Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்

Featured Replies

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்

 

நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

130715144651_cv_vigneswaran_512x288_dushஅரசியல் தீர்வு கிடைக்கும்வரை, கூட்டமைப்பினர் அமைச்சரவை பதவிகளை ஏற்கக்கூடாது என விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களது தேர்தல் களங்களில் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பேசுவது எனக்கு அழகல்ல" என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார்.

போருக்குப் பின்னரான புனர் நிர்மாண நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை அனுசரித்து நடத்தப்படாமல் தான் தோன்றித்தனமாக நடைபெற்றுவருவது மனவருத்தத்தைத் தருவதாகவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியான தீர்வுகள் கிடைக்கும் வரை, எந்தக் காலத்திலும் அமைச்சரவைப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே தனது கருத்து என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அப்படி அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொண்டால், கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் அமைச்சர்கள் சுதந்திரம் இழந்து, மக்களின் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டிவரும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விருப்ப வாக்குகளை அளிக்க வேண்டியிருக்கும். பிரச்சாரம் செய்தால் விருப்ப வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் விக்னேஸ்வரம் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக விக்னேஸ்வரன் தன்னிடம் பேசவில்லையென்றும், தேர்தலுக்குப் பிறகு இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150731_tna

தகுதியுள்ள வேட்பாளரை மட்டும் தெரிவு செய்யுங்கள்.இக் கோரிக்கை இலங்கையில் உள்ள அனைத்து வாக்காளருக்குமாகிய கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

சாணத்தை நக்கிய....
சம்பந்தன் பையனுக்கு, தேர்தலுக்கு... முன்,
விக்னேஸ்வரன் ஐயாவிடம் பேச... என்ன கூச்சம்?
"குற்ற முள்ள நெஞ்சு, குறு குறுகத்தான்... செய்யும்."

சம்பந்தன்.... இனி, அரசியலில், வாய் திறக்கவே... படாது.
வாயை... பொத்திக் கொண்டு, இருக்க வேண்டிய காலம்... நெருங்குகின்றது.

  • தொடங்கியவர்
கௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 07:00.30 AM GMT ]
vikki_sir_001.jpg
நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், வடக்கின் முதலமைச்சர் மேற்போந்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அதிகளவான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கி இருக்கும் இவ்வேளையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்காக நான் பிரசாரம் செய்யமாட்டேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை எவரும் சாதாரணமாக கருதிவிடக்கூடாது.

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் களமிறங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக தேர்தல் பிரசாரம் செய்தால் மட்டுமே கூட்டமைப்பு தப்பித்துக் கொள்ளும் என்ற நிலையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த அறிவிப்பு தமிழ் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், தான் சார்ந்த கட்சிக்காக, தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்குள், தேர்தல் பிரசாரம் அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக உள்ளது என்பது தெளிவாகின்றது.

என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் இறங்கி அவர்களை ஆதரித்து பக்கச் சார்பாகப் பிரசாரம் செய்வது எனக்கு அழகல்ல.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அந்நியோன்னியமாக இயங்குவது எனக்கொரு பிரச்சினையுமில்லை.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளின் நலனைவிட எமது மக்களின் நலனும் உரித்துக்களுமே முதன்மை பெறவேண்டும்.

இவ்வாறு வடக்கின் முதலமைச்சர் கூறியதற்குள் எல்லா அர்த்தமும் அடங்கி உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியாதவர்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மிகத்தெளிவான அறிவுரையைக் கூறியுள்ளார்.

எனது கட்சி, என்னை முதலமைச்சராக்கிய கட்சி என்பதற்காக நான் பக்கச் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முடிவு ஓய்வுக்குப் பின்னரும் நீதியரசர் நீதியரசர்தான் என்பதை இந்த உலகம் முழுமைக்கும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

கெளரவ சேனையில் இருந்த பீஷ்மர், துரோணர் மீது எனக்கு மதிப்பு இருந்த போதிலும் கெளரவ சேனையில் வில் முறித்த விதுரனே பாரத இதிகாசத்தில் எனக்கு பிடித்தமான பாத்திரம்.

நீதியரசர் முதல்வர் விக்னேஸ்வரனை ஒரு விதுரனாக, அவரின் வாக்கை விதுர நீதியாகப் பார்க்கிறேன். தமிழ்மக்களே! உங்கள் மனச்சாட்சிதான் உங்களுக்கு நீதிபதி என்பதை மறந்து விடாதீர்கள்.

http://www.tamilwin.com/show-RUmtyHQVSVmq2H.html#

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்

 நல்ல அரசியல் வர சம்பந்தம் சுமந்தி கோஷ்டி விடவே விடாதுகள். அதிலையும் கள்ளப்புத்தியை பாருங்கோ தேர்தலுக்கு பிறகு பேசுவமாம்......

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்குப் பிறகு சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை.. சிவஞானம்.. சித்தார்த்தன்.. டக்கிளஸ் போன்ற நரை மண்டைகள் அரசியலை விட்டு விலகி விடுவது நல்லது. கருத்துச் சொல்லவே வர வேண்டாம். மக்கள் உங்களிடம் அதனை எதிர்பார்க்கவில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

விக்கி ஐயா உண்மையைப் பேசுவது பிடிக்கவில்லை. அதுவும் அமைச்சர் பதவியை ஏற்கக் கூடாது என்று சொன்னதுதான் அவர்களுக்கு பெரி பிரச்சனை. ஆதரவு தராவிட்டாலும் இப்படிக் காலை வாரக் கூடாது.தேர்தலில் வென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் தோற்றால் வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குள் முடங்க வேண்டியதுதான். சம்பத்தருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் தேர்தலுக்கு பிறகு பேசுவோம் என்கிறார். ஏன் இப்ப கருத்துச் சொல்ல என்ன தயக்கம்.?

Edited by புலவர்

விக்கி ஐயாவின் சொல்லினை மக்கள் முழு மனதுடன் மதிக்கின்றார்கள் சம்பந்தன் என்பது ஒரு சாக்கடை இப்போது . இனி இவரின் பருப்பு அவியாது . இனி விக்கி ஐயா தான் உண்மையான தமிழ் மக்களின் தலைவர் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.