Jump to content

ஆண்களுக்கு மட்டும், ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தொப்பையைக் குறைக்கும் யோகா beer-belly_1472738c.jpg

ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?
பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை "மச்சி... அப்ப ஒரு பீர் சொல்லேன்" என்பது தான்.

ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!!

அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செய்வதால், அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. அதற்காக பெண்களுக்கு தொப்பை இல்லை என்றில்லை. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் குறைவே.

பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்! சரி, இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணிகள் என்னவென்று பார்ப்போம்.

பீர் ஆம், பீர் குடித்தால் தொப்பை வரும். பெரும்பாலான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மேலும் பீர் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால், கலோரிகள் அதிகம் இருப்பதால், அதனால் தொப்பை வரக்கூடும். எனவே, தொப்பையை குறைக்க வேண்டுமெனில், முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

செய்யும் வேலை தற்போது ஆண்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் கொழுப்புக்களாக மாறி, உடலில் தங்கி தொப்பையை உருவாக்குகின்றன.

உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள கூட ஆண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவில் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைமுறையை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓய்வு எடுக்கவே நேரம் இல்லாத போது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்.

அமைதியாய் ஆளைக் கொல்லும் பேய் ஆம், தற்போது வேலைப்பளு அதிகம் இருப்பதால், பல ஆண்கள் மன அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகி, அதுவே தொப்பைக்கு வழிவகுக்கிறது.

நொறுக்குத்தீனிகள் பெண்கள் மட்டும் தான் எந்நேரமும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் கூட ரகசியமாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால், ஆண்களுக்கு எப்படி தொப்பை வரும்?

சிப்ஸ், வடை, போண்டா பெண்களை விட ஆண்கள் தான் டிவி பார்க்கும் போது எதையேனும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால், டிவி பார்க்கும் போது சிப்ஸ், வடை, போண்டா என்று சாப்பிட்டவாறே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால், இன்று ஒரு நாள் தானே, இதில் என்ன உள்ளது என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் சாக்குபோக்கு சொன்னால், தொப்பை வராமல் என்ன ஆகுமாம்.

பார்ட்டி பொதுவாக ஆண்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் பங்கு கொள்வார்கள். மேலும் பார்ட்டி என்றால் அன்று அளவே இல்லாமல் குடிப்பதோடு, நன்கு வயிறு நிறைய அசைவ உணவுகளை உட்கொண்டு மட்டையாகிவிடுவார்கள். இப்படி வாரம் ஒருமுறை பார்ட்டியில் கலந்து கொண்டாலே போதும், தொப்பை பெரிதாவதற்கு...

தூக்கமின்மை சில ஆண்கள் வேலை அதிகம் உள்ளது என்று, சரியாக சாப்பிடாமல், தூங்காமல், எந்நேரமும் வேலையின் சிந்தனையிலேயே இருப்பார்கள். இப்படி இருப்பதாலும், தொப்பை ஏற்படுகிறது.

இனிப்பான உணவுகள் ஆண்களுக்கு இனிப்பு பொருட்களின் மீது ஆசை அதிகம் இருக்கும். அதிலும் ரவா லட்டு, அல்வா, ஜாங்கிரி, மைசூர் பாகு என்றால் அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இப்படி சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு காரணமாக உள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Posted

நம் முன்னோர்கள் வண்டிய குறைக்குற பஞ்சியில உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று கூறிவிட்டார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் பொம்பிளையள் தொப்பையும் சள்ளையுமா திரியுறது இவைக்குத் தெரியல்லையோ..?! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் பொம்பிளையள் தொப்பையும் சள்ளையுமா திரியுறது இவைக்குத் தெரியல்லையோ..?! :grin:

hip-277x300.jpeg

சள்ளை... பெண்களுக்கு, மேலதிக கவர்ச்சியை கொடுப்பதால், அதனைப் பற்றி எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை.:grin:

Posted

ஏன் பொம்பிளையள் தொப்பையும் சள்ளையுமா திரியுறது இவைக்குத் தெரியல்லையோ..?! :grin:

hip-277x300.jpeg

சள்ளை... பெண்களுக்கு, மேலதிக கவர்ச்சியை கொடுப்பதால், அதனைப் பற்றி எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை.:grin:

தம்பி நெடுக்கு அனுபவித்திலை சகோ தமிழ்சிறி சொல்லுறார் பிடிவாதத்தை விட்டிட்டு கொஞ்சம் கேளுங்கள் :grin:

Posted

உடலின் அதிகமான கொழுப்பு ஆண்களுக்கு பொதுவாக வயிற்றுப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. பெண்களுக்கு  உடலின் பின்பகுதி,தொடைப்பகுதியில் (பொதுவாக) சேமிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வயதுக்கு பிறகு வண்டி தொந்தி இருந்தால்தான் வடிவும் செந்தழிப்பும் இருக்கும்....... :love:

இல்லாட்டி கசம் பிடிச்ச வருத்தக்காரர் மாதிரி வடிவில்லாமல் இருக்கும்...:cool:

ஆனால் வருத்தக்காரருக்கு உண்மையிலையே வண்டி பெரிய விக்கனம் கொடுக்கும்.:(

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.