Jump to content

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி


Recommended Posts

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி

 

சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம்.

 

211owp5.jpg

 

இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

 

சிக்கன் - 1/2 கிலோ

 

பெரிய வெங்காயம் - 1

 

பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)

 

இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

 

பச்சை மிளகாய் - 8 (அரைத்தது)

 

உப்பு - தேவையான அளவு

 

எண்ணெய் - தேவையான அளவு

 

அரைப்பதற்கு...

 

பட்டை - 2

 

கிராம்பு - 4

 

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

 

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

 

சீரகம் - 1/2 டீஸ்பூன்

 

சோம்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பிறகு அதில் சிக்கனை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

 

பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

 

சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறினால், காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெடி!!!

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/kakinada-chicken-dry-fry-008238.html

Link to comment
Share on other sites

அது சரி இந்த சமையல் குறிப்புகள் எழுதிற வெங்காயத்திற்கு தமிழ் தெரியாதா? 
அது என்ன சிக்கன் பிறை ரெடி..இவ்வளவு காலமும் தமிழ் நாட்டு டமிலர் தமிழை பேசி தான் கொன்றார்கள் இப்ப எழுதியும் கொல்ல வெளிக்கிட்டிட்டாங்கள் போல. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது சரி இந்த சமையல் குறிப்புகள் எழுதிற வெங்காயத்திற்கு தமிழ் தெரியாதா? 
அது என்ன சிக்கன் பிறை ரெடி..இவ்வளவு காலமும் தமிழ் நாட்டு டமிலர் தமிழை பேசி தான் கொன்றார்கள் இப்ப எழுதியும் கொல்ல வெளிக்கிட்டிட்டாங்கள் போல. 

 

 

 

கால மாற்றத்திற்கேற்ப கலை கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் மாறுகின்றனவாம். அது போலவே மொழி கலப்புகளையும் வரவேற்க வேண்டும்.  :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 

அது சரி இந்த சமையல் குறிப்புகள் எழுதிற வெங்காயத்திற்கு தமிழ் தெரியாதா? 
அது என்ன சிக்கன் பிறை ரெடி..இவ்வளவு காலமும் தமிழ் நாட்டு டமிலர் தமிழை பேசி தான் கொன்றார்கள் இப்ப எழுதியும் கொல்ல வெளிக்கிட்டிட்டாங்கள் போல. 

 

 

ஆஆ வெங்காயம் போட மறந்து போனார்களா :icon_mrgreen::lol:  நீங்க வெங்காயத்தை போட்டு செய்யுங்கோ :o:lol: :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.