Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாணவியை காணவில்லை

Featured Replies

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

 

ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.  

 

http://www.tamilmirror.lk/147252#sthash.lhOafmhi.dpuf

  • தொடங்கியவர்

vithusha%20kili%20fffff221421.jpg

 

கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச்சென்ற சிறுமி ஒருவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா(வயது -16) என்ற மாணவியே காணாமல் போயுள்ளார். கடந்த வியாழக்கிழமை தனது தாயாரை பார்க்க கிளிநொச்சி நகருக்கு சென்ற குறித்த மாணவி அன்று மதியம் வீடுதிரும்பியுள்ளார். ஆனால் அவர் வீடுபோய்ச் சேரவில்லை. இதுகுறித்து பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. -
 
 
 

எல்லாத்துக்கும் மைத்திரியும் சம்பந்தரும் தான் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட வகையில்.. குற்றச் செயல்கள் வடக்குக் கிழக்கில் அதிகரிக்க..

 

சிறீலங்கா படை தரப்பு

 

சிறீலங்கா பொலிஸ்தரப்பு

 

சிறீலங்கா அரசு தரப்பு

 

இவையும் முக்கிய காரணம்.

 

அவைக்கு முண்டுகொடுக்கும் சம்.. சும் ஆட்களும் உடந்தை. :icon_idea:

  • தொடங்கியவர்
கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி வவுனியா பஸ் நிலையத்தில்! பொலிஸார் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர் 
 
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்த்தனர்.
 
கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச்சென்ற மாணவியை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா(வயது -16) என்ற மாணவியே காணாமல் போயிருந்தார்.
 
இந்த நிலையில் இன்று வவுனியா பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த சிறுமி ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உண்மை தெரியவந்தது. சிறுமியை அழைத்துச்சென்ற பொலிஸார் நீதிவான் முன்நிலையில் முற்படுத்தினர். இதன்போது சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்திர் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
 
http://www.malarum.com/article/tam/2015/05/31/10332/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-.html#sthash.r6ofgnQy.dpuf
 
 

திட்டமிட்ட வகையில்.. குற்றச் செயல்கள் வடக்குக் கிழக்கில் அதிகரிக்க..

 

சிறீலங்கா படை தரப்பு

 

சிறீலங்கா பொலிஸ்தரப்பு

 

சிறீலங்கா அரசு தரப்பு

 

இவையும் முக்கிய காரணம்.

 

அவைக்கு முண்டுகொடுக்கும் சம்.. சும் ஆட்களும் உடந்தை. :icon_idea:

 

 

 

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி வவுனியா பஸ் நிலையத்தில்! பொலிஸார் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர் 

 

நாங்க என்ன எல்லாம் பிளான் பண்ணி வைத்திருந்தம் எழுதுறதுக்கு கெடுத்திட்டீங்களே.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிள்ளையை பாதுகாப்பாய் ஒப்படைத்த சிங்கள போலீசுக்கு கோடானு கோடி நன்றிகள்.

பிள்ளை ஏன் வவுனியாவிக்குப் போனது?

விசாரிக்கணும்.

யாராவது கூட்டிப் போயிருந்தால் மேலும் விசாரிக்கணும்.

எவனாவது சுவிஸ் குமார்

லண்டன் சுமார் எண்டு கிளம்பி இருப்பாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உண்மை தெரியவந்தது.

 

 

அதென்ன உண்மை...?!

 

தென்னிலங்கை.. ஆட் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டவா.. அல்லது தானே தன்னைக் கடத்தினாவா... அல்லது சிறீலங்கா பொலிஸ் உண்மையை மறைச்சிட்டு கதையளக்குதா..?!

 

முதலில் சிறுமியை முறைப்பாடு கொடுத்த.. பெற்றோரிடம் ஒப்படைக்கிற வழியைப் பாருங்க. மிச்சம் சொறிலங்கா பொலிஸுக்கு நற்சான்றிதழ் கொடுப்பது அப்புறம் நடத்திக்குவம். :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த நிலையில் இன்று வவுனியா பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த சிறுமி ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உண்மை தெரியவந்தது. சிறுமியை அழைத்துச்சென்ற பொலிஸார் நீதிவான் முன்நிலையில் முற்படுத்தினர். இதன்போது சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்திர் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
 
 பொலிசு எப்ப தொடக்கம் எடுத்ததுக்கெல்லாம்  நீதவானிட்டை போக வெளிக்கிட்டது? 

அதென்ன உண்மை...?!

 

தென்னிலங்கை.. ஆட் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டவா.. அல்லது தானே தன்னைக் கடத்தினாவா... அல்லது சிறீலங்கா பொலிஸ் உண்மையை மறைச்சிட்டு கதையளக்குதா..?!

 

முதலில் சிறுமியை முறைப்பாடு கொடுத்த.. பெற்றோரிடம் ஒப்படைக்கிற வழியைப் பாருங்க. மிச்சம் சொறிலங்கா பொலிஸுக்கு நற்சான்றிதழ் கொடுப்பது அப்புறம் நடத்திக்குவம். :icon_idea::)

 

மேட்டர் சப்பெண்டு ஆகிட்டுது என்ற கடுப்பு வார்த்தை பிரயோகங்களில தெரியுது.   :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.