Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை விவகாரம் - முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்படுகொலை விவகாரம் - முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!
[Sunday 2015-07-12 08:00]
இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை  வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

  

வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.இதன்போது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் வடக்கின் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு விடயத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிஸ்வால், விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வாய்ப்பாக கொள்ளுமாறு விக்னேஸ்வரன் கோரப்பட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது முதலமைச்சர் உலக வங்கி பிரதிநிதிகளையும் சந்தித்தார். எனினும் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸனுடன் அவர் மூடிய அறை பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார். இதேவேளை தமது பயணம் தனிப்பட்டது என்ற அடிப்படையில் அவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனை சந்திக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=135741&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்தளவு உண்மையோ தெரியாது. ஆனால், காலப்போக்கில் இவ்வாறு மாறுவதை தவிர்க்க முடியாது. முதலமைச்சர் மட்டும் இனப்படுகொலை என்னும் போது அவர் சார்ந்த கட்சி , இல்லை நடந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பலமாக சொல்லும்  போது , அவர்களின் நீதியான போராடங்களை முடக்கும் போது இந்த நிலை தவிர்க்க முடியாது . 

இதன் ஒரு தொடர்ச்சியாகவே அனந்திக்கும் கூட்டமைப்பில் போட்டி போட கொடுக்கபடவில்லை .

அனந்திக்கு இடம் தாராதது , தனியே ஒரு ஆசனத்துகான பிரச்சனை அல்ல . அது கூட்டமைப்பின் கபட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே.

ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், அமெரிக்க சிங்களவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மாகாண சபையை முடக்க மாவையையும், ஏனைய சில்லறை பாராளுமன்ற உறுபினர்களையும் பாவிக்கும் போது, அவர்கள் நேரடியாகவே முதலமைச்சரை உலக வங்கியுடன் பேச அனுமதித்து இருக்கறார்கள். கிழக்கு மாகாணத்தையும் எமது ஆட்சியில் வைத்திருந்தால், நாங்களே நேரடியாக வெளிநாடுகளுடன் தொடர்பில் இருக்கலாம் .ஆனால்,  அதை முஸ்லிம்களிடம் இருந்து கௌரவமாக , நட்பாக பெறக்கூடிய திறமையோ அனுபவவோ ராசா தந்திரமோ சம்பந்தரிடமோ, அவரது அடி வருடிகளிடமோ இல்லை. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதன் The  Hill  என்ற பத்திரிகையில், தெளிவாக இலங்கையின் நிலமையை பற்றி சொல்லியிருகிறார். எவ்வளவு நிலங்களை பிடித்து வைத்திருகிறார்கள், அதில் எந்தளவி, எப்படி விடுகிறார்கள்  (அதை சம்சுன் கோஸ்டி வாக்கு வாங்க பாவிக்கும் கேவலாமா அரசியல் பற்றி சொல்லவில்லை .அந்தளவில் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்..இல்லாவிட்டால் அனந்தியின் நிலைதான் அப்பனுக்கு)  இறுதி போரில் எத்தனை பேருக்கு மேல் கொல்லபட்ட்டது , அதற்க்கு தேவையான "பாதிபடோர் சார்பான விசாரணை பொறிமூலம்" குற்றவாளிகள் இனம்காணப்பட்டு தண்டிக்கப்படுதல். ( இது பற்றி ஒருமுறை இங்கே யாழில் கதைத்திருந்தோம். உள்நாட்டு விசாரணை சர்வதேச மேற்பார்வையில் என்றால்...விசாணை தொடங்க முன்பே தீர்ப்பை எழுதி வைத்து விடுவார்கள்) , எத்தனை பேர் காணமல் போயிருக்கிறார்கள் , வட கிழக்கில் உள்ள ராணுவ பிரசன்னம். இதுகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சண்டே டைம்ஸ் மூடின அறைக்குள் நிஷா பிவால் கூப்பிட்டு இப்படி சொன்னவாவம் என்று செய்தி போடுகிறது 

ஒன்று மட்டும் உண்மை ,இவரை செயற்படவிடாமல் முடக்குபவர்களுடன் சென்று இருந்தால் , இப்படி ஒன்றும் சொல்ல, எழுத முடியாது. இதயங்களால் இணைந்து பின்னி பிணைந்து இருக்கின்றோம் என்று சொல்லிபோட்டு இரண்டு சாட் அடித்துபோட்டு வர வேண்டியதுதான் . 

இங்கே சிங்களவனுக்கு , அவர் THE HILL எழுதியதை பற்றி விவாதிக்க விருப்பம் இல்லை. ஏன்னெனில் அதில் ஒன்றும் விவாதிக்க என்று ஒன்றும் இல்லை . அதில் ஏதாவது பிழை இருந்ததால் தானே விவாதிப்பதற்றக்கு . யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கழிந்தும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை .. ஆனால்  நடந்து கொண்டிருக்கிற சர்வதேச மாற்றங்களை விளங்கி கொள்ளகூடிய தமிழர் தலைமை இல்லாமை எங்களது துரதிஸ்டம். பொய்யும் புரட்டும் சொல்லி அரசியல் செய்யும் சம்பந்தன் குழு தமிழர்களின் பிரதி நிதிகளாக இருக்கும் வரை, தமிழருக்கு விடிவு ஏதும் இல்லை. 

 

 


2009 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பங்களிப்போடு.. செய்த இனப்படுகொலைகளை காட்டிக்கொடுக்க அது விரும்பாது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு வெளியிலும்  நகர்வுகள் அவசியம்.. நீதி என்ற ஒன்று அவசியம் என்றால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.