Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் காரணமாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

Featured Replies

maithrepala%20srisena_CI.jpg

யுத்தம் காரணமாக நாட்டின் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுற்றாடலுக்கு அழிவு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் எந்தளவிற்கு கருணைற்ற விதத்தில் நடந்து கொண்டாலும், சுற்றாடலை பாதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் சுற்றாடலை இதுவரை காலமும் பாதுகாத்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக்கல்லூரி மாணவர்களினால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119639/language/ta-IN/article.aspx

எந்த அடிப்படையில் அதை கூறுகின்றார், என்பதை விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதுதான் இவர் என்ன சொல்லுறரர் எண்டு சரியா விளங்கவில்லை.....

சுற்றாடல் பாதிக்கபடவில்லையாமோ? :icon_mrgreen: :icon_mrgreen:

என்ன அலட்டுறார் :icon_mrgreen: :icon_mrgreen:

மல்டி பரலாலையும், கொத்துக்குண்டாலையும் ஏன் நச்சு வாய்வாலையும் அடிச்சதொன்றும் பாதுகாப்பு அமைச்சராய் இருந்தவருக்கு தெரியாதோ?

இறப்புகலாலும், இடம்பெயர்வாலும் சூழல் சமனிலை பாதிகப்பட்டுள்ளது தெரியாதோ?

வாழ்விடங்களும் வயல் நிலங்களும் காடுபத்தி போய் இருப்பது தெரியாதோ?

என்ன புலுடா விடுகிறார்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுற்றாடலுக்கு அழிவு ஏற்படாது தமிழீழ விடுதலைப்புலிகள் எப்படிப் பாதுகாத்தனர் என்பதை வியந்தும், அதனை ஏனைய மாகாணங்களும் அறிந்துகொள்ளும் வண்ணமும், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். :icon_idea:
 
தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர் என்பது ஒருபுறமிருக்க....

1. உண்மையிலே வடகிழக்கில் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டிருகின்றதா?

2. அல்லது வடகிழக்கு முழுதாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்சியிலா இருந்தது?

தமிழீழ விடுதலைப்புலிகளை புகழ்வதுபோல கருத்துதெரிவித்து மைத்திரி மண்டையில் மிளகாய் அரைப்பது தெளிவாக விளங்குகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்கள்

மக்களின்றி வெறிச்சோடி இருப்பதை

மக்கள் தொகை  குறைக்கப்பட்டதை சொல்கிறாரோ....? :(

தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர் என்பது ஒருபுறமிருக்க....

1. உண்மையிலே வடகிழக்கில் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டிருகின்றதா?

2. அல்லது வடகிழக்கு முழுதாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்சியிலா இருந்தது?

தமிழீழ விடுதலைப்புலிகளை புகழ்வதுபோல கருத்துதெரிவித்து மைத்திரி மண்டையில் மிளகாய் அரைப்பது தெளிவாக விளங்குகின்றது

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுற்றாடலுக்கு அழிவு ஏற்படாது தமிழீழ விடுதலைப்புலிகள் எப்படிப் பாதுகாத்தனர் என்பதை வியந்தும், அதனை ஏனைய மாகாணங்களும் அறிந்துகொள்ளும் வண்ணமும், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். :icon_idea:

சுற்றாடல் பாதிக்கப்படாத ஒரு கிராமத்தை ஏனும் கூற முடியுமா?

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன சொல்ல வாறார் என்றால்.. யுத்தத்தால்.. வடக்குக் கிழக்கில் வளங்கள் பயன்படுத்தப்படாமல்.. கிடக்குது. சிங்களவர்கள் அங்க போய் அதை சூறையாடி.. புத்தர் கோவிலும் கட்டி.. குடியும் இருங்கள் என்பது தான். உண்மை தானே.. கடல் வலயச் சட்டங்கள்.. பாதுகாப்பு வலயங்கள்.. என்று எங்கள் வளம் பூரா.. கொள்ளை அடிக்கப்பட்டிருக்குது. யுத்தம் காரணமாக புலிகள் அதை திருடிச் செல்ல அனுமதிக்கவில்லை. எனி திருடலாம். மைத்திரி மேஜர் பிளானோட தான் அறிக்கை விடுறார். எங்கட ஆக்கள் அதனை சுயபுகழ்ச்சிக்கு பயன்படுத்திட்டு.. கம்மென்று இருக்க.. சிங்களவன் தன்ர விளையாட்டை காட்டிக்கிட்டு.. கூட்டிப் பெருக்கி அள்ளிக்கிட்டு போறான். :):rolleyes:

Edited by nedukkalapoovan

எங்கட ஆக்கள் அதனை சுயபுகழ்ச்சிக்கு பயன்படுத்திட்டு.. 

சரியாக சொன்னீர்கள்

எங்கடையாக்களுக்கு உது இருந்தா எல்லாத்தையும் மறந்துடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர் என்பது ஒருபுறமிருக்க....

1. உண்மையிலே வடகிழக்கில் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டிருகின்றதா?

2. அல்லது வடகிழக்கு முழுதாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆட்சியிலா இருந்தது?

தமிழீழ விடுதலைப்புலிகளை புகழ்வதுபோல கருத்துதெரிவித்து மைத்திரி மண்டையில் மிளகாய் அரைப்பது தெளிவாக விளங்குகின்றது

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்பு குறித்து கூடுதல் கரிசனை கொண்டிருந்தார்கள்: ஐங்கரநேசன் 

1ce4ba437b6b4c5fe98a546d9758a06b.jpg

 விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

இன்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
 
இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=444443949230851373#sthash.75OFs07E.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே

பொலித்தீன் பைகளைத்தடை செய்த ஒரு அமைப்பு புலிகள் மட்டுமே என நினைக்கின்றேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.