Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.எல். லில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை!

Featured Replies

ஐ.பி.எல். லில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை!

சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு  2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வாழ்நாள்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

CHENNAI.jpg

அதோடு குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன்,  பிசிசிஐ அமைப்பில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியை இழக்க நேரிட்டது.

இந்நிலையில், லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,  சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

லோதா  அளித்துள்ள தீர்ப்பில், "குருநாத் மெய்யப்பன் பி.சி.சி.ஐ விதிமுறைகளை மீறியுள்ளார். கிரிக்கெட் மீது பற்று கொண்டவர் செய்யும் செயல் அல்ல இது. எனவே கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கிரிக்கெட் தொடர்பான எந்த விஷயங்களிலும் அவர் ஈடுபடக் கூடாது. 

shil%281%29.jpg

‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இருவருமே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்குந்த்ராவுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 5 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.  தடை விதிக்கப்படுகிறது.

அதுபோல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும் சென்னை அணியை நிர்வகித்து வந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டு கால தடை விதிக்கப்படுகிறது.

அதுபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது" என கூறப்படுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49418

 

 

 

தோனி, மெக்கல்லம் அதிரடி மிஸ்சிங் : சென்னை இல்லாத ஐ.பி.எல். லில் இனி என்ன நடக்கும்?

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ஆம் ஆண்டு சீசன்களில் சென்னை இல்லாத ஐ.பி.எல். போட்டியைதான் தமிழக ரசிகர்கள் காண முடியும்.

chen.jpg

இந்திய அணியின் கேப்டனான தோனி சென்னை அணிக்கு தலைமை வகிப்பதால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சென்னை அணியின் ரசிகர்களான உள்ளனர். இந்த தடை அந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இனி தோனி, மெக்கல்லம், பிரவோ, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற மாட்டார்கள். மெக்கல்லமின் அதிரடி மிஸ்சிங்.

mc.jpg

சென்னை அணிக்கான  ஒப்பந்தம் முடிந்த வீரர்களை  மற்றொரு ஐ.பி.எல். அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ஐ.பி.எல். போட்டி களை கட்டும் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேலரிகள் காலியாக கிடக்கும்.

தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் வேறு ஏதாவது அணியை தத்து எடுத்து அந்த அணிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருப்பார்கள்.

தோனி உள்ளிட்ட வீரர்கள் தொலைகாட்சிகளில் ஐ.பி.எல். போட்டியை ரசிப்பார்கள்.

chn.jpg

சென்னை அணிக்கு பதிலாக கொச்சி டஸ்கர்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல். தொடரில் இடம் பெறலாம்.

இந்தியாவின் மற்றொரு நகரை மையமாக கொண்டு இன்னொரு அணி உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

எங்க தல தோனிக்கு பெரிய விசில் போடு என்ற விளம்பரம் காணாமல் போகும்.

ஐ.பி.எல். தொடரில் மஞ்சள் வர்ணம் கொண்ட  ஜெர்சி அணிந்து விளையாடும் ஒரே அணி சென்னைதான். இனி அதனை காண முடியாது.

ஐ.பி.எல். தொடரில் சென்னை விளையாடும் போது சேப்பாக்கம் மைதானமே மஞ்சள் வர்ணத்தில் காட்சி அளிக்கும் இனி அந்த காட்சியும் மிஸ்சிங்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை காண இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் தோனி ஓய்வு முடிவை எடுக்கவுமம் வாய்ப்பிருக்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=49445

 

 

 

குருநாத் மெய்யப்பன் சென்னை அணியின் நிர்வாகியானது எப்படி?

mey.jpgகிரிக்கெட்டில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட குருநாத் மெய்யப்பன், திரைப்பட ஜாம்பவான் மெய்யப்பன் செட்டியாரின் பேரன் ஆவார்.

சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியான குருநாத் மெய்யப்பன், சூதாட்ட விவகாரத்தில் சிக்கியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஏ.வி.எம். நிறுவனத்தை உருவாக்கிய மெய்யப்ப செட்டியாரின் மகனான ஏ.வி.எம். பாலசுப்ரமணியத்தின் மகன் ஆவார். தற்போது 38 வயதான மெய்யப்பன் கார்பந்தயம், கோல்ப் போன்ற விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

அதோடு ஏ.வி.ம். புரொடக் ஷன்ஸ், ஏ.வி.எம். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களின் மேலாண் இயக்குநராகவும் குருநாத் மெய்யப்பன் செயல்பட்டு வந்தார். அவரது நட்பு வட்டாரத்தில் 'இளவரசர் குருநாத்' என்றே அழைக்கப்படுவார். பொதுவாக அமைதியாக காணப்படும் மெய்யப்பன், எப்போதாவது சிரித்தால் கூட அதிசயம்தான். சி.எஸ்.கே.வின் நிர்வாகியாக ஆன பிறகுதான் மீடியா வெளிச்சத்திற்கே வந்தார் மெய்யப்பன்.

குருநாத் மெய்யப்பன் கோல்ப் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். கோல்ப் விளையாடும் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீநிவாசனின் மகளான ரூபாவுடன் காதல் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது. அந்த வகையில்தான் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

தாத்தா, தந்தை என அனைவருமே சினிமா உலக ஜாம்பவான்களாக அறியப்பட்டவர்கள். அதே பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த குருநாத் மட்டுமே சர்ச்சைக்குரியவராக மாறிப் போனார். 

http://www.vikatan.com/news/article.php?aid=49441

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை போனால் மதுரை. நம்ம ரஜனி காந்த்... தளபதி.. தல இருக்கினமில்ல. இவையள்.. அதை உருவாக்கி.. அவர்களுக்கு பால்வார்க்கும்.. தமிழ் ரசிகர்கள் தலையில் பால்வார்க்க மாட்டார்களா என்ன.

சென்னை பழிவாங்கப்பட்டுள்ளது. சூதில் சம்பந்தட்ட ராஜஸ்தான் ராயல் எப்படி தப்ப விடப்பட்டது..?! அதேபோல்.. இதர அணிகளுக்கும் சூதில் சம்பந்தமுள்ளது வெளிப்படை உண்மை. சென்னை மட்டும் கடுமையாக தண்டிக்கப்பட்டது ஏன்..??!

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை

 

 
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா | கோப்புப் படம்: ஐடிஐ
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா | கோப்புப் படம்: ஐடிஐ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.

மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்தத் தடை காரணமாக, அடுத்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாட முடியாது.

இந்த தண்டனை, பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தனது பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு விவரம்:

பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் போட்டிகள், விவகாரங்கள் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், மற்றும் ராஜ் குந்த்ரா ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிரிக்கெட் விவகாரத்திலும் ஈடுபட இருவருக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் செயல்முறை பகுதியை வாசித்த நீதிபதி, மெய்யப்பன் செயல்பாடுகள் பற்றி கூறும்போது, “அவர் ஊழல்-தடுப்பு விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளார். ஐபிஎல் செயல்முறை விதிகளை மீறியுள்ளார். ஒரு அணியின் அதிகாரியாக, விளையாட்டில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை குருநாத் மெய்யப்பன் கடைபிடிக்கவில்லை” என்றார்.

மேலும், குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் இழந்திருக்கிறார். இது மிகவும் பயங்கரமான சூதாட்டப் பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அவர் தனது 40 வயதில், தான் செய்யும் செயல்களின் விளைவுகள் பற்றி அறியவில்லை என்றும், ஆட்டத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் தனக்கு தெரியாது என்றும் கூறலாகாது.

அதே போல் ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மீதான தடை உத்தரவு பற்றி கூறும்போது, குந்த்ரா தான் பிரிட்டன் குடிமகன் என்கிறார். மேலும் சூதாட்டம் இங்கு சட்டவிரோதமானது என்று தனக்கு தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. "உண்மையில் ஆட்டத்தை நேசிப்பவராக அவர் இருந்தால் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தீர்ப்பில், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா செய்த தவறுகள், விதிமீறல்கள் பிசிசிஐ-யின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தவறுகள் இவர்களுடன் மட்டும் நின்று போய் விடுவதில்லை என்பதால் இவர்கள் சார்ந்த அணியையும் அதன் உரிமையாளரையும் தடை செய்ய வேண்டியுள்ளது.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் காலவரிசை:

மே, 16, 2013, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கல், ஸ்ரீசாந்த், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் சூதாட்டம் தொடர்பாக பிடிபட்டனர்.

மே, 34, சூதாட்ட குற்றச்சாட்டில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 2: என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

அக்.8 : நீதிபதி முத்கல் தலைமையிலான விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டது.

பிப்.10, 2014: விசாரணைக் குழு சூதாட்டத்துக்காக மெய்யப்பன் மீது குற்றஞ்சாட்டியது.

ஏப்.22. விசாரணையை கமிட்டி தொடருமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நவ. 17: வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதை சீனிவாசன் புறக்கணித்துள்ளார் என்று விசாரணைக்குழு குற்றம்சாட்டியது.

ஜனவரி 22, 2015, சூதாட்ட நடைமுறைகளை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், மேலும் முறைகேடுகளை மறைக்க முயன்றதாகவும், விசாரணைக்குழுவை திசை திருப்பியதாகவும் சீனிவாசன் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியது.

ஐபிஎல் ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதி முகுல் முத்கல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறும்போது, "இது ஒரு வலுவான தண்டனைதான். இது மிகவும் சரியானதுதான். கிரிக்கெட் ஆட்டத்தை சுத்தப்படுத்துவதில் இத்தகைய தண்டனைகள் நீண்ட காலம் தன் பங்களிப்பை ஆற்றும். பொதுமக்கள் நம்பிக்கையும் தக்கவைக்கப்படும். ஒருநபர் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை பாயும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஒரு சிறு குறிப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் அந்த அணியை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடத்த முடியாது. எனவே இந்தியா சிமெண்ட்ஸ், மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் அணிகளான முறையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமைதாரர் தகுதியை கைவிட்டால், மற்றவர்கள் இந்த அணியை வாங்கி விளையாடச் செய்ய வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-கிரிக்கெட்-சூதாட்டம்-சென்னை-ராஜஸ்தான்-அணிகளுக்கு-2-ஆண்டுகள்-தடை/article7421246.ece

  • தொடங்கியவர்
சூப்பர் ஸ்டார் இல்லாத சினிமாவா.. சி.எஸ்.கே. இல்லாத ஐபிஎல்லா... தடையால் "ஷாக்"கில் ரசிகர்கள்!
 
சென்னை: 2 முறை ஐபிஎல் சாம்பியனாகவும், அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய, ஐபிஎல் அணிகளிலேயே அசைக்க முடியாத வலுவான அணியாக வலம் வந்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் களை இழக்கும் என்று தெரிகிறது. மேலும் எம்.எஸ்.டோணி என்ற மந்திரக் கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 வருட தடை காலத்தின்போது டோணி உள்ளிட்டோர் வேறு அணிகளில் இணைவார்களா அல்லது விளையாடாமல் இருப்பார்களா என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
 
2008 முதல் 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்று முதல் இருந்து வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இந்த அணி இயங்கி வருகிறது.
 
மாறாத கேப்டன் டோணி அணியின் கேப்டனாக 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் கேப்டன் டோணி. அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர் ஸ்டீபன் பிளமிங்.
 
வெற்றிகரமான ஒரே அணி ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வெற்றிகரமான அணி சென்னைதான். இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் ஆனது. 2010ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 தொடரில் சாம்பியன் ஆனது. பின்னர் 2014ல் மீண்டும் சாம்பியன் ஆனது.
 
இந்தியா சிமெண்ட்ஸ் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் வசம்தான் இத்தனை காலமாக இந்த அணி இருந்து வந்தது. ஆனால் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்தும், சீனிவாசன் பிசிசிஐ பதவிகளுக்குப் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதற்கு கை மாற்றி விட்டனர்.
 
வெற்றி நடை போடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் 67 சதவீத வெற்றியை ஈட்டியுள்ளது. மொத்தம் 39 போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகளையும், 13 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அதேபோல சாம்பியன்ஸ் லீக் தொடரில் 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.
 
4 முறை 2வது இடம் ஐபிஎல் தொடர்களில் 2 முறை கோப்பையை வென்ற சென்னை அணி, 4 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் இதுவரை நடந்துள்ள 8 தொடர்களில் சென்னை அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் ஒரு சாதனையாகும்.
 
போட்டிகள் களை இழக்கும் ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதளால் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறப் போகின்றன. இது நிச்சயம் ஐபிஎல் போட்டிகளுக்கு கவர்ச்சி சேர்க்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
டோணி இல்லாமல் ஐபிஎல் போட்டியா? அதுவும் டோணி, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட முக்கியமான சென்னை வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டியில் சூடு, சுவை நிச்சயம் குறைந்து போகும் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.
 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/will-ipl-survive-wihtout-the-super-star-csk-231037.html
  • தொடங்கியவர்
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆட முடியும்! எப்படி தெரியுமா?
 
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் விளையாட, தடை விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த அணியால் அப்படியே அடுத்த சீசனிலும் ஆட முடியும். அதற்கு ஒரு சில நடவடிக்கைகள் எடுத்தால் போதும். சுப்ரீம்கோர்ட் நியமித்த நீதிபதி லோதா கமிட்டி, ஐபிஎல் விளையாட்டில் ஊழல் நடந்துள்ளதையும், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளராக இருந்த ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதையும் உறுதி செய்தது.
 
இதன் காரணமாக, சென்னை அணியின் உரிமையை வைத்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும், ராஜஸ்தானின் தற்போதைய உரிமையாளரும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தங்களது அணியை ஐபிஎல் போட்டிகளில் ஆட வைக்க முடியாது என்று லோதா குழு தீர்ப்பளித்துள்ளது. ஆனால், வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பில்லை என்பதால், அவர்களை தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளது.
 
எனவே, ஐபிஎல் அடுத்த சீசனிலும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆட ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. எப்படியென்றால், இவ்விரு அணிகளையும், வேறு ஒருவர் விலை கொடுத்து வாங்கினால் அது சாத்தியப்படும். அப்படி வாங்கும்போது, தற்போதுள்ள பெயர்களிலேயே அணியால் ஆட முடியாது. வேறு பெயர் மாற்றப்பட வேண்டும். எப்படியும் 8 அணிகள் பங்கேற்றால்தான் ஐபிஎல் களைகட்டும் என்பதால், இவ்விரு ஆண்டுகளுக்கும், தற்காலிகமாவது யாராவது விலை கொடுத்து வாங்க வாய்ப்புள்ளது.
 
புதிய அணியை உருவாக்குவதை விட இதுவே எளிதான வழி. அவ்வாறு வேறு உரிமையாளர் அணியை வாங்கி, வேறு பெயர் சூட்டிவிட்டால், அடுத்த வருட ஐபிஎல்லில் சென்னை அணி ரசிகர்கள் மறுபடியும் விசில் போட முடியும். இந்த சூழ்நிலையில், பிசிசிஐயின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதுவரை பிசிசிஐ எந்த கருத்தையும் சொல்லவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/suspended-chennai-rajasthan-can-still-play-ipl-231053.html
  • தொடங்கியவர்
சி.எஸ்.கே. வுக்கு 2 ஆண்டுகள் தடையை எதிர்த்து மேல் முறையீடு.,. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் முடிவு...
 
சென்னை : சென்னை அணிக்கான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.
 
மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.எம்.லோதா குழுவின் பரிந்துரை குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆலோசித்ததாகவும் ஆலோசனை முடிவில் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/csk-rr-have-decided-appeal-against-suspension-review-231073.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் சென்னை அணியை நம்ம தலீவரை வாங்கச் சொல்லுங்கள்
ஊழலை மறைப்பது எப்படி என்று அவருக்குத்தான் தெரியும் :lol:

  • தொடங்கியவர்

தோனி இல்லாமல் பிரிமியர் தொடரா

Tough to imagine an IPL without Dhoni Gavaskar

புதுடில்லி: ‘‘சென்னை, தோனி இல்லாமல் பிரிமியர் தொடர் என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது,’’ என, கவாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பிரிமியர் தொடரில் பங்கேற்க 2 ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது: சென்னை அணி கேப்டன் தோனிக்கு 34 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவித்துவிடுவார். இந்த நிலையில் இவர் இல்லாத பிரிமியர் தொடரை நினைத்துக்கூட பார்க்கக்கூட முடியவில்லை.

தற்போதைய தீர்ப்பு சென்னை, ராஜஸ்தான் வீரர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் தீர்ப்பின் நம்பகத்தன்மை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

இருப்பினும், அடுத்த பிரிமியர் தொடருக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்குள் புதிய இரண்டு அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு கண்டறிய வேண்டும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.  

 

நான் ஒரு ராசியில்லா ராஜா

ஜடேஜா 2008-–09ல் ராஜஸ்தான் அணியில் இருந்தார். அங்கிருந்து வேறு அணிக்கு மாற முயற்சித்ததாக 2010ல் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. 2011ல் கொச்சி அணியில் பங்கேற்றார். பின், 2012 முதல் சென்னை அணியில் உள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மூன்று அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அணிகளை அனுமதிக்கலாமா

தீர்ப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் கூறுகையில்,‘‘ அணி உரிமையாளர்களுக்கு தடை விதிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அணிகளையும் முழுதாக தடை செய்திருக்க வேண்டும். 2 ஆண்டு மட்டும் தடையுடன் எப்படி அனுமதிக்கலாம்,’’ என்றார்.

 

மீண்டும் வருவோம்

சென்னை அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ எங்களை பிரிமியர் தொடரில் இருந்து நீக்கவில்லை. தற்காலிகமாக தடை தான் விதித்துள்ளனர். இது போன்று நடக்கும் என்று எதிர் பார்த்தது  தான். இதனால் அணியின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் உண்மை தான். இருப்பினும், இதில் இருந்து எப்படி வெளி வருவது எனத் தெரியும். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வருவோம்,’’ என்றார்.

 

அதிர்ச்சியாக உள்ளது

ராஜஸ்தான் அணி சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ பல்வேறு குழப்பான நிலை உள்ளது. தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்க வேண்டும். மற்றபடி இது மிகவும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது,’ என, தெரவித்துள்ளார்.

http://sports.dinamalar.com/2015/07/1436894290/ToughtoimagineanIPLwithoutDhoniGavaskar.html

 

 

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா?
 
 
 
Tamil_News_large_1295992.jpg

பிரீமியர் தொடரில் வெற்றிகரமான அணி சென்னை. 2010, 2011ல், சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, 2008, 2012, 2013, 2015ல், பைனலுக்கு முன்னேறியது. இதேபோல, 2008ல் கோப்பை வென்றது ராஜஸ்தான். இந்த அணிகள் இல்லாமல், 2016 பிரீமியர் தொடர் நடக்குமா என, சந்தேகமாக உள்ளது. அப்படியே நடந்தாலும், தொடருக்கு போதிய வரவேற்பு இருக்காது.

ஏனெனில், ஆறு அணிகள் பங்கேற்கும் பட்சத்தில், போட்டி எண்ணிக்கை குறையும். மற்ற அணி உரிமையாளர்கள், 'டிவி' ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வருமானம் குறையும் என்பதால் இதை ஏற்க மாட்டார்கள்.இதனால், கூடுதலாக இரு அணிகளை சேர்க்க, பி.சி.சி.ஐ., முன் வரும் என தெரிகிறது. இதற்கான விலை, 633 கோடி ரூபாயாக இருக்கலாம்.தவிர, இரு அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், தோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, மோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியின், ஏழு வீரர்கள் தற்போது எவ்வித அணியிலும் இல்லாமல் உள்ளனர்.

இவர்கள் ஏலத்தில் பங்கேற்று வேறு அணிக்கு செல்வரா அல்லது போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பரா என, கேள்வி எழுந்துள்ளது.சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்பதால், இந்த தீர்ப்பு அவர்களை கட்டுப்படுத்தாது. ஒருவேளை இந்த அணிகளை வேறு யாராவது தற்காலிகமாக வாங்கும் பட்சத்தில், வேறு பெயர்களில் வரும் தொடரில் பங்கேற்கலாம். இதுகுறித்து, பி.சி.சி.ஐ., தான் முடிவு செய்ய வேண்டும்.இதனிடையே, ஆர்.எம்.லோதா கமிட்டியின் தீர்ப்பை எதிர்த்து, பி.சி.சி.ஐ., அப்பீல் செய்யும் என தெரிகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து

அணியை தடை செய்வது சரியல்ல!

 

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சென்னை அணியின் நிர்வாகிகள், வீரர்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாறாக, அணியை தடை செய்வது சரியல்ல. நிர்வாகி சரியல்ல என, ஐதராபாத் அணியை, சன் ரைசஸ் நிர்வாகத்தக்கு மாற்றினர். அதுபோல, சென்னை அணியை மாற்றியிருக்கலாம். தடை என்பது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல் உள்ளது. இதனால், வீரர்களே பாதிக்கப்படுவர்.
அப்துல் ஜபார்,
கிரிக்கெட் வர்ணனையாளர்

 

இளம் வீரர்கள் கதி என்ன?

 

ஒரு அணியை தடை செய்யும்போது, அந்த அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு பாதிப்பில்லை. ஆனால், இளம் வீரர்களின் நிலை என்ன. அவர்களை மீண்டும் ஏலத்துக்கு எடுத்து, புதிதாக ஒரு அணியை உருவாக்குவது, இப்போதைக்கு சாத்தியமா. ஒட்டுமொத்த அணி தவறு செய்யவில்லை. தவறு செய்தவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் மீது மட்டுமே, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ராஜ்குமார்,
தலைவர், இந்திய துறைமுக கிரிக்கெட் அணி

 

வீரர்கள் இல்லாமல் செய்ய முடியாது!

 

தடை விதித்தது சரியே. நட்சத்திர வீரர்கள் ஒரு அணியில் உள்ளனர். அதனால், அந்த அணிக்கு தடை வராது என்ற கருத்து, இதனால், தவிடு பொடியானது. சூதாட்டம் கவ்வியுள்ள விளையாட்டுக்கு இதுபோன்ற, அதிரடி நடவடிக்கை அவசியமே. அணி நிர்வாகம் முறைகேடு செய்கிறது என்றால், அது வீரர்கள் இல்லாமல் செய்ய முடியாது. அணியை தடை செய்தால், புதிய அணி உருவாக்கப்படும். அதில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பிரவீன்குமார்,
கிரிக்கெட் விமர்சகர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1295992

 

 

 

 

 

எதற்கும் சென்னை அணியை நம்ம தலீவரை வாங்கச் சொல்லுங்கள்
ஊழலை மறைப்பது எப்படி என்று அவருக்குத்தான் தெரியும் :lol:

இதுக்கு ஏன் தலீவர்,  அம்மா புகழ் உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியரை வைத்து வழக்கை இல்லாமல் செய்ய வேணும்.:shocked:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரண்டு ஐ.பி.எல். சீசனில் எந்த நிலையிலும் சென்னை அணி விளையாட வாய்ப்பில்லை!

ஐ.பி.எல். தொடரில் இரண்டு சீசன்களில் விளையாட சென்னை அணிக்கு எந்த நிலையிலும் வாய்ப்பில்லை என்று நீதிபதி முகுந் முத்கல் தெரிவித்துள்ளார்.

CHN.jpg

கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர்களில் நடந்த சூதாட்டம் குறித்து முகுந் முத்கல் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி லோதா நேற்று தண்டனை விபரங்களை அறிவித்தார். இதன் படி சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடையும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கும் கிரிக்கெட் நடவடிக்கைகளில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முகுந் முத்கல், '' முழுமையான தண்டனை விபரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஒரு ஃப்ரான்ஞ்செசி தடை செய்யப்பட்டு விட்ட பின்னர் அந்த அணி எப்படி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்?. இத்தாலி கால்பந்து தொடரான் சீரி 'ஏ'
வில் விளையாடிய ஜுவான்டஸ் அணியின் நிர்வாகி கள் இதே போன்று சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜுவான்டஸ் அணியை சீரி 'பி 'தொடருக்கு தர இறக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 2 சீசன்களில் ஜுவான்டஸ் அணி சீரி 'பி' தொடரில் விளையாடியது. அங்கும் ஒருவரோ இருவரோதான் தவறு செய்துள்ளனர். ஆனால் தண்டனை அணிக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல்தான் இதுவும். இந்த நடவடிக்கை தற்போது கடினமானதாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஐ.பி.எல்.லுக்கும் கிரிக்கெட்டுக்குமே மிகவும் நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது அமையும்.

ஐ.பி.எல்.லில் மேட்ச்பிக்சிங் நடக்கிறது என்ற எண்ணம் தோன்றிவிட்டால், மக்கள் மனதில் இருந்து அதனை அகற்றுவது கடினம். தற்போதைய நடவடிக்கையால்,  ஐ.பி.எல். மீதான ரசிகர்களின் நம்பிக்கை அதிகாரிக்கும்.  ''

இவ்வாறு நீதிபதி முகுல் முத்கல் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49494

  • தொடங்கியவர்

'கேம் சேஞ்சர் ' ஆதித்யா வர்மா...சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் இவர்தான்!

ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணிக்கு தடை விதிக்க காரணம் ஒரே ஒருவர்தான். அங்கீகாரமில்லாத பிகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக இருக்கும் அவரது பெயர் ஆதித்ய வர்மா. கடந்த 2013ஆம் அண்டு ஐ.பி.எல். தொடரில் பெட்டிங், சூதாட்டம் நடப்பதாக பாம்பே நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீதிபதி முகுந்த் முட்கல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

adhi.jpg

இந்த வழக்கை தொடுத்த பின்னர் ஆதித்ய வர்மா சந்தித்த பிரச்னைகள் அனேகம். தினமும் கொலை மிரட்டல் வரும். கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு ஒதுங்கி விடு என்று எச்சரித்தவர்களும் ஏராளம். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், தான் தொடுத்த வழக்கில் ஆதித்யா வர்மா உறுதியா நின்றார்... வென்றார்.

 அதுமட்டுமல்ல பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனின் பண பலம் அதிகார பலத்தையும் ஆதித்ய வர்மா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆதித்ய வர்மாவின் வழக்கு தொடர்ந்த பிறகுதான் உச்சநீதிமன்றம், பி.சி.சி.ஐ தலைவராக இருந்த ஸ்ரீநிவாசனை பதவி விலக உத்தரவிட்டது. ஒன்று பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருங்கள் அல்லது சென்னை அணியின் உரிமையாளராக இருங்கள் என்று ஸ்ரீநிவாசன் தலையில் உச்சநீதிமன்றம் கொட்டி எடுத்து விட்டது. இதையடுத்துதான் பி.சி.சி.ஐ தலைவர் பதவியை குருநாத்தின் மாமா ஸ்ரீநிவாசன் இழந்தார்.

adi.jpg

தற்போது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுமல்ல அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆதித்யா வர்மா என்ற இந்த தனிமனிதர்தான் காரணமென்றால் அது மிகையில்லை.

இந்த வழக்கில் வெற்றி பெற்றது குறித்து ஆதித்யா வர்மா ட்விட்டரில், '' இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல நாள். இந்த வழக்கில் நான் வெற்றி பெற வேண்டி எனது மகள் கோவில் கோவிலாக சென்று வேண்டினாள். அதற்கு கடவுள் அளித்த பரிசு '' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49499

  • தொடங்கியவர்

பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சென்னை அணி வந்தால் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும்?

டை விதிக்கப்பட்ட சென்னை , ராஜஸ்தான் அணிகளை நேரடியாக பி.சி.சி.ஐ.யின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து ஐ.பி.எல். தொடரில் விளையாட வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன.

gur.jpg

சூதாட்ட விவகாரம் காரணமாக சென்னை,ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த இரு அணிகளையும் ஐ.பி.எல். தொடரில் விளையாட வைபபதற்காக வழிமுறைகள் குறித்து பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளை நேரடியாக பி.சி.சி.ஐ யின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முழு கண்காணிப்புடன் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். அப்படி அணி பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டுக்குள் வரும்பட்சத்தில்  வீரர்களுக்கு பி.சி.சி.ஐயே நேரடியாக சம்பளத்தை வழங்கி விடும்.

cri.jpg

இது குறித்து பி.சி.சி.ஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இரு அணிகளும் பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்து விட்டால், பி.சி.சி.ஐக்கு  செலுத்த வேண்டியது  இல்லை. அணிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பி.சி.சி.ஐ செய்து தரும் என்றார்.

வரும் 19ஆம் தேதி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு மும்பையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். லின் சட்ட ஆலோசகர் உஷா நாத் பனார்ஜியுடன் சட்டரீதியான சிக்கல்கள் விவாதிக்கப்படவுள்ளது.  அதற்கு பின்னரே  சட்டரீதியாக சில தெளிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 550 கோடி இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொச்சி டஸ்கர்ஸ் அணி வரும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க விரும்பினால் சென்னை அல்லது ராஜஸ்தான் ஏதாவது ஒரு அணியை பி.சி.சி.ஐ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்க வாய்ப்பிருக்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=49506

  • தொடங்கியவர்

சி.எஸ்.கே., ராஜஸ்தானை வீழ்த்திய ‘பெட்டிங் பால்’

 
match_fixing1_2473664g.jpg
 
  • தண்டனை விவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா (நடுவில்) தலைமையிலான குழுவினர். படம்: ரமேஷ் சர்மா.
    தண்டனை விவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா (நடுவில்) தலைமையிலான குழுவினர். படம்: ரமேஷ் சர்மா.

2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டபோது அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்கு அளவேயில்லை என்று சொல்லலாம். வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாகம், கொண்டாட்டம் என கோலோச்சிய ஐபிஎல் போட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்று விளையாட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அதை பின்பற்றி வெளிநாடுகளிலும் டி20 போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. படுவேகத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ஐபிஎல் அதேவேகத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஐபிஎல் அணிகளில் மிகச்சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸை (சி.எஸ்.கே.) வைத்திருக்கும் சீனிவாசன், அந்த அணியின் வடிவிலும், தனது மருமகன் குருநாத் மெய்யப்பன் மூலமாகவும் தனக்கு இவ்வளவு பெரிய சோதனை வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஐபிஎல் போட்டியின் காரணகர்த் தாவான லலித் மோடி இரண்டே ஆண்டுகளில் ஊழல் காரணமாக ஓரம்கட்டப்பட்ட நிலையில், 2013 ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த ஐபிஎல் சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்கள் சீனிவாசனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. அவர் பதவி விலக வேண்டும் என்று ஏகோபித்த குரல்கள் ஒலித்தன. ஆனாலும் எதற்கும் அஞ்சவில்லை சீனிவாசன். அதேநேரத்தில் பிசிசிஐ கூட்டங்களில் சீனிவாசனுக்கு எதிராக பேசுவதற்கு பிசிசிஐ நிர்வாகிகள் அஞ்சினர்.

ஆனால் பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் தொடர் போராட்டம் ஐபிஎல் சூதாட்ட வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் படிகளில் ஏற்றியது. அது பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றபோது சீனிவாசன் தனது பிசிசிஐ தலைவர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அப்போதும் போராடிப் பார்த்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் விடாப்பிடியாக இருந்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ தலைவர் பதவி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தக்கவைத்துக் கொள்வதற்காக பிசிசிஐ தலைவர் பதவியை உதறினார். ஆனால் இப்போது அந்த அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார் சீனிவாசன்.

வாழ்நாள் தடையை எதிர் கொண்டுள்ள குருநாத் மெய்யப் பனோ இனி கிரிக்கெட் தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்டனை விவரத்தை வாசித்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா, “குருநாத் மெய்யப்பன் தவறிழைத்தது நிரூபணமாகி யுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினராக இருந்துள்ள அவர், சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளார்.

அவர் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை ஏற்பது கடினமாக இருக்கிறது. அவர் சூதாட்டத்தின் மூலம் ரூ.60 லட்சத்தை இழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் மெய்யப் பனின் மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகக் கருதினாலும், கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தோடு ஒப்பிடும்போது அது மிகவும் குறைவே. அதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் அதிரடி உத்தரவுகள், சீனிவாசனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ஐபிஎல் போட்டியை அதிரவைத்துள்ளது சூதாட்டம் என்று சொல்லக்கூடிய இந்த ‘பெட்டிங் பால்’.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு விரைவில் கூடுகிறது.

இது தொடர்பாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “விரைவில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் அவசரக்கூட்டம் கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும். தீர்ப்பு நகல் வந்த பிறகு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவெடுக்கப்படும்” என்றார்.

இரு அணிகள் தடை செய்யப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இரு புதிய அணிகளை அனுமதிக்கலாமா அல்லது இரு அணிகளின் வீரர்களை மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வைக்கலாமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங் களுக்கு விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

விசாரணை கடந்து வந்த பாதை

மே 16, 2013

சூதாட்ட தரகர்களிடம் உறுதியளித்தபடி 6-வது ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக மோசடி குற்றச்சாட்டின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி் வீரர்கள்

ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது. இது தவிர 11 சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 கிரிக்கெட் வீரர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது பிசிசிஐ. அவர்கள் 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர்.

மே 23, 2013

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நபருமான குருநாத் மெய்யப்பனுக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது.

மே 24, 2013

மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.

மே 25, 2013

குருநாத் மெய்யப்பன் வழக்கில் நேர்மை யான மற்றும் நியாயமான விசாரணையை பிசிசிஐ நடத்தும் என பிசிசிஐ தலைவர் சீனிவாசன் அறிவித்தார். குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரோ, தலைமைச் செயல் அதிகாரியோ அல்லது அணியின் முதல்வரோ அல்ல என அந்த அணியின் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

மே 28, 2013

இந்தியா சிமென்ட்ஸ், குருநாத் மெய் யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு. ஆனால் இந்த குழு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் அந்தர் பல்டி அடித்தனர். விசாரணைக்குழு எங்கே, எப்போது அமைக்கப்பட்டது என தங்களுக்கு தெரியாது என்றனர்.

ஜூன் 6, 2013

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக டெல்லி காவல் துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித் தார். இதையடுத்து ராஜ் குந்த்ராவை சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ.

ஜூன் 28, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் மீதான சூதாட்ட புகார் குறித்து விசாரிக்க பிசிசிஐயால் அமைக்கப்பட்ட இரு நபர் கமிட்டி, குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் தவறிழைத் ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது.

ஜூன் 30, 2013

பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சட்டவிரோதமானது. அந்தக் குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என அறிவித்தது.

ஆகஸ்ட் 30, 2013

மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் சீனிவாசன், பிசிசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்.

செப்டம்பர் 13, 2013

ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் ஆகியோர் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது பிசிசிஐ. அதேநேரத்தில் சாண்டிலா விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்பட வில்லை.

செப்டம்பர் 21, 2013

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குருநாத் மெய்யப்பன் பெயர் இடம்பெற்றது. அதில் மோசடி செய்தது, ஏமாற்றியது, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அக்டோபர் 8, 2013

ஐபிஎல் முறைகேடு தொடர்பாக சுதந்திர மான விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் தலைமை யிலான 3 பேர் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். இதில் முத்கல் தவிர, மூத்த வழக்கறிஞரும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நிலாய் தத்தா ஆகியோரும் இடம்பெற்றனர். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இந்த கமிட்டிக்கு 4 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 10, 2014

முத்கல் கமிட்டி தாக்கல் செய்த முதல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருந்தது. 2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது அணி குறித்த பல்வேறு தகவல்களை குருநாத் மெய்யப்பன் கசியவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினராக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் சில வீரர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பெயர் வெளியிடப்படவில்லை.

மார்ச் 25, 2014

ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 27, 2014

சீனிவாசனுக்கு பதிலாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை பிசிசிஐ தலை வராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்றம், சீனிவாச னுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டி யிருந்து நீக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து பிசிசிஐ இடைக்கால தலைவராக மார்ச் 28-ம் தேதி கவாஸ்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மே 16, 2014

ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் குறித்து சோதனை நடத்தவும், அவற்றை பறிமுதல் செய்யவும் முத்கல் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

நவம்பர் 14, 2014

முத்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் சீனிவாசன், ஐபிஎல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் பெயர் இடம் பெற்றிருப்பதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், ஐபிஎல் போட்டியில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டது.

நவம்பர் 17, 2014

முத்கல் கமிட்டியின் அறிக்கையில் சீனிவாசனுக்கு சூதாட்டத்திலோ, ஸ்பாட் ஃபிக்ஸிங்கிலோ தொடர்பு இல்லை. ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையை தடுக்கவும் முயற்சிக்கவில்லை. அதேநேரத்தில் வீரர்கள் விதிமுறைகளை மீறியது தெரிந்தபோதும் சீனிவாசன் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஜனவரி 22, 2015

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆகியோருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்.

ஜூலை 14, 2015

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகளும், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/சிஎஸ்கே-ராஜஸ்தானை-வீழ்த்திய-பெட்டிங்-பால்/article7424410.ece

 

  • தொடங்கியவர்

இரு அணிகளை வாங்க போட்டா போட்டி

Premier Cricket, Team, Chennai, Rajasthan

புதுடில்லி: சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை காரணமாக புதிய அணிகளை வாங்க கடுமையான போட்டி காணப்படுகிறது.       

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய காரணத்தால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பிரிமியர் தொடரில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அடுத்த தொடரில் 6 அணிகள் மட்டும் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. போட்டிகள் எண்ணிக்கை குறைவு, ‘டிவி’ ஒளிபரப்பு பிரச்னை இருப்பதால் 8 அணிகளுடன் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., விரும்புகிறது. இதனால் கொச்சி, புனே அணிகளை மீண்டும் அனுமதிக்கலாமா அல்லது புதியதாக 2 அணிகளை தேர்வு செய்யலாமா என யோசித்து வருகிறது.       

இதனிடையே புனே, கொச்சி, ஆமதாபாத், இந்துார், ராய்ப்பூர், ராஞ்சி, கான்பூர் என, 7 நகரங்களை மையமாக கொண்ட அணிகளை வாங்க, பல்வேறு நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன. 2010ல் ஆமதாபாத் அணியை வாங்க முயன்ற அடானி குழுமம், ஆர்.பி.ஜி., நிறுவனம், சமபத்தில் பெங்களூரு அணியை வாங்கவுள்ளதாக கூறப்பட்ட ஜிண்டால் நிறுவனம், வீடியோகான், பி.வி.பி., வென்ட்சர்ஸ், ஹீரோ, லட்சுமி மிட்டல், எம்.ஆர்.எப்.,  உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை சென்னை, ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங்கள் வாங்கினால் பிரிமியர் தொடரில் தொடர்ந்து பங்கேற்கலாம்.

தோனியின் சொந்த ஊரான ராஞ்சி அணி வாங்கப்படும் பட்சத்தில், ராஞ்சி அணிக்காக தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://sports.dinamalar.com/2015/07/1436979503/PremierCricketTeamChennaiRajasthan.html

  • தொடங்கியவர்

ரசிகர்களை முட்டாள்களாக கருதக் கூடாது: ஐபிஎல் தடைகள் குறித்து இயன் சாப்பல்

 
இயன் சாப்பல். | கோப்புப் படம்.
இயன் சாப்பல். | கோப்புப் படம்.

கிரிக்கெட்டின் ஒரு முக்கியப் பொருளாதாரமாகவும், பொழுதுபோக்காகவும் நிறைய ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பதாகவும் உள்ள ஐபிஎல் கிரிக்கெட்டை சூதாடிகளின் சொர்க்கமாக மாற அனுமதித்திருக்கக் கூடாது என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்.

இது குறித்து மும்பை மிட்-டே பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கருத்துப் பதிவில், “கிரிக்கெட்டை ஒரு விஷயம் தரம் தாழ்த்துகிறது என்றால அது ஊழல், சூதாட்டம் ஆகியவையே. அனைத்து ரசிகர்களையும், மக்களையும் எப்போதும் முட்டாள்களாக்கி விட முடியாது, அவர்கள் ஒன்று போட்டிகளை பார்க்க நேரில் வரமால் அல்லது தொலைக்காட்சியில் போட்டிகளைப் பார்க்காமல் தங்கள் எதிர்ப்பை காண்பித்து விடுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட்டை நோயாக அரித்து வரும் ஒரு விவகாரத்துக்கான வலுவான மருந்தே. ஆனால், சட்டபூர்வமாக நீதிபதிகள் இத்தகைய தண்டனையை அளித்திருப்பது, ஒரு பெரிய கிரிக்கெட் அமைப்பாக, செல்வாக்குள்ள கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ-யின் முதுகெலும்பின்மையையே பறைசாற்றுகிறது.

கிரிக்கெட் ஊழல்வாதிகளுக்கு எதிராக, போலீஸ், செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி நிருபர்கள், தற்போது நீதித்துறை ஆகியவையே பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கின்றன. பிசிசிஐ விதிமுறைகளில் சூதாட்டம் தடைசெய்யப்பட்டிருக்கும் போது அவர்களே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஏன் அணி உரிமையாளர்கள் தொடர்புடையவர்களை நீக்கும் நடவடிக்கையையோ, தண்டனையையோ மேற்கொள்ளவில்லை? இது அமைப்பின் செயலின்மையை காட்டுகிறது. பிசிசிஐ நிர்வாகம் ஆட்டத்துக்கு நல்லவிதத்தில் சேவையாற்றவில்லை என்பதையே இந்த விவகாரம் எடுத்துரைக்கிறது” என்று எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

http://tamil.thehindu.com/sports/ரசிகர்களை-முட்டாள்களாக-கருதக்-கூடாது-ஐபிஎல்-தடைகள்-குறித்து-இயன்-சாப்பல்/article7429877.ece

 

  • தொடங்கியவர்

‘சீனியர்’ வீரரிடம் சென்னை அணி: அடுத்த தொடரில் பங்கேற்க வாய்ப்பு

Rajiv Shukla, cricket

கோல்கட்டா: இந்திய கிரிக்கெட்டின் ‘சீனியர்’ வீரர்கள் கட்டுப்பாட்டில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது. 

பிரிமியர் தொடர் சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த ஆர்.எம்.லோதா குழுவின் தீர்ப்பு வெளியானது. இதன் படி சென்னை, ராஜஸ்தான் அணிகள் பிரிமியர் தொடரில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அடுத்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா, இதில் எத்தனை அணிகள் பங்கேற்கும் என உறுதியில்லாத நிலை ஏற்பட்டது. 

இதுகுறித்து பிரிமியர் தொடர் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது: 

எல்லோரும் பிரிமியர் தொடர் குறித்து கவலைப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அடுத்து 9வது தொடர், மற்றவற்றை விட இன்னும் சிறப்பானதாக நடக்கும், இது உறுதி. உச்சநீதிமன்றக் குழுவின் தீர்ப்பு, இத்தொடரை எந்த விதத்திலும் பாதிக்காது. 6 அணிகளை வைத்துக்கொண்டு தொடரை நடத்த மாட்டோம். எப்போதும் போல குறைந்தது 8 அணிகள் பங்கேற்கும்.

 தடை செய்யப்பட்ட இரண்டு அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்று நடத்துவது உட்பட பல்வேறு வாய்ப்புகள் எங்களிடம் உள்ளன. பொறுப்பான நபர்களை தேர்வு செய்து அணியை நிர்வகிக்கும் பணியை ஒப்படைக்கப்படலாம். இதுகுறித்து 19ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும். 

மற்றபடி இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., ஆதாயம் தரும் வகையில் செயல்படுகிறது என்ற பேச்சிற்கே இடமில்லை. ஏனெனில் பிரிமியர் தொடர் பி.சி.சி.ஐ., கண்காணிப்பில் தான் நடக்கிறது. தடை செய்யப்பட்ட அணிகளை ஏற்று நடத்துவதால் வீரர்கள் ஏலம், அணி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும்.

கொச்சி அணி விவகாரத்தில் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்ட ஆலோசனைக்குப் பின் அப்பீல் செய்ய உள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

‘சீனியர்கள்’ யார்: இதனிடையே கவாஸ்கர், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட  ‘சீனியர்’ வீரர்களிடம் சென்னை, ராஜஸ்தான் அணிகளை நடத்தும் பொறுப்பு, ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் வரும் தொடரில் எவ்வித சிக்கலும் இன்றி இந்த இரு அணிகளும் பங்கேற்கும். 

காரணம் என்ன: 6 அணிகளுடன் பங்கேற்றால் போட்டிகள் எண்ணிக்கை குறையும். இது வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். புதியதாக இரு அணிகள் வரும்பட்சத்தில் இதை சரிக்கட்டலாம். ஆனால் இரு ஆண்டு தடைக்குப் பின் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தொடருக்கு திரும்பினால் 10 அணிகள் பங்கேற்க நேரிடும். இது போட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகி விடும். இதனால் புதிய அணிகளை தேர்வு செய்யும் முடிவை கைவிட்டு, சென்னை, ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து பங்கேற்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

http://sports.dinamalar.com/2015/07/1437033858/RajivShuklacricket.html

  • தொடங்கியவர்

சி.எஸ்.கே., ராஜஸ்தான் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்யலாம்: ஓய்வு பெற்ற நீதிபதி லோதா அதிரடி

 
ஆர்.எம்.லோதா
ஆர்.எம்.லோதா

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமத்தை பிசிசிஐ ரத்து செய்யலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.

சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகளும், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் விதித்து சில தினங்களுக்கு முன்பு உத்தர விட்டது லோதா தலைமையிலான குழு.

அதைத் தொடர்ந்து இந்த இரு அணிகளுக்குப் பதிலாக புதிய அணிகள் சேர்க்கப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.

இந்த நிலையில் லோதா கூறியதாவது:

இரு அணிகளின் ஒப்பந் தத்தை ரத்து செய்து அந்த அணிகளை முற்றிலுமாக ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்குவது தொடர்பாக பிசிசிஐ பரிசீலிக் கலாம். அது ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

அந்த இரு அணிகளையும் தன் தலைமையிலான கமிட்டி ஏன் தடை செய்யவில்லை என்பது குறித்து விளக்கிய அவர், “அது எங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது. நாங்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவாகத்தான் நியமிக்கப்பட்டோம். ஒப்பந்த விதிமுறைகள் குறித்து மட்டுமே நாங்கள் ஆராய முடியும்.

ஆனால் ஒப்பந்த விதிமுறை உள்ளிட்ட எல்லாவற்றையுமே பிசிசிஐதான் கையாள்கிறது. அதனால் நாங்கள் அதில் தலையிட முடியாது.

பிசிசிஐ, ஐபிஎல், கிரிக்கெட் ஆகியவற்றின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஓர் அணியோ, அதன் உரிமையாளர்களோ, அணியை வைத்திருக்கும் நிறுவனங்களோ செயல்படுமானால் அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ-ஐபிஎல் விதிமுறை யிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/சிஎஸ்கே-ராஜஸ்தான்-உரிமத்தை-பிசிசிஐ-ரத்து-செய்யலாம்-ஓய்வு-பெற்ற-நீதிபதி-லோதா-அதிரடி/article7433275.ece

  • தொடங்கியவர்

ஓரிருவர் செய்யும் தவறுகள் பலரையும் பாதிக்கிறது: தடை குறித்து திராவிட் வருத்தம்

 

 
இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட். | கோப்புப் படம்.
இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட். | கோப்புப் படம்.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று கூறிய இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தான் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. சிலசமயங்களில் ஓரிருவர் செய்யும் தவறுகளினால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதில் படிமுறை அமைப்பில் கீழ் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

முதன்மை வீரர்கள், பயிற்சியாளர்கள் அதன் பிறகும் கூட மேலே நகர்ந்து செல்லும் திறமை உள்ளவர்கள். நம் அணியின் டாப் வீரர்களை மற்ற அணிகள் எடுத்துக் கொண்டு விடுவார்கள்.

இளம் வீரர்களுக்குத்தான் இந்த முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முழுதும் மதிக்கிறேன். அவர்களிடத்தில் கூடுதல் தகவல்கள் இருந்தன” என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஊக்குவிப்பாளராக பணியாற்றிய அவருக்கு இத்தகைய தீர்ப்பு ஒரு கறையாக இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “மக்கள்தான் அதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

நான் என்னை தற்காத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு அணியின் பயிற்சியாளராக, ஊக்குவிப்பாளராக நான் பார்க்கிறேன். ஆகவே, அணி உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் செய்கைகள் பயிற்சியாளர்களையும், ஊக்குவிப்பாளர்களையும் பிணைக்குமா என்பதை மக்கள்தான் கூற வேண்டும். எது எப்படியிருந்தாலும் இந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றார்.

இது கடுமையான தீர்ப்பா என்று கேட்ட போது, “இது பற்றி நான் கூற முடியாது. ஆனால் அணி, வீரர்கள் மீதான கடுமைதான், ஆனால் நாம் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

இரு அணிகளிலும் குற்றமற்றவர்கள் இருக்கின்றனர். இவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதுதான் ஆட்டத்தின் விதி.

அணியின் நிலைமை என்னவாகும் என்பதை என்னால் கூற முடியாது, ஏனெனில் நான் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவிலும் இல்லை, பிசிசிஐயிலும் ஈடுபடவில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஓரிருவர்-செய்யும்-தவறுகள்-பலரையும்-பாதிக்கிறது-தடை-குறித்து-திராவிட்-வருத்தம்/article7434779.ece

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியை நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும்! 

  • தொடங்கியவர்

'சென்னை இல்லாத ஐ.பி.எல். போட்டியை பார்க்க மாட்டேன்!'- புற்றுநோய் தாக்கிய ரசிகர் வைராக்கியம்!

pra.jpgசென்னை அணி ஐ.பி.எல். தொடரில் மிகவும் பிரபலம். அந்த அணியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் பிரசாந்த பிரகாசம் என்ற ரசிகர் வெகு பிரபலம்.

சாதாரண ரசிகர் போல இவரை கருதி விட வேண்டாம். தற்போது 27 வயதே நிரம்பிய பிரகாசத்துக்கு ரத்தப்புற்று நோய் உள்ளது. பிரகாசம் புற்றுநோயை மறந்து இன்னும் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பதற்கு கிரிக்கெட்டும்... சென்னை சூப்பர் கிங்சும் ஒரு காரணம்.

சென்னை அணியின் கேப்டன் தோனியின் மிகத் தீவிர ரசிகரான பிரசாந்த் பிரகாசம், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர். ஒரு தனியார் நிறுவனத்தில் சீனியர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார்.

சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது, கேன்சரை விட அதிகமாக பிரசாந்த் பிரகாசத்தை பாதித்து விட்டது. சென்னை ஆடாத ஐ.பி.எல். போட்டிகளை இனிமேல் காணப் போவதில்லை என்று பிரசாந்த் வைராக்கிய முடிவு எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''தோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் என நட்சத்திர வீரர்கள் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர். அருமையான டீம் ஒர்க் கொண்ட அணி.  யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அணிக்கும் தண்டனை அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என கேள்வி எழுப்பினார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரசாந்த் பிரகாசத்தை புற்றுநோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கீமோதெரபி  சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் 2012ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரகாசம் சிகிச்சையில் இருந்தபோது கூட, சென்னை அணி விளையாடிய போட்டிகளை பார்க்காமல் இருந்தது இல்லை.  சென்னை விளையாடும் போட்டிகளை பார்க்கும் சமயத்தில் புற்றுநோய் தந்த வேதனைகள் கூட குறைந்து இருக்கும் என்கிறார் பிரகாசம்.

''தோனி அருமையானதொரு கேப்டன். அவருக்கு அணியை எப்படி வழிநடத்த வேண்டுமென்று தெரியும். 160 ரன்களுக்கு சென்னை அவுட் . ஆனால் கூட, எதிரணியை அதற்குள் மடக்கும் திறமை கொண்ட கேப்டன் அவர். எனது வாழ்க்கையில் அவரை ரோல்மாடலாக கொண்டுதான் எனது பிரச்னைகளை எதிர்கொள்கிறேன்'' என்றும் பிரகாசம் கூறுகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரந்த் பிரகாசம் அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற போது சாதாரண ரத்த பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதுவரை அவருக்கு இரு முறை அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிரகாசத்தின் சகோதரியின் ரத்த அணுக்கள் எடுக்கப்பட்டு, இவருக்கு அவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம் தற்போது உயிர் வாழ்ந்து வருகிறார்.

பிரசாந்த் பிரகாசத்தின் புற்று நோய் பற்றி சென்னை அணி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உற்சாகப்படுத்தும் வகையில்,கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை அணி வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட பேட்டையும், ஜெர்சியையும் அவருக்கு வழங்கி கவுரவித்தனர்.

சென்னை அணி ஐ.பி.எல். போட்டியில் விளையாடாத காரணத்தினால், இனிமேல் ஐ.பி..எல். போட்டியை காணப்போவதில்லை என்று பிரசாந்த் பிரகாசம் முடிவெடுத்துள்ளார். அவரைப் போலவே பல ரசிகர்களும் இதே போன்ற முடிவை எடுப்பார்கள் என்றும் நம்புகிறார்.

இவரைப் போன்ற ரசிகர்களின் நம்பிக்கையை குருநாத் மெய்யப்பன் சிதைத்து விட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=49663

  • தொடங்கியவர்

அடுத்த கட்ட செயல் திட்டம் என்ன?- ஐபிஎல் நிர்வாகக் குழு ஞாயிறன்று கூடுகிறது

 
 
பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் (வலது), மற்றும் ராஜிவ் ஷுக்லா ஆகியோர் பேசிக்கொள்ளும் காட்சி. | படம்: சஞ்சய் கோஷ்.
பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் (வலது), மற்றும் ராஜிவ் ஷுக்லா ஆகியோர் பேசிக்கொள்ளும் காட்சி. | படம்: சஞ்சய் கோஷ்.

நீதிபதி லோதா கமிட்டியின் அதிரடித் தீர்ப்பு குறித்த விவரங்களை விவாதிக்கும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நாளை (ஞாயிறு) கூட்டப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதையடுத்து அதன் விளைவுகள் மற்றும் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கிய ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

நிர்வாகக் குழு கூட்டம் ராஜிவ் ஷுக்லா தலைமையில் கூடி நீதிபதி லோதா கமிட்டியின் நுண் விஷயங்களை ஆழமாக வாசித்து விவாதிக்கவுள்ளது.

எனவே பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறைகளை விவாதிக்கும் முக்கியக் கூட்டமாகும் இது.

இதற்கு முதலில் லாப நோக்கிலான முரண் இரட்டை நலன் விவகாரம் குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு வலுவான முடிவெடுப்பது அவசியமாகிறது. காரணம் இதைத்தான் உச்ச நீதிமன்றம் கடுமையாக ஆட்சேபித்தது.

தடை தீர்ப்புக்குப் பிறகும் கூட ராஜிவ் ஷுக்லா, ஐபிஎல் கிரிக்கெட் 8 அணிகளுடன் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் எப்போதும் ஐபிஎல் பற்றிய அக்கறையுடன் இருக்கிறோம், அடுத்த ஐபிஎல் போட்டித் தொடர் பெரிய வெற்றியடையும் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன். எனவே தீர்ப்பு, ஐபிஎல் என்ற மிகப்பெரிய வர்த்தகப் பொருளை பெரிய அளவு பாதிக்கக் கூடாது என்றே நாங்கள் நினைக்கிறோம். எனவே 8 அணிகள் இடம்பெறுவது அவசியம், 6 அணிகளுடன் தொடரை நடத்தவியலாது.

தடை விவகாரத்தை யோசிக்கையில் நிறைய தெரிவுகள் கைவசம் உள்ளன, அத்தனை வாய்ப்புகளையும் நாளை விவாதிப்போம். இதில் ஒரு தெரிவு என்னவெனில் தடை செய்யப்பட்ட இரண்டு அணிகளையும் பிசிசிஐ-யே எடுத்து நடத்துவது. அதற்கு பொறுப்பானவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என்றார்.

ஆனால் மீண்டும் லாப நோக்கிலான இரட்டை நலன் பிரச்சினை மீண்டும் இதனால் தலைதூக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

நீதிபதி லோதா கமிட்டி அறிக்கை மீதான ஆலோசனை:

நீதிபதி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பின் விவரங்களை ஆய்வு செய்ய புதிய குழு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படவுள்ளது. அதாவது, அறிக்கையின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

நீதிபதி லோதா, தடை செய்யப்பட்ட அணிகளை பிசிசிஐ நீக்கலாம் என்று தனது தீர்ப்புக்குப் பிறகு தெரிவித்தார்.

பிசிசிஐ-ஐபிஎல் அணி உரிமைதாரர் ஒப்பந்தம்:

நீதிபதி லோதா கமிட்டி தீர்ப்பில், சென்னை, ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் அந்த அணிகளை நடத்த முடியாது என்று தடைவிதித்தது, இந்நிலையில்,

உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டியே ஏன் அணிகளைத் தடை செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த லோதா, “நாங்கள் ஒரு ஒழுங்குமுறை குழுவாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளோம். ஆனால் பிரிவு 11.3 ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பானது, இதை பிசிசிஐ-தான் செய்ய வேண்டும். நாங்கள் அதனுள் செல்ல முடியாது” என்றார்.

அந்தப்பிரிவின் படி ஐபிஎல் லீகிற்கு, கிரிக்கெட் ஆட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் அணி, அல்லது அணியை நிர்வகிக்கும் குழுமம், அல்லது உரிமையாளர் ஆகியோரது ஒப்பந்தங்களை ரத்து செய்யும் உரிமை பிசிசிஐ-க்கு உள்ளது.

இதன்படி பார்த்தால், சென்னை, ராஜஸ்தான் அணிகளை பிசிசிஐ நீக்கி விட்டு டெண்டர்கள் மூலம் புதிய 2 அணிகளை கொண்டு வர முடியும்.

ஐபிஎல் சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதும் மற்றொரு தெரிவு.

அதாவது, புதிய 2 அணிகளுக்கு டெண்டர் விடுத்து, அதில் தடைசெய்யப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் வீரர்களை ஆட வைக்கலாம், அதாவது தடை செய்யப்பட்ட அணிகளின் வீரர்களை இந்த புதிய அணிகளுக்குக் கடனாக கொடுக்கலாம், 2 ஆண்டுகள் தடை முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் பழைய உரிமைதாரர்களின் அணிக்கு செல்லலாம். இதுதான் முத்கல் கூறிய மற்றொரு பரிந்துரை. இது கால்பந்து லீக் பாணியாகும்.

இப்படிச் செய்தால் 2 ஆண்டுகள் கழித்து புதிய அணிகள் என்னவாகும்? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு நாளைய கூட்டத்தில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/அடுத்த-கட்ட-செயல்-திட்டம்-என்ன-ஐபிஎல்-நிர்வாகக்-குழு-ஞாயிறன்று-கூடுகிறது/article7438113.ece

 

  • தொடங்கியவர்

சென்னை அணியின் கதி என்ன: இன்று பிரிமியர் கவுன்சில் அவசர கூட்டம்

IPL, Cricket, Coucil Meeting, Chennai Super Kings, Rajasthan Royals

மும்பை: லோதா கமிட்டியின் தீர்ப்பை அடுத்து பரபரப்பான சூழலில் பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று மும்பையில் நடக்கிறது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் உரிமம் ரத்தாகும் எனத் தெரிகிறது. புதியதாக அடானி குழுமத்தின் சார்பில் ஆமதாபாத் அணி சேர்க்கப்படலாம்.             

கடந்த 2008ல் 8 அணிகளுடன் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது. 2010 கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. பின் சம்பள பிரச்னையில் கொச்சி, புனே, டெக்கான் அணிகள் நீக்கப்பட்டன. பிறகு அணி உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டன. பஞ்சாப் அணி உரிமையாளர், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அவரது காதலர் நெஸ் வாடியா இடையே பிரச்னை வெடித்தது.            

ஆறாவது பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது.             

அடுத்து லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன.             

மும்பை, டில்லி, கோல்கட்டா அணிகள் மட்டும் எவ்வித சிக்கலும் இன்றி நீடிக்கிறது.             

உரிமம் ரத்தாகுமா: இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் இன்று  நடக்கிறது. இதில், சென்னை, ராஜஸ்தான் அணிகளை பி.சி.சி.ஐ., சார்பில் முன்னாள் வீரர்களை கொண்டு நடத்துவது அல்லது தீர்ப்பின் படி இரண்டு ஆண்டுக்கு இந்த அணிகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.            

அதேநேரம் அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’ செய்ததால், பிரிமியர் தொடர் விதிப்படி இரு அணிகளின் உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் விவாதிக்கப்படலாம்.             

கொச்சிக்கு வாய்ப்பு: இதனிடையே சம்பள பிரச்னையில் 2011ல் ரத்து செய்யப்பட்ட கொச்சி அணிக்கு மீண்டும் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில்,‘ கொச்சி அணிக்கு பி.சி.சி.ஐ., ரூ. 550 கோடி இழப்பீடு தரவேண்டும்,’ என கூறப்பட்டது.            

தற்போது சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், பி.சி.சி.ஐ., மீதான வழக்கை வாபஸ் பெற்றால் கொச்சி அணிக்கு அனுமதி கிடைக்கலாம்.             

ஆமதாபாத் வருமா: சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடையை தொடர்ந்து, கொச்சி அணிக்கு அனுமதி கிடைத்தால், அடுத்து புதியதாக ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு அணி தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதை பிரபல அடானி குழுமம் வாங்க ஆர்வம் காட்டுகிறது.             

அடுத்து எப்படி: இதனால் கொச்சி, ஆமதாபாத் சேர்த்து 8 அணிகளுடன் 2016, 2017ல் தொடர் நடக்கும். 2018 முதல் மீண்டும் சென்னை, ராஜஸ்தானை சேர்த்து 10 அணிகளுடன் தொடர் நடக்கலாம்.             

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக அம்பானி, அடானி குழுமத்தினர் உள்ளனர். ஒருவேளை ஆமதாபாத் அணி வரும் பட்சத்தில், வரும் காலங்களில் பிரிமியர் தொடர் அம்பானி, அடானி இடையிலான போட்டிக்களமாக அமையலாம்.

கோபத்தில் ஷசாங்க் 

பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியாவை சந்தித்த முன்னாள் தலைவர் ஷசாங்க் மனோகர், சென்னை, ராஜஸ்தான் அணி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுபோன்ற முடிவை எடுக்க பி.சி.சி.ஐ., தயக்கம் காட்டுகிறது. 

இதுகுறித்து ஷசாங்க் மனோகர் கூறுகையில்,‘‘ கோர்ட் உத்தரவுப்படி பி.சி.சி.ஐ., தனது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவது போலத் தெரியவில்லை. அதேபோல தற்போது நடந்த அனைத்து செயல்களுக்கும் ஆணி வேர் சீனிவாசன். ஐ.சி.சி., தலைவர் பதவியில் இருந்து இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்,’’ என்றார்.

டால்மியா இல்லை

பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா, முதுமை காரணமாக முழு அளவில் செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இவர் இன்று நடக்கும் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். 

இன்று எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து டால்மியா மற்றும் செயலர் அனுராக் தாகூரை, பிரிமியர் கவுன்சில் தலைவர் ராஜிவ் சுக்லா ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏலத்திற்கு வருவாரா தோனி

சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடையை தொடர்ந்து, கொச்சி, ஆமதாபாத் அணிகள் வரும் பட்சத்தில் வீரர்கள் தேர்வுக்கு ஏலம் நடக்கும். இதில் தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஏலத்துக்கு வரலாம். 

மாறாக இவர்கள் புதிய அணியில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டால், இரு ஆண்டுக்கு போட்டியில் பங்கேற்காமல் இருப்பர். மற்ற வீரர்களுக்கு மட்டும் ஏலம் நடக்கும். எதுவாக இருப்பினும், நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பின் தான் என்னவென தெரியவரும்.

http://sports.dinamalar.com/2015/07/1437234360/IPLCricketCoucilMeetingChennaiSuperKingsRajasthanRoyals.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.