Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எத்­த­கைய சவால்கள் நேர்ந்­தாலும் சம்பூர் மக்­களை சொந்த காணியில் குடி­யேற்­றுவோம் - இரா.சம்­பந்தன்

Featured Replies

sama_1.jpg
 
சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் தடைகள் நேர்ந்­தாலும் அந்த மக்­களை அவர்­களின் சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­யேற்­றியே தீருவோம் என தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு உச்ச நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட இடைக்­கால உத்­த­ரவு வாபஸ் பெறப்­பட்­டதைத் தொடர்ந்து தமது காணி­களை துப்­பு­ரவு செய்­த­வர்­களும் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்து அங்கு தங்­கி­யி­ருந்­த­வர்­களும் பொலி­ஸாரால் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
சம்பூர் வர்த்­தக வலயம் சார்பில் உச்ச நீதி­மன்றம் வழக்­கொன்று இருப்­பதன் கார­ண­மாக தமது காணி­களை துப்­பு­ரவு செய்­யச்­சென்ற மக்­களை பொலிஸார் தடுத்­தி­ருக்­கலாம். வெளியார் நுழை­வதை தடுக்கும் வகையில் பொலிஸார் கட­மையை செய்­தி­ருக்­கலாம். சம்பூர் வர்த்­தக வலயம் சம்­பந்­த­மாக வழக்­கொன்று தாக்கல் செய்­தி­ருக்­கின்ற கார­ணத்­தினால் அவ்­வ­ழக்­குக்­கான தீர்வு எவ்­வா­றா­யினும் வந்­துதான் ஆக வேண்டும்.
 
சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் பாரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வந்­துள்­ளன. அமைச்­ச­ர­வையில் சம்பூர் மக்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனை தொடர்ந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இரத்­துச்­செய்­யப்­பட்­டுள்­ளது.
 
அர­சாங்கம் சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக தீவி­ர­மான முடி­வு­களை மேற்­கொண்டு அதை அமுல்­ப­டுத்த முன்­வந்­துள்­ளது. அதனால் சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்தை விரைவில் செய்து முடிக்க வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. அந்த விவ­கா­ரத்தை தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கட்­டாயம் செய்­விக்கும். அது நடந்தே தீரும். எக்­கா­ரணம் கொண்டும் எமது முயற்சி தோல்­வி­யுற நாம் விடப்­போ­வ­து­மில்லை. விடவும் மாட்டோம். இவ்­வி­வ­காரம் தொடர்­பாக சம்பூர் மக்­களோ ஏனை­ய­வர்­களோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
 
சம்பூர் மக்கள் தமது காணியில் குடியேறுவார்கள். வர்த்தக வலயக்காணியில் மக்கள் குடியேற்றப்படுவதை தொடர்ந்து கடற்படை முகாமாகவுள்ள 237 ஏக்கர் காணியிலும் மக்கள் விரைவாக குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
 
 

Edited by Athavan CH

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி சொல்லிக்கொண்டு இருப்பார். எல்லாம் சும்மா வாய் வெட்டுதான், காரியம் ஒண்டும் இல்லை. உண்மையில் இவருக்கு மக்களை குடியமர்த்த விருப்பம் இல்லை. எனன்றல் இவரில் ஓட்டு பொறுக்கி அரசியலுக்கு இடம்பெயர்ந்த சனங்களை பாவிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

24ம் திகதி மே "மீளக்குடியேறிய" மக்களை சந்தித்த சும்

2ம் திகதி யூன் மக்களை " மீளக்குடியேற்றுவேம்" சம்.

ஏற்கனவே ஒரு கிழமைக்கு முன்னர் மீளக்குடியேறிய மக்களை எப்படி ஐயா மீளக்குடியேற்றப் போறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

24ம் திகதி மே "மீளக்குடியேறிய" மக்களை சந்தித்த சும்

2ம் திகதி யூன் மக்களை " மீளக்குடியேற்றுவேம்" சம்.

ஏற்கனவே ஒரு கிழமைக்கு முன்னர் மீளக்குடியேறிய மக்களை எப்படி ஐயா மீளக்குடியேற்றப் போறார். :D

 

ஹலோ.. அது போன மாதம். இது இந்த மாதம். :lol:

 

சிங்களப் பொலிசும் நாங்களும் கூட்டு. நாங்க சொன்னா அவை கலைப்பினம்.. அவை கலைச்சா நாங்க கருணை காட்டுவம்.. வாக்குப் பொறுக்கி அரசியலில் இது சகஜமப்பா. :o:D

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே பொலிஸார் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள்.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உடபட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும் கடற்படை பயிற்ச்சி முகாமிற்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகளில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதியினால் இம் மாதம் வெளியிடப்பட்ட விஸேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.

இருந்த போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு, சுயமாகவே சென்று காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை, சிலர் தற்காலிக கொட்டில்கள் அமைத்து தங்கியும் இருந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்வதற்கு தயாராகவிருந்த நிறுவனமொன்று இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/05/150530_sampoor

“They are becoming IDPs (internally displaced people) yet again, in their own land.”

It’s tough to get an estimate about how much land is still being occupied by the Sri Lankan army, said Mittal.

“It’s widespread, I was blown away.” she said. “We have worked on land issues around the world . . . but have never seen anything like this where you just move in because you are either the army or have the support of the largest Sinhala majority.”

(The Oakland Institute has chronicled land-grab cases in Africa, Argentina and Papua New Guinea.)

One woman, from eastern Sri Lanka, told Mittal that the army took over her home and homes of least 40 other families in June 1990.

“When we left, it was not from choice,” said the woman. “We were forcibly evicted without compensation and legal procedure. The army now says that it will leave if the government gives orders to vacate.”

http://www.yarl.com/forum3/index.php?/topic/158474-land-seized-from-tamils-turned-into-luxury-tourist-resorts-in-sri-lanka-report-finds-toronto-star/#entry1114752

1990 வெளியேறியவர்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.