Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப் பொருள் கும்பலின் சொர்காபுரியாக மாறிவரும் யாழ்ப்பாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போதைப் பொருள் கும்பலின் சொர்காபுரியாக மாறிவரும் யாழ்ப்பாணம்
[ புதன்கிழமை, 13 மே 2015, 07:48.09 AM GMT ]
rugs.jpg

யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

 

தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ் நகரப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணமான கடைகளில் கூட மிகச் சாதரணமாக விற்பனை செய்து வருவதாக நேரில் கண்டோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப் பொதைப் பொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் இளம் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் மல்லாகத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் குறித்த போதைப்பொருளைப் பயன்படுத்திய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாணவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக பல்வேறு முறைகளில் போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றமை பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் நாடு சுமூகமான முறையில் இருப்பதாக பேசப்பட்டு வரும் இந்த நிலையில் தற்பொழுது தமிழர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை அதிகரிக்கச் செய்து அவர்கள் மீது வேண்டுமென்று காலாச்சார சீரளிவுகளை திணிப்பதாக கல்விமான்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

tamilwin

உண்மை தான்,

கடந்த கிழமை விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்றிருத்த வேளை "மச்சான் ஆழ் KG கேஸ்" எண்டு கதைச்சாங்கள், நானும் என்னடா இவங்கள் KG KG என்டுறாங்களே! KG எண்டா என்னடா எண்டு கேட்டன்

KG என்றால் கேரலத்து கஞ்சாவாம் :rolleyes:

அப்ப பாருங்களேன் :rolleyes:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பனங்காய் அண்ணனட்டக் கேட்டால்.. இதெல்லாம்.. ஜனநாயகம்.. நல்லாட்சி.. பூத்துக்குலுங்குவதன் அடையாளம் என்பார். ஆளைக் காணமே. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பனங்காய் அண்ணனட்டக் கேட்டால்.. இதெல்லாம்.. ஜனநாயகம்.. நல்லாட்சி.. பூத்துக்குலுங்குவதன் அடையாளம் என்பார். ஆளைக் காணமே. :lol::D

ஆர் கண்டது யாழ் களம் மாதிரி காவல்துறையிடம் சிங்கன் சட்டம் கதைச்சு இருப்பார் உடனே பல்லாக்கில் ஆளை அள்ளிகொண்டு

போயிட்டாங்களோ தெரியலை அவரின் அவதாரையும் காணவில்லை :)  :rolleyes:  

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும்,
அதனை, மற்றவர்களிடம்..... வினியோகிப்பவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
 

புலிகள்... இருந்திருந்தால், யாழ்ப்பாணத்தில்...  எல்லாம்,
இப்படியான... அன்றாட செய்திகளை... கேள்விப் பட்டிருக்கவே முடியாது.
இரண்டு பேருக்கு... "லைட் போஸ்ட்" தண்டனை கொடுக்க.....
வடக்கு மட்டுமல்ல... வன்னியும், கிழக்கும் சேர்ந்த... முழுத் தமிழீழமும் திருந்தி இருக்கும்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும்,

அதனை, மற்றவர்களிடம்..... வினியோகிப்பவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

 

புலிகள்... இருந்திருந்தால், யாழ்ப்பாணத்தில்...  எல்லாம்,

இப்படியான... அன்றாட செய்திகளை... கேள்விப் பட்டிருக்கவே முடியாது.

இரண்டு பேருக்கு... "லைட் போஸ்ட்" தண்டனை கொடுக்க.....

வடக்கு மட்டுமல்ல... வன்னியும், கிழக்கும் சேர்ந்த... முழுத் தமிழீழமும் திருந்தி இருக்கும்.

 

வரபோகினம் சண்டைக்கு ரெடியாகுங்கோ  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.