Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து டெஸ்ட் தொடர்

Featured Replies

ஸ்டோக்ஸ், ரூட், பட்லர் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து

 

லார்ட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

 

இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆடம் லித், உட் (இங்கிலாந்து), மாட் ஹென்றி (நியூசிலாந்து) அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

 

குக் ஏமாற்றம்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், ஆடம் லித் துவக்கம் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தீ, பவுல்ட், ஹென்றி இணைந்து ‘வேகத்தில்’ மிரட்டினர். சவுத்தீ பந்தில் லித் (7) சிக்கினார். அடுத்து வந்த பேலன்ஸ் (1) பவுல்ட்டிடம் வீழ்ந்தார். தன் பங்கிற்கு அசத்திய ஹென்றி, குக் (16), பெல் (1) ஆகியோரை அவுட்டாக்க, இங்கிலாந்து அணி 30 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

‘சூப்பர்’ ஜோடி: பின் இணைந்த ஜோ ரூட், ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். அபாரமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் அசத்திய ஜோ ரூட், 10வது அரைசதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்த போது கிரெய்க் ‘சுழலில்’ ஸ்டோக்ஸ் (92) போல்டானார்.

 

பின் ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஜோடி இணைந்து போராடியது. ஆறாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்றி ‘வேகத்தில்’ ஜோ ரூட் (98) சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். பின் ஜோடி சேர்ந்த பட்லர், மொயீன் அலி ஜோடி பொறுப்பாக ஆடியது. பட்லர் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த போது, முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் பட்லர் (67) அவுட்டானார்.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி (49) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் ஹென்றி 3, பவுல்ட் 2, சவுத்தீ, கிரெய்க் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432222874/EnglandNewZealandTestCricketStokesRoot.html

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: 30/4-லிருந்து 389 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபாரம்

 

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம், நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 389 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

நேற்று 354/7 என்ற நிலையில் இன்று காலை தொடங்கிய இங்கிலாந்து மொயீன் அலி (58), பிராட் (3), மற்றும் ஆண்டர்சன் (11) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

நியூஸிலாந்து தரப்பில் அதிவேகப் பந்து வீச்சாளர் ஹென்றி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

முன்னதாக நேற்று பிரெண்டன் மெக்கல்லத்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து சவுதீ, போல்ட், ஹென்றியின் அற்புதமான டெஸ்ட் மேட்ச் ஸ்விங் பந்து வீச்சுக்கு முதல் 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது.

புதிய தொடக்க வீரர் லித் 7 ரன்களுக்கு சவுதீயின் அபார பந்து ஒன்று இவரது மட்டை விளிம்பைத் தடவிச் செல்ல விக்கெட் கீப்பர் வாட்லிங் கேட்ச் பிடிக்க ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

 

கேரி பாலன்ஸ் 1 ரன்னில் போல்ட் பந்தை டிரைவ் ஆடி 3-வது ஸ்லிப்பில் சவுதீயின் அபாரமான கேட்சிற்கு வெளியேறினார். அலிஸ்டர் குக் 36 பந்துகளைச் சந்தித்த வேதனைக்குப் பிறகு 16 ரன்களில் ஹென்றி வீசிய சற்றே வேகம் கூடிய லெக் ஸ்டம்ப் பவுன்சரை எட்ஜ் செய்து வெளியேறினார்.

ஆனால், பெல்லுக்கு ஹென்றி வீசியது உண்மையில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது, அதாவது விளையாட முடியாத ஒரு பந்து, உலகின் தலை சிறந்த வீரர்களும் இந்தப் பந்தில் ஆட்டமிழக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம்தான்.

 

ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே நின்று தாமதமாகி வேகத்தில் பெல் மட்டையை கடந்து ஆஃப் ஸ்டம்பை பெயர்த்தது. 30/4 என்ற நிலையில் ஜோ ரூட், ஸ்டோக்ஸ் இணைந்து சில ஆக்ரோஷமான பந்து வீச்சுக்கு இடையில், ஸ்டோக்ஸின் அதிரடி எதிர்த்தாக்குதல் மூலம் 5-வது விக்கெட்டுக்காக 161 ரன்களை விரைவு கதியில் சேர்த்தனர்.

ஸ்டோக்ஸ், இவர் நியூஸிலாந்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 94 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து ஆஃப் ஸ்பின்னர் கிரெய்க் பந்தை ஆடாமல் விட பவுல்டு ஆனார்.

 

அதன் பிறகு ரூட், பட்லர் இணைந்து மேலும் 60 ரன்களை கூட்டினர். ஜோ ரூட் மிகவும் ஆதிக்கம் செலுத்தினார். அதிகம் தடவவில்லை, உறுதியான ஆட்டம் அவரை 11 பவுண்டரிகளுடன் 98 ரன்களுக்குக் கொண்டு சென்றது. நிச்சயம் அருமையான டெஸ்ட் சதத்தை வேண்டும் ஒரு இன்னிங்ஸ் ஆனால் அவர் வைடு பாலை துரத்தி எட்ஜ் செய்து சதத்தை கோட்டை விட்டார்.

 

அதன் பிறகு பட்லர் 67 ரன்களையும் மொயீன் அலி 58 ரன்களையும் எடுக்க நடுக்கள வீரர்களின் பங்களிப்பினால் 30/4-இலிருந்து ஓரளவுக்கு சவாலான 389 ரன்களை எட்டியது இங்கிலாந்து.

 

தற்போது நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் விளையாடி வருகின்றனர். ஆண்டர்சன், பிராட் தொடங்கியுள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-304%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-389-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7235265.ece

  • கருத்துக்கள உறவுகள்

நியுஸிலாந்து போட்டு வாங்குறாங்களே?

பீட்டர்சனை சேத்திருக்கலாமோ:)

  • தொடங்கியவர்

நியுஸிலாந்து போட்டு வாங்குறாங்களே?

பீட்டர்சனை சேத்திருக்கலாமோ:)

அலிஸ்டர் குக்குதானே பிடிக்காதே பீட்டர்சனை

  • தொடங்கியவர்

வில்லியம்சன் சதத்துடன் 523 ரன்கள் குவித்த நியூஸிலாந்து: இங்கிலாந்துக்கு சிக்கல்
 

 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 389 ரன்களுக்கு எதிராக நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 523 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

 

134 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் லித், கேரி பாலன்ஸ் விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. நியூஸிலாந்து ரன் எண்ணிக்கையின் இடைவெளியைக் குறைக்க இன்னும் 60 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கேப்டன் குக் 32 ரன்களுடனும், இயன் பெல் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

நேற்று காலை 303/2 என்று தொடங்கிய நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் 132 ரன்களை எடுத்தார். இது ஒரு அற்புதமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். அதாவது சதம் எடுக்கும் வரை அபாரமான ஆட்டம். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வழங்கினார். டெய்லர் 62 ரன்களையும் கேப்டன் மெக்கல்லம் அதிரடி 42 ரன்களையும் எடுக்க வாட்லிங் 61 ரன்களை எடுத்தார்.

 

இங்கிலாந்து தரப்பில் பிராட், மார்க் உட் மொயீன் அலி ஆகியோர் தலா, 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கேன் வில்லியம்சன் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். 403/3 என்ற நிலையில் இங்கிலாந்து நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு மொயீன் அலி மற்றும் மார்க் உட் ஆகியோர் பந்து வீச்சினால் கடைசி 7 விக்கெட்டுகளை 120 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து.

நியூஸிலாந்து அணியில் டாப் 4 பேட்ஸ்மென்கள் அரைசதம் கடந்திருப்பது இது 2-வது முறையே.

 

இங்கிலாந்தின் சொதப்பல்கள்:

கேன் வில்லியம்சன் 106 ரன்களில் இருந்த போது முதல் ஸ்லிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு வந்தது ஆனால் பிடிக்கவில்லை. 108 ரன்களில் எளிதான ரன் அவுட் வாய்ப்பு நழுவ விடப்பட்டது.

 

112 ரன்களில் வலுவான எல்.பி. முறையீட்டு டிவி நடுவர் பரிசீலனைக்குச் செல்ல நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கபப்பட்டது. ஒரு அப்பீல் விரயம் செய்யப்பட்டது, காரணம் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்து ஆகும்.

 

120 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் இயன் பெல் வில்லியம்சனுக்கு மீண்டும் ஒரு கேட்சை விட்டார். ஸ்டோக்ஸ் தலையில் கையை வைத்துக் கொண்டார். 122 ரன்களில் மீண்டும் மார்க் உட் பந்தில் எட்ஜ் எடுக்க முதல் ஸ்லிப்பிற்கு சற்று முன்னால் விழுந்தது பந்து, இது ஸ்லிப் பீல்டரின் தவறான கணிப்பே.

இன்று 4-ம் நாள் ஆட்டத்தில் குறைந்தது 250 ரன்களையாவது முன்னிலையாக இங்கிலாந்து பெறுவது அவசியம். அப்படி எடுத்தால் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

நியூஸிலாந்து இன்று குக், பெல் ஆகியோரை விரைவில் வீழ்த்தி, இங்கிலாந்தின் வலுவான டெய்ல் எண்டர்களையும் விரைவில் முடக்க வேண்டும். 200 ரன்கள் வரை 4-வது இன்னிங்சில் இலக்கைத் துரத்துவது எளிது.

 

ஆனால், நியூஸிலாந்து ஆக்ரோஷமாக விளையாடுவதைப் பார்த்தால் வெற்றி நியூஸிலாந்துக்கு சாதகமாக அமைவது போல் தோன்றுகிறது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-523-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7241193.ece

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் 11 நல்ல வீரர்களை தேர்ந்து அவர்களில் நல்ல காப்டனை தேர்வார்கள்.

இங்கிலாந்தில் கப்டனைதான் முதலில் தேர்வார்கள்.

சமையல் காரர் (குக்) கேப்டனாக லாயகில்லாதவர்.

அநியாயமாய் ஒரு நல்ல பேட்ஸ்மென் கப்டன் வேலைபளுவால் ரெண்டையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனது மகன் 4 வது நாள் போட்டியை பார்க்க லோர்ட்ஸ் மைதானத்துக்கு தனது பாடசாலை அணி வீரர்களுடன் சென்றுள்ளார்.

மழை குழப்பா விட்டால் நல்ல போட்டியாக முடியும்.

பொதுவாக No 3 ஆட்டக்காரர் மிக முக்கியம் . முன்பு இங்கிலாந்து அணியில் நசார் ஹுசைன் திறமையாக விளையாடினார். பின்பு Ian Bell, Peterson, Trott விளையாடினார்கள். இந்த போட்டியில் Gary Balance தடுமாறுகிறார் (1,0).

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாரி அரைக்கிணறு தாண்டீட்டு இங்கிலாந்து.

நாளைக்கு கொலாப்ஸ் ஆகாமல் டீ வரை தாக்குப் பிடித்தால் எஸ்கேப்.

லோர்ட்ஸ் இல் கிரிகெட் பார்ப்பது ஒரு சுகானுபவம்.

உங்கள் மகனும் அனுபவிச்சிருப்பார். மழையும் குழப்பவில்லை.

  • தொடங்கியவர்

குக் சதம்: இங்கிலாந்து முன்னிலை

 

லார்ட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டின் 2வது இன்னிங்சில் கேப்டன் அலெஸ்டர் குக் சதமடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 389, நியூசிலாந்து 523 ரன்கள் எடுத்தன. பின், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அலெஸ்டர் குக் (32), இயான் பெல் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (29) ஏமாற்றினார். பின் இணைந்த குக், ஜோ ரூட் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட், 11வது அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்த போது ஹென்றி பந்தில் ஜோ ரூட் (84) அவுட்டானார்.

 

மறுமுனையில் அசத்திய குக், டெஸ்ட் அரங்கில் தனது 27வது சதத்தை பதிவு செய்தார். தன் பங்கிற்கு ஸ்டோக்ஸ் சதம் (101) அடித்தார். பட்லர் 14 ரன்களில் கிளம்பினார். நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 429 ரன்கள் எடுத்து 295 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. குக் (153), மொயீன் அலி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432401467/lordstestnewzealandengland.html

 

  • கருத்துக்கள உறவுகள்

குக் பேக் டு போர்ம். ஆனாலும் சச்சின் செய்ததை போல் கேப்டன்சியை தூக்கிக் கடாசி விட்டு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும்.

350 டார்கெட்வைத்து லஞ்சுக்கு ஒரு மணத்தியாலம் முன்பே டிக்ளேர் செய்தால் நியூஸிலாந்து வெல்ல ஆடும். இங்கிலாந்துக்கும் சம அளவு வாய்ப்பிருக்கும். அதுக்குமேல் மட்டை போட்டால் draw

  • தொடங்கியவர்

அதிரடி சதம்: அசாருதீன் சாதனையை உடைத்த பென் ஸ்டோக்ஸ்

 

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் அதிவேக சத சாதனையை வைத்திருந்த முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனின் சாதனையை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முறியடித்தார்.

 

நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று 5-ம் நாள் ஆட்டத்தில் 345 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடி வரும் நியூஸிலாந்து, ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடின் ஆக்ரோஷ பந்து வீச்சில் சற்று முன்வரை மார்டின் கப்தில் (0), லாதம் (0), ராஸ் டெய்லர் (8) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 14 ரன்களை எடுத்து தோல்வியை தவிர்க்குமா என்ற நிலைதடுமாற்றத்தில் உள்ளது.

5-ம் நாளான இன்று இன்னமும் 67 ஓவர்கள் மீதமுள்ளன. வாட்லிங், கேன் வில்லியம்சன் ஆடி வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ் 92 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் விளாசினார்.

இதில் சதத்தை அவர் 85 பந்துகளில் எடுத்தார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தற்போது பென் ஸ்டோக்ஸ் அடித்த சதமே அதிவேக சதமாகும்.

1990-ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் 87 பந்துகளில் சதம் எடுத்ததே இதுவரை லார்ட்ஸ் அதிவேக சத சாதனையாக இருந்து வந்தது. இதனை 85 பந்து சதம் மூலம் பென் ஸ்டோக்ஸ் முறியடித்தார்.

 

மேலும் இங்கிலாந்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேக சதமாகும், இதற்கு முன்னதாக 1902ம் ஆண்டு ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் கில்பர்ட் ஜெஸாப் எடுத்த 76 பந்து சதமே இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அதிவேக சதமாகும்.

 

அலிஸ்டர் குக் 5-ம் நாளான இன்று 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடகக் வீரராக 25-வது டெஸ்ட் சதம் எடுத்துள்ளார் குக். தொடக்க வீரராக அதிக சதப்பட்டியலில் குக் இப்போது 4-வது இடம் வகிக்கிறார். மற்ற தொடக்க வீரர்களில் சுனில் கவாஸ்கர் 33 சதங்கள், ஹெய்டன் 30 சதங்கள், கிரேம் ஸ்மித் 27 சதங்கள். குக் மொத்தம் 27 டெஸ்ட் சதங்களை எடுத்து இங்கிலாந்து வீர்ர்களில் சத எண்ணிக்கையில் முதன்மை வகிக்கிறார்.

 

ஸ்டோக்ஸுக்கும் குக்கிற்கும் இடையே நேற்று 132 ரன்கள் பார்ட்னர்ஷிப். இதில் குக் 67 பந்துகளில் 24 ரன்களையே எடுக்க ஸ்டோக்ஸ் 92 பந்துகளில் 101 ரன்களை விளாசினார்.

லார்ட்ஸ் மைதானத்தில் 6-ம் நிலையில் களமிறங்கும் வீரர் ஒருவர் 2-வது இன்னிங்சில் சதம் எடுப்பது 2-வது முறையாகும், நேற்று ஸ்டோக்ஸ், இதற்கு முன்னதாக 1966-ம் ஆண்டு கேரி சோபர்ஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7244506.ece

  • கருத்துக்கள உறவுகள்

9 விக்கெட் போட்டுது.

லேட்டா டிக்ளேர் செய்தாலும் இங்கிலாந்து வெண்டிடும் போல இருக்கு.

இன்னும் 12 ஓவர்கள் இருக்கு.

போல்டும் ஹென்றியும் விளையாடும் விதத்தை பார்த்தால் சமநிலையில் தான் முடியும் போல.

இங்கிலாந்து வெற்றி.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

 

லார்ட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 389, நியூசிலாந்து 523 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 429 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் (153), மொயீன் அலி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

பவுல்ட் ஆறுதல்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. குக் 162 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில் பிராட் (10), மொயீன் அலி (43) என, இருவரும் பவுல்ட்டிடம் சிக்கினர். கடைசியில் ஆண்டர்சன் ‘டக்’ அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 478 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

 

நியூசி., ஏமாற்றம்:

இரண்டாவது இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.

ஆண்டர்சன் வேகத்தில் முதலில் கப்டில் (0) அவுட்டானார். பிராட் தன் பங்கிற்கு லதாமை (0) ஒரே பந்தில் அவுட்டாக்கினார். தொடர்ந்து அசத்திய பிராட், ராஸ் டெய்லரையும் (8) வெளியேற்றினார்.

 

வில்லியம்சன் (27), ‘அபாய’ பிரண்டன் மெக்கலத்தை (0), தனது அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கினார் ஸ்டோக்ஸ். பின் இணைந்த வாட்லிங், ஆண்டர்சன் ஜோடி தோல்வியை தவிர்க்க போராடியது. ஒருநாள் போட்டியைப் போல விளையாடிய ஆண்டர்சன், 44வது பந்தில் அரைசதம் எட்டினார். 6வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த போது, அரைசதம் கடந்த வாட்லிங் (59) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் ஆண்டர்சனும் (67) அவுட்டாக, நியூசிலாந்து தோல்வி உறுதியானது.

 

பின் வந்த கிரெய்க் (4), சவுத்தீ (20), பவுல்ட் (10) சீரான இடைவெளியில் திரும்ப, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 220 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஹென்றி (10) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

இந்த வெற்றியை அடுத்து 1–0 என, டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 29ம் தேதி, லீட்சில் துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2015/05/1432574695/Englandnewzealandlordstest.html

  • தொடங்கியவர்

லதாம், ரான்கி அரைசதம்: மீண்டது நியூசி.,

 

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில், டாம் லதாம், லுாக் ரான்கி அரைசதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் லீட்சில் நேற்று துவங்கியது. மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘வேகத்தில்’ தடுமாறியது. இவரது அசத்தல் பந்துவீச்சில் மார்டின் கப்டில் (0), வில்லியம்சன் (0) அவுட்டானார்கள். அடுத்து வந்த ராஸ் டெய்லர் (20) நிலைக்கவில்லை. கேப்டன் பிரண்டன் மெக்கலம் (41) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். வாட்லிங் (14) ஏமாற்றினார். இதனால் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.

 

 

பின் இணைந்த டாம் லதாம், லுாக் ரான்கி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளி்த்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த போது லதாம் (84) அவுட்டானார். சிறிது நேரத்தில் ரான்கி (88) நடையை கட்டினார். டிம் சவுத்தீ (1) ஏமாற்றினார்.

 

முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. மார்க் கிரெய்க் (16), ஹென்றி (11) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3, ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் ஊட் தலா 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432919773/LeedsTestEnglandNewZealandCricket.html

  • தொடங்கியவர்

இல்கிலாந்து முதலாவது இனிங்ஸ்ல் 319/9

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 350 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பொரோட் க்கு மூக்குடைவோட வந்த பயம் விலகினமாரித் தெரியுது. போட்டு விளாசினார். வூட்சும் ஆண்டர்சனும் நல்ல சப்போர்ட்.

நியூசீ கெதியா அடிச்சு ஒரு டார்கெட் செட் பண்ணப் பாக்கினம். மக்கலம் வெளுத்தால் முடியும்.

ஆனா கடசில மழைதான் வெல்லும்

  • தொடங்கியவர்

3 ம் நாள் ஆட்டமுடிவில்

 

நியூசீலாந்து 350 & 338/6 (75.0 ov)

இங்கிலாந்து350

  • தொடங்கியவர்

வாட்லிங் சதம்: முன்னிலை பெற்றது நியூசி.,

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் வாட்லிங் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி லீட்சில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

சவுத்தீ மிரட்டல்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சவுத்தீ ‘வேகத்தில்’ இயான் பெல் (12), பட்லர் (10), மொயீன் அலி (1) அவுட்டாகினர். மார்க் (19) நிலைக்கவில்லை. ஸ்டூவர்ட் பிராட், 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. ஆண்டர்சன் (10) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் சவுத்தீ, 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

 

பிராட் அசத்தல்:

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு ஸ்டூவர்ட் பிராட் கடும் சவால் கொடுத்தார். இவரது ‘வேகத்தில்’முதலில் லதாம் (3) சிக்கினார். கேன் வில்லியம்சனும் (6) இவரிடமே ஆட்டமிழந்தார். இதன் பின் இணைந்த கப்டில், ராஸ் டெய்லர் ஜோடி நிதானமாக விளையாடியது. கப்டில் அரை சதம் அடித்தார். மார்க் வுட் பந்துவீச்சில் டெய்லர் (48) கப்டில் (70) வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. பிரண்டன் மெக்கலம் அரைசதம் (55) அடித்தார். சிறப்பாக செயல்பட்ட வாட்லிங் சதம் எட்டினார். ரான்கி 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்து, 338 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வாட்லிங் (100), கிரெய்க் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 3, பிராட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432919773/LeedsTestEnglandNewZealandCricket.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அதிரடி நியூஸிலாந்து 454 ரன்களுக்கு டிக்ளேர்: இங்கிலாந்துக்கு இமாலய வெற்றி இலக்கு
 

 

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று நியூஸிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இதனையடுத்து இமாலய வெற்றி இலக்கான ன 455 ரன்களை எதிர்த்து இங்கிலாந்து தற்போது விளையாடி வருகிறது. இன்று இன்னும் 75 ஓவர்கள் மீதமுள்ளன, நாளை 90 ஓவர்கள் மீதமுள்ளன, இங்கிலாந்துக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு உள்ளது.

 

ஆனால் இந்த வெற்றியை ஈட்டிவிட்டால் இங்கிலாந்து வரலாறு காணாத வெற்றியாக இது அமையும்.

4-ம் நாளான இன்று 338/6 என்று தொடங்கிய நியூஸிலாந்து இன்றும் தனது சுதந்திரமான அதிரடியைத் தொடர்ந்தது. 16 ஓவர்களில் 116 ரன்களை விளாசியது.

100 நாட் அவுட் என்று இருந்த நியூஸிலாந்து அணியின் வாட்லிங் 120 ரன்களில் ஆண்டர்சனிடம் இன்று வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய லுக் ரோன்க்கி 23 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார்.

 

 

மார்க் கிரெய்க் 77 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் சவுத்தி களமிறங்கி அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு 24 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் வெளுத்துக் கட்டினார்.

 

பவுலர் மேட் ஹென்றி டிக்ளேர் செய்வதற்கு சற்று முன் ஸ்டூவர் பிராடை 2 அபார சிக்சர்களை விளாசினார். 91 ஓவர்களில் நியூஸிலாந்து 454 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தார் மெக்கல்லம். பிராட் 3 ஓவர்களில் 42 ரன்களுடன் மொத்தமாக 16 ஓவர்களில் 94 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன், மார்க் உட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் என்று அனைவரும் ஓவருக்கு சராசரியாக 4 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தனர்.

 

இங்கிலாந்து பந்து வீச்சு இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் தவிர சரியாக அமையவில்லை. காரணம் நியூஸிலாந்து தீவிர தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டம் ஆடியதே.

455 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவரும் இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-454-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7271308.ece

  • தொடங்கியவர்

நியூசீலாந்து 199 ரன்களால் வெற்றி.

  • தொடங்கியவர்

நியூசிலாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து

 

திரான லீட்ஸ் டெஸ்டில்,  இங்கிலாந்து அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. டெஸ்ட் தொடர் 1–1 என, சமன் ஆனது.

 

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி லீட்சில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தலா 350 ரன்கள் எடுத்தன.

 

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி, 454/8 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட நான்காவது ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்து, 411 ரன்கள் பின்தங்கி இருந்தது. குக் (18), லித் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

பட்லர் ஆறுதல்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் பவுல்ட் அடுத்தடுத்து அதிர்ச்சி தந்தார். முதலில் லித்தை (24) அவுட்டாக்கிய இவர், அடுத்து பேலன்ஸ்சை (6) கிளப்பினார்.

 

அடுத்து வந்த இயான் பெல் (1), ஜோ ரூட் (0) இருவரையும் தனது ஒரே ஓவரில் அவுட்டாக்கினார் கிரெய்க். சற்று தாக்குப் பிடித்த ஸ்டோக்ஸ், 29 ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 102 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தள்ளாடியது.

 

குக் (56) அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். மொயீன் அலி (2), பிராட் (23) நீடிக்கவில்லை. கடைசியில் பட்லர் 73 ரன்னுக்கு அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. ஆண்டர்சன் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

நியூசிலாந்து சார்பில் வில்லியம்சன், கிரெய்க் தலா 3, பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433266531/leedstestenglandnewzealand.html

  • தொடங்கியவர்

நியூஸிலாந்து சுழலில் சிக்கி இங்கிலாந்து தோல்வி: டெஸ்ட் தொடர் சமன்

 

ஹெடிங்லே, லீட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 199 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நியூஸிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

 

இங்கிலாந்து மே.இ.தீவுகளூக்கு எதிராகவும் 1-1 என்று சமன் செய்தது, தற்போது நியூஸிலாந்துக்கு எதிராகவும் 1-1 என்று சமன் செய்துள்ளது.

 

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் முறையே 350 ரன்கள் எடுக்க, 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி ஓவருக்கு 5 ரன்கள் பக்கம் விளாசி வாட்லிங்கின் அபார சதத்துடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 

இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 4-ம் நாள் ஆட்டத்தில் 44/0 என்ற நிலையில் கனமழை காப்பாற்ற டிரா நம்பிக்கையுடன் 5-ம் நாள் களமிறங்கியது.

முதல் ஒரு மணிநேரத்திலேயே லைத் (24), பேலன்ஸ் (6) ஆகியோரை டிரெண்ட் போல்ட் அபாரமாக பந்துவீச்சில் வீழ்த்தினார், குறிப்பாக பேலன்ஸிற்கு வீசிய பந்து அற்புதமான ஒரு வாசிம் அக்ரம் பந்தாகும். பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை பேலன்ஸுக்கு பேலன்ஸ் போனது.

 

இதே காலக்கட்டத்தில் மார்க் கிரெய்க், பிட்சின் ஸ்பாட்களை சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரே ஓவர் சுழலில் பெல் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார்.

 

பெல் 1 ரன் எடுத்திருந்த போது மெக்கல்லம் லெக் ஸ்லிப்பில் கேன் வில்லியம்சனை கொண்டு வந்து நிறுத்தினார். இது தெரிந்தும் தேவையில்லாமல் அந்தப் பந்தைத் தொட்டார் பெல், தன் விதியை தானே எழுதிக் கொண்டார். ஜோ ரூட்டும் லெக் கிளான்ஸ் செய்வதாக நினைத்து கையில் கொடுத்தார், ஆனால் லேதம் பிடித்த இந்த கேட்ச் சற்றே கடினமானது.

 

பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வில்லியம்சனின் சாதாரண பந்துக்கு கட் செய்ய முயன்று எட்ஜ் செய்து ரோன்க்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 102/5 என்று தோல்வி முகம் கண்டது.

 

இங்கிலாந்துக்கும் தோல்விக்கும் இடையே குக் (56) நின்று கொண்டிருந்தார். 171 பந்துகளைச் சந்தித்து பொறுமையின் சிகரமாக மாறியிருந்தார். ஆனால் 9,000 டெஸ்ட் ரன்களை இளம் வயதில் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

 

வில்லியம்சன் வீசிய ரவுண்ட் த விக்கெட் பந்தை நேராக காலில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ செய்தார். ஆனால் தீர்ப்பு சாதகமாக அவருக்கு அமையவில்லை.

 

அமைதியான தொடராகிப்போன மொயீன் அலி 2 ரன்களில் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியின் உள்ளே வரும் பந்தை தவறாகக் கணித்து ஆடாமல விட ஸ்டம்ப் தொந்தரவுக்குள்ளானது.

 

ஆட்ட நாயகனாக வாட்லிங்கும், தொடர் நாயகனாக டிரெண்ட் போல்ட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

ஸ்டுவர்ட் பிராட் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து தன்னால் முயன்ற தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் வில்லியம்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பின்னால் சென்று டிரைவ் ஆடி, வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

 

மார்க் உட், ஜோஸ் பட்லர் சிறிது நேரம் இழுத்துப் பார்த்தனர். ஆனால் புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் சிரமமாக மாறியது. சவுத்தி 17 ரன்களில் மார்க் உட்-ஐ வெளியேற்றினார். அருமையான பந்து எட்ஜ் ஆகி 2-வது ஸ்லிப்பில் கேட்ச்.

 

ஜோஸ் பட்லர் தனது மூடுக்கு ஏற்ற இன்னிங்ஸை ஆடவில்லை. நிதானமாக ஆடினார், கடைசியில் 73 ரன்கள் எடுத்து மார்க் கிரெய்க் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி.ஆகி வெளியேற நியூஸிலாந்து இங்கிலாந்தில் ஒரு அரிய வெற்றியை ருசித்தது.

 

கேன் வில்லியம்சன் 7 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் கிரெய்க் 31.5 ஓவர்களில் 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட் 2 விக்கெட்டுகளையும் சவுத்தி, ஹென்றி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article7278380.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.