Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்ப மாறும் ஆணாதிக்கம்

Featured Replies

ஆரப்பா அங்க மூக்கைச் சிந்தி அழுகிறது?....

பொம்பிளையள் தங்களுடைய சோம்போறித்தனத்திற்கும் சுய நலத்திற்காகவும் ஆண்களான நமக்கு ரெண்டு கொம்புகள் நாலு கோரப்பற்கள் இருக்கெண்டா அதை நம்பி.... ஆலோசனைக்கூட்டம் நடாத்தி என்னப்பா செய்யிறதா உத்தேசம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ட்டிக்கு பிறகு யார் டிரைவிங்(ரெண்டு பேரும் தண்ணிதான

ஒரு பிரச்சனையுமில்லை.. ஒரு பார்ட்டிக்கு புரசன் ட்ரிவிங் எண்டால் அடுத்த பார்ட்டிக்கு மனிசி..

வாழ்க்கையே இப்படியான புரிந்துணர்வுகள் விட்டுக்கொடுப்பக்களிலே தானே தங்கியுள்ளது..

ஆணாதிக்கம் என்று சொல்வது சரியானதா என்று தெரியவில்லை.

வலியோர் எளியோரை அடக்குகின்ற ஒரு பிரச்சனையாகத்தான் நான் இதை பார்க்கிறேன்

பல வீடுகளில் ஆண்கள் வலியோராக இருக்கிறார்கள்.

சில வீடுகளில் பெண்கள் வலியோராக இருக்கிறார்கள்.

அதைவிட இன்னும் ஒரு பிரச்சனையையும் பார்க்க வேண்டும்.

சில ஆண்கள் பெண்ணுரிமை பற்றி நிறைய பேசுவார்கள்.

ஆனால் ஒரு பெண் அவர்களுக்கு பொருந்தாத ஒரு அரசியல் கருத்தை சொல்கிற பொழுது, அவளை திட்டுவதற்கு அந்த ஆண்கள் பாவிக்கின்ற வார்த்தைகள் இருக்கிறதே, அடடடா..... அதிலேயே அவர்கள் பேசுகின்ற பெண்ணுரிமை எதுவென்று தெரிந்து விடும்.

இதில் தற்பொழுது இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் ஒரு நகைச்சுவை நடக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆண்கள் கட்டுப்படுத்துகின்ற, வழி காட்டுகின்ற "பெண்கள் அமைப்புக்கள்" உருவாகி வருகின்றன.

இவர்கள் அடிக்கடி அறிக்கைகளும் விடத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆணாதிக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை

தன்னைத்தானே நிரந்தரப்படுத்திக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் சுகம் காண்பதற்கு ஆணாதிக்கம் மேற்கொள்ளும் வியூகங்கள் என்னென்ன?

பெண்ணுக்கு மண்ணை உரிமையாக்கியது தாய்வழிச் சமூகம். இந்த உரிமையைத் துண்டித்து நிலவுடைமையைத் தன்னகத்தே கைப்பற்றியது ஆண்வர்க்கம். சமூகத்தின் பகிரங்கத் தளத்தில் பெண்மையைத் தெய்வீகப் பிம்பமாக உயர்த்திப் பேசிக் கொண்டாடும். ஆனால், அந்தரங்கத் தளத்தில் எலும்பும் தசையுமான மனுஷிகளைக் கீழ்த்தரமாகத் துன்புறுத்தி இன்புறும் நோய்க்கு இலக்காகிறது ஆணாதிக்கம்.

`என்னதான் படித்துச் சம்பாதித்தாலும் ஆண் துணையின்றிப் பெண் வாழவே முடியாது. உடலளவிலும், மனத்திலும், செயல்திறனிலும் ஆணுக்குச் சமமாக முடியாத சக்தி குன்றிய பிறவிதானே பெண்!' - இப்படிப்பட்ட கற்பிதங்களை ஆண் குழந்தைக்கு மட்டுமல்ல, பெண் குழந்தைக்கும் புகட்ட வேண்டிய `சமூக அறமாகத்' திணித்து விடுகிறது ஆணாதிக்கம். தடம்புரண்ட இந்த இழிகல்வியைப் புகட்டும் ஆசிரியைகள் யார்? அம்மா, பாட்டி, சித்தி, அத்தை, அக்கா, அண்ணி போன்ற உறவுக்காரப் பெண்ணினத்தைக் கொண்ட பெண்மையின் தன்னம்பிக்கையைச் சுட்டுப் பொசுக்குகிறது.

ஆண் - பெண் இடையே உடலிலும் மனத்திலும் காணப்படும் இயற்கையான வேறுபாடுகளைக் கொண்டாடி மகிழ்வது ஆரோக்கியமான போக்கு. இதற்குப் பதிலாக உயர்வு - தாழ்வு என்கிற அதிகாரப் படிநிலை எனக் கட்டமைத்துக் கொண்டு பெண்ணின் நியாயமான உரிமைகளை மூர்க்கமாகப் பறித்துக் கொள்ளும் மிருகத்தனத்தில் ஈடுபடுகிறது ஆணாதிக்கம்.

குடிபோதையில் தான் சீரழிவது மட்டுமன்றி குடும்பத்தையும் சீரழிக்கும் ஆணாதிக்கவாதிகள், மனைவியின் சஞ்சலப்பட்ட அமைதியையோ, அரவணைப்பான அறிவுரையையோ ஜீரணிக்கத் தயாராக இருப்பதில்லை. எடுத்த எடுப்பிலேயே வீட்டிற்குள் நுழையுமுன்பே தெருமுனையிலிருந்தே உரத்த `சவுண்டு' விடுவதை ஒப்பற்ற தீரமாகக் கருதுவது ஏன்? வருமுன் காத்துக் கொள்ளும் வறட்டு வம்புத் திட்டம்தானே!

எலும்பும் தசையுமாக, உயிருடன் உணர்வுமான முழுமையான மனுஷிகளை வெறும் பிறப்புறுப்பாகவும், மார்பகங்களாகவும், தொப்புள் பிரதேசங்களாகவும் காமிராப் பார்வைகள் சுருக்கி விடுகின்றன. அதைத் திரையில் காட்டியும் ஒளிபரப்பியும் ஆணாதிக்கத்திற்குத் தீனி போடுகின்றன. ஆளுமைத் திறனுடனும் படைப்பாற்றலுடன் செயல்பட வேண்டிய பெண்களை பூங்கொத்து வழங்கும் சேடிகளாகவும், சமையற்கட்டு வேலைக்காரிகளாகவும், லட்சியவாதக் காதலனையே சுற்றிச்சுற்றி வருபவளாகவும் சுருக்கி விடும் குறுக்குப் பார்வையை (Essentialist Outlook) ஆணாதிக்கம் வலியுறுத்தித் திணிக்கிறது.

ஆண்களின் முரட்டுக் கரங்கள் மட்டுமே பெண்களின் நிம்மதியைக் குதறிக் கூறுபோட்டு விடுவதில்லை. பெண்களை வைத்தே பெண்ணின் கௌரவத்தைச் சூறையாடும் நுணுக்கமான வில்லத்தனம் ஆணாதிக்கத்திற்கு உண்டு. தன் வாரிசுக் கருவைச் சுமந்து அதைப் பேணிக் காப்பதில் தன் உயிரையும் உடலையும் உதிரத்தையும் முழுக்க முழுக்க முதலீடு செய்கிறாள் பெண். இப்படி உருவாகும் தாய்மைப் பேற்றுக்குத் தன் வாரிசின் மீது உரித்தெடுக்க முடியாத ஓர் உரிமையும் செல்வாக்கும் கிடைக்கிறது. தாய்மைப்பேற்றின் இந்த உரிமையையும் செல்வாக்கையும் ஆணிவேரோடு பிடுங்கியெறியும் சூழ்ச்சியும் ஆணாதிக்கத்திற்குத் தெரியும். இது எப்படி? பெற்ற பிள்ளைக்குரிய தாய்ப்பாசம் உண்மையானது என்றால் வேறொரு பெண்ணான தன் மருமகளின் உயிரை வாங்கி அதை நிரூபிக்க வேண்டும் என்கிற கிடுக்கிப் பிடியில் அவளை நிறுத்தி விடுகிறது. இவ்வாறு தாய்மைப்பேற்றை பெண்ணுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் யுக்தியை ஆணாதிக்கம் பயன்படுத்துகிறது.

தொட்டிலில் உறங்கும் பிள்ளையைத் தாலாட்டுப் பாடி அரவணைத்துக் கொஞ்சி மகிழும் மொழியாடலின் வழியாக ஆணாதிக்கத் திணிப்பும் நடக்கிறது. கூடுதல் போனசாக தமிழ்நாட்டில் சாதிவெறிக்கான விதைகளும் அன்னை வழியாகவே பிஞ்சுகளின் நெஞ்சுக்குள் தூவி விடப்படுகின்றன.

மேலும், சமூகச் சூழலுக்கேற்ப இனவெறி, மதவெறி, மொழிவெறி போன்ற விஷத்தை சொட்டுச்சொட்டாகத் தாய்ப்பால் வழியாகவே குழந்தைக்குப் புகட்டிவிடும் ஆபத்தும் நடந்து வருகிறது. உயிர் காக்கும் அமிர்தமான தாய்ப்பாலைக்கூட சாதிவெறி போன்றவற்றின் ஊடகமாக்கிவிடும் கொடிய நாகமே ஆணாதிக்கம்.

`வீட்டுக்கு மகாராணி' என்று வசனம் பேசி விட்டுச் `சும்மா ஹவுஸ் ஒய்ஃப் தானே' என்று பெண்ணின் படைப்பாற்றல் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் சிறுமைப்படுத்திக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போக்கு ஆணாதிக்கத்திமிருக்கு உண்டு. அடி, உதை, குத்து, மிரட்டல், மிதி, பாலியல் வன்கொடுமை, கொலை போன்றவற்றால் பெண்மை சிதைக்கப்படுவது ஒருவகை. `மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விறையே, கரும்பே, தேனே! - இவை போன்ற தித்திப்புக் கொஞ்சல்களின் வழியாகப் பெண்ணடிமைத்தனத்தைப் பெண்களே விரும்பி ரசித்து உள்வாங்கிக் கொள்ளச் செய்யும் வில்லத்தனமும் ஆணாதிக்கத்திற்குக் கைவந்த கலை.

ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டுத்தான் பெண்கள் வாழ முடியும் என்கிற மனநிலையை மாற்றுவது எப்படி?

ஆண்தன்மை - பெண்தன்மை எனச் சுமத்தப்பட்டுள்ள பண்பாட்டுக் கற்பிதங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வுக்குட்படுத்திட வேண்டும். இயற்கையின் சீதனங்களான ஆணும் பெண்ணும் பெற்றுள்ள கொடைகளின் வித்தியாசங்களைக் கண்டு பூரித்துக் கொண்டாட வேண்டும். சமூகப் பண்பாட்டுத் தளத்து வளர்ப்பு சுமத்திய பாரம்பரியப் பாரங்கள் என்னென்ன? இவை எந்தெந்த காலக்கட்டங்களில் பெண்மையை ஆணாதிக்கத்தின் பாதாளச் சிறைக்குள் தள்ளின என்ற வரலாறுகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரியக் கருத்தியல்கள் இதற்குப் பெரிதும் துணைபுரியும்.

இன்றைய ஊடகத்துறையும் தொழில் நுணுக்கத்தோடு ஆணாதிக்கத் தினவுக்குத் தீனி போடுகிறது.

சமையலறை, வீடு, நில மறுப்பு என்று பெண்ணுரிமைக்கான தளங்களை விரிவாக்காமல் பெண்ணடிமைத்தனத்தை வேரறுக்க முடியாது. "ஆள்பவன் ஆவன் - அடங்குபவள் பெண்' போன்ற வாடி க்கையான பிம்பங்களை (Ste reotyped Images) அழிக்க ஆணும் -பெண்ணும் ஒரே மானிட வேரிலிருந்து உறவுச் சங்கிலித் தொடராகப் பூக்கும் இரு மலர்கள் என்கிற சிந்தனையை வளர்க்க வேண்டும். `சுகம் மட்டும் போதும் - நீ வேண்டாம்' என்கிற பயன்பாட்டு உறவை மாற்ற பெண்ணை முழுமையான ஆளுமை கொண்ட உரிமையுள்ள மனுஷி என்பதை வலியுறுத்த வேண்டும். `பெண்ணும் தூய்மை - ஆணும் தூய்மை' - இந்த எதார்த்தத்தை உணர்வுபூர்வமாக அங்கீகரித்து வாழ்வோட்டத்தின் அனைத்துத் தளங்களிலும் 50% - 50% என்கிற ஆரோக்கியமான சமன்பாட்டைப் பரவலாக்கும் துணிச்சல் தேவை.

ஏட்டு முதல் எஸ்.பி. வரை கணவன் முதல் சாமியார் வரை பாதுகாப்பற்ற நிலையை உள்ளூர உணரும் பெண்மை தன் நியாயமான உரிமைகளைக் கெஞ்சியோ கொஞ்சியோ பெற நினைப்பது அபத்தமானது. ஆணாதிக்கம் சுமத்தும் ஒவ்வொரு முரண்பாட்டுச் சூழலிலும் பாதிக்கப்படும் பெண்களின் உள் உலகத்திலிருந்து வெளிப்பட்டு, ஆக்கபூர்வமான மாற்றங்களைத் தேடித்தேடி அவற்றைப் பகிரங்கமாகப் பகிர்ந்து பரவலாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். பெண்மையின் கருவறையிலிருந்து ஊறிக் கண்விழித்து மலர்வதுதான் எந்த உயிருமே. இந்த உயிரின் ஆணிவேரையே தீட்டு எனக் காறித்துப்பும் ஆணாதிக்கத்தை அடியோடு பிடுங்கிப் போட வேண்டும். இந்த நியாயக்குரலை பெண் மட்டுமன்றி ஆணும் சேர்ந்து உரத்துச் சொல்லியாக வேண்டும். ஆணாதிக்கப் புற்றுநோய் ஆணிடமிருந்தாலும் பெண்ணிடமிருந்தாலும் அறுவை சிகிச்சை செய்தாலும் அதனை அகற்றியாக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும். உயிருக்கும் ஊருக்கம் உலகத்துக்கும் ஆபத்தான ஆபத்துதான். -தினமணி

http://www.thinakkural.com/news/2006/12/2/...s_page16458.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா அங்க மூக்கைச் சிந்தி அழுகிறது?....

பொம்பிளையள் தங்களுடைய சோம்போறித்தனத்திற்கும் சுய நலத்திற்காகவும் ஆண்களான நமக்கு ரெண்டு கொம்புகள் நாலு கோரப்பற்கள் இருக்கெண்டா அதை நம்பி.... ஆலோசனைக்கூட்டம் நடாத்தி என்னப்பா செய்யிறதா உத்தேசம்?

ஆதி அதுமட்டுமல்ல..இப்படி கொம்பும் கோரப்பற்கள் வரைவதற்கு என்று பெண்களுக்கு தூரிகை சுமக்கும் ஆண்களும் உண்டு. அவர்கள் தானாம் ஆணாதிக்கமற்ற ஆண்கள்.

இந்த ஆணாதிக்கம் என்ற ஆண் பெண் ஈகோ கதையளப்பு ஆணும் பெண்ணும் உலகில் உள்ளவரை நிற்கப்போவதில்லை. உரிமைகள் உலகில் யாராலும் கொடுத்து வாங்கப்படும் நிலையில் இல்லை. இருப்பதை தாங்களே எடுத்து பாவிக்கும் நிலையே உண்டு. அதைச் செய்ய பெண்களுக்கு பஞ்சி என்றால் ஆண்களைக் குற்றவாளியாக்கி முடக்க முயல்கின்றனர். ஆண்களின் வன்முறையாளர்களை ஆணாதிக்க சக்திகளாக்கி ஒட்டுமொத்த ஆண்களுக்கும் ஒரே பட்டம் சூட்டிவிடுகின்றனர். இத்தனைக்கும் பெண்கள் மத்தியில் உள்ள வன்முறையாளர்களுக்கு பெண்ணாதிக்க சக்திகள் என்று எவரும் பட்டம் குத்துவதில்லை. காரணம் ஆண்களுக்கு அப்படிச் செய்துதான் தங்கள் உரிமைகளை பாவிக்க வேண்டும் என்றில்லை, பெண்கள் (எல்லோரும் அல்ல) தங்கள் இயலாமைகளை மறைக்கவே இப்படியான கோசங்களைப் போடுகின்றனர் என்பதில் ஆதியின் கருத்தோடு நமக்கும் உடன்பாடே. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.