Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு திடீர் வருகை! செய்தி சேகரிக்கத் தடை

Featured Replies

maithiripala%20srisena%209655d.jpg

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு திடீரென வருகை தந்துள்ளார். இவரின் வருகையின் நோக்கம் குறித்து எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் மு.ப. 10.30 மணிக்கு அவர் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு செல்கிறார் என அறியமுடிகிறது. இதேவேளை ஜனாதிபதி குறித்த செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா ஜனாதிபதி ஒரு ஆம்பிளை.. எதுக்கு திடீர் என்று ஒரு பொம்பிளையள் பள்ளிக்கூடத்துக்கு ரகசியமா போகனும்.. அதுவும் திடீர் என்று.. தவிர செய்தி சேகரிக்கவும் தடை...

 

எல்லாமே சந்தேகமா இருக்கே..! :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா ஜனாதிபதி ஒரு ஆம்பிளை.. எதுக்கு திடீர் என்று ஒரு பொம்பிளையள் பள்ளிக்கூடத்துக்கு ரகசியமா போகனும்.. அதுவும் திடீர் என்று.. தவிர செய்தி சேகரிக்கவும் தடை...

 

எல்லாமே சந்தேகமா இருக்கே..! :lol::o

 

பொம்பிளைகளுக்கும் அவர்தான் ஜனாதிபதியாம் :D

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியாவின் கொலைக்கான தண்டனையினூடாக பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் ; ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை
9ccc687dc4417891fc7daced6a9d8f34.jpg
வித்தியாவின்  கொலையுடன்  தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள்  தொடர்பிலும் நிலைமைகளை நேரில்  ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டார்.
 
அதற்கமைய யாழ். வேம்படி பெண்கள்  உயர்தரப்படசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுடன்  கலந்துரையாடியதுடன் பாடசாலைகளில் உள்ள பிரச்சினை மற்றும்  சமூகத்தில் உள்ள பிரச்சினைகள்  தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். 
IMG_7978.jpg
 
இதன்போது மாணவர்கள்  மேற்படி கோரிக்கையினை அவரிடம் முன்வைத்தனர். மேலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவே இவற்றை விற்பனை செய்பவர்கள் , பயன்படுத்துபவர்களை இனம்  கண்டு தண்டனை வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்திருந்தனர்.
IMG_7969.jpg
 
அத்துடன்  பாடசாலைகளுக்கு அண்மையில் மதுபான நிலையங்கள் அமையப்பெற்றுள்ளன. இங்கு வந்து குடித்துவிட்டு வீதியால் செல்லும் பெண்களுடன்  சேட்டை செய்வது ,  ஆபாசமான வார்த்தைகளை பேசுவது போன்ற அநாகரிகமற்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். எனவே இவ்வாறு அமையப் பெற்றுள்ள மதுபான நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்  என்றும்  ஜனாதிபதியிடம்  கோரினர்.
IMG_7933.jpg
 
அத்துடன்  வித்தியாவின்  கொலை தொடர்பில் குற்றவாளிகளை இனம்கண்டு குறைந்த பட்சம் 15 நாள்களுக்குள் தண்டனை வழங்க ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
அத்துடன்  இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனைகளை சட்டத்தினூடாக வலுவுள்ளதாக மாற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும்  மாணவர்கள்  கோரிக்கை விடுத்தனர். 
IMG_7957.jpg
மேலும்  பாடசாலைகளில் இருக்கின்ற அடிப்படைப்பிரச்சினைகள்  தொடர்பிலும் மாணவர்கள்  தெரிவித்ததுடன்  போக்குவரத்து வசதிகளை சீர் செய்து தருமாறும் அவ்வாறு சீர் செய்யப்படும் போது பல்வேறு பிரச்சினைகள்  தீர்க்கப்படும் எனவும் கேட்டுக் கொண்டனர். 
 
அத்துடன்  யாழ். மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றித்தருமாறும் குறித்த பாடசாலை மாணவி ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
IMG_7963.jpg
 
இதேவேளை,  ஆசிரியர்களும் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அவற்றினை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்  கேட்டுக்கொண்டனர்.
 
இவற்றை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி  பாடசாலைகளில் நிலவி வருகின்ற அடிப்படைப்பிரச்சினைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மூலம் தீர்வ காண்பதாக மாணவர் மத்தியில் தெரிவித்தார். 
IMG_7990.jpg
 
மேலும்  தெரிவிக்கையில், 
 
இலங்கையில்  கல்வி பயின்றுவரும் 35 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும்  எனது பிள்ளைகளே. வித்தியாவும் எனது பிள்ளை தான். எனது பிள்ளைக்கு நடந்த சம்பவமாகவே நான் வித்தியாவின் சம்பவத்தை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். 
IMG_7982.jpg
 
சமூகப் பிரச்சினையாக மாறியுள்ள வித்தியாவின்  கொலை மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறான குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்க முடியாது. 
 
குற்றவாளிகளை விரைவில் இனம்கண்டு விசேட நீதிமன்றம்  அமைத்து அதனூடாக குற்றவாளிகள்  விசாரிக்கப்பட்டு விரைவில் தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும்  உறுதியளித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=219044052626123659#sthash.5btRADNA.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா விடயத்தில் தேர்தலை நோக்கி எடுக்கப்பட்ட கடைசி நேர கருசணைக்கு நன்றி.அதேவேளை சின்ன நெருடல் உங்கள் ஆட்சியில் வன்னியில் கொல்லப்பட மாணவி சரணியா தங்கள் பிள்ளை இல்லாமல் போனது எப்படி??

செய்தியாளர்கள் போக தடை என்றால் இந்த செய்தி எப்படி வந்தது?  :rolleyes:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.