Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் பாதையை திறக்க 2 வாரம் கெடு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகிறது. துண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல `ஏ-9′ பாதையை திறந்து விடும்படி புலிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கை ராணுவம் ஏற்கவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக `ஏ-9′ பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். `ஏ-9′ பாதையை மூடியிருப்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல். இன்னும் 2 வாரத்தில் அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நாங்களே நடவடிக்கை எடுப்போம். நாங்களே `ஏ-9′ பாதையை திறப்போம். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த பாதையை திறந்து விடுவது என்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு இளந்திரையன் கூறினார்.

போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகள் நினைவு நாளில் பேசிய விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் “இனி சமரச பேச்சு நடத்தி பலன் இல்லை. தனி தமிழ்ஈழம் தான் ஒரே தீர்வு எங்களது விடுதலைப்போராட்டதை சர்வதேச சமூகத்தினர் அங்கீகரிக்க வேண்டும். சமரச முயற்சிக்கு இனி நாங்கள் தயாராக இல்லை'’ என்று தெரிவித்து இருக்கிறார். எனவே அடுத்த கட்ட தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் தயாராகி வருகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்து செய்தி எடுத்தது என்ற விபரம் போடவே இல்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா மறுபடியும் அவகாசம்,கெடு என்டு தொடங்கீட்டாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்னத்தைச் சொல்வது வடிவேல்007?

நாங்களாகவே, தலைவர் உரைக்கு விளக்கம் கொடுப்பம். நாளைக்கே சண்டை தொடங்கப் போகுது என்போம். மாறிக்கீறி எங்காவது துவக்கு தவறி வெடிச்சால் சண்டை தொடங்கீட்டாங்கள் எண்டு பெருமை பேசுவம்!

பிறகு, எங்களின் கற்பனைகள் ஒண்டும் நடக்கவில்லை என்றால் புலிகளைத் திட்டித் தீர்ப்போம்!

சினிமா பாணியில் எதிரிக்குச் சொல்லிக் போட்டா அடிக்கின்றது. தமிழீழத் தனியரசை நோக்கிய பயணம் என்றால் அது யுத்தவெற்றியை மட்டுமல்ல என்பது தான் என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு என்னத்தைச் சொல்வது வடிவேல்007?

நாங்களாகவே, தலைவர் உரைக்கு விளக்கம் கொடுப்பம். நாளைக்கே சண்டை தொடங்கப் போகுது என்போம். மாறிக்கீறி எங்காவது துவக்கு தவறி வெடிச்சால் சண்டை தொடங்கீட்டாங்கள் எண்டு பெருமை பேசுவம்!

பிறகு, எங்களின் கற்பனைகள் ஒண்டும் நடக்கவில்லை என்றால் புலிகளைத் திட்டித் தீர்ப்போம்!

சினிமா பாணியில் எதிரிக்குச் சொல்லிக் போட்டா அடிக்கின்றது. தமிழீழத் தனியரசை நோக்கிய பயணம் என்றால் அது யுத்தவெற்றியை மட்டுமல்ல என்பது தான் என் கருத்து.

:blink::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விளங்குது. நான் இப்ப புலிகளை குறை சொல்லேலை. இந்த 4வருச அவகாசத்தில செய்யாத ஒரு அதிசயத்தையா அரசாங்கம் இந்த 2 வாரத்தில் செய்யப்போகுது?

புலிகள் அடிக்கிறார்களோ இல்லையோ. ஆடுற மாட்டை ஆடி கறக்கனும் பாடுற மாட்டை பாடி கறக்கனும்.

என்னமோ பண்ணீட்டு போங்கய்யா :-)

எந்தப் பத்திரிகை இது? செய்தியில் உள்ள வசனங்களைப் பார்த்தால் தமிழ் நாட்டில் வெளியாகும் பத்திரிகை போல இருக்கிறது.

எந்தப் பத்திரிகை இது? செய்தியில் உள்ள வசனங்களைப் பார்த்தால் தமிழ் நாட்டில் வெளியாகும் பத்திரிகை போல இருக்கிறது.

இந்த செய்தியை வீரகேசரியும் வெளியிட்டு உள்ளது!!!!!!

மாவீரர் தின உரை நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வினை ஏற்படுட்தியிருக்கும் வேளையில் இன்ன்மும் ஏ9 பாதையூடாக உணவுப்பொருட்கள் யாழிற்க்கு கொண்டு செல்வதற்க்கு தயாரில்லாத நிலையில் நீண்டகாலமாக ஏ9 பாதை மூடப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினியில் விளிம்பில் நிற்கிறார்கள் .

போர்நிறுத்த ஒப்பந்த்தை மீறியிருக்கிறார்கள் என இன்னமும் 2 வாரத்தில் பாதை நிரந்தரமாக திறக்கப்படா விட்டால் நாங்களே அதற்குரிய நடவெடிக்கைகளை எடுபோம் ஒரே ஒரு தடவை திறப்பது ஏற்கமுடியாது.

என்று புலிகளின் இராணுவ பொறுப்பாளர் இராசய்யா இளந்திரயன் பத்திரிகை யொன்றுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.

இந்த செய்தியை தமிழீநாட்டில் இருந்து வெளிவரும் மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது

உண்மையில் இவங்கள் 2 கிழமை என்ன 20 வருடம் கொடுத்தாலும் திறக்கப்போவது இல்லை அதனால் காலத்தை வீண் அடிக்காமல் மக்கள் சாகமுன்பு சாப்பாடு போடவேண்டும் இல்லையென்றால் பட்டினியில் சிறுவர் முதல் முதியோர் வரை இறந்து விடுவினம் ஆகவே தலைவா உம்மை நம்பிய மக்களுக்கு சாப்பாடு முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பத்திரிகை இது? செய்தியில் உள்ள வசனங்களைப் பார்த்தால் தமிழ் நாட்டில் வெளியாகும் பத்திரிகை போல இருக்கிறது.

பிரணாப் முகர்ஜியுடன் ராஜபக்சே சந்திப்பு

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தையும், வட கிழக்கு மாகாண இணைப்பு திட்டத்தையும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மதித்து, அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இந்தியஇ இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை, நிராகரித்து விட்டனர்.

இந் நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பு முடிவு செல்லாது என்று இலங்கை உச்சநீதமன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால் இனப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

இந் நிலையில், அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், இலங்கை சென்ற வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் மூலம் இந்த செய்தியை ராஜபக்ஷேவுக்கு பிரதமர் தெரிவித்தார்.

இந்திய அரசின் இந்த வலியுறுத்தல், இலங்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே இலங்கையிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. மேலும், வடகிழக்கு மாகாண இணைப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்யுமாறு இலங்கைக்கு உதவி செய்யும் நன்கொடையாளர் நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

சமீபத்தில் ராஜபக்ஷேவை சந்தித்த மேனன், இலங்கை அமைதி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். அப்படிப்பட்ட ஒப்பந்தம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது. எனவே உள்ளூர் சட்டத்தால் அந்த ஒப்பந்தத்தை தூக்கிப் போட்டு விட முடியாது என்று இந்தியாவின் கண்டிப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இணைப்பு தமிழர்களுக்குத் தேவையான அரசியல் அங்கீகாரத்தை வழங்க உதவி செய்யும் ஒன்று என்றும் மேனன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் தன்னை ராஜபக்ஷே சந்திக்கும்போது, மன்மோகன் சிங்கும் இந்தக் கருத்தை தீவிரமாக வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந் நிலையில் இன்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவின் நிலை குறித்து ராஜபக்சேவிடம் பிரணாப் விளக்கினார்.

ராஜபக்ஷேவுக்கும் வட கிழக்கு இணைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. 2 வாரங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த தமிழ் தேசிய கூட்டணி எம்.பிக்கள் குழுவிடம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பான நிவர்த்தி நடவடிக்கைகளை தான் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே கருத்தை மேனனிடமும் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியஇ இலங்கை ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கொடுக்கும் ராஜபக்ஷே அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தருவதாக மேனனிடம், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கேவும் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம்இ வட கிழக்கு இணைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க முயன்றால் அரசுக்குக கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா எச்சரித்துள்ளது. இந்தக் கட்சிதான் வட கிழக்கு இணைப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவம்புலிகள் கடும் மோதல்

இந் நிலையில் தனி ஈழமே ஒரே தீர்வு என விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில் இன்று காலை முதல் விடுதலைப் புலிகள், ராணுவத்துடன் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

மாவீரர் தினத்தையொட்டி நேற்று தமிழீழ தொலைக்காட்சியில் பிரபாகரன் உரை நிகழ்த்தினார். அப்போது, தமிழீழமே ஒரே தீர்வு என திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மட்டக்களப்பில் உள்ள ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் அதி நவீன பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த அதிரடித் தாக்குதலால் ராணுவ வீரர்கள் நிலை குலைந்தனர். ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல வட கிழக்கு இலங்கையில் மேலும் பல இடங்களில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தனி ஈழத்தை அடைவோம் என பிரபாகரன் அறிவித்த அடுத்த நாளே கடும் சண்டை மூண்டுள்ளதால், இலங்கை நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

அரசுக்கு புலிகள் 2 வாரம் கெடு

இதற்கிடையே யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை (ஆல்ஃபா 9) 2 வாரத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே திறப்போம் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரயைன் அளித்துள்ள பேட்டி:

யாழ்ப்பாணத்தை இணைக்கும் நெடுஞ்சாலை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. தமிழர்களைப் பட்டினிப் போட்டு சாகடிக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் இனவெறி காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த செயல் போர் ஒப்பந்த நிறுத்தத்தை மீறும் செயலாகும். இன்னும் 2 வாரத்திற்குள இந்த சாலையை திறக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் புலிகளே இந்தப் பாதையை திறந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

-தற்ஸ் தமிழ்

இங்கே இருந்துகொண்டு சண்டை சண்டை என்று தவிக்கிறமோ..

அங்க இருக்கிற ஒவ்வொரு தாய்மார்..பிள்ளைகள்..கர்ப்பிண

அதுக்காக அவன் பாதை திறக்கும் வரை காத்திருந்தால், எங்கட சனம் சாப்பாடு இல்லாமல் செத்து போடும், சனத்துக்கா சண்டை, சண்டைக்கா சனம், சுனாமி நேரம் சோறு குடுக்காத அரசு, சண்டை நேரம் கஞ்சி ஊத்த போகுதா?

இரண்டு வாரம் என்பது, போர் நிறுத்ததில் இருந்து விலகுவதற்கான 14 நாட்களா என்பதே கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த உடன்படிக்கையை

தொடர்ந்து கடைப்பிடிக்கத் தயார்

கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் தெரிவிப்பு

போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க விடுதலைப் புலிகள் தயார் என்று கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கிளிநொச்சிக்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் இவ்விடயம் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையின் எதிரொலியாக யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அவசர விஜயம் மேற்கொண்டு நேற்று கிளிநொச்சிக்கு வந்தது.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவரும் தலைமை அதிகாரியுமான ஜோன் ஒஸாஸிஸ் சொய்ம் தலைமையிலான குழுவினரே நேற்று கிளி நொச்சிக்கு வருகை தந்தனர். அக்குழுவில் ஐஸ்லாந்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியான அன்ரா ஜெகனஸ்பெர்கும் இடம்பெற்றிருந்தார்.

அரசியல்துறை அலுவலகத்தில் நேற்று முற்பகல் 11 மணிக்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிகளை இக் குழுவினர் சந்தித்தனர்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவில் காவல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி. புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இரா சையா இளந்திரையன் ஆகியோர் பேச்சுக்களில் கலந்துகொண்டனர்.

போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க விடுதலைப் புலி கள் தயாராக இருக்கின்றனர். இந்த உடன் படிக்கையை உரியமுறையில் நடைமுறைப் படுத்த அரசாங்கமே தவறிவிட்டது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிர காரம் ஏ9 பாதையைத் திறக்க அரசு மறுத்து வருகின்றது.

அதனால் யுத்த நிறுத்த உடன்படிக்கை அடிப்படையிலேயே செயலிழந்துவிட் டது என்று தமிழ்ச் செல்வன் சுட்டிக்காட்டி னார்.

மாவீரர் தின உரையில் தலைவர் பிரபா கரன் இதனையே கூறினார் என்பதும் கண் காணிப்புக் குழுவினரிடம் எடுத்துக் கூறப் பட்டது.

-உதயன்

தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் செவ்வியைப் பாருங்கள்:

படுகொலைசெய்யப்படும் மக்களினம் சுதந்திரத்திற்காகப் போரிடவேசெய்யும். - பா.நடேசன்.

ஜ புதன்கிழமைஇ 29 நவம்பர் 2006 ஸ ஜ ஜனனி ஸ

படுகொலைகளிற்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளிற்கும் கொடுமைகளிற்கும் ஆளாகின்ற மக்களினம் தனது விடுதலைக்காகப் போரிடுவதுதென்பது மிக யதார்த்தமானதாகும் உலகில் எந்த மக்கள் சமூகமும் இவ்வகையான நிலமைக்கு முகங் கொடுக்க நேரிட்டால் இதேயே செய்யமுடியும் - என தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் அரசியற்கருத்தாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது இறுதித்தெரிவாக சுதந்திரத்திற்கான போரை ஒருஇனம் தெரிவுசெய்கின்றபோது அதனை எவரும் குற்றங்கூற முடியாது. மாறாக அங்கீகரிக்கவே நேரிடும். கடந்தவாரம் பல்வேறு தரப்புக்களையும் சேர்ந்த மக்களை சந்தித்து மிக நெருக்கமாகவும் மனம்விட்டும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். அப்போது மக்களின் மனதில் இருக்கின்ற கொதிப்பையும் விடுதலைக்கான அவாவையும் கண்டுகொள்ள முடிந்தது.

அவர்கள் சுதந்திரத்திற்கானபோரை வேண்டிநிற்கிறார்கள் அதை வெளிப்படையாகத் தெரிவித்தார்கள் - எனவும் திரு பா.நடேசன் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி : நிதர்சனம்.கொம்

ஈழத்திலிருந்து

ஜானா

14 நாள் கெடு என்றோ தமிழ்செல்வனால் வழங்கப்பட்டு விட்டது. மனிதாபிமான ரீதியிலான பாதைதிறப்பு யுத்தம், தேச பாதுகாப்பிற்கான யுத்தம் என்பன இந்த யுத்தநிறுத்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.

இந்ததகவல் முன்னமும் வெளிவந்திருந்தது அதாவ்து 26 ம்திகதி நவம்பர் மாதம் அதை மேற்கோளாக காட்டி தமிழக செய்தி நிறுவணம் சிலவற்றை மாற்றி எழுதிவிட்டது என நினைகிறேன்

புதினத்தில் வந்த செய்தி

ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன்[ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 06:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]illam20061126.jpgஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து:

நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம்.

ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன்.

"ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாநத்தை பிடிப்பது பெரிய காரியம் இல்லை. ஆனால் பிடித்த பின்புதான் இருக்கிறது பிரச்சனை. யாழ்ப்பாணத்தை பிடித்தால் அங்கு வாழும் 6 லட்சம் மக்களுக்கு புலிகள்தான் உணவு போட வேண்டும். இப்படி உடனடியாக 6 லட்சம் பேருக்குரிய உணவை கொடுப்பதற்கு வன்னியில் உள்ள வளம் போதாது.அதனால் போர் திட்டம் மட்டும் வரைந்தால் போதாது. மக்களக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதற்க்கும் தயார் செய்த பின்தர் சண்டை. இது புலிகளுக்க நன்றாக nதிரயும்.

மக்களிற்கு பேரவலத்தை ஏற்படுத்தி போரைத் தலைவர் ஆரம்பிக்க மாட்டார்.

எல்லாவற்றையும் கணித்தே அவரின் திட்டங்கள் அமையும். யாழ். குடா மீது மட்டுமே தாக்குதல் நடக்குமென எதிர்ப்பார்க்காதீர்கள்.

:lol::lol::lol:

if any one guide me to show how to use the tamil fonts and how can I type this here? Writting in english is not allowed here but i like to be a memeber here...how??? :o:o:o i know there should be something to start...

பல நெருக்கடியான நேரங்களில் முடிவுகளை யாரும் ஏதிர்பார்க்க முடியாத வாறு வழிநடத்தியவர் தலைவர் இன்று 5 வருட சமாதான காலத்தில் நேர்வேயும் சர்வேதேசமும் நல்ல தீர்வு பெற்று தரும் என்று தலைவரோ இல்லை எமது தளபதிகளோ காத்து இருந்துருக்க மாட்டார்கள் எப்படியானா பலப்படுத்தால்கள் நடத்து இருக்கும் என்று யாருக்குமே தெரியாது, தற்போது நடந்தவை எல்லாம் சர்வேதேசநாடுகள் தங்கள் நம்பிக்கைகளை காப்பாற்றி கொள்ள கொடுதா சந்தர்ப்பமே( சொறிபடையின் படுகொலைகள், கரிநாகம் கருணாவின் நரிப்படை, டக்கிள்சின் விடியும்போதே புலிகள் மீது இன்று என்ன குற்றம் சுமாத்தலாம் என்ற குரங்கு நப்பாசைகளும், இந்தியாவின் முதுகில் குத்தும் குனமும்)

விலைமதிக்க முடியாதா எமது போராளிகளின் உயிர்களையும் எமது மக்கலின் உயிரயும் விலை கொடுத்து இலங்கை சொறிநாய்களிடம் பச்சயாத்துமுறை ஆட்சி

மூறை தீர்வை ஏற்போம் என்று சில வட நாட்டு தமிழ் எதிர்ப்பு கூட்டமும் இலங்கை இனவாதிகளும் கற்பனையில் மிதக்கும் போது எமது தலவரிம் முடிவுகள் செயல்லில் காட்டிகொள்ளுவார் ஆனா அது இன்று நாளையோ இல்லை ஆனா நாமும் எதிரியும், துரோகிகலும் எதிர்பார்க்காத நேரம் நடக்கும்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.