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணாதிக்கம் பற்றி பேசுபவர்களிடமும் நண்பர் சிவக்கொழுந்துவிடமும் ஒரு கேள்வி. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்களும் பெண்களும் சரி நிகரா? இருவராலும் எல்லா காரியங்களையும் ஒரே மாதிரியாக செய்ய முடியுமா? ஆம் என்று பதில் சொன்னால்....மனித ஆண் பெண் இயல்புகளை நன்றாக படியுங்கள்.

உள் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் பார்க்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வேறுபாடுகள். பெண்கள் இழகிய மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள், இலகுவாக அனுதாபங்களை காட்டி ஏமாற்றிவிட முடியும்.

ஒரு பெண் தூரதேசத்துக்கு சென்று படிப்பதை குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் தடுத்தால் அதை ஆணாதிக்கம் என்கின்றார்கள். எதனால் தடுக்கின்றார்கள் என்பதை ஒரு கணமாவது யாரவது சிந்தித்தது உண்டா? பெண்கள் பாதிக்கப்பட்டால் பாதிப்பு பெண்களுக்கே. உதாரணமாக ஒரு பெண் தப்பான வழியில் ஏமாற்றப்பட்டு கருத்தரித்தால், பாதிக்கப்படுவது அந்த பெண்தான், கருவை அழித்தாலும் பாதிக்கப்படுவது பெண் தான். அது தான் இறைவனின் படைப்பு. அப்படியானல் எம்மை எல்லாம் படைத்த இறைவன் ஆணாதிக்க காரன் என்று சொல்லப்போகின்றீர்களா?

இந்த தப்பான வழியில் கற்பமடைவது யார் தப்பு என்பதை விரிவாக எழுதுகின்றேன்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களின் பல பலவீனக்களை அறிந்து அவர்களை அதற்கேற்ப நடக்க சொன்னால் அதை பெண்கள் ஆணாதிக்கம் என்றால் பாதிப்பு பெண்களுக்கே.

எதனால் தடுக்கிறாங்க எண்டதயும் சொல்லுங்களன். தெரியாததாலதானே கேக்கிறம். செய்யிற எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் நீங்க வைச்சிருப்பீங்க எண்டு தெரியும் தானே. :P

இப்படி ஒரு ஆணின்ட பலவீனங்களை ஒரு பெண் அறிஞ்சு அதற்கேற்ப நடக்கச் சொன்ன நடக்கிறீங்களா. அய்யோ அய்யோ என்ன அடக்க நினைக்கிறாள் எண்டு ஊர்முழுக்க புலம்பித்திரியிறது எதுக்குங்க.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் என்றால் பொய்கள் என்று விளிக்கும் இதன் பொருள்தான் யாது :lol:

இது ஆணாதிக்க நிலையில்லையா??? :lol:

பதிலுக்கு பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் ரவுசர் போடும் ஆண்கள் என்று எழுதிவிட்டுப் போறது. இதை பெண்கள் யாரும் கண்ணப்பன் சொல்வது போல சீரியஸ் மற்றர் ஆக்கினதா தெரியவில்லை. அப்படி ஆக்கினாலும் புடவை கட்டாத பெண்கள் பொய்யே சொல்லாதவர்கள் என்பதும் பொய். மனிதனாப் பிறந்த எல்லாரும் அரிச்சந்திரர்களா...???!

இதில் எங்கு ஆணாதிக்கம் இருக்கிறது என்பதுதான் வியப்புக்குரிய விடயமாகிறது. ஆண் தனது அனுபவத்தில் பட்ட பார்வையை வைக்கிறது கூட ஆணாதிக்கமா??? பெண்களைப் பற்றி இல்லாத பொல்லாததுகளை எழுதி தலையில தூக்கி வைச்சு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு எறியும் கூட்டத்தைவிட பெண்களிலும் பொய்யர்கள் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தைச் சொல்வதில் தப்பிருப்பதாகத் தெரியவில்லை. கண்ணைத் திறவுங்கள் கண்ணப்பன்.

இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பது கொடுக்காமல் பிடித்து வைத்திருப்பதில் இருந்து தானே கேக்கிறீங்க :P

தற்போதைய அறிவியல் விஞஞான காலத்தில் பெண் பலவற்றை வெளிப்படுத்த முணைகிறாள்

ஆனால் அதற்கு இந்த ஆணாதிக்கம் சில முட்டு கட்டைகளை போடுகிறது.

தான் எதை செய்ய வேண்டும் ; என எண்ணுகிறாளோ அதற்கு சுதந்திரம் கொடுப்பதில்லை

மாறாக அவள் ஒரு சமுதாயத்திடம் தனது பெண்ணடிமை வாதங்களை பல்வேறு பட்ட கோணத்தில்

கொண்டு வரும் போது அதை உடைத்து தகர்த்தெறிய இந்த ஆணாதிக்கம் போடுகின்ற முட்டு கட்டைகள் கொஞ்சமல்ல.

தான் ஒரு மேதாவி என்றவாறு இங்கொரு சபேசன் என்பவர் பெண்களை இழிவு படுத்தி கருத்துகளை வைத்து அவர்களுடைய படைப்புகளிற்கு ஒப்பாரி பட்டம் கொடுப்பதென்பது எதை குறிக்கிறது....???

இது பெண் அடக்குமறையின் உச்சமாக தெரியவில்லையா....???

தொலைகாட்சி.வானொலிகளில் பா பாடும் பெண்களினுடய அணைத்தும் ஒப்பாரியாம்.

எனக்கு என்ன சிரிப்பென்றால் நாட்டில் இருந்து வந்த சில முக்கிய உறுப்பினர்கள் இந்த பெண்களின் எழுச்சியை தேடலை கண்டு வியர்ந்து பாராட்டி

சென்றிருந்தமை கண்கூடு பார்த்தவை. ஆனால் அவர்களே வாயர மனம்திறந்து பாராட்டி..ஊக்கமழித்து செல்கையில இந்த நுல்லான்கள்

தங்களை மேதாவி என்ற தோரணைக்குள் செருவி இவர்களை மழுங்கடிப்பது எந்த வகையில் ஏற்று கொள்ள முடியும்....???

இதற்கு சில பெண்கள் அவரின் கருத்துக்கு ஆமா போடுவதென்பது அதை விட வியப்பு....தனது சுய அறிவின் அடிப்படையில் இந்த பெண் ஏன் செயற்பட வில்லை என்பது இங்கொரு கேள்வியாக எழுகிறது...

அவர் வெளிப்படையாகவே பெண்ணை சாடும்போது ..அதற்கு ஒத்து பாடுகின்ற இந்த பெண்களை எப்படி சொல்வது.....ஃ??

உண்மையில் எத்தனையோ பெண்கள் மிக சிறு பராயத்தில் எத்தனையோ சேவைகளை செய்கிறார்கள் புலம் பெயர் நாடுகளில் அவர்களின்உணர்வுகள் பிரதிபலிப்புகள் இந்த மேடைகளில் ஒலிப்பதில்லை காரணம்..அதற்கு தடை...ஏன்...???

பெற்ரோரின் அச்சம் பிள்ளைகள் மீது அற்ற நம்பிக்கை .சமுகம் என்ற மாயை...இவ்வாறு எத்தனையோ காரணங்களை தாண்டி வருகின்ற சில பெண்களை கூட இந்த ஆணாதிக்கம் விட்டு வைப்பதில்லை...அதற்கும் கல்லெறிந்து காயப்படுத்தி அவர்களை ஊனமாக்கி அடக்கி ஒடுக்கிவிட துடிக்கிறது ஏன் இவ்வாறான செயல்...???

பெண்களுடைய ஏனைய விடயங்களை விடுங்கள் படைப்பு களத்தில் நிக்கின்ற பெண்களையாவது ஊக்கமழித்து அவர்களை ஏனைய பெண்களிற்கு ஒரு வழிகாட்டியாகவென்பினும் வளர விடலாமே...???

இதற்கெல்லாம் முதற் படியாக பெண் தனது சுய அறிவின் ஊடாக வெளி வர வேண்டும் இவ்வாறான நுட்பங்களை உடைத்தெறிந்து வர வேண்டும் இவ்வாறான ஆணாதிக்க கருத்துகள் உங்களை அடக்டகி ஒடுக்கின்ற ஒரு செயலின் உச்சம் எனவே அதை உடைத்து பெண்களே வெளியில் வாருங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='ஸிவகொலுந்து' டடெ='ணொவ் 19 2006, 03:30 ஆM' பொச்ட்='239099']

தம்பி சும்மா உம்முடைய கருத்து இன்னமும் எங்கட காலத்திலயே இருக்கு ராசா உமக்கு இப்ப ஒரு 20௨8 வயதுக்குள்ள இருக்குமெண்டு நினைகிறன்.தம்பி உம்முடைய கருத்துடன் நான் ஒத்துப்போகமாடேனப்பு

1.எமாற்றபட்டு கருத்தறிக்கப்பட்டால்-யாரால் ஒரு பெண் எமாற்றப்பட்டு கர்ப்பமாக்கப்படுவாள் ஒரு பெண்ணாலா இல்லையே ஆணாலதானே அதுவே ஆணாதிக்கத்தின் ஒரு இயல்பு அப்பு

சிவக்கொழுந்து அண்ணா, ஒரு பெண் ஏமாற்றப்பட்டு கருத்தரித்தாள் என்றால் என்ன? பெண்ணை ஆண் வலுக்கட்டாயமக உறவு கொள்ள வைத்தானா? பெண்களில் உள்ள பலவீனங்களை வைத்து ஆண் அவளை உபயோகப்படுத்தினான் என்று சொல்லலாமா? பெண் விரும்பித்தானே சென்றாள். உடல் தேவைகள் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே. எதற்கு ஆண்களை அனுமதிக்க வேண்டும்? எல்லாவ்ற்றையும் சேர்ந்தே செய்வது, பின்னர் ஏமாற்றி விட்டான் என்று புலம்பித்திரிவது. ஆக பெண்களை ஏமாற்றுவது ஆணாதிக்கத்தின் இயல்பு என்கின்றீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஆண்களை ஏமாத்தும் பெண்கள் அதிகம்....அப்போ என்ன பெண்ணாதிக்கம் வளர்ந்து வருகின்றதா சிவக்கொழுந்து? இன்று அன்றாட வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஆண் பெண் என்றபிரிவினைக்குள் போட்டு வைப்பது அனைவரினதும் பொழுது போக்காகி விட்டது,.

2.தம்பி ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்சியில் வித்தியாசம் எதுவுமில்லையப்பு பெண்கள் ஆண்களைவிட இப்போது நிர்வாகத்த்ல் திறமையை காட்டுகிறார்கள் ஏன் கொலைகாரி சந்திரிகா பெண்தானே அவரின் தாயர் சிறீமாவும் பெண்தானே தற்போதய புஸ்ஸின் பாதுகாப்பு செயலாலரான கொண்டலின ரைஸும் பெண்தானே அப்படி உணர்சி வேறுபாடுமில்லையப்பு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணர்ச்சிகளில் வித்தியாசம் இல்லையா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு பெண்ணுடனும் நெருக்கி பழகவில்லையா? திறமை என்பது வேறு, உணர்ச்சிகள் என்பது வேறு. பெண்கள் இலகுவாக உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இருக்கின்றார்கள். எந்த வொரு ஆணாட்சியாளனும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது அழுகின்றானா? சந்திரிகா அழுதது நினைவுகளில் இல்லையா?

கேம்பிரிஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சைமன் பாரன் கொகன் என்பவர் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

"the female brain is predominantly hard-wired for empathy, while the male brain is predominantly hard-wired for understanding and building systems."

அவரையும் ஆணாதிக்க காரன் என்று சொல்ல வருகின்றீர்களா?

3.அது சரியப்பு நான் உம்முட்டை கேக்கிறன் ஆணால ஒருவனை அல்லது ஒருத்தியை உலகத்துக்கு அறிமுகப்படுத முடியுமோ 10 மாதம் சுமப்பது என்பது ஆணால முடியுமோ தம்பி.ஊரில 10 13 பிள்ளைகளை பெற்ற தாய் மார் இருப்பினம் 18 வயதிலிருந்து 40 வயது காலத்துல் அதாவது 22 வருடத்தில் 13 பிள்ளை எண்டால் 130 மாசம் சுமையோட உம்மால இருக்க ஏலுமோ அப்பு

[/ஃஉஒடெ]

அது கடவுளின் படைப்பு.....

அப்போ கடவுளை ஆணாதிக்க காரன் என்று சொல்கின்றீர்கள்... உங்கள் கூட எப்படி கருத்தாடுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='கண்ணப்பன்' பொச்ட்='239146' டடெ='ணொவ் 19 2006, 05:54 ஆM']

எதனால் தடுக்கிறாங்க எண்டதயும் சொல்லுங்களன். தெரியாததாலதானே கேக்கிறம். செய்யிற எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் நீங்க வைச்சிருப்பீங்க எண்டு தெரியும் தானே. :P

இப்படி ஒரு ஆணின்ட பலவீனங்களை ஒரு பெண் அறிஞ்சு அதற்கேற்ப நடக்கச் சொன்ன நடக்கிறீங்களா. அய்யோ அய்யோ என்ன அடக்க நினைக்கிறாள் எண்டு ஊர்முழுக்க புலம்பித்திரியிறது எதுக்குங்க.

[/ஃஉஒடெ]

கண்ணப்பா, ஒரு பெண் ஆணின் பலவீனங்களை அறிந்து அதற்கேற்றால் போல நடக்க சொல்லி ஆணிடம் கேட்கும் போது, ஆண் வெற்றியடைகின்றான், அவனின் வெற்றிக்கு பின்னால் அந்த பெண் நிற்கின்றாள்.

"பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் புடவை கட்டி பெண்ணானது...."

இந்த வாக்கியம் உங்களுக்கு ஆணாதிக்கமாக தெரிகின்றது,.... கள் உறுப்பினர் ஒருவர் எல்லா ஆண்களும் மிருகங்கள் என்று கூறியது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நீங்கள் ஒரு மிருகம் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

கண்ணப்பன், பொய் பலரும் சொல்கின்றார்கள். காரணம் சந்தர்ப்ப சூழ் நிலை அல்லது அவர்களை காப்பற்றி கொள்ள சொல்கின்றார்கள். நான் பல பெண்களுடன் பேசி இருக்கின்றேன், பலர் ஆரம்பத்தில் பொய் தான் சொல்கின்றார்கள், அவர்கள் சூழ் நிலை அல்லது தேவை அப்படி. இந்த வரிகள் ஒரு பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது.

எனது நண்பிக்கு நடந்தது,'அறியாத வயதில் தெரியாமல் செய்ததால்(காதல்) வந்த வினை. சிரிய வயதிலே பெற்றோரை எதிர்த்து கல்யானம் பண்ணி, இன்று விவாகரத்து வரைக்கும் வந்து நிற்கிறது. இதற்கான முழு காரணம், அந்த கணவரின் ஆணாதிக்க போக்கு.இதொ அவர் பாவிக்கிம் சில சொற்பதங்கள்.

" நான் புருஷனா? நீ புருஷனா?'

" நான் ஆம்பிளை, எதுவேனுமென்டாலும் செய்வேன்"

என் நண்பி தனது பெற்றோரை பார்க்க தாயகம் செல்லும் போது சொல்கிரார்" அவரது நண்பர்கள் சொல்வார்கலாம், மனைவியை ஊர் சுத்த விட்டிடு, நீ பொம்பிள்ளை மாதிரி வீட்டில் இருகிராய் "என்டு.

ஒரு குடும்பம் பிரிவதட்கு இவர்கலின் இப்படியான போக்கு தான் காரணம். இது என் நேரடி அனுபவம், ஆனால் நிறய வீடுகளில் இது மாதிரி நடக்கும் என்டு நினைகிறென்,

நான் நினைகிரென், இவர்களுக்கு எல்லாம் ஒரு வித மன நோய் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல பதிவு. பெண் விடுதலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதுதான்.

பெண்கள் என்று வழித்தெழுகின்றார்களோ அன்று...

ஒட்டு மொத்தமாவிழிக்க வேண்டும்..உதரணம்..மேற்கத்தைய நாட்டு பெண்கள்...

தன் காலில் தான் நிற்கிறாள்...மாற்றான் கை ஏந்தாது

உலக அறிவு...பொதறிவு...நீண்டதூர பார்வை..தன் வாழ்வை தானே நிர்ணயிக்கும் உரிமை..சிந்தை

என்பன நமது பெண்களிற்கு என்று வருகிறதோ அன்று இந்த ஆணாதிக்கம் தகறும்..நொருங்கும்..இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை..கருத்து...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இதுவரை பெண்களுக்கு கொடுக்கப்படாத உரிமை என்று

எதை நீங்கள் கருதுகிறீர்கள்? இன்னும் பெண்களுக்கு உண்மையில் உரிமைகள் கிடைக்க வில்லையா ;) ? அதைப்பற்றி தகவல் தாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் தாம் பெண்ணுக்கு சுதந்திரம் குடுக்கிறம் எண்டு சொல்லுறதே மிகப் பெரிய ஆணாதிக்க வெளிப்பாடு தானாம். அப்ப ஆணுக்கு ஆராம் சுதந்திரம் குடுத்தவை..

சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல. அது இயல்பிலேயே இருப்பது. - கவிமணி பாக்கோ கவிஞர்

தயவு செய்து இதுவரை பெண்களுக்கு கொடுக்கப்படாத உரிமை

தம்பி முத்து .. அதென்ன கொடுக்கப்படாத உரிமை.. ஏன் ஆண்கள் தான் பெண்களுக்கு உரிமை குடுக்குறவையோ..

அவையள் கேட்பினமாக்கும்.. அண்ணைமாரே எங்களுக்கு இன்ன இன்ன உரிமை வேணும். தயவு செய்து தாங்கோ எண்டு.. நீங்கள் போனா போகுது எண்டு தூக்கி குடுப்பியளாக்கும்...

ஆண்களுக்கு பெண்கள் உரிமை தாற மாதிரி இருந்தால் எப்பிடியிருக்கும்..

தமிழன்பு உண்மையாக விளங்கவில்லை..

1. சுதந்திரம்(கல்வி..உத்தியோகம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.