Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவும் இனப்படுகொலையாளியே! தமிழரசுக்கட்சி அறிவிப்பு!!

Featured Replies

மஹிந்த எவ்வாறு போர்க்குற்றவாளியோ இன அழிப்பாளனோ அதே போன்றே சந்திரிகாவும் போர்க்குற்றவாளியும் இன அழிப்பாளியுமாவார்.

மஹிந்தவை தண்டிக்க எவ்வாறு பாடுபடுகின்றோமோ அதே போன்றே சந்திரிகாவும் தண்டிக்கப்படவேண்டியவர்.அவ்வாறானவரினை அழைத்து தந்தை செல்வாவிற்கு நினைவு தினம் நடத்துவதை தந்தை செல்வாவின் ஆவி கூட மன்னிக்காதென குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன்.பதிவு இணைய  செய்திகள்
pro3.JPG
தமிழரசுக்கட்சியின் துணைதலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலத்தினால் எழுதப்பட்ட தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவிக்கையினில் இலங்கையினில் இருந்த ஜனாதிபதிகளுள் கூடிய அளவு இராணுவ நடடிக்கைகளினை மேற்கொண்டு சாதனை புரிந்தவர் சந்திரிகாவே.செம்மணி படுகொலை,நவாலி தேவாலயப்படுகொலை,கிளிநொச்சி,மாங்குளம் என அவர் அரங்கேற்றிய படுகொலைகள் கொஞ்சநஞ்சமல்ல.

பனங்காயினில் உடுப்பு தோய்க்கவும் குளிக்கவும் வைத்தவர் இந்த அம்மணிதான்.அதனை தமிழரசுக்கட்சியினுள் வழிப்போக்கர்களாகவும் பின்கதவு வழியாகவும் வந்தவர்கள் அறிந்திருக்கப்போவதில்லை.அவர்கள் தமிழ் தேசியம் 30 வருட கால அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்களினில் இழந்தவைகள்,தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள இப்புத்தகத்தை அவர்களிற்கு சமர்ப்பிக்கின்றோமென தெரிவித்தார்.

அதே போன்றே ரணில் விக்கிரமசிங்கவும் சாதாரணமானவரொருவர் அல்ல.விடுதலைப்புலிகளை பிளந்து முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து அனைத்தையும் முடித்து வைக்க காரணமானவர்.

இப்போது எமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ரணில் -சந்திரிகாவை ஆட்சிக்கொண்டு வந்து தேனிலவு கொண்டாடுகின்றார்கள்.

எங்கள் மக்கள் கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள்.தலைவர்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.கேள்வி கேட்கின்றனர்.ஆனால் மக்களை சந்திக்காத தலைவர்கள் எமது தலையெழுத்தை தீர்மானிக்கின்றார்கள்.சந்திரிகாவிற்கு அரசியல் வாழ்வு கொடுக்க இப்போது பாடுபடுகின்றார்கள் என தெரிவித்தார்.பதிவு இணைய  செய்திகள்

அவரது உரையினை ஆமோதிக்கும் வகையினில் பலத்த கரகோசம் பார்வையாளர்களிடையெ எழுப்பப்பட்டது.

பேராசிரியர் க.சிற்றம்பலத்தினால் எழுதப்பட்ட தடம் பதித்த தமிழ் தேசியம் நூலை தந்தை செல்வா ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆயர் ஜெபநேசன் அடிகளார் வெளியிட்டு வைக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.பதிவு இணைய  செய்திகள்

யாழ்.வீரசிங்கம் மாநாட்டு மண்டபத்தினில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நிகழ்வினில் தமிழரசுக்கட்சி செயலாளர் பொன்.செல்வராசா தந்தை செல்வா ஞாபகார்த்த அமைப்பின் தலைவர் ஆயர் ஜெபநேசன் அடிகளார் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர். http://www.pathivu.com/news/39768/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கட்சி ஒரு வழி பண்ணப்போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதனை தமிழரசுக்கட்சியினுள் வழிப்போக்கர்களாகவும் பின்கதவு வழியாகவும் வந்தவர்கள் அறிந்திருக்கப்போவதில்லை

:icon_mrgreen::icon_mrgreen:

தந்தை செல்வாவின் சிராத்த தினத்துக்கு சந்திரிக்கா அழைக்கப்பட்டிருந்தார்.

பதிவு இணையத்தளம் பொய்களை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது .சிவகரனை தமிழரசுக்கட்சி ,கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது .பின்பு எப்படி இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் என்று எழுதமுடியும் .



தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் .பதிவு பொன்.செல்வராசா செயலாளர் என்கிறது பதிவு இணையத்தளத்தை நடத்துபவர்கள் மொக்கு கூட்டத்தின் சொந்தங்கள் போல கிடக்கு !
 

 
 
 
 
அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்'[/size]

 


10-01-2015 04:38 PM
Comments - 0       Views - 1457

itk.jpg- பொ.சோபிகா

தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது,

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இடைநீக்கியுள்ளதாக அறிவிக்கவுள்ளோம்.

அடுத்த கட்டமாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளது. விசாரணையின் பின்னர்  குறித்த உறுப்பினர்களின் பதவி மற்றும் உறுப்புரிமை நீக்குவது தொடர்பாக மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

- See more at: http://www.tamilmirror.lk/137406#sthash.vDOW0kbD.dpuf[/size]

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.