Jump to content

அடுத்தவர் டயரியை எட்டிப் பார்த்த போது....


Recommended Posts

பதியப்பட்டது

அனிதாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 10.30 மணி

"ஏண்டா டல்லா இருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டான். மத்தியானம் போன் பண்ணலைன்னு கோவமான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லேன்னு விரக்தியா சொன்னான்.

"வண்டியில வர்றப்ப கூட எப்பவும் அவன் தோள் மேல கைய போட்டுக்கிட்டு வருவேன். தோள்ல கைய போடலைன்னா வண்டியை நிறுத்திட்டு, என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டா தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்னு அடம் புடிப்பான். இன்னைக்கு என்னவோ 'தேமே'ன்னு இருந்தான். நான் தோள்ல கையைப் போடலைங்கிறதையே ஒரு பொருட்டா அவன் நெனைக்கலை.

"வர.. வர... அவன் போக்கே புரிய மாட்டேங்குது. கல்யாணம் ஆனப்ப இருந்தமாதிரி அவன் இப்ப இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு நான் கண்டிஷன் போடறதால அவன் என் மேல கோவமா இருக்கானா? இல்லை அவனுக்கு என்னை புடிக்கலியான்னு தெரியலை. என்னை புடிக்கலைன்னா ஏன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்?

"வீட்டுக்கு வந்ததும் அவனை இழுத்துப் புடிச்சு லிப்புல ஒரு ஸ்ட்ராங்க் கிஸ் அடிச்சு "ஐ லவ் யூ"ன்னு சொன்னேன். எப்பவும் "ஐ டூ"ன்னு சொல்லுறவன் என்னை முரட்டுத் தனமா தள்ளி விட்டுட்டு மூஞ்சத் தொங்கப் போட்டுக்கிட்டு டி.வி. பாக்க போயிட்டான்.

"சாப்பிட கூப்புட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டான். நான் மட்டும் தனியா பெட்ரூமுக்கு வந்துட்டேன். தூங்கப் போறேன். தூக்கம் வருமான்னு தெரியலை. என் புருஷனே என்னை வெறுக்கற அளவுக்கு போயிட்டப்ப என் லைப் இனிமே எப்படி இருக்குமோ தெரியலை. நான் வாழறதை விட செத்துடறதே மேல்" :-(

கிருஷ்ணாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 11.30 மணி

"சே... தூக்கமே வரலை... இன்னைக்கும் தோத்துட்டானுங்க. அஸாருதீன் இருக்கறப்போ டீம் நல்லா இருந்துச்சி... இவனுங்களையெல்லாம் சுட்டுத் தள்ளனும். இன்னைக்கு புல்லா மூட் அவுட்..."

Posted

யாதர்த்தமான கற்பனை என்றாலும்..

அடுத்தவங்க டயறியை படிக்கிறதெல்லாம் அநாகரீகம்பா

Posted

கெட்ட பழக்கம்...

Posted

அடுத்தவரின் டயரி படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து தாருங்கள்.

Posted

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம். :P

நம்ப டயரியை விட அடுத்தவங்க டயரி தானே நமக்கு சுவாரஸ்யமாக இருக்க முடியும்?

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்தவரின் டயரியினைப் படிப்பது அனாகரிகமான செயல் என்றாலும் உங்களின் கற்பனையினை வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது

Posted

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம்.

என்னாசார் இப்புடி ஒரு குண்டை தூக்கிப் போடுறிங்கோ !!!

பாத்திக்கிட்டுதான் இருக்கேனு நானு, என்ன இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஓவருதான் போங்க.

Posted

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம். :P

நம்ப டயரியை விட அடுத்தவங்க டயரி தானே நமக்கு சுவாரஸ்யமாக இருக்க முடியும்?

ஆமா திருட்டு மாங்காய் நல்ல ருசியா இருக்கும் :( . அடுத்தவங்க எழுதிய டயரி தான் படிக்க கூடாது. அடுத்தவங்க போல கற்பனையில் நாங்களே எழுதிய டயரியை தாராளமா படிக்கலாம்.தொடருங்க..நல்லா இருக்கு :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.