Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தாய்மார் வடிக்கும் இரத்தக் கண்ணீர் ராஜபக்ச குடும்பத்தை சாபமாக துரத்தும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் தாய்மார் வடிக்கும் இரத்தக் கண்ணீர் ராஜபக்ச குடும்பத்தை சாபமாக துரத்தும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 12:12.21 AM GMT ]
missing_protest2.jpg
வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார். 

வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் ராஜபக்ச குடும்பம் திட்டமிட்டு தமிழர் கலாசாரத்தைச் சீரழித்துள்ளது. அந்தப் பாவத்திற்கான சம்பளத்தை இறைவன் வழங்குவான். அது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடித்து விட்டோம், தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்துவிட்டோம், வடக்குத் தமிழ் மக்களின் விடிவை வழங்கியவர்கள் நாமே என மார்தட்டிய மஹிந்த ராஜபக்சவும், அவரது குடும்பமும், அரசும் மறுபுறம் தமிழர்களின் சமூக கலாசாரத்தை திட்டமிட்டு சீர்குலைத்தன.

“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் அங்கு தாராளமாக பியர் போத்தல்களையும் மதுபான போத்தல்களையும் கொள்கலன்களில் அனுப்பி வைத்து புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கினார்கள்.

இளைஞர்களையும் யுவதிகளையும் நல்வழிப்படுத்துகிறோம். மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றோம் என்ற போர்வையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி போதைப் பொருட்களை விநியோகித்தனர்.

உல்லாசப் பயணிகளுக்காக ஹோட்டல்களைத் திறக்கின்றோம் என்ற பெயரில் அந்த ஹோட்டல்களுக்குள் விபசார விடுதிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

சிறப்பான ஒழுக்கத்தைக் கொண்டிருந்த வடபகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையில் இவ்வாறு சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்ச தமிழர்களைப் பழிவாங்கினார்.

இன்று மஹிந்த ராஜபக்சவின் பழிவாங்கல் விஸ்வரூபமெடுத்துள்ளது.

“வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் தமிழ்ச் சமூகத்தை சீரழித்த ராஜபக்ச குடும்பமும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கிய தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளையும் மக்கள் ஓரங்கட்ட வேண்டும்.

tamilwin

இவருக்கு விளப்பம் பத்தாது.

ராசபக்சவை கொணந்தது நாங்கள், திரும்பவும் கொண்டுவந்திருந்தால் போர்குற்ற விசாரணையில் மாட்டி விட்டிருக்கலாம்.

எத்தினை சனம் செத்தாலும் போர்க்குற்ற சிசாரணையில் மாட்டும் வரைக்கும் ராசபக்ச தான் வெண்றிருகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச இவற்றை செய்யும் போது மைத்திரி அமைச்சராக இருந்து செய்வித்தார் என்பதை சிலர் தங்கட வசதிக்கு மறந்திட்டினம். :lol::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.