Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்பு

Featured Replies

 

லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்பு

JUL 17, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

cm-hugo swireபிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

லண்டனில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், அங்கு எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.

cm-hugo swire

இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்று ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளதுடன், வடக்கில் எதிர்கொள்ளப்படும் சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வார கால அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா வந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், லண்டனில் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/07/17/news/7891

விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை! மக்கள் சேவையே மகேசன் சேவை! பாலா அண்ணருக்கு அடுத்தபடியாக  பொறுத்திருந்து பார்ப்போம்

 

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் முதலமைச்சர் என்ற பதத்திலும் பார்க்க நீதி அரசர் என்றபதம் தான் மேலோங்கி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்சுங் குழுவை தூக்கி எறியவேண்டிய நேரம், காலம் கடந்தாவது வந்திருக்கிறது. மக்கள் இந்த சந்தர்ப்பத்தை இழக்க மாட்டார்கள் என நம்புவோம் ...
 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்னேஸ்வரனின்... வழி, தனி வழி.... அது, பாராட்டப் படக் கூடியது.
இவரின்.. தலைமையில், தமிழனுக்கு.... விடிவு கிடைக்க வேண்டும்.
அல்லக்கை சம்பந்தனையும், பின் கதவு சுமந்திரனையும், "ஹிஸ் மாஸ்டேர்ஸ் வாய்ஸ்" மாவையையும்....
"வேறை வேலை..." பார்க்க, அனுப்ப வேண்டும்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் மக்கள் இவருடன் கைகோர்த்து எமது மக்களை அவர்களின் வாழ்வாதாரத்தை உரிமைகளை முன்னெடுக்க வேண்டும்.


இன்றைய காலகட்டத்திற்கு வெளிப்படையான அரசியலே எமக்கு வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.