Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளில் சமாதானம் மலர்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_40967664_breaking_news_203.jpg

நேபாளத்தில் அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய உடன்படிக்கை ஒன்று கைசாத்தாகியுள்ளது. இதன்படி மாவோஜிட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட இடைக்கால அரசு உருவாக்கப்படுவதோடு மாவோஜிட்டுக்களின் ஆயுதங்கள் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவும் உள்ளன.

நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த மாவோஜிட்டுக்களின் போராட்டம் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போராட்டத்தின் போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm

இலங்கைக்கு இது ஒரு பாடமாகுமா? ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு இஸ்ரேல் பாணியிலான தாக்குதலை இஸ்ரேலிய ஆதரவுடன் நடத்தும் வரை இலங்கைப் பிரச்சனை என்பது பலஸ்தீனப் பிரச்சனை போல இழுபடுமே தவிர தீர்க்கப்படாது என்பது மட்டும் தெளிவாகிறது. :)

இலங்கைக்கு ஒரு பாடமாக இருக்க நேபாளத்து பிரச்சனைக்கும் இலங்கைப் பிரச்சனைக்கு என்ன விடையங்கள் பொதுவாக இருக்கு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஒரு பாடமாக இருக்க நேபாளத்து பிரச்சனைக்கும் இலங்கைப் பிரச்சனைக்கு என்ன விடையங்கள் பொதுவாக இருக்கு. :)

சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு சமாதானத்தின் மீதான உண்மையான நாட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சந்தேகக் கண்ணோடு இராணுவ வலுவாக்கங்கள் இராணுவப் போட்டிகள் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளுக்கு மாறாக இராணுவ நடவடிகைகள் மூலமான அழிவுகளை மட்டுமே தரும்.

பிரச்சனைகளின் அடிப்படைகள் மாறுபடினும்..பிரச்சனைகளை தீர்க்க வேண்டின் இறுதித் தீர்வு நோக்கி நகர வேண்டின்..அதற்கு முதலில் வளர்க்கப்பட வேண்டிய பரஸ்பர நம்பிக்கைக்கு எங்கும் அடிப்படை ஒன்றுதான்.

ஆயுதங்களை கீழே போடு பேசலாம் என்பவர்களுக்கு இந்த நேபாளிய அணுகுமுறை நல்ல எடுத்துக் காட்டு. இறுதித் தீர்வு எட்டப்படும் போது...ஐநாவின் பார்வையின் கீழ் ஆயுதங்களை வைப்பதானது நல்லதொரு விடயம் நம்பிக்கை அளிக்கக் கூடிய அணுகுமுறை.

நீங்கள் இனப்பிரச்சனைக்கான அடிப்படைகளையும் நேபாளியப் பிரச்சனைகளின் அடிப்படைகளையும் ஒப்பிட்டு கருத்துச் சொல்லப்படுவதாக நோக்கி முழிக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அதுவல்ல சொல்லப்பட்டது. இனப்பிரச்சனை பற்றி அதன் தீர்வு பற்றி பரஸ்பரம் உறுதிப்பாட்டோடு பேச்சுக்களத்தில் இருக்க வேண்டுடின் முதலில் பலமான சமாதானச் சூழலும் புரிந்துணர்வும் இராணுவ தீர்வில் நம்பிக்கையீனங்களும் பெறப்பட வேண்டும். அதுவரைக்கும் நேபாள் என்ன பலஸ்தீனம் இஸ்ரேல்...ஆப்கானிஸ்தான் ஈராக் வரைக்கும் ஒரே இயல்புதான். :)

Edited by nedukkalapoovan

இலங்கைப் பிரச்சனையில் யார் யார் இறுதித் தீர்வில ஜநாவின் மேற்பார்வையில் ஆயுதங்களை கீழ் வைக்க வேண்டி வரும்? அது எப்படிப்பட்ட இறுதித் தீர்வாக இருக்கும்?

:)

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சனையில் யார் யார் இறுதித் தீர்வில ஜநாவின் மேற்பார்வையில் ஆயுதங்களை கீழ் வைக்க வேண்டி வரும்? அது எப்படிப்பட்ட இறுதித் தீர்வாக இருக்கும்?

:)

அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது இறுதித் தீர்வில் பங்கேற்கும் தரப்புகளைச் சார்ந்தது.

ஐநா மேற்பார்வையில் பிரச்சனையில் சம்பந்தபட்ட ஆயுதங்களைப் பாவிக்கும் அனைத்துத் தரப்பும் ஆயுதங்களை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏன் சிறீலங்கா அரசும் கூட ஐநா விதிகளுக்கு அமைவாக ஆயுதங்களை பாவிக்காவிடின் அதுவும் வைக்க வேண்டி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாள அரசு, மாவோயிஸ்டுகள் இடையே ஒப்பந்தம்

_42341222_nepal-signing203in.jpg

நேபாள அரசும், மாவோயிய கிளர்ச்சியாளர்களூம், 10 ஆண்டு காலமாக அந்த நாட்டில் நிலவி வந்த கிளர்ச்சியை ஒரு வழமையான முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவிக்கும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

தலைநகர் காட்மாண்டில், நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் மாவோயிய கிளர்ச்சித் தலைவர் ப்ரசந்தாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் பல்லாயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட ஒரு மோதலை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம், கிளர்ச்சியாளர்கள், ஒரு இடைக்கால அரசில் சேர வழிவகுத்து, அவர்களது ஆயுதங்கள் ஐ.நா மன்ற மேற்பார்வையில் வைக்கப்படவும் வழி செய்கிறது.

மன்னர் கியானேந்திரா கடந்த ஏப்ரலில் நடந்த மக்கள் கிளர்ச்சிக்குப் பின்னர் தனது நேரடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, பலகட்சி அரசு ஒன்றை நியமித்ததன் பின்னர் மாவோயிய கிளர்ச்சியாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

bbc.tamil

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:) இப்பிடித்தான் நோர்வே எற்பாட்டின் படி இதே அய் நா சபை முன் பாலஸ்தீன இயக்கம் ஆயுதத்தை கீழே போட்டது பாவம் இன்று அரபாத்தும் இல்லை ஆயுதமும் இல்லை :)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) இப்பிடித்தான் நோர்வே எற்பாட்டின் படி இதே அய் நா சபை முன் பாலஸ்தீன இயக்கம் ஆயுதத்தை கீழே போட்டது பாவம் இன்று அரபாத்தும் இல்லை ஆயுதமும் இல்லை :)

உலகில் பலஸ்தீன தேசத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதே. அதுமட்டுமன்றி கமாஸ் போன்ற இயக்கங்கள் இன்னும் ஆயுதம் தரித்துதான் உள்ளன. அவை கூட இன்று பலஸ்தீன அதிகார சபை என்ற ஒன்றில் உட்கார முடிந்ததென்றால் அதற்கு அன்று செய்த ஒப்பந்தந்தான் காரணம். பலஸ்தீனம் தனது எல்லைகள் பற்றிப் பேச முடிகிறதென்றால் அதற்கு அன்றைய ஒப்பந்தம் தான் காரணம். ஒப்பந்ததில் கைச்சாத்திட்ட இஸ்ரேலியப் பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அரபாத்தும் இறந்து விட்டார். வட அயர்லாந்து பெரிய வெள்ளி உடன்படிக்கையும் நல்ல உதாரணமாகக் கொள்ளத்தக்கது.

இவற்றை எல்லாம் படிப்பினையாகக் கொண்டு ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகும் போது முன்னேற்றகரமானதாக அணுக முடியும்.

அனைத்துக் கட்சி கூட்டம் என்று சொல்லிக் கொண்டு அரசும் ஜேவிபியும் பிக்குகள் முன்னணியும் தினேஷ் குணவர்த்தனாவும் தமிழர்கள் தலையில் இராணுவ அழுத்தக்களுக்கு மத்தியில் தீர்வைத் திணிக்க நினைப்பதிலும்..நேபாள அணுகுமுறை முன்னேற்றகரமானதே. ஆனால் அதுவே ஈழத்தமிழர்களின் எதிர்பார்க்குரிய தீர்வுகளை எட்ட உதவிடும் என்றில்லை. இவற்றைவிட முன்னேற்றகரமானதாக எதிர்கால அணுகுமுறைகளை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இறுதித் தீர்வில் அரசுடன் பேச உள்ள தரப்பினரையே சாரும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பலஸ்தீன தேசத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதே. அதுமட்டுமன்றி கமாஸ் போன்ற இயக்கங்கள் இன்னும் ஆயுதம் தரித்துதான் உள்ளன. அவை கூட இன்று பலஸ்தீன அதிகார சபை என்ற ஒன்றில் உட்கார முடிந்ததென்றால் அதற்கு அன்று செய்த ஒப்பந்தந்தான் காரணம். பலஸ்தீனம் தனது எல்லைகள் பற்றிப் பேச முடிகிறதென்றால் அதற்கு அன்றைய ஒப்பந்தம் தான் காரணம். ஒப்பந்ததில் கைச்சாத்திட்ட இஸ்ரேலியப் பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அரபாத்தும் இறந்து விட்டார். வட அயர்லாந்து பெரிய வெள்ளி உடன்படிக்கையும் நல்ல உதாரணமாகக் கொள்ளத்தக்கது.

இவற்றை எல்லாம் படிப்பினையாகக் கொண்டு ஈழத்தமிழர் பிரச்சனையை அணுகும் போது முன்னேற்றகரமானதாக அணுக முடியும்.

அனைத்துக் கட்சி கூட்டம் என்று சொல்லிக் கொண்டு அரசும் ஜேவிபியும் பிக்குகள் முன்னணியும் தினேஷ் குணவர்த்தனாவும் தமிழர்கள் தலையில் இராணுவ அழுத்தக்களுக்கு மத்தியில் தீர்வைத் திணிக்க நினைப்பதிலும்..நேபாள அணுகுமுறை முன்னேற்றகரமானதே. ஆனால் அதுவே ஈழத்தமிழர்களின் எதிர்பார்க்குரிய தீர்வுகளை எட்ட உதவிடும் என்றில்லை. இவற்றைவிட முன்னேற்றகரமானதாக எதிர்கால அணுகுமுறைகளை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இறுதித் தீர்வில் அரசுடன் பேச உள்ள தரப்பினரையே சாரும்.

இதே கமாஸ் இயக்கம் இன்றுவரை ஒரு பயங்கர வாத இயக்கம் தான் இன்றுவரை அதனை யார் அதனை அதாவது உங்கள் பார்வையில் உலக சமாதானத்தை நிலை நாட்டுபவர்கள் யார் அதனை ஒரு அரசாக அங்கீகரித்து ஏற்று கொண்டுள்ளனர் அது மட்டுமல்ல அராபத் ஆயுதத்தை போட்தால் தான் இன்று இந்த முன்னேற்றம் என்றால் அப்போ புலிகளும் ஆயுதத்தை கீழே போட வேண்டும் அதுதானே ஏன் ஒரு முறை போட்டு பட்டு கொண்டது போதாதா??? உலகில் பாலஸ்தீனத்திற்கு அங்கீரம் கிடைத்துள்ளதா???? அப்படியானால் இதுவரை ஏன் அமெரிக்கா இஸ்ரவேலிற்காக மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்ன???இதே லெபனான் மீதான ஆக்கிரமிப்பில் ஒரு மாதம்வரை தன்னுடையை சொந்த இனமே அங்கு அகதிகளாக அகப்படடிருந்த வேளையிலும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவும் மெளனித்திருந்ததன் காரணம் என்ன பிறகு திடீர்ஞானோதயத்தில் அய் நா படையை அனுப்ப ஒத்து கொண்டதேன் சமாதனத்தின் மீதான நம்பிக்கையா?? கிஸ்புல்லா ஆயுதத்தை போட்டதாலா?? சரி பி எல் ஓ போட்டதால் கமாஸ் தூக்கியது வென்றது. ஆனால் புலிகள் போட்டால் பின்னர் தூக்க யார் உள்ளனர் ?????? பதில் ??? அதுவும் ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே கமாஸ் இயக்கம் இன்றுவரை ஒரு பயங்கர வாத இயக்கம் தான் இன்றுவரை அதனை யார் அதனை அதாவது உங்கள் பார்வையில் உலக சமாதானத்தை நிலை நாட்டுபவர்கள் யார் அதனை ஒரு அரசாக அங்கீகரித்து ஏற்று கொண்டுள்ளனர் அது மட்டுமல்ல அராபத் ஆயுதத்தை போட்தால் தான் இன்று இந்த முன்னேற்றம் என்றால் அப்போ புலிகளும் ஆயுதத்தை கீழே போட வேண்டும் அதுதானே ஏன் ஒரு முறை போட்டு பட்டு கொண்டது போதாதா???

சமகால உலக.... பேச்சுவார்த்தை மூலமான இறுதித் தீர்வு ஒழுங்குகள் என்பது ஐநா பிரமாணங்களுக்கு அப்பால், ஐநா அங்கீகாரம் பெறாது... ஆயுதங்களைப் பாவிக்கும் அமைப்புக்கள் இறுதித் தீர்வு எட்டப்படும் நிலையில் தங்கள் போராயுதங்களை ஐநாவின் பார்வையின் கீழ் வைக்க வேண்டியது என்றாகி வருகிறது. விடுதலைப்புலிகளும் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த நிலைக்கு வர வேண்டி இருக்கும். சிறீலங்கா அரசு தனது படைகளை முற்றாக விலக்கி வடக்குக்கிழக்கு நிர்வாகப் பொறுப்பை வடக்குக் கிழக்கு மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டமைப்பிடம் ஒப்படைக்கும் போது அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அப்பிராந்திய மக்களை மட்டும் உள்ளடக்கிய வடக்குக்கிழக்குக்கான தனியான செயற்பாடுள்ள பாதுகாப்பு அலகு மட்டுமே ஆயுதங்களைத் தரித்திருக்க முடியும். ஏனைய அமைப்புக்களிடமிருந்து அது களையப்பட்டு ஐநா மன்றத்தின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

உலகில் பாலஸ்தீனத்திற்கு அங்கீரம் கிடைத்துள்ளதா???? அப்படியானால் இதுவரை ஏன் அமெரிக்கா இஸ்ரவேலிற்காக மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்ன???

இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உண்டு. பலஸ்தீனர்களின் தாக்குதலில் இஸ்ரேலிய அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து மனித வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதை அங்கீகரிக்க முடியாது. அதுமட்டுமன்றி இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தை விளைவிப்பதையும் அங்கீகரிக்க முடியாது.

பலஸ்தீன தேசம் உலக அங்கீகாரம் பெற்ற ஒன்று தற்போது. அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. பிரச்சனை பலஸ்தீன தேசத்தை கடும்போக்காளர்கள் நிர்வகித்தால் அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பது தான். இஸ்ரேலின் நிலையில் எந்தத் தேசம் இருந்தாலும் தனது பாதுகாப்புக் கருதி கடும் நடவடிக்கைகளைத்தான் எடுக்கும். கமாஸின் சில செயற்பாடுகளே பலஸ்தீன தேசத்தில் இன்றும் இரத்தம் ஓடிக்கொண்டிருக்க காரணம் என்றால் அது மிகையல்ல.

இதே லெபனான் மீதான ஆக்கிரமிப்பில் ஒரு மாதம்வரை தன்னுடையை சொந்த இனமே அங்கு அகதிகளாக அகப்படடிருந்த வேளையிலும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவும் மெளனித்திருந்ததன் காரணம் என்ன பிறகு திடீர்ஞானோதயத்தில் அய் நா படையை அனுப்ப ஒத்து கொண்டதேன் சமாதனத்தின் மீதான நம்பிக்கையா?? கிஸ்புல்லா ஆயுதத்தை போட்டதாலா?? சரி பி எல் ஓ போட்டதால் கமாஸ் தூக்கியது வென்றது. ஆனால் புலிகள் போட்டால் பின்னர் தூக்க யார் உள்ளனர் ?????? பதில் ??? அதுவும் ????

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஐநாவின் மேற்பார்வையில் வைப்பதற்கு முதல் வடக்குக்கிழக்கு மக்களின் பாதுகாப்பை தீர்மானிப்பதற்கான தனியான பாதுகாப்பு அலகு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சிறீலங்கா அரசின் முப்படைகளினதும் பொலீஸினதும் அரச சார்பு ஆயுதக்குழுக்களினதும் பிரச்சன்னம் எந்த வகையிலும் அதில் அனுமதிக்கப்பட முடியாது என்றிருக்க வேண்டும். அப்படி இன்றேல் அதை சிறீலங்கா மீறும் போது ஐநா மன்ற மேற்பார்வையில் இருக்கும் ஆயுதங்களை மீள பாவிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் இறுதித் தீர்வை எட்டும் போது தெளிவாக தீர்வுக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை நம்பி வெறும் வார்த்தைகளை நம்பி சுதுமலையில் செய்த ஆயுத ஒப்படைப்பு போன்றதாக இருந்தால் அது தமிழர்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்ததுக்கு ஈடாகும்.

Edited by nedukkalapoovan

அமெரிக்காவும்,ஜப்பானும் இலங்கை அரசுக்கு முண்டுகொடுத்து கொண்டிருக்கும் வரையும்,இலங்க்கை அரசு என்பது சிங்கள பவுத்த பேரினவாதக் கோட்பாடுகளுக்குள் கட்டமைப்புக் கொண்டிருக்கும் வரையும் இவை எவையுமே நடைபெறப் போவதில்லை.

தமிழ் மக்கள் தாங்களாகவே ஒரு தீர்வைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலையிலையே இருகிறர்கள்.அதை எவ்வாறு பெறுவதென்பதை எமக்கு எமது வரலாறு சொல்லி நிக்கிறது.

இதில நேபாளத்திற்கும் சிறிலாங்காவிற்கும் முடிச்சுப் போடுவது ,முழங்காலுக்கும் மொட்டாந் தலைக்கும் முடிச்சுப் போடுவதைப் போல் ,கற்பனைகளால் தான் முடியும்.

வரும் மாவீரர் தின உரையில் இனி தமிழர்கள் எவ்வாறு செயற்படுவர்கள் என்பது தெளிவாகக் கூறப்படும்.அமெரிக்காவும் அதன் கைக்கூலி ஜப்பானும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தப்போவத்தில்லை என்பதும் அது சிறிலங்கா அரசை எந்த வடிவத்திலும் முண்டு கொடுக்கவே செயற்பட்டு வருகின்றன என்பதுவும் தெளிவாகத் தெரியும் ஒரு விடயம்.போர் நிறுத்த ஒப்பந்ததையே அப்பட்டமாக மீறும் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் ஜப்பானும் தாயாரில்லை என்பது இப்போது வெகுவாக அம்பலப் படுத்தப்பட்டுள்ளது.

நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது ஐனாவாம் ......ஆயுதக்கொடுப்பாம்...... :)

அதுதான் உண்மை சாத்திரி ஒப்பந்தம் போடப்படும் ஆனால் மீறப்படுவதுதானே வாடிக்கை.ஆனால் எமது போராட்டத்துக்கும் நேபாள போராட்டத்துக்கும் அடைபடை வித்தியாசமானது என்பதே என்கருத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளப் பிரச்சனையின் அடிப்படை வேறு ஈழப்பிரச்சனையின் அடிப்படை வேறு. நேபாள இறுதித் தீர்வு நோக்கிய அணுகுமுறைகள்.. அர்ப்பணிப்புள்ள சமாதானச் சூழலை உருவாக்குவதிலும் இறுதித் தீர்வை நோக்கிய அணுகுமுறைகளுக்கும் அடிப்படையாக அமைவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நேபாளப் பிரச்சனைக்கு வழங்கப்பட்ட தீர்வே ஈழப்பிரச்சனைக்கும் அமைய வேண்டும் என்று இங்கு எவரும் வலியுறுத்தவில்லை என்பதை தவறான கண்ணோட்டத்தோடு கருத்துப் பதிபவர்கள் விளங்கிக் கொள்ளுங்கள்.

நேபாளம்...இந்தோனிசியா..அயர்லாந

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_42342770_nepalcelebafp203.jpg

சமாதான ஒளியை உணரத்தொடங்கியுள்ள நேபாளிய இளம் சமூகம்.

சிறீலங்கா இந்தியா அடங்கும் சார்க் நாடான நேபாளம் சமாதானத்தின் ஒளியை உணரத்தொடங்கியுள்ளது.

நேற்றைய அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் கீழ் நாட்டில் வன்முறை ஒழிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சமாதானத்தை வரவேற்றுள்ளனர்.

அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா ஐநா என்று உலகெங்கும் இருந்து வாழ்த்துச் செய்திகளும் வரவேற்புகளும் நேபாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

_42341042_nepalprachanda_afp.jpg

நேபாள மாவோஜிட் கிளர்சித்தலைவர்

கிளர்ச்சித்தலைவர் இது குறித்துத் தெரிவிக்கையில் நாட்டில் 238 வருடங்களாக இருந்த feudal அமைப்பு ஆட்சிமுறை முடிவுக்கு வந்துள்ளதாக கருத்துரைத்துள்ளார். அமையவிருக்கும் இடைக்கால அரசில் கிளர்சியாளர்களும் இணைக்கப்படவுள்ளனர் என்பது இங்கு மீண்டும் நினைவுபடுத்தத்தக்கது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6171586.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் மன்னருக்கும், மாவோக்களுக்கும் தான் பிரிச்சனையிருந்தது. தவிர, முந்திய மன்னர் ஞானேந்திரா இருந்தபோது கட்சிகளும் மன்னருக்கு சார்பாகவே நடந்து வந்தனர். மாவோவின் செயற்பாடுகள் இவ்வளவு போன்று வீரியமாகவும் இருந்ததில்லை. ஆனால் கஜேந்திரா வந்த பின்னர் கடுமையான கட்சி முடக்கலை ஏற்படுத்தியதால் மக்கள் தொடக்கம், அனைத்து அரசியல் தலைவர்களும், மாவோஸ்டிக்களும் கோபத்துக்குள்ளாகி அரச முறைக்கு எதிராக நடந்து கொள்ள முனைந்ததால் தான் அரசர் பணிந்தார். இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் ஒட்டுமொத்த மக்களும் மன்னருக்கு எதிராக ஒற்றுமையோடு செயற்பட்டது தான்.

இலங்கையை எடுத்துக் கொண்டால் இது ஒரு இனப்பிரச்சனை. இங்கே தமிழ் மக்கள் பல தடவை ஒற்றுமையாகக் குரல் கொடுத்தும் சிறிலங்கா அரசு தீர்வு எதையுமே தரவில்லை. நேபாளம் போல செயற்பட வேண்டுமானால் சிங்கள மக்கள், முஸ்லீம்மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கொள்ள வேண்டும். முடியுமா?

இப்போது நேபாளத்தில் கிரிசா பிரசாத் கொய்ராலாவுக்கு பிரச்சனையே, மன்னரே தவிர மாவோ அல்ல. மேலும் மாவோக்கள் மன்னர் ஆட்சிக்கு எதிராகவே போராடி வந்தனர். இன்று கிரிசா பிரசாத் அதையே செயற்படுத்த முனைவதால் மாவோக்களின் தேவை இல்லாமல் போகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வை இலங்கையரசு தந்திருந்தால் இலங்கையிலும் யுத்தம் இல்லாமல் போகும். ஆனால் எந்த இலங்கையரசு அதற்கு தயாராக இருக்கின்றது.

மாவோக்களுக்கு எவ்வாறு மன்னர் ஆட்சி ஒழிக்கப்படுவது முக்கியமோ, அவ்வாறு எமக்கும் தமிழீழ விடுதலை, அல்லது அதற்கு நிகரான தீர்வு முக்கியம். அவ்வாறு நடைபெறுமானால் யுத்தம் தானாகவே, தீர்ந்து போகும்.

அதை விட்டுப் போட்டு, ஆயுதங்களை கீழே போட்டர்ல தீர்வு என்று முட்டாள் தனமான கருத்துக்களை விதைப்பது ஏற்புடையதல்ல. அது தீர்வாகாது.

மேலே துயவனின் கருத்துடன் நான் ஒதுப்போகின்றேன்.இலங்கையில் நடப்பது இனப்பிரச்சினை அதைவிடுத்து தனிமனிதரை எதிர்கும் போராட்டமல்ல அங்கு சொந்தவினத்தவரே கொள்கைக்காக சண்டையிட்டனர்.ஆனல் இலங்கையில் இரு வெவ்வேறு இனங்கள் அடக்கப்பட்ட சமூகம் அடக்கிய சமூகத்தின் மீது போராட்டத்தை நடத்துகிறது நேபாலத்தினதும் இலங்கையினதும் பிரச்சினை முற்றிலும் வேறுபாட்டது.

ஆயுத ஒப்படைப்பு என்பது சாத்தியமானது அன்று அவ்வாறு சிங்களவரை நம்பி ஆயுத ஒப்படைப்பை தமிழர் தரப்பு செய்யுமாயின் அது தற்கொலைக்கு சமன்.ஏன் 1 தடவை ஆயுத ஒப்படைப்பு செய்த அனுபவமில்லையா??

ஒப்பந்தங்கள் போடும் போது இருதரப்பும் மதிக்க வேண்டும் ஆனால் சிங்களவர் வரலாற்றிலேயே அப்படி செய்தது இல்லை திம்பு பேச்சுவார்த்தை முதல் ஜெனிவாவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அச்சுவடிவெலேயே இருந்தன இருகின்ரன இருக்கும்.ஒரு அடிப்படை மனிதாபிமான முரையில் போடப்பட்ட சுனாமி பொதுக்கட்டமைப்பையே சிங்கல பேரினவாதம் தன் நீதிமண்றம் கொண்டு முடக்குகையில் ஒப்பந்தம் என்பது சாத்தியமா.இதல் சர்வதேசம் புரியும் புரிந்து கொள்ளும்

விடுதலைப்புலிகள் இறுதித் தீர்வின் போது ஆயுதப்பாவனை எப்படி இருக்கும் என்பதை இப்பவே தெளிவாகப் பகிரங்கப்பட்டுத்தும் போது அது உலகின் கவனத்தை ஈர்க்கும் அதேவேளை விடுதலைப்புலிகள் வன்முறையாளர்கள் பயங்கரவாதிகள் என்ற உச்சரிப்போடு இராணுவ அழுத்தங்களைப் பிரயோகித்து பலவீனமான அரசியல் தீர்வுகளை தமிழ் மக்கள் மீது திணிப்பதை காலங் கடத்துவதை ஜே ஆர் பிரேமதாச டிபி விஜதுங்க சந்திரிக்கா போன்று மகிந்தவுக்கும் அனுமதிப்பதால் தமிழர்களின் போராட்ட வலுவே சிறுகச் சிறுக சிதைக்கப்பட்டுவிடும்
.

உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடே ஆனால் சர்வதேச வலையமைப்பை நிச்சயமாக அரசியல் நடவடிக்கை மூலம் உடைக்கலாம்.சீரான திட்டமிட்ட பிரச்சாரங்கள் மூலம் உடைது எறியலாம்.அந்த வேலையே இப்போது நடைபெறுகின்றது

சர்வதேச ஆதரவுத்தளம் இல்லாமல் தமிழ் மக்களால் தனி ஈழத்தை பெறக்கூடிய வலு இருப்பினும் உலகில் இயங்க முடியாது என்பதை பலர் மறந்து போய் அல்லது மறைத்து விட்டு விடுதலைப்புலிகள் மீது யதார்த்ததுக்குப் புறம்பான அபரிமித கற்பனைகளை வளர்த்து வருகின்றனர்.

சர்வதேச அங்கீகாரம் தானாக கிடைக்கும் சீனாவை கம்பியுனிஸாக யார் அங்கீகரித்தார்,கியுபாவை யார் அங்கீகரித்தார் அல்லது வடகொரியாவை யார் அங்கீகரித்தார்.தாய்வானின் நிலையை பாருங்கள் தனி நாடாக உலகம் அங்கீகரித்தும் சீனா அங்கீகரிக்காதலால் தனி நாடாக ஜநாவில் இடம்பெறமுடியவில்லை அப்படி ஒரு நிலையை தமிழீழம் எதிர்கொள்ளமாட்டாது.வலியவருக

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.