Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுப்பிரச்சனை -எட்டப்பனின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவனையாளர் பாதுகாப்புச் சபைகள்;

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம், நவ.19

குடாநாட்டில் பொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் பாவனையாளர் பாது காப்புச் சபைகளை அமைக்க சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ டிக்கை எடுத்துள்ளார்.

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத் துறை அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அச்செய்திக்குறிப்பில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது:

குடநாட்டு மக்களுக்கான உணவு மற் றும் அத்தியாவசிய பொருள்களுக்கான விநியோகத்தின் போது பொருள்களின் பாது காப்பு, உரிய நிறை, நியாயவிலை என்பவற் றுடன் அப்பொருள்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்ற னவா என்பவற்றை உறுதிப்படுத்தும் முக மாகவும்

அதன் மூலம் மக்கள் முகம் கொடுத்து வரு கின்ற நெருக்கடி நிலைமைகளை அகற்றி அம் மக்களுக்கான பொருள்களின் விநி யோகத்தை சீர்செய்யும் நோக்கிலும் பாவ னையாளர் பாதுகாப்புச் சபைகளை அமைப்பதற்கு சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா நட வடிக்கைகளை எடுத் துள்ளார்.

எழுத்து மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் குடாநாட்டு மக்கள் அமைச்சரிடம் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே அமைச்சர் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்.

கூட்டுறவு சபைகளின் இயக்குநர்கள் சார்பாகக் குழுக்களை பிரதிநிதித்து வப்படுத்துகின்றவர்களில் சிலரையும் உணவுப் பங்கீட்டு அட்டைகளைக் கொண் டிருப்பவர்களில் சிலரையும் இணைத்து கூட்டுறவு சங்ககிளை கள் தோறும் மேற் படி பாவனையாளர் பாது காப்பு சபைகள் அமைக்கப்படவுள்ளன.

யாழ்.குடாநாட்டு மக்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் களுக் கான விநியோகம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகவே மேற்கொண்டு வரும் நடவடிக்கைக ளுக்கு ஏது வாக யாழ். அரசாங்க அதிபர் தனது ஆய்வு அறிக்கை ஒன்றினை வெளி யிட்டுள்ளார் என்று உள்ளது.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன்ர கருத்தும் உவனும் சீ தூ இவன மனுசனா மதிக்கிறதுக்கும் தமிழர் இருக்கீனம் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டக்ளஸ் தேவானந்தா..!

வணபிதா ஜிம்பிறவுண் கடத்தலுக்கும் ஈ பி டி. பி ஒட்டுக்குழுவுக்கும். நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.கடற்படையுடன் இணைந்து செயல்படும்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூலிப்படைகள் ஜிம்பிறவுன் அடிகளாரை கடத்தியதை நேரில் கண்டவர்கள் இச்செய்தியை உறுதி செய்கின்றனர்-

இதில் நான்கு ஈ பி டி.பி உறுப்பினர்கள் ஈடுபட்டதாகவும். அதே வட்டாரம் தெரிவிக்கின்றன.

மாறிமாறி ஆட்சிக்கு வரும். சிங்கள ஆட்சியாளருக்குத் தோள் கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தா 1984 இல் சர்வதேச உணர்வலைகளைக் கிளப்பிய ஆள்கடத்தல் ஒன்றை செய்தார். அது அவருக்கு தோல்வியைக் கொடுத்ததோடு ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கங்களுக்கும் பாரிய பின்னடைவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியது. ஈ பி ஆர் எல் எப் கும்பலின் வீழ்சியின் ஆரம்பம் என்று.1984 இல் டக்ளஸ் தேவானந்தா நடத்திய அமெரிக்கர்களான அலன் தம்பதியினரின் ஆள்கடத்தலே வரையறை செய்யப்படுகின்றது.

கதிரவேல் நித்தியானந்தா டக்ளஸ் தேவானந்தா என்ற நீண்ட பெயர் படைத்த டக்ளஸ்.கதிரவேல் என்பவரின் மகனாவார். நித்தியானந்தா கதிரவேலின் உடன்பிறந்த சகோதரர்.இவர்தான் இலங்கை தொழி;ற்சங்க வரலாற்றில் தடம்;பதித்த கே.சி நித்தியானந்தா எனப்புடுபவர். தொழிற்சங்க வளர்சிக்காகத் தனது வாழ்கையை ஈடுபடத்திய நித்தியானந்தா ஒரு கட்டை பிரமச்சாரி. டக்ளஸ்சை தனது பிள்ளைபோல் வளர்த்தவர். அந்த நன்றிக் கடனுக்காக நித்தியானந்தாவின் பெயரையும் தனது பெயரோடு டக்ளஸ் இணைத்துள்ளார்.

டக்ளஸை விடுதலைப்போரில் நாட்டம் கொள்ள வைத்தவர் இளையதம்பி இரத்தினசபாபதி என்பவரே. இராணுவப்பயிற்சி பெறுவதற்காக டக்ளஸை லெபனானுக்கு இரத்தினசபாபதியே அனுப்பி வைத்தார். டக்ளஸ் என்ற இயக்கப்பெயரை வைத்திருக்கும் தேவானந்தா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த அமைப்பின் இராணுவப் பிரிவை. மக்கள் விடுதலை இராணுவம். (Peoples Liberation Army) என்ற பெயரில் உருவாக்கி அதற்கு தானே தலைவராகவும் அமர்ந்தார் ஈ-பி-ஆர்-எல்-எப் உறுப்பினர்கள் அவரை ஜெனரல் டக்ளஸ் என்றே அழைப்பர்.ஈ.பி.டி.பி என்று புதிய அமைப்பை அவர் பிற்காலத்தில் உருவாக்கினார்.

மே 10ம்தேதி 1984 ம்நாள் அமெரிக்காவின் ஓகையோ (ohio) மானிலத்தைச் சேர்ந்த

கணவன் மனைவியான ஸ்ரான்லி அலன், மேரி அலன். யாழ்பாணத்தில்கடத்தப்பட்டனர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமுக நிலையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் சமூக சேவைகள் அமைச்சு அறிக்கை

குடாநாட்டில் சுமுக நிலையை ஏற் படுத்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு வெளி யிட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அச்செய்திக் குறிப்புக்களில் தெரி விக்கப்பட்டுள்ள பிரதான விடயங்கள் வருமாறு

* குடாநாட்டில் கல்வி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்ற மாண வர்களின் நன்மை கருதி பல்வேறு நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

* வேம்படி வீதியை மாணவர்களின் நலன் கருதி பிற்பகல் 1.45 மணி முதல் 2.45 மணிவரை வாகனப் போக்கு வரத்துக்கு மூடிவைக்க அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத் துள்ளார்.

* குடாநாட்டில் மின் விநியோகத் தைச் சீராக்கும் பொருட்டு 24 மணி நேர மும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நேற்றுமுன்தினம் முதல் இரவு 12 மணி வரை மின்சார விநியோகம் மேற் கொள்ளப்படுகின்றது.

* குடாநாட்டில் உள்ள பேக்கரி களின் உற்பத்திகள் மக்களுக்கு இலகு வாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பொருள்கள் சகல ருக்கும் கிடைக்க வசதி செய்யப்படும்.

--------------------------------------------

யாழ்.பல்கலைக்கழகத்தை மீளத் திறக்க டக்ளஸ்

நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதற்குக் கண்டனம்

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரின் யாழ். வருகை யினை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியமும் கலைப் பீட மாணவர் ஒன்றியமும் தனித்தனியாகக் கண்டித்துள்ளன.

யாழ்.குடாநாட்டு மக்கள் மீது பெரும் மனித அவலத்தினை உருவாக்கி, குழம் பிய குட்டையில் மீன் பிடிப்பது போல அமைச்சரின் யாழ். வருகை அமைந்திருக்கிறது.

பெரும் அவலத்திற்குள் சிக்குண்டு தத்தளித்துக்கொண்டிருக்கும் குடாநாட்டு மக்கள் மத்தியில் போலி அரசியல் நடத்தி லாபம் தேட முனைகின்றனர் ஈ.பி.டி. பியினர்.

அரசாங்கத்தினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு எவ்வித கற்றல் செயற்பாடுகளும் இன்றி மூடப்பட்டி ருக்கிறது. யாழ். பல்கலைக்கழகம் அதே அரசாங்கத்துடன் சேர்ந்து நின்று கொண்டு, பல்கலைக்கழகத்தினை மீளத் திறப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுப்ப தாகக் கூறுவது எமக்கு வேதனையாக இருப்பதோடு இது ஓர் அரசியல் உள் நோக்கம் கொண்டதுமாகும் இவ் வாறு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக் கிறது.

விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம்

ஏ9 பாதை மூடப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீது அடக்குமுறை கட்ட விழ்த்துவிடப்படுவதற்கு அரசாங்கத் துக்குத் துணையாக நின்ற அமைச்சரின் யாழ்.விஜயம் ஒரு கண்துடைப்பும் போலி அரசியலுமாகும்

கடந்த மூன்று மாதங்களில் பல் கலைக்கழக மாணவர் ஒருவர், தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் மற் றும் பாடசாலை மாணவர்கள் கொடூர மான முறையில் கொலை செய்யப்பட் டுள்ளனர். வவுனியாவில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் கல்விச் சமூகம் பீதியில் உறைந்துள்ளது

அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்படும் செயற்பாட்டினால் யாழ். பல்கலைக்கழகத்தில் எந்த ஒரு கல்விச் செயற்பாடும் நடைபெறவில்லை. இத் தகைய செயற்பாடுகளுக்கு உடந்தை யாக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா, யாழ்.பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறு வது பெரும் கேலித்தன மானதாகும்

இவ்வாறு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது.

-உதயன்

Edited by கந்தப்பு

அத்தியடி குத்தியனுக்கு மகா லொல்லோ லொல்லு... :rolleyes::D:D

அத்தியடி குத்தியனுக்கு மகா லொல்லோ லொல்லு... :rolleyes::D:D

மகிந்தா 2 கேம் விளையாட போகிறார்........

இன்று நடக்கும் இனையத்தள நாடுகளின் அறிக்கையில் பாதை திறப்பை முன் நிலைய் படுத்துவதுக்கும் வரும் மாவீரர் உரையின் முக்கியத்துவத்தையும் குறைக்கவும் தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளை குறைக்கவும் தான்.............

:rolleyes: சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா! :D

- பண்டார வன்னியன் ஆழனெயலஇ 20 ழேஎநஅடிநச 2006 13:56

சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது.

தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர்பாக யாருக்கும் கூறக்கூடாது.

என எச்சரிக்கைசெய்து வைத்தியரை அனுப்பிவைத்துள்ளனர். டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைஒன்றும் உறுதி செய்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் பின்பே யாழ்ப்பாணத்தில் இவருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.