Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசின் தவறுகளே வீழ்ச்சிக்குக் காரணம் – ஒப்புக்கொள்கிறார் கோத்தா

Featured Replies

மகிந்த அரசின் தவறுகளே வீழ்ச்சிக்குக் காரணம் – ஒப்புக்கொள்கிறார் கோத்தா

JUL 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

gota-udaya (1)தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீரிஹானவில் வெள்ளை வான் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், நானும் மீரிஹானவில் தான் வசிக்கிறோம்.

நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். வெள்ளை வான் கலாசாரத்தை ஊக்குவித்ததாக எம்மைக் குற்றம்சாட்டிய சோபித தேர்ர் எங்கே? இது தான் ஜனநாயகமா?

நல்லிணக்கத்துக்கு தடையாக இருப்பதாக அவர்கள் எம்மைக் குற்றம்சாட்டினர். ஆனால் எல்லாமே தேசிய பாதுகாப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கூட ஐந்து விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

gota-udaya (1)

gota-udayaநாம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது போர் வெறியர்களாக குற்றம்சாட்டப்பட்டோம். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை தெளிவாக காண முடிகிறது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சிலர் சர்வாதிகாரி என்ற குற்றம்சாட்டினர். அவர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், இப்போதும் அவர் அதிபராக இருந்திருப்பார், நான் பாதுகாப்புச் செயலராக இருந்திருப்பேன்.

அவருடன் இருந்த சிலர் தவறுகளைச் செய்துள்ளனர். அதுவே அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

தவறு செய்தவர்களை மகிந்த ராஜபக்ச கண்டறிந்திருக்கிறார். கடந்த கால அனுபவங்களின் படி நாம் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய உதய கம்மன்பில, கடந்த ஜனவரி 9ம் நாள் அதிபர் பதவியை விட்டுச் சென்றவராக மகிந்த ராஜபக்ச வரவில்லை. தனது தவறுகளைத் திருத்திக் கொண்ட புதிய தலைவராக வரும் ஓகஸ்ட் 19ஆம் நாள் வரப் போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/22/news/8039

எப்படியெல்லாம் செய்திகள் உருவாக்கப்படுகின்றது பின்னர் கோர்க்கப்படுகின்றது. பேரறிவாளன் சாந்தன் உட்பட 7 சந்தேக நபர்களை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான வாக்கு வாதங்கள் நடை பெற்றுகொண்டிருக்கும் போது புதிதாக ஒருவர் முக்கிய சாமான்களுடன் பிடிபடுகிறார்.இப்போ அவர்களின் விடுதலை கேள்விக்குறியாகின்றது.இப்போ இதை கோத்தா தன் கையில் எடுத்து நாம் இப்போ ஆபத்தில் இருக்கின்றோம் என்கிறார்.மொத்தத்தில் தமிழன் வடக்கு கிழக்கு இணைந்த திறந்தவெளிச் சிறையில் தான்.ஏனெனில் இந்தியாவும் சிங்கள அரசும் மாறி மாறி எலி பிடித்து கொண்டேயிருப்பார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை முற்றாக... அழித்து விட்டோம் என்று, 
பெரிய கொண்டாட்டம் கொண்டாடினார்களே.... எல்லாம் வீணா?
வெட்கம் கெட்டவர்கள்.... இவர்களின் தேர்தலுக்கு, விடுதலைப் புலிகளை... துணைக்கு அழைப்பது அவமானம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் 5 புலி மட்டும் தானே. உங்க அமைச்சரையே அங்க உள்ள புலிகள் உங்க ஆட்சி காலத்தில் விரட்டி அடிக்கல்ல. புத்த பிக்குகளை விரட்டி அடிக்கல்ல. தமிழ் நாட்டில் நீரு ஒன்றும் புடுங்க முடியாது. கிடந்து புலம்பும். மோடியும் மோசமாக தோற்றது தமிழ் நாட்டில். சோனியாவும் மோசமாக தோற்றது தமிழ் நாட்டில். :grin::unsure:

தேசிய பாதுகாப்பு என்று இந்தாள் அடிக்கும் தொல்லை தாங்க முடியல்ல ...  வாயால் உண்மையை சொல்லும் சும்மா மெண்டு விழுங்க வேண்டாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.