Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கராச்சாரியாருடன், மைத்திரி விரைவில் ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயேந்திரருடன், மைத்திரி விரைவில் ஆலோசனை.

கொழும்பு: இலங்கையில் மத ஒற்றுமைக்காக காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

அதை தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுடனும், அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவையும் வளர்த்து வருகிறார்.

இலங்கையில் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். தமிழர்கள் இந்துக்களாக உள்ளனர். எனவே, இரு சமுதாயத்தினரையும் ஒற்றுமைப்படுத்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் ஊடக துறை கூடுதல் செயலாளர் சமன் அதாயுதாகெத்தி ஆகியோர் அடங்கிய குழு கடந்த வாரம் புதன்கிழமை காஞ்சீபுரம் வந்தனர்.

அவர்கள் சங்கராச்சாரியாரை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளனர். இந்த தகவலை இந்து அறநிலைய விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சங்கராச்சாரியாருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் மூலம் அவரை இலங்கை அரசு தொடர்பு கொண்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலக ஊடக கூடுதல் செயலாளர் சமன் அதாயுதாகெத்தி கூறும் போது, இந்து மற்றும் புத்த மதத்துக்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சங்கராச்சாரியை சந்தித்து நாங்கள் இலங்கை கோவில் குழுக்கள், பூசாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியும் அவரிடம் கேட்டுக்கொண்டோம். அதற்கு விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகறிந்த ஆன்மீகவாதியான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனை மேடைகளில் அவமதிக்கும் ரணில்லாதனைச் சமன்செய்ய சங்கராசாரியார் அவர்களை அரசியல் பகடைக்காயாக்க முனைகிறாரா?.

ஈழத்து ஆன்மீகவாதியும் மக்கள் தலைவருமான  விக்னேஸ்வரனை அவமதிக்கும் போக்கை ரணில் கைவிடும்வரைக்கும் சங்கராச்சாரியார் அவர்கள் ரணிலை சந்திப்பது அழகல்ல? 

Edited by poet

இந்தியாவுக்கு முக்கியம் சங்கராச்சாரியர் ரணிலை சந்திப்பதுதான்......முதலமைச்சரை சந்திப்பது இரண்டாம் பச்சம்......

  • கருத்துக்கள உறவுகள்

சங்கராச்சாரியாருடன், மைத்திரி விரைவில் ஆலோசனை

தமிழர்களின் கைக்கு ஒரு ஆரோக்கியமான அழைப்பு வருகிறது..

சங்கராச்சாரியார் அவர்கள் தமிழர்பால் அன்பு கொண்டவர்

கவனமாகவும்  

இதை தமிழருக்கு நன்மை ஏற்படுத்தும் வழியாக எவ்வாறு மாற்றலாம் என்றும் தூர நோக்கோடு சிந்தித்து

செயலாற்றுவார் என நம்புவோம்... 

ஐயா இப்படி காமடி கீமடி பண்ண கூடாது. இது ரொம்ப ஓவர்.  :D
சங்கராச்சாரியார் யார்? ஜெயேந்திரரர் சுவர்ணமால்யாவுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்து 
ரொம்ப பிரபல்யம். சங்கர் ராமன் கொலை கேஸ் இன்னமும் நிலுவையில் இருக்கு. 
பெண் விடயத்தில் நித்தியானந்தாவையே தூக்கி சாப்பிடும் மகா ஞானி  :lol:
ஜெயேந்திரர். அவருடைய சிஷ்யன் விஜயேந்திரர் (அடுத்த சங்கராச்சாரியா) சுவர்ணமால்யாவுடன் 
கில்மா என்று மிகவும் நற்பெயர் எடுத்தவர். இவங்கள் மத நல்லிணக்கம் பற்றி மைத்திரிக்கு 
போதிக்க போறாங்கள். நல்ல காமடிதான். மைத்திரிக்கு இவங்கட அட்வைஸ் ஒன்றும் தேவை இல்லை.
மைத்திரி எவ்வளவோ பெட்டர்.  :lol:  :D  :icon_idea:

விசுக்கு சொல்வதை இராசதந்திர அடிப்படையில் புரறந்தள்ளிவிடமுடியாது. உதவுமெனில் சிறுதுரும்பும் முக்கியம்தான். தோல்வியின்பின்னான மக்களின் கையறு நிலையை நாம் எப்பவும் மறந்துவிட முடியாது.  எனினும் விக்னேஸ்வரனை புறக்கணிக்கிற சூழலை சங்கராச்சாரியார் அங்கீகரிக்கக்கூடாது என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இப்படி காமடி கீமடி பண்ண கூடாது. இது ரொம்ப ஓவர்.  :D
சங்கராச்சாரியார் யார்? ஜெயேந்திரரர் சுவர்ணமால்யாவுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்து 
ரொம்ப பிரபல்யம். சங்கர் ராமன் கொலை கேஸ் இன்னமும் நிலுவையில் இருக்கு. 
பெண் விடயத்தில் நித்தியானந்தாவையே தூக்கி சாப்பிடும் மகா ஞானி  :lol:
ஜெயேந்திரர். அவருடைய சிஷ்யன் விஜயேந்திரர் (அடுத்த சங்கராச்சாரியா) சுவர்ணமால்யாவுடன் 
கில்மா என்று மிகவும் நற்பெயர் எடுத்தவர். இவங்கள் மத நல்லிணக்கம் பற்றி மைத்திரிக்கு 
போதிக்க போறாங்கள். நல்ல காமடிதான். மைத்திரிக்கு இவங்கட அட்வைஸ் ஒன்றும் தேவை இல்லை.
மைத்திரி எவ்வளவோ பெட்டர்.  :lol:  :D  :icon_idea:

தமிழரது இன்றையநிலையில்

எவர்  குற்றினாலும் அரிசியானால் சரி என்பது எனது தனிப்பட்ட கருத்து

புண்ணியகைகள் தான் குற்றணும் எங்களுக்கு என்றால்

நானே அதற்குள் வரமாட்டேன்... :(

பின்னர் எப்படி என்னால் மற்றவரை நோக்கி எழுதமுடியும்?? :(

ஐயா யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்று தாங்கள் சொல்வது ஆக்கபூர்வமான கருத்துதான்.
ஆனால் இவங்கள் குற்றினால் அரிசி வராது. உமி கிடைக்கிறதே பெரிய விஷயம்.   :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.