Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தனிக்கிறார்கள் : வடக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தணிக்கிறார்கள் : வடக்கு முதல்வர்
c325897187c0883cc05aa993a209e651.jpg

புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும்.

 
 நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றச் செயல்கள் ஆவன
 
. இன்றைய இந்தச் சோகச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யார் யார் இந்த ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை மக்கள் விழிப்பாய் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
 
பல காரணங்களின் நிமித்தம் அன்றும் இன்றும் பொலிசாருடன் ஒத்துழைப்பது எமது மக்களுக்கு சற்றுச் சிரமமாகவே இருக்கின்றது. வித்தியாவின் வருகை தாமதம் அடைவது பற்றி பொலிசாரிடம் தாய் தந்தையர் கூறியதும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய இந்தத் துர்ப்பாக்கிய நிலை எழுந்திராது. அதன் பின்னரும் குற்றவாளிகளை கைது செய்வது சம்பந்தமாகத் தாமதத்தையும் அசட்டைத் தன்மையையுங் காட்டுகின்றார்களோ பொலிசார் என்பதிலும் எமது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள். 
 
ஆனால் இத்தருணத்தில் நாங்கள் பொலிசாருக்கு அனுசரணையாகச் செயல்ப்பட வேண்டுமே ஒளிய அவர்களை எதிரிகள் போன்று கணித்து நடந்து கொள்ளக் கூடாது.
 
பொலிசாருக்கும் எமக்கும் இடையில் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி நிலைமையைச் சீர்குலைக்க சில விஷமிகள் கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்பது நன்றாகப் புரிகின்றது.
 
அவர்களின் சாகசங்களுக்கு நாங்கள் அடிமையாகப்படாது. சட்டமும் ஒழுங்கும் ஏற்படுத்தப்பட நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமே ஒளிய உபத்திரவமாய் இருக்கக் கூடாது. இன்று அமைச்சர்கள் அனைவரும் அவசரமாகக் கூடி நிலைமையை ஆராயவிருக்கின்றோம். இது பற்றி சிரேஷ்ட பொலிஸ் உப அதிபருடன் தொடர்பு கொண்டுள்ளோம். பொலிசாருடன் எமது மாகாண சபை உறுப்பினர்களையுஞ் சேர்த்து விழிப்புக் குழுக்களில் இரு தரப்பாரையும் சம்பந்தப்படுத்தி பங்கேற்க வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மீண்டும் ஒரு அறிக்கையை நாம் வெளியிடுவோம். 
 
 
அதே நேரம் நடைபெறும் கண்டனப் பேரணிகள் மக்களால் நடாத்தப்படுபவையே ஒளிய எந்த ஒரு கட்சியினாலோ,தொழிற்சங்கத்தினாலோ, நிறுவனத்தினாலோ அல்ல என்பதை நாங்கள் நினைவுறுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட சில அலகுகள், நிறுவனங்கள் போன்றவை தமக்கு இதனூடாகச் சில தனித்துவமான நன்மைகளைப் பெற முயற்சித்தால் அது இறந்த அந்த அபலைப் பெண்ணுக்கு நாம் செய்யுந் துரோகமாகவே கணிக்கப்படும். 
 
ஆகவே சந்தர்ப்பத்தைப் பாவித்து கட்சி நலம், காடையர் நலம், கரவான நலங் காண விழைபவர்களுக்கு நாங்கள் எச்சரிக்கின்றோம். மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான விளைவுகளை நீங்கள் எதிர்நோக்க நேரிடும்.
 
 
மக்கள் தமது கண்டனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் அமைதியுடன் இன்று தெரியப்படுத்தி விட்டு நாளைய தினம் எமது நிலைமை வழமைக்குத் திரும்ப உதவ வேண்டும். மக்கள் அமைதிகாக்க வேண்டும். இல்லையேல் எம்மை இராணுவத்தால்த்தான் கட்டுப்படுத்த முடியும் பொலிசாரால் கூட முடியாது என்று அரசியல் ரீதியாகப் பேசப்படும். இதற்கு எம்மக்கள் இடமளிக்கக் கூடாது.
 
மிகவும் நிதானத்துடன் எம்மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். கடத்தலிலும் வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபட்ட அனைவருஞ் சட்டத்தின் முன் கொண்டு செல்லப்படுவர் என்று நாங்கள் உறுதி அளிக்கின்றோம். அச் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் கூறிவைக்கின்றோம்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=700394043020764336#sthash.znRC36kR.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
பொலிசாருடன் எமது மாகாண சபை உறுப்பினர்களையுஞ் சேர்த்து விழிப்புக் குழுக்களில் இரு தரப்பாரையும் சம்பந்தப்படுத்தி பங்கேற்க வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மீண்டும் ஒரு அறிக்கையை நாம் வெளியிடுவோம்.

 

 

யாழ் கள உறவுகள் வெளியிட்ட கருத்தை பிரதிபலித்திருக்கும் சிந்தனை. இச் சிந்தனை செயலாகி..வெற்றி பெறவும்.. மக்களின் பாதுகாப்பு இதன் மூலம் அதிகம் உறுதிப்படுத்துவதும் தாயக மண்ணில் நிகழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம். :icon_idea:

சிறிலங்கா பொலிசாரின் பொறுப்பற்ற seyale   இதற்குக் காரணம். முதலமைச்சர் 13 ஆம் திருத்தத்தில் உள்ள மாகாண பொலிஸ் அதிகாரத்தைப் பயன் படுத்தி வடமாகாணத்திற்கான  பொலிஸ் சேவையை ஆரம்பிக்க வேண்டும். இதுவே சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும். இதற்கான கோரிக்கையை தமிழத் தேசியக் கூட்டமைப்பு உடனே முன் வைக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் முடிந்தளவு அதிகபட்ச செயற்திறனை இவ் விடயத்தில் எடுக்க வேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் இந்த விழிப்புக்குழு யோசனையில் நிண்டு சிங்கியடிக்காமல், ஜனாதிபதியுடன் கதைத்து ஒரு காத்திரமான அரச பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புக்குழு அமைக்க சனசமூக நிலயங்கள் போதும்.

ஒரு முதல்வர் தேவையில்லை.

மேலும் போலீஸ் அதிகாரம் பகிரப் பட வேண்டும் எனும் கோரிக்கையை இங்கிருந்து ஆரம்பிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே யாழ் களம் பல பரிந்துரைகளை செய்துள்ளது...

 

 

அன்புச்சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

இவரின் இழப்பு ஒவ்வொரு தமிழனின் வீட்டில் நடந்த இழப்பாக கருதப்படுகின்ற போதும், ஒரு சில எளியதமிழனே இதை செய்திருப்பது மிகக்கேவலமான விடயம்

மக்கள் இடம்பெயர்ந்து காடுபத்திபோயிருக்கும் அழகியதீவகப்பகுதிகளில் இவ்வன்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன

இந்நேரத்தில் உறவுகளிடம் ஒரு அன்பான, நியாயமான கோரிக்கையை வைக்கலாம் என நினைக்கின்றேன்
"ஈழத்தில் உள்ள உங்கள் வீடு வளவுகளை துப்பரவு செய்து பராமரிப்பதன் மூலமோ அல்லது முடியாதவிடத்து அதை அங்குள்ளவர்களுக்கு நியாயமான விலையில் வித்துவிடுவது இவ்வாறான பாழடைந்த பிரதேசங்களை குறைக்க உதவியாக இருக்கும்."

அன்பு உறவு அஞ்சரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

 

 

இந்த நிலை தொடர்வதற்கு ஆக்கிரமிப்பாளன் மட்டும் காரணமல்ல.

 

உண்மையான சமூக நல்நோக்கம் கொண்ட அரசியல் தலைமைத்துவமின்மையும் ஒரு காரணம்.

 

அத்தோடு சமூக ஆர்வலர்கள் செயற்திறன் அற்ற நிலையில் இருப்பதும் இன்னொரு காரணம்.

 

சிறீலங்கா காவல்துறையை நம்பி இருந்தால்.. இப்படியான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது.

 

வடக்குக் கிழக்கு மாகாண சபைகளின் கீழ் காவல்துறை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு மாகாண காவல்துறை சர்வதே நிபுணத்துவ உதவியுடன் அமைக்கப்பட வேண்டும். மேலும் தனியார் பாதுகாப்புக்கு துறையினர் கொண்டு ஊர்கள்.. கிராமங்கள் கண்காணிக்கப்படுவதும்.. குற்றவாளிகளை.. சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யவும் நீதி முன் நிறுத்தவும் செய்ய வேண்டும்.

 

அல்லது தற்காலிக முயற்சியாக..........

 

வெளிநாடுகளில் உள்ளது போல்.. சந்தேகிக்கப்படும்... ஆட்கள் உலாவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகன ரோந்து அணிகளை அனுப்பி.. சந்தேகத்துக்கு இடமானவர்களை தடுத்து நிறுத்தி சோதிக்கும் அதிகாரத்துடன் கூடிய.. உள்ளூர் மக்களைக் கொண்ட தொண்டர் பொலிஸ் துணைப்படை ஒன்றை மாகாண சபை நிறுவிக் கொள்வது நல்லது. அதில் முன்னாள் போராளிகளையும் உள்வாங்கி மதிப்புக்குரிய ஊதியத்துடன் அவர்களை பணிக்கு அமர்த்துவதோடு... சமூகம் தேசம் பற்றி உண்மையான அக்கறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

யாழ் பல்கலைக்கழக சமூக பீடங்கள்.. சும்மா வெட்டிக்கு இருப்பதிலும்.. சமூக ஆய்வுகளை மேற்கொண்டு.. மாகாண அரசுக்கும்.. காவல்துறைக்கும்.. தனியார் பாதுகாப்பு துறையினருக்கும்... சிவில் அமைப்புக்களுக்கும்.. சமூக நிலை குறித்தும்.. எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரேரிக்க கிரமமாகச் செயற்பட வேண்டும்.

 

தொண்டு அடிப்படையில் உள்ளூர் மக்களைக் கொண்ட பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைத்து.. மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் மொபைல் ரோந்து அணிகளை உருவாக்கி.. மாணவிகள்.. இளம் பெண்கள்.. சிறுவர்கள்.. சிறுமிகள்.. மீதான கவனிப்பையும் பாதுகாப்பையும் கூட்ட வேண்டும். அவர்களுக்கு காவல்துறையோடு.. தனியார் பாதுகாப்பு.. மாகாண தொண்டர் பாதுகாப்பு காவல்துறையோடு.. நேரடித் தொடர்புக்கும் வழி சமைக்க வேண்டும்.

 

ஆபத்தான இடங்களினூடு பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்குகளை செய்யவும்.. அபாய எச்சரிக்கை சாதனங்களை வழங்கவும் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தப்படுவதோடு அதற்கான நிதி உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு கமராக்கள் அடங்கிய ரோந்து வாகனங்களை பாடசாலை நேரங்களில் அபாய வீதிகளில் பயன்படுத்தி சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுதலும் முன்கூட்டிய எச்சரிக்கைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுதல் அவசியம்.

 

பாழடைந்த கட்டங்கள்.. பாவனைக்குட்படாத பயணப் பாதைகள் தொடர்பில் மக்களை எச்சரிக்கும் எச்சரிக்கை குறியீடுகள்.. வைக்கப்பட்டு.. மக்கள் அவ்விடங்களை பாவிக்க தடுப்பதோடு.. அவ்வாறான.. கட்டிடங்கள் தொடர்பில் மாகாண அமைச்சு.. ஒரு முழுமையான விசாரணை மேற்கொண்டு.. அவ்வளங்களை மக்கள் பாவிக்க பகிர்ந்து அளிக்க வேண்டும்.

 

மேலும்.. போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத மதுபாவனை.. விபச்சாரம் போன்றவை கடத்தப்படுதல்.. விற்கப்படுதல்.. பாவிக்கப்படுதகல்.. குறித்து.. அனைத்து வழிமுறைகளும் ஆராய்ந்து தடுக்க நடவடிக்கைகள்.. இதய சுத்தியோடு மேற்கொள்ளப்படுவதோடு.. இவை சம்பந்தப்பட்ட.. நீதித்துறை.. காவல்துறை.. சமூகப் பாதுகாப்பில்..  சிங்கள இராணுவப் பிரிவுகளின் தடையீட்டை முற்றாக தவிர்க்க அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் சிறீலங்கா அரசுக்கு கொடுக்கப்பட செய்ய வேண்டும்.

 

இராணுவம் சிவில்.. ஜனநாயகச் சூழலை தமிழ் மக்கள் ருசிப்பதை தடுக்கிறது என்பதை இனங்காட்டும்... சரியான பிரச்சாரங்கள் சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படுவதோடு.. வடக்குக் கிழக்கிற்கு விஜயம் செய்யும் தூதுவர்களுக்கு சரியான ஆதாரங்களோடு இவை அறிக்கைகளாகக் கையளிக்கப்பட்டு.. சர்வதேச அழுத்தப் பொறிமுறை ஒன்றுக்குள் சிங்கள இராணுவத்தையும் அரசையும் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சமூக அநியாயங்களை தமிழ் மக்களே தடுத்து நிறுத்தும் நிலையை தோற்றுவிக்கலாம்.

 

வாள்.. கத்தி.. மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனைக்கு தனியார்... பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும். அவை இன்றி வைத்திருக்கப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உலோக மீள் சுழற்சிக்கு அனுப்பப்படுதல் அவசியம்.

 

இதையெல்லாம்... உண்மையில் சமூக அக்கறை இனப்பற்றிருந்தால்.. இன்றில் இருந்தே சாத்தியமாக்கலாம். புலிகளும் தேவையில்லை.. மைத்திரியின்.. நல்லாட்சியும் தேவையில்லை. :icon_idea::rolleyes:

 

 

ஜீவன் சிவா உங்கள் மனக்குமுறல் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான தமிழர்களின் மனக்குமுறலும்  தான் இங்கே அடங்கியிருக்கின்றது.

இன்று சிங்கள அரசு நல்ல பிள்ளை என்ற முகமூடியில் ஒளிந்திருப்பதால் இந்தப் பிள்ளையின் கொடுமைக்கு உடந்தையாக  இருப்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கூறி நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும்.

ஆனால் நாளை இவர்களுடைய முகமூடி மாறும் போது நடைபெறப்போகும்  இப்படியான செயல்களை அவர்கள் மூடி மறைத்து விடுவார்கள். ஆகவே அதிகாரம் எங்கள் கைக்குள் வரும் வரை இப்படியான செயல்களை யாராலும் கட்டுப்படுத்தவோ முற்றாகவோ  ஒழிக்கவோ முடியாது.

எமது மக்களை எமது பூமியை நாங்கள் ஆளும்போதும் கூட இப்படியான நிகழ்வுகள் நடைபெறலாம். ஏனென்றால் ஈனச்செயல்களைச் செய்பவர்கள் எல்லா தேசங்களிலும் இருக்கின்றார்கள்.ஆனால் இப்படியான நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை  ஏற்கனவே செய்யும் போது அதன் வீரியத்தைக் குறைக்கலாம்.

இந்த முன்னேற்பாடுகள் சிறுவர்கள் முதல் முதியோர் வரை இணைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும். கிராமம் கிராமமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். சகல மக்கள்  மட்டத்திலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புடிந்துணர்வு அதிகரிக்கப்படல் வேண்டும்.

 

இந்தக் கோரச்செயல் நினைத்த  நேரத்தில் நடந்திருக்க முடியாது. ஏற்கனவே நல்ல முறையில் திட்டமிட்டு இந்தப்பிள்ளையின் போக்குவரதுப்பாதை மற்றும் நேரம் ஆகியவை  நன்கு அவதானிக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே பணத்திற்காகக் கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தக் கைது கூட ஒரு நாடகமாக இருக்கலாம். சிலவேளைகளில் உண்மையாவும் இருக்கலாம். இது பிரச்சனை அல்ல.

ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவிற்கு உடந்தையாக இருப்பவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டாமா? வேறு ஊரில் இருந்து அதுவும் ஒரு தீவுப்பகுதிக்கு இவர்கள் உள்நுழைந்தது அந்த ஊரில் இருக்கும் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வதற்கு அந்த ஊரில் ஒரு காவல்த்துறை அலுவலகம் கூட இல்லையே. ஆனால் ராணுவ முகாம் மட்டும் கட்டாயம் அங்கு இருக்கும் என நினைக்கின்றேன்.

 

அரச இயந்திரம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில்  அக்கறை செய்ய வேண்டுமா இல்லை பயங்கரவாத முக மூடியில் நாட்டைத் தன்பிடியில் வைத்திருப்பதற்காக ராணுவத்தையும்
அந்த ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பதற்காக சில ஜென்மங்களையும் ஊக்கிவிப்பதா என்ற கேள்வி இப்போது எல்லோரிடமும் எழுகின்றது.

இப்போது கூட வட மாகாண  அரசிடம் பொலிஸ் அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களால்  கூட இப்படியான கொலையாளிகளுக்கான தண்டனையை சுயமாக நிறைவேற்ற முடியாத கையறுந்த நிலையில் இருக்கின்றார்கள்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல்  
கிராமம் தோறும் மக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துதல்
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்னியமாக இருக்காமல்
நாளாந்தம் அவர்களுடைய நிலமைகளை அவதானித்தல்
பிள்ளைகள் தங்கள் மீது  சந்தேகமான முறையில் யாராவது நடந்து கொள்ளும் போது அதை உடனே பெற்றோருக்கு அறியத்தருதல்
அரசியல் நோக்கற்ற அதிகபட்சமான தண்டனை
போன்றவற்றால் இப்படியான கோரச்செயலகளைக் கட்டுப்படுத்தலாம்.   


 

 

 

 

நெடுக்ஸ், வாத்தியார், இசைக்கலைஞன், ரகுநாதன் விசுகு உங்கள் பதிவுகளும் எடுத்துக் கொண்ட நேரமும் எங்கள் மக்கள் மீதான அக்கறையைப் பிரதிபலிக்கின்றது.
 
நெடுக்ஸின் கருத்துக்களில்  பல தீர்வுகள் இன்றைய யதார்த்தத்தினை கருத்தில் எடுத்ததாகவே  உள்ளது. இவை யாவுமே செயற்படுத்தப் படக்கூடியவையே. இப்போதுள்ள கேள்வி எவ்வாறு புலம்பெயரந்த நாங்கள் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதே. எவ்வாறு கூட்டமைப்பிற்கும், மாகாணசபைக்கும், அரசாங்கத்திற்கும் இவற்றை செயற்படுத்துவதற்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதும் முக்கியமானது. இவற்றை செயற்படுத்த பணம் தேவையில்லை ஆனால் மனம் வேண்டும்.
 
சிலர் இவ்வாறான மரணங்களை பகிரங்கப்படுத்துவது பிழை என்ற கருத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றிற்கு நாம் முக்கியத்துவத்தைக் கொடுப்பதனால் இன்னுமொரு வித்யாவைக் காப்பாற்ற முடியுமெனின் அதில் தவறென்ன உள்ளது.
 
நெடுக்ஸ் உங்கள் காணொளி பார்த்தேன். இந்த தீப்பொறி எமது தாயகமெங்கும் பரவ வேண்டும். இம்மாணவர்களிற்கு தேவையான பாதுகாப்பை அவர்களே உறுதி செய்ய வேண்டும். நாம் எம்மாலான உதவிகளை வழங்கலாம் [அது என்ன என்பது தெரியாது]. தாயகத்திலுள்ள பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் முன்நின்று இப்போராட்டத்தை நடத்தலாம்.
 
இது வித்யாவுடன் நிறுத்தப்பட வேண்டியது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/157612-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/page-2
 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளிப்பு குழு ஐடியா 84-87 வரை இதே பெயரில் புலிகள் செய்ததுதான்.

பின் விழிப்புக்குழு பையன்கள் ராவில ரோந்து போற சாக்கில், வேலியள் பாயா வெளிக்கிட - தே த உடனையா குழுக்களை கலைத்தவர்.

எங்கள் ஊரிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துளது.

புலிகள் காலத்திலேயே அப்படி. சீ வீ காலத்தில் அமைத்தால் - விளிப்புக் குழுக்காரருக்கு விலக்கு (விளக்கு அல்ல) பிடிக்கவே முதல்வருக்கு தாவு தீந்திடும்.

எகிப்து, சிரியா, லிபியா என உலகு எங்கும் இப்படியான குழுக்கள் செய்த நன்மையை விட தீமைதான் அதிகம்.

இதை விளங்கித்தான் 90 இன் மீள்வருகையோடு புலிகள் காவல்துறைய கொண்டு வந்தார்கள்.

முதல்வர் செய்ய வேண்டியது எல்லாம் இருக்கும் பொலீஸ் படையை பொறுப்புக் கூறத்தக்க வகையில் மாற்றும் படியான கட்டமைப்பை உருவாக்குவதும்...இதை தொடக்கப் படியாக வைத்து மாகாண போலீஸ் அதிகாரத்தை கோருவதும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விழிப்புக்குழு அமைப்பு.. தற்காலிக ஒரு நடவடிக்கையாக யாழில் பிரேரிக்கப்பட்டது.

 

அதனை விக்கியும் சிந்தனையில் உள்ளடக்கி இருக்கிறார்.

 

விழிப்புக்குழு நடவடிக்கைகள்.. இந்தியப் படைகளின்.. அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களின் (இன்று சிங்கள அரச படைகளோடு உள்ளனர்..) அடாவடிகளை குறைக்க வெகுவாக உதவியது. 1988..90 தொடக்கம் வரை அவற்றின் இருப்பால் மக்கள் கொஞ்சம் என்றாலும் நித்திரை கொண்டார்கள்.

 

இந்தியப் படைவிலகலோடு.. மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஊர்கள் வந்ததும் அதற்கான தேவையே இருக்கவில்லை.

 

இன்று மாகாண சபையில் உள்ள ஐங்கரநேசன் போன்றவர்களுக்கு இந்த விழிப்புக்குழுக்களின் வெற்றிகர நடவடிக்கைகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

 

சும்மா எதனையும் நிராகரிச்சுப் பழகிப் போன ஒரு சிலரின் விழிப்புக்குழுக்களுக்கு எதிரான கூச்சலை விட்டு.. சாத்தியமான தற்காலிக தீர்வில் இருந்து நிரந்த அதிகாரப் பரவலுடன் கூடிய பொலிஸ் அதிகாரங்கள்...கொண்ட ஆட்சி அலகு கோருவது நல்லதுதான். ஆனால் அது நடைமுறைக்கு வர முன் சிங்கள ஏவலாளிகள் மக்களை கொன்றழித்துவிடுவார்கள் போலுள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய படை காலத்தில் இருந்தது ரெண்டு குழுதான்

1) புலிகளின் பிஸ்டல் குழு

2) மண்டையன் குழு

விழிப்புக்குழு அமைத்தது 84-87 காலப்பகுதியில்.

இந்தியப் படை காலத்தில் இருந்தது ஊரில் உள்ள தாத்தாமார், பென்சன் காரரை வைத்து இந்தியன் ஆமி உருவாக்கிய சிடிசன்ஸ் குரூப்.

அது ஒரு ரோந்தும் போகேல்ல சும்மா மாதொமொருக்கா டீ வடை சாப்பிடதோட சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவு தான் இவர் பேசும் உண்மை மக்களே தெரிந்து கொள்ளுங்கள்.

 

இந்தியப் படைகள் காலத்தில் இருந்த குழுக்கள்..

 

புளொட்..

 

ஈ என் டி எல் எவ்..

 

மண்டையன் குழு..

 

வரதராஜப்பெருமாளின் சொந்தக் குழு -- யாழ் இந்துவில் படுகொலை நிகழ்த்தியது இது..

 

ஈ பி..

 

திருட்டுக்குழு..

 

பிள்ளைபிடி தமிழ் தேசிய இராணுவக்குழு..

 

இந்திய கூர்க்கா.. குழு..

 

இத்தனை குழுக்கள்.. இருக்க பிஸ்டல் குழுதான் தெரியுது. பரந்தன் ரஞ்சனும் தான் பிஸ்டல் கொண்டு சுட்டுத்தள்ளிக் கொண்டு திரிஞ்சவர்.

 

 

மேலும்...

 

யாழ் நகரில் விழிப்புக்குழுக்கள் அமைத்து.. வீடுகளில்.. கொள்ளை.. இளம் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு.. எதிராக மக்கள் செயற்பட்டார்கள். ஆலய மணிகளை எழுப்பி ஆபத்துக்களை அறிவித்தார்கள்.

 

இதுங்க.. ஊரில வாழ்ந்திச்சுதுங்களா.. கடலில கிடந்திச்சுதுங்களா. சும்மா தாங்களும் தாங்களும் என்று கருத்தெழுத வந்துவிட்டார்கள். தங்கள் வெறுப்பை விதைப்பதை நோக்காக வைத்து. :icon_idea::lol:


விழிப்புக்குழு இளைஞர்கள் பல திருட்டுக்களை.. பெண்கள் மீதான வன்முறையாளர்களை பிடித்து இனங்காட்டியும் கொடுத்தார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே கூர்க்கா எல்லாம் குழு இல்லை இந்தியன் ஆமி ரெஜிமெண்ட்.

நீங்கள் மேலே சொன்னவை எல்லாம், கேடு கெட்டவையாகவே இருப்பினும், இயங்கங்கள் என அறியப்பட்டன.

நான் சொன்ன ரெண்டும்தான் குரூப் அல்லது குழுக்கள் என அறியப்பட்டன.

அந்த ஆளின் பெயர் பரந்தன் ராஜன். 3 ஸ்டாரில் இருந்து பின் ஈ என் டி எல் எப் ஐ உருவாக்கின ஆள்.

பரந்தன் ரஞ்சன் எந்த அப்பாவியோ, யார் கண்டா ? ;)

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே கூர்க்கா எல்லாம் குழு இல்லை இந்தியன் ஆமி ரெஜிமெண்ட்.

நீங்கள் மேலே சொன்னவை எல்லாம், கேடு கெட்டவையாகவே இருப்பினும், இயங்கங்கள் என அறியப்பட்டன.

நான் சொன்ன ரெண்டும்தான் குரூப் அல்லது குழுக்கள் என அறியப்பட்டன.

அந்த ஆளின் பெயர் பரந்தன் ராஜன். 3 ஸ்டாரில் இருந்து பின் ஈ என் டி எல் எப் ஐ உருவாக்கின ஆள்.

பரந்தன் ரஞ்சன் எந்த அப்பாவியோ, யார் கண்டா ? ;)

 

பரந்தன் ரஞ்சன் என்பவர் யாழ் நகரில்.. சைக்கிள் கடை வைச்சு.. ஈபிக்கு ஆட்காட்டிக் கொடுக்கிறது. அவரே பிஸ்டலும் கையுமாகத் திரிவார். இயக்கம்.. நல்லூரடியில் வைச்சு போட்டது.

 

பரந்தன் ராஜன்.. ஈ என் டி எல் எவ்.. அதுவும் தெரியாதா.. கறுமம்.

 

கூர்க்கா ரெஜிமென்ட் குழுவாகத்தான் இயங்கியது. பிற ரெஜிமென்டுகளோடு..சேர்ந்து குழுவாகத்தான் இயங்கியது. தனி ரெஜிமென்டா இயங்கல்ல.. எங்கும்.

 

கூர்க்கா தான் பிள்ளைபிடிக்க.. அதிகம் காவல் நிற்கிறது. தமிழ் ரெஜிமென்ட்.. ஆட்களை விடுறதில்லை.. பிள்ளை பிடி காவலுக்கு. ஒளிச்சு ஓடச் சொல்லிடுவாங்க என்று. :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.