Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரும் முகம் பார்க்கும் காலம் - கவிதைத் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

 

 

எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.

திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா 
திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்
டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம், இந்தியா
திரு. எஸ் தேவராஜா – டெனமார்க்
திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்
திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்
மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா, இலங்கை
மருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை 
திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்
திரு. இணுவையூர் மயூரன் - சுவிஸ்
திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்
திரு.சசிகரன் பசுபதி – லண்டன்
திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத், இந்தியா
திருமதி. கவிதாயினி நிலா – புத்தளம், இலங்கை
திரு.பார்த்தீபன் பத்மநாதன் - பிரான்ஸ்
திரு.வன்னியூர் செந்தூரன் - வன்னி, இலங்கை
திரு.நயினை விஜயன் - ஜேர்மனி
திரு.பகீரதன் அரியபுத்திரன் - கனடா
திரு.மண் சிவராஜா – ஜேர்மனி
திரு. மட்டுவில் ஞானகுமாரன் - கனடா
திருமதி. சிவமேனகை – சுவிஸ்
திரு. ஆவூரான் - அவுஸ்திரேலியா
திரு.பசுபதிராஜா – ஜேர்மனி
திரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியா
திருமதி. நகுலா சிவநாதன் - ஜேர்மனி
திரு. வேலனையூர் பொன்னண்ணா – டென்மார்க்
திரு. அம்பலவன் புவனேந்திரன் - ஜேர்மனி
திரு. சரவணன் - மலேசியா
திரு.ராஜ்கவி ராகில் - சிசில்தீவுகள்

 

திரு . கந்தையா முருகதாசன் - யேர்மனி 

திரு.இக.கிருஷ்ணமூர்த்தி  - யேர்மனி 

 

 

(இத்திட்டத்தில் இன்னும் பல படைப்பாளிகளின் பெயர்களையும் இணைக்கவிருக்கின்றோம்)

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal

Edited by நிழலி
தலைப்பு சுமேயின் விருப்பிற்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது

மீராவையும் இணையுங்கோ :)

வாழ்த்துக்கள் சுமே!

Edited by மீனா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

05.08.2015 ஆகிய இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது 'மலரும் முகம் பார்க்கும் காலம்' என்ற கவிதைத் தொடர். இத்தொடரில் முதலாவது கவிதையை எழுதி தொடக்கி வைப்பவர் சுவிஸ்ஸில் வாழும் படைப்பாளி பொலிகை ஜெயா என்ற புனைபெயரைக் கொண்ட திரு.பன்னிருகரம் ஜெயக்கொடி அவர்கள்.

இவர் எமது 'விழுதல் என்பது எழுகையே' என்ற நெடுந்தொடரில் எழுதியவர் என்பதை அறிந்திருப்பீர்கள்.திரு.பொலிகை ஜெயா அவர்களின் படத்துடன் அவரின் கவிதையை இங்கே பதிவு செய்து மகிழ்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal

11828597_1596684880595815_59641992786969

'மலரும் முகம் பார்க்கும் காலம்'

கவிதை: திரு.பொலிகை ஜெயா , சுவிஸ்

செய்தொழில் உடல் சோரும்
சேயின் குதலையால் மெய் நிமிரும்

இல்லானின் கடின உழைப்புக்கு
இல்லாளின் ஆலிங்கனம் ஒத்தடமாகும்

மலரில் மணம் மதியில் குளிர்ச்சிபோல்
மழழைகளின் சிரிப்பில் மலரும் முகம்

ஆஸ்திக்கும் ஆசைக்குமொன்றாய்
ஈன்றெடுத்த இரு கண்மணிகளை

போர் ஏப்பமிட்டது அறியாது
ஏங்கித்தவித்து புலம்பி ஏறியிறங்கி

கைகூப்பி காலில் விழுந்து மன்றாடி
கையில் மனுவுடன் அலைகிறது

துணையற்ற பாசமிகு தாய்மனசு
காலம் காரிருளாய் நீண்டுபோச்சு

பெத்தவள் கண்ணீரும் வற்றிப்போச்சு
முகமும் குழியாகி சோபைபோச்சு

பிள்ளைகளை பார்க்கும் காலம் நீண்டுபோச்சு
பெற்றோர் பேணி பராமரித்தல்

பிதாமாதாக்களை பிள்ளை பேணுதல்
நாம் குழைக்கும் ஒவ்வொரு கவளத்தையும்

நன்றியுள்ளது தனக்கேயென வாய்பார்ப்பதும்
எம்மை பெத்ததுகள் பார்க்கும் காலம்.

— with Polikai Jeya.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 'மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதைத் தொடரின் இரண்டாவது கவிதையை எழுதுபவர் ஜேர்மனியில் வாழும் படைப்பாளி திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்.

அவரின் படத்தையும் கவிதையையும் இங்கே பதிவு செய்து மகிழுகிறோம்.
------------------------------------------------------------------------------------------

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal

மலரும் முகம் பார்க்கும் காலம்

எம்மைப் பெற்றவர்கள் பெருமையினைப்; பேணிடுக
.மொட்டவிழ்ந்து மென்னிதழ் விரிந்;து மலராகும் தாய்மை
சொட்டும் அதன் மீதாக தியாகப் பனி வகிடு மூட்டம்
கட்டவிழ்ந்து காம்பினைத்தக்க கவர்ந்திழுக்கும் தந்தை..
வட்டமிட்டு உடன்பிறந்தோர் மலரும்முகம் பார்க்கும் காலம்!

விடுதலைக்கு விரித்து வைத்த விண்ணப்ப மலர்கள்
படுகிடப்பில் பக்குவமறியா விளை பாதகங்கள் சுழ..
விடுகதைகள் விடுவிக்க விரைந்திட்ட மேலோர் --வீணாகா
மலரும் முகம் காணும் வேளை மெல்லனவே உதிக்கும் !

பெண்களவர் தங்களை விடுவிக்க எழுந்தால் .குமுகாயம்
கண்கட்டு பூட்டுக்கள் சாவியற்றே கழன்று நிலைதேறும்
அன்னையவர் மநுநீதி அவளுள்ளே சரிநிகர் ஆட்சிகொளின்
திண்ணமாய் பூம்பொழுது புலர்திங்கே புத்துணர்வால் நிமிரும் !

மலருவதை தொலைத்தவர்கள் மங்கையர்கள் அல்லவே... -
மானுச நேயமது குடைக்கொன்றின் கீழாக மதியிட்டு சேரின்
தோளோடு சமதோளாக பால்பேத வேற்றுணர்வை துரத்தின்..
தொல்லைகள் தொலைந்தங்கே மலரும்முகம் பார்க்கும்காலம் !

காலத்தால் கனிவாகும் அக-புற காதலது புவிச்சுழல்வில்
கடுகதியாய் வன்முறைகள் வன்புணர்வு காணாத்துப் போகும்
அவலமது மோசடிகள் அந்நியமாய் அகன்று அகலும்..nஐக
அகமதில்ஆன்றோர் சான்றோர் அற்புதமாய் தலையெடுப்பின் !

தலைப்பினைத்தத்தெடுத்து தடைதாண்டி விடையாக..எழுமின்
திகைத்திடும் திமிராக திக்கெட்டும் ஓரே தீர்வாய் !

Kandiah Murugathasan's photo.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் முயற்சியை  தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முன்னெடுத்திருக்கிறது வாழ்த்துக்கள்

 

பல வகையான கவிஞர்களையும் எண்ணங்களையும் அவர்தம் எழுத்தின் வீச்சுக்களையும் ஆளுமையையும் அறியக் கிடைப்பது மகிழ்ச்சி. சுமே இம்முயற்சியில் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள் உங்களுக்கும் உங்களோடு பயணிக்கும் மற்றைய கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைத் தொடர் 3, எழுதியவர் திருமதி.சுமதி பாலச்சந்தர், பிஜித்தீவு

„மலரும் முகம் பார்க்கும் காலம்'

திகைத்திடும் திமிராக, திக்கெட்டும் தீர்வாய்
அண்டம் நடுநடுங்க,நீ உன்
தாண்டவம் கொண்டதிங்கு
போதும் சிவனே

செயலாற்றும் காலமிது என்னோடு
நீ வந்திங்கு களமிறங்கு

யுத்தம் இல்லாத
அண்டம் செய்! இங்கு
ரத்தம் சிந்தாத பிண்டம் செய்

தாவரங்களே,பூமி வந்த
தேவதைகளெனச் சொல்! அவற்றை
காத்தலே மானிடத்தின் வாழ்வியல் எனச் சொல்

பெண்மை என்பதே
புனிதமெனச் சொல்! அதில்
கண்ணியம் கொள்வதே வளமை எனச் சொல்

வாழும் இடமே
சொர்க்கமெனச் சொல்! எவருக்கும்
உதவாத மனமே நரகமெனச் சொல்

பணம் என்பது
பண்டமெனச் சொல்! அதுவல்ல
பிராணன், என்பதையும் சொல் !
இனிதாக
இத்தனையும் செய்துவிடு
நிரந்தர மலர்ந்த முகம்
நுகர்ந்துவிடு !

 

 

Kandiah Murugathasan's photo.
 
 

மிக்க நன்றி சகாரா வருகைக்கும் கருத்துக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைத் தொடர் 4 திருமதி.சுபாஜினி சிறீரஞ்சன், டென்மார்க்

என்னுள் தீண்டிய உணர்வுகள்
எண்ணைச் சுரங்கமாய்......
அள்ள குறையா அமிர்தமாய்
வேண்டுமே

ஐம்புலனும் அடங்கி அள்ளிப் பருகும்
ஊற்றாய் பாய்ந்து
தேனாய் இனித்து
தினம் பார்க்கும் மலர்ந்த
முகமாய் வேண்டுமே..........

கலைகள் பெருகிட
காலமெலாம் படைத்து
புதிதாய் முகம் காட்டி
மலரும் முகமாய் வேண்டுமே......

பிறமொழிக் கலைகளை பெயர்த்து
நுகர்ந்;;து இன்பம் எனச் சொல்லி....
இணையவலையில் நிலையாய்
தமிழே நின் முகமே வேண்டுமே.......

அழகு மொழி கற்றும்
அதில் ஏதும் உணராத
உயிரோடும் கலக்காத
உணர்வுகளை தந்த
தமிழே என்றும்
தொடுகை(ஸ்பரிச)இல்லா
தீண்டலாக வேண்டுமே.........

Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

„மலரும் முகம் பார்க்கும் காலம்'

கவிதைத் தொடர் 5, திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி

தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியும் எடுப்பு நடையும்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி

கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி

ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்

முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
மலரும் நினைவுகளாய்-கவி
மணம் வீசுமே மகிழம்பூவாய்

 

Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைத் தொடர்க் கவிதை 6, ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்

மணம் வீசுமே மகிழம்பூவாய் எனினும்
தினமொரு காலநிலை
தினமொரு சலிப்பு நிலை
இனம்புரியா ஏக்கங்கள்
சூளு(ழு)மிப் புலப்பெயர் வாழ்வில்
கனவொன்று கண்டேனடி சகியே
கனவொன்று கண்டேன்.
ஓவியங்கள் சுவரெங்கும் கண் சிமிட்ட
ஓர் கூடம் கலைக்கூடம்
பாரிலெங்கும் நான் பார்த்தறியா
பசுங்கம்பளம் மீதில்
ஆண்களும் சரிநிகர்த்த பெண்களும்
சமமாய்
மனமொத்த காதலெனின்
வாழ முடியுமெனும்
சாதிப்பேயழித்து
அல்லா யேசு சிவன் விஸ்ணு
மேலும் இன்னோரன்ன சின்னச்சிறு
செப்படிவித்தைக் கடவுளரும்
மதவெறியகற்றி
மூட நம்பிக்கைகளை
மூலையில் கொளுத்தி
வீற்றிருந்த நேரமதில்
தேவதையொத்த பெண் உருவொன்று
'இன்று முதல் இலங்கையில்
சோசலிஸ சமவாழ்வு மலரும்'என
வாழ்த்துச் சொன்ன
அந்தக் கனவிருக்கே
அதை இப்போ நினைத்தாலும்
இனம் புரியா ஏக்கங்கள்

Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

----------------------------------------------------------------------------

"மலரும் முகம் பார்க்கும் காலம்"

கவிதைத் தொடர் 7, திருமதி. பாமா இதயகுமார், வன்கூவர், கனடா

இனம் புரியாத ஏக்கம்
இறுதிவரை தொடருமா
கண்ணின் இமையான தாயவளை
பணிவிடைகள் செய்யாமல்
பாதி வழியில் விட்டு வந்தோம்
ஓடாய் உழைத்த தந்தைக்கு
கடைசிவரை கடமையே செய்யாமல்
பாசத்தை கொட்டி வளர்த்த பாட்டன் பாட்டிக்கு
பயணமே சொல்லாமல் ஓடி வந்தோம்
எங்கிருந்தோ என்னை மனைவியாக்கி
இறுதிவரை இணையான கணவனுக்கும்
முடிந்தவரை கடமையை செய்யும் பாக்கியம்
இல்லாமல் செய்யமால் போகும்படி
காலதேவன் இடையில் கதையை முடிப்பானோ
இல்லை தேடி வந்து தடுப்பானோ
தேடித் தேடி செய்தவர்களும்
பார்த்துப் பார்த்து செய்தவர்களும்
போலியாக கூட ஒரு நன்றி
சொல்லாமல் போன வருத்தம்
என்றும் வலியாய் இதயத்துக்கு
வலி இல்லாத வசந்தங்களை
வர வழி விடு தாயே

 
Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதைத் தொடர்
கவிதை:8 எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காதிலகம்,டென்மார்க்

வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்

தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்

தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்

மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவுகளாயுயரும்

தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.

 
Kandiah Murugathasan's photo.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு....:)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி

கவிதைத் தொடர்ச்சி 9 மாலினி மாலா,ஜேர்மனி

இனவழியறிவோடு
சிகரத்துக் கேகுவோம்
முகவரிகள் நாம் பதிக்க
முகமூடிகள் அகற்றிய
முழுமனித பாதைகளின்
முதல் வழியில்
தடம் பதிப்போம்.

கனவுகள் வரைந்த
காட்சிகளின் பாதைகளில்
உணர்வுகளை வழிநடத்தி
உள்ளங்களை வென்றெடுத்து
ஒன்றிணைந்த வேள்விகளால்
உயிர் கொடுத்தேனும்
உச்சங்கள் நாம் தொடுவோம் .

வாழ வந்த பூமியிலே
வாதங்களை வளர்த்து நிற்கும்
பேதங்களை களைந்து விட்டு
வந்து வாழ்ந்த காரணத்தை
சென்ற பின்னும்
சிறப்பில் வைக்கும்
சிகரங்களாய்
செதுக்கிச் செல்வோம்.

 
Kandiah Murugathasan's photo.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

 

 

 

கவிதைத் தொடர்ச்சி 10 கவிதையை எழுதியவர்: செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி

ஒவ்வொரு கனவும் மெய்யாகும்
இந்த விதைகள் உறங்கப் போவதில்லை
நோடி நேரம்கூட இவை
சாத்தியமற்றதாக இருக்கப் போவதில்லை

சூழ்நிலைகள் நமக்கு எதிராய் இருக்கையிலும்
சுழலும் சிந்தனையில் புது வழிகள் பிறந்திடட்டும்
தன்மேல் உள்ள நம்பிக்கையில் தானே
மலைகள்கூட இங்கு நகர்ந்திருக்கு

வலிதாண்டி விதி மாற்றும் விடியலுக்கு மட்டும்
வடிகட்டி திறமையை தேர்ந்தெடுக்க முடியும்
கற்களை மிதித்து மற்றவரை மதிப்பவர்க்கு மட்டும்
நிமிர்ந்து நின்று பணிவோடு வெற்றி ஏந்த முடியும்

மலரும் முகம் பார்க்கும் காலம்
சிதறுண்டு போகும் நம் வழித் தடைகள்
விழிவழியே இரசித்திடும் பரிணாமம்
இனி கையசைவிலே வசமாகும் காலம்

கீழே விழுகின்ற நொடிகள் யாவும்
மேலே காணும் இமயத்துக்காய் இருக்க வேண்டும்
இணைந்தே உலகில் சாதனைகளை செதுக்கிச் செல்வோம்
வரலாற்றின்; செதுக்கலில் நம் பெயர் நாளை செப்பப்படும்

 
Kandiah Murugathasan's photo.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------------------------------------------------

மலரும் முகம் பார்க்கும் காலம்
கவிதைத் தொடர் : 11 ஆக்கம்: நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே

வரலாற்றுச் செதுக்கலில் நாளை
வரமாய் எம்பெயர் செப்பப்படும் - மொழிக்கலப்பில்
குறளாறாய் தமிழ் குறுமாயின்
குவலயத்தில் பெயர் கருக்கப்படும்

மலரும் முகம் பார்க்கும் காலம் - வரலாற்றில்
புலரும் புதுத்தமிழ் என்று கூறும்
வரவு வைத்து ஓடும் ஆறே வரலாறு – தமிழில்
உறவு வைத்து ஓடுவதே எம் பேறு

பொதிகையிலே புதுமையுடன் பிறந்த மகள் - பூவுலகில்
பதிகையென தன்பாதம் பதித்த இவள்
அகத்தியன் கரம்பிடித்து கைவீசி ஒளிர்ந்த அகல் - அன்னிய மொழி
தரித்திரியன் தாழ்பணிய மறுத்திடுவாள் மங்கையிவள்

கங்கைமுதல் கடாரம் வரை வெற்றிவாகை சூடினாள்
இமயம்முதல் குமரிவரை முத்தமிழாய் ஆடினாள்
இதயமெங்கும் இன்னுயிராய் உணர்வுகளில் ஏறினாள் - புது
கமலமுகம் மலருமொரு காலமதைத் தேடுவாள்

சங்கம் வைத்து சாகரமாய் வளர்ந்தவளே
சங்காரம் சகயமென சமயமனம் சமைத்தவளே
ஓங்காரப் பொருளாய் „ஓம்' என்று ஒலித்தவளே – எதிரிமொழிகள்
அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே

 
Kandiah Murugathasan's photo.

 

 

 

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.

கவிதை 12 திருமதி. நர்மதா சஞ்சீபன், யாழ்ப்பாணம்,இலங்கை

மலரும் முகம் பார்க்கும் காலம்

அகங்காரம் அழித்து யாம் என வாழியவே பகைமொழியால்
அகஞ்சூழும் பகையணைத்து எழில் கொண்டு வாழியவே !
அரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே !
அந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே !

செருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்
மலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா ?
ஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்
உரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா !

குனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே !
பணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே !
கல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய
மொழிகட்கு அடிபணிதல்தான் முறையோ?

என் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்
என் தமிழ்க் கிழவியவளின்
மலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ ?
வாராமலே அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ?

 
Kandiah Murugathasan's photo.

 

 

 

„மலரும் முகம்பார்க்கும் காலம்'

கவிதை 13 டாக்டர் எழில்வேந்தன்

வாராமல் அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ
தீராமல் அவள் வடிக்கும் கண்ணீரும் ஓய்ந்திடுமோ
மீட்பன் எனஒருவன் வந்திடுவான் என்றெண்ணி
வாட்டம் மிகக்கொண்டு வடிவம் குலையாமல்
தொழுது கரங்குவித்து தோளின் வலி குன்றாமல்
அழுத உன் கண்ணீர் ஆவியாகும் படிக்கு
எழுந்து விழி உயர்த்து பாரெங்கும் பார் செந்தீக்
கொழுந்து பரவட்டும் கண்ணில், தமிழச்சி
மலரும் முகம்பார்க்கும் காலம் எதுவென்று
புலரும் பொழுதெல்லாம் ஆதவனைப் பார்த்திருந்தால்
கழுத்தின் சுளுக்கால் கடும் வலிதான் நேரும்
இழுத்து அரவணைப்பாய் இதயத்தின் அன்பால்
எல்லா தமிழரையும் புத்தொளியை நீபாய்ச்சி
பொல்லாத்தன மெல்லாம் பொசுக்கி உணர்வூட்டி
ஒத்திருக்கும் சிந்தையெல்லாம் ஒன்றிணைத்து ஓங்கவைப்பாய்
வித்தக வீரத்தில் முனைமழுங்காத் தமிழர்எலாம்
நித்திலமாய் புவிப்பரப்பில் இறைந்து கிடக்கின்றார்
எத்தரத்தோர் என்றாலும் இணைந்திடுவர்
சத்தியமாய் நம்தமிழர் வெற்றியென்று ஊதுசங்கே.

 
Kandiah Murugathasan's photo.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

„மலரும் முகம் பார்க்கும் காலம்'
கவிதை 14, எழுதியவர்: திரு.எஸ: தேவராஜா, ஜேர்மனி (திகதி: 18.09.2015)

மலரும் முகம் பார்க்கும் காலம்
மண்ணில் நம்வாழ்க்கை கோலம்
ஒளியை காணும் போதெல்லாம்
உள்ளம் தானே மலர்வாகும்

கருவைகொண்டு உலகைக்கண்டு
உறவைக்கண்ட வாழ்கை
உயிரைத்தந்து உலவவைத்து
மகிழ்வைக்கண்ட அன்னை-எம்
உயர்வைக்கண்டு மலரும் அவள் முகம்தானே

விழிகள் அழகைக்கானும்போது-புது
விந்தையாய் மனம் அலைமோதும்
விந்தையின்படைப்பாய் இறைவன் எமது
சிந்தையின் பதிவைவைத்தான் பாரும்

அலையை கரையில் அலைய வைத்து
கரையும் காதல் கொள்ள-மனிதன்
மொழியின் உரையினில் அர்த்தம் தவித்து
காதல் மொழியே கண்கள் பேச
கடவுள் தந்த விசித்திரமே
காதலர் கனவுகள் நனவுகள் ஆகும்போது - அவர்கள்
மலரும் முகம் பார்க்கும் காலம் மனம் மலரும்

 
Kandiah Murugathasan's photo.

 

 

 

 

கவிதை 15 திருமதி. ரதி மோகன், டென்மார்க்
மலரும் முகம் பார்க்கும் காலம்

மலரும் முகம் பார்க்கும் காலம்
மனம் மலரும் வசந்த காலம்
மாதங்கள் பத்து காத்திருக்கும்
மங்கையவளின் கனவுக்காலம்..

காதலுக்காய் அவன் தந்த
கனியொன்றின் விதையொன்று
துளிர்விட்டு மொட்டவிழ்ந்து
கனியாகும் இப் பேறு காலம்..

காத்திருந்து காத்திருந்து
பல வருடங்கள் கடந்த பின்பு
பட்டு வண்ண ரோஜா ஒன்று
இதழ்கள் விரிக்கும் வேளை..

வனப்பும் செழிப்பும் மதாளிப்புமாய்
வஞ்சியவள் உடலுக்குள் மாற்றம்
விஞ்சையர் பாவுக்குள் அடங்காத
விந்தையான உணர்வுக்கோலம்..

பஞ்சுப்பாதங்கள் மெல்ல அரும்பும்
பிஞ்சு விரல்கள் ரோஜாவாகும்
கஞ்சமின்றிய அழகான படைப்பு
வெஞ்சுடரான மகவின் வரவுக்காலம்..

குட்டிப்பாதங்கள் வயிற்றில் உதைக்க
கள்ளனவன் செய்திட்ட குறும்பெல்லாம்
கள்ளியிவள் நெஞ்சத்தில் அலைமோத
கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்

 
Kandiah Murugathasan's photo.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கவிதை 16 எழுதியவர்: இளைய அப்துல்லாஹ் (எம்என்எம்.அனஸ்,London)

மலரும் முகம் பார்க்கும் காலம்

கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்.
அது ரசனையின் காலம் பூக்களின் ஓவியத்தை நானாகவே
ரசிக்கத்தொடங்கினேன். ஒற்றை உணர்வு
எனக்கு மட்டுமே தோன்றிடும் ஒன்றா?

பரந்த கிளை மரம்போல அவள் படர்ந்த
பார்வை வாசம் நிறம் எல்லாமே தோன்றின.
எப்போதும் உணர்வுதானே எசமான்.
பிடிபடாத நீர்த்தோற்றத்தில் ஒரு கவிதை பிறந்தது.

அது அவளுக்கானதுதான் கருக்கல் பொழுதில்
வருகின்ற எல்லாம் அவளை ஒத்ததுதான்.
மலரும் முகம்பார்க்கும் காலம் அதுவேதானோ
வசந்த பொழுதில் அவளோடு கரம் பற்ற இன்னும் பிடிக்கிறது.

நான் சுமந்த நினைவுகள் ஊரும் திசை கோலாகலம்.
எங்களுர் வண்ணத்துப்பூச்சியை அவள் ஒத்திருந்தாள்.
ஒற்றை கார்த்திகை மலரை அவள் சூடியிருந்தாள்.
கண் மூடி தூங்கும் போதும் அவள் தருணங்கள் மேகமாய்...

இன்னும் எனக்கு புலப்படாத ஒன்று அவளின் மூக்குத்தியின் நிறம்.
தேன் சிட்டின் சிறகசைவில் உதிரும் பனித்துளியென
மகரந்தம் சேர்க்கும் பூ வனத்தின் தேவதை அவள்.
அவளுக்காய் காத்திருக்கிறது மனம்.

 
Kandiah Murugathasan's photo.
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் பதினேழாவது (17) கவிதையை எழுதியவர் மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த படைப்பாளி மருத்தவர் திரு. அகிலன் நடேசன் அவர்கள்.

அவரின் கவிதையையும் புகைப்படத்தையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அக நூலிலும் பதிவு செய்து மகிழ்வுடன் பெருமை கொள்கிறோம்.

அத்துடன் வழமையான இணையத்தளங்களில் இக்கவிதை பிரசுரமாகும். எமது வேண்டுகோளை ஏற்று கவிதைத் திட்டத்தில் பங்கு கொண்டு ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர் திரு. அகிலன் நடேசன் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கவிதை 17, மருத்துவர் திரு.அகிலன் நடேசன், மட்டக்களப்பு, இலங்கை

அவளுக்காக காத்திருக்கிறது மனம்
அவளின் வருகையை எண்ணி
அங்கலாய்த்து அங்கலாய்த்து
விண்ணை அணணார்ந்து பார்த்து அது
விம்மி அழுகிறது

திமிர்கொண்ட கார்மேகம்
திசைமாறிப்போனதென்று
கறையான் புற்றுக்குள் கதைகள் அடிபடுகின்றன

வெயில் கொட்டித்தீர்த்த வெப்பத்தழும்புகள்
இன்னும் ஆறாமல் அப்படியே இருக்கின்றன

புல்பூண்டு செடிகொடிகளெல்லாம்
மலரும் முகம் பார்க்கும் காலம் வருமென்றும்
கருவண்டு தேனுண்டு அம்மலரில்
கண்ணயர்ந்து உறங்குமென்றும்
கனவுகள் இன்னும் இருக்கின்றன

மழைத்தேவதை வருவாள் என்று
மயங்கி நிற்கும் மானங்கெட்ட உடம்பின் மீது
வெற்றுக்காத்தை ஊதி
வீராப்பு பேசுகிறது மேகம்

தீர்வுப்பொதிகளை காட்டி காட்டி தினந்தோறும்
எத்தி பிழைக்கிறது வானம்

 
Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையில் பதினெட்டாவது (18) கவிதையை எழுதியவர் இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் திரு. மதுரகன் செல்வராஜா அவர்கள். இவர் கொழும்பில் மருத்துவ ஆராய்ச்சி – ஆய்வுப் பிரிவில் பணி செய்து வருகிறார்.

இவரின் கவிதையையும் படத்தையும் இம்முகநூலிலும்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலிலும் மகிழ்வுடன் பிரசுரித்து பெருமை கொள்ளுகின்றோம்.

மருத்துவத்துறை எனும் உயிர் காக்கும் பணியைச் செய்து வரும் இவர் நேரமின்மைக்கு மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதைத் திட்டத்தில் பங்குகொண்டமைக்காக பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இவரின் கவிதை வழமையான இணையத்தளங்களில் இன்று 25.10.2015, அல்லது நாளைக்கு 26.10.2015 பிரசுரமாகும்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

எத்திப் பிழைக்கிறது வானம்
ஏதோ ஒரு நாள் வரப்போகும் மழை எண்ணி
பொத்தி மனதுள் பதுக்கும் புன்னகைகள் விரட்டியபடி
இன்னுமோர் தலைமுறையையும் இவ்வாறே
எத்தியே பிழைக்கிறது வானம்

வரண்டுபோய்ப் புழுதி சேர்ந்த வயல்களின் ஓரங்களில்
காய்ந்து போனதில் மீந்திருந்த கடைசி முட்புதர்கள்
எல்லா வளங்களும் இழந்து நின்ற நிலங்களுள்ளும்
என்றோ வரும் மழை எண்ணிப் புதைந்திருக்கும் மண்புழுக்கள்

விளக்குகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்காய்
விட்டில்கள் தேர்தல் நடத்தின..
பறந்து பறந்து கருகி வீழ்ந்து
விளக்கின் வீரியத்தை விளக்கின சில
இன்னும் பறப்பதற்காய் இளைய குஞ்சுகளை
தயார் செய்து கொண்டன பல

கருகும் தலைமுறைகள் விடுதலை ஆகும் நாளொன்றில்
என் மலரும் முகம் பார்க்கும் காலம் வரும் - அதுவரை
கனவுகளுடன் கதைகளுடன் புழுகுகளுடன்
பொய்யான புன்னகைகளுடன்
வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..

 
Kandiah Murugathasan's photo.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை 19 கவிதாயினி நிலா, புத்தளம்,இலங்கை

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் பத்தொன்பதாவது கவிதையை எழுதியவர் இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த கவிதாயினி நிலா அவர்கள்.

இவர் புத்தளத்திலிருந்து ஒலிபரப்பாகி வரும் வானொலியொன்றிலும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் கவிதையையும் படத்தையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அக முகநூலிலும் பதிவு செய்வதுடன்,வழமையான இணையத்தளங்களில் 04.11.2015 அன்று அல்லது 05.11.2015 வெளிவரும் என்பதை அறியத்தருகின்றோம்.
வானொலிப் பணிக்கு மத்தியிலும் எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதைத் திட்டத்தில் பங்கு கொண்ட அவருக்கு எமது பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..
காணாமல் போன எம் சந்தோசப் பொழுதுகளும்
தானாகச் சேர்ந்த உறவுகளின் பொய்மையும்
வேணாம் இந்த வாழ்வென்று விரட்டியே கொல்லுதிங்கு

தேனாக இனிக்கும் தெவிட்டாத அன்பொன்றைத் தேடி
தானாக தேடிவிழும் விட்டில் பூச்சிகளாய்
மானாக வாழும் பெண்ணினமும் காயமாகி
மீனாகத் துடித்து சாகும் வாழ்க்கை கொடிது

புலரும் பொழுதில் புல்லினத்தின் பனித் துளியாய்
வளரும் ஆசைகள் மனதோடு மடிந்திட
மலரும ;முகம் பார்க்கும் காலம் மலராதோ என்று
உளறும் வார்த்தைகள் ஊமையாகிப் போகிறது

உருகும் மனதுக்கு ஒத்தடமாய் எதுவுமில்லை
அருகிருந்து தோள்சாய அன்பாக எவருமில்லை
நகர்கின்ற காலங்கள் வல்லமையைத் தரவேண்டும்
வருகின்ற காலங்கள் நாம் சிரித்து வாழ்ந்திடவே

இளந்தென்றல் காற்றோடு கதை பேசும் மலராக
வளங் கொஞ்சும் மண வாழ்க்கை தரவேண்டும் சந்தோசம்
தளராத வாழ்வுக்காய் போராடும் பெண்ணினம்
வளர் பிறையாய் வாழ்ந்திடவே வரவேண்டும் பொற்காலம்..!

 
 
Kandiah Murugathasan's photo.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை:20

„மலரும் முகம் பார்க்கும் காலம்'கவிதையின் இருபதாவது (20) கவிதையை எழுதியவர் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவரும் தமிழ்முரசு இணையத்தள ஆசிரியரும் படைப்பாளியுமான திரு.செல்லையா பாஸ்கரன் அவர்கள்.

அவரின் கவிதையையும் புகைப்படத்தையும் இம்முகநூலிலும், தமிழ் எழுத்தாளர் இணைய அக முகநூலிலும் மகிழ்வுடனும் பெருமையுடனும் பதிவு செய்கின்றோம்.
 

.தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.

வளர்பிறையாய் வாழ்ந்திடவே
வரவேண்டும் பொற்காலம்
மனம் ஏங்கித் தவிக்கிறது
மஞ்சள் வெய்யிலும்
மாலைநேரக் குளிர்காற்றும்கூட
மனதிற்கு மகிழ்வைத் தரவில்லை
நீ வருவாய் என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது
சுவாசிக்கும் காற்றில்கூட
உன் வாசத்தின் வருடல்கள்
விடுமுறையை எண்ணிப்பார்க்கும்
பள்ளிச் சிறுவனைப்போல்
உன் வருகைக்கான நாளை
சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறேன்
கிறுக்கலில் ஜனித்த ஓவியமாய்
நிஜத்தின் விம்பமாய் தெரிகிறது
மலரும் முகம்பார்க்கும் காலம்
பிரிவுத் துயரின் வலிகூட – இப்போ
மனதில் மழையாய் பொழிகிறது.

 
Kandiah Murugathasan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்தியோராவது (21) கவிதையை எழுதியவர் டென்மார்க்கைச் சேர்ந்த படைப்பாளி இணுவையூர் திரு. சக்திதாசன் அவர்கள்.

இவர் விழுதல் என்பது எழுகையே என்ற நெடுந்தொடர் திட்டத்திலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

(மலரும் முகம் பார்க்கும் காலம்
கவிதை: 21 எழுதியவர்: திரு.இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்)

வீணாகிப் போகும் எம் வாழ்வும் சாவுமென்று
விலகி நடக்கையிலும் வீணர்களின் நடத்தையிலே
வீணாகிப் போகிறதெம் வாழ்வு
தேனான வாழ்வென்று திரவியமாய் - நாம்
தேடியவை யெல்லாம் திட்டு திட்டாய் விட்டு
வீணாகிப் போகிறதெம் வாழ்வு

குண்டு வெடி வானைத் துளைக்க
குருதி நெடில் நாசைத் துளைக்க
நின்ற விடத்தில் நின்று சிறகு முளைக்க
வங்க கடல் தாண்டி வாழ்வெடுக்க பறந்து
தங்க சுரங்கத்து சிற்பங்களாகி
அங்கம் வருந்திப் பெற்ற குழவிகாள்

பங்கமில்லாத் தமிழை மீட்டெடுத்து
மலரும் முகம் பார்க்கும் காலம் வரணும்

மூத்த மொழி - எம்தமிழ்
முகம் மலரும் முகநூலால் வியர்த்த கவி
மூத்தவரும் இளையவரும் கை கோர்க்க
முடி சூடும் நாள் பார்த்து
வெண் மேகம் தூவும் வெண் பனிக்குள்ளே
என் தேகம் புதை பேனா ? எடுப்பேனா ?

 
Kandiah Murugathasan's photo.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதை: 22
எழுதியவர்: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன்,கைதராபாத், இந்தியா

„மலரும் முகம் பார்க்கும் காலம்' கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா, கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.
இவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் புகைப்படத்தையும் கவிதையையும் இம்முகநூலிலும், தமிழ் எழுத்தாளர் முக நூலிலும் பதிவு செய்து மகிழ்வுடன் பெருமை கொள்கின்றோம்.
எமது வேண்டுகோளை ஏற்று இத்திட்டத்தில் பங்குகொண்டமைக்காக திருமதி.தேனம்மை லக்ஸ்மணணன் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா

நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா

தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.

பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.

திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்

 
Kandiah Murugathasan's photo.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

„மலரும் முகம் பார்க்கும் காலம்'

கவிதை: 23 எழுதியவர்: திருமதி.நிவேதா உதயராஜன், இலண்டன்

மலரும் முகம் பார்க்கும் கவிதையின் இருபத்துமூன்றாவது (23) கவிதையை எழுதியவர் இலண்டனைச் சேர்ந்த படைப்பாளி திருமதி.நிவேதா உதயராயன் அவர்கள்.

இவரின் கவிதையையும் படத்தினையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலிலும் மகிழ்வுடன் பிரசுரித்து பெருமை கொள்கிறோம்.

அத்துடன் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற நெடுந்தொடரிலும் பங்குபற்றியிருந்தார் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இவரது கவிதை வழமையான இ.ணையத்தளங்களில் இன்று அல்லது நாளை பிரசுரிக்கப்படும் என்பதுடன், இக்கவிதை முன்னெடுப்பில் பங்குபற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகி
கனவுகள் கவிதையாகி ஒளிருமென
கண் வளரும் நேரமெல்லாம்
கற்பனையில் கண்டு நின்றோம்

கானல் நீரை கடல் நீராய் நம்பி
காததூரம் நாம் நடந்து வந்தும்
கண்ணில் படவவே இல்லை
காத்திருப்புக்களின் கொள்வனவு

கூடிக் கொண்டாடி மகிழ்ந்திருக்க
காலத்தின் கோல நிகழ்வுகளும்
கறைபிடித்து களையிழந்து போன
கட்டடத்தின் எச்சங்களும் மட்டுமாக
கனவுகள் கலைந்த தேசத்தின்
காற்றாகிப் போன எம் கற்பனைகளும்
கடற் கோளாகிக் கலைத்துப் போனது

கலைந்துபோய் கிடக்கிறோம் நாம்
கட்டிழந்து களையிழந்து காவலற்று
கண்மலரும் முகம் பார்கும் காலம்
கண்டிப்பாய் எம் முன்னே நீளும்
கவலைகள் காற்றாகிப் போகும்
காவிய நாயகர்கள் தேசம் மீண்டும்
கண்முன்னே துயர் துடைத்து மீளும்

 
 

12289574_10204250991508546_4293710330468400273_n.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் 24 வது கவிதையை
எழுதியவர் திரு. வெற்றிவேலு வேலழகன்
-பண்ணாகம் -யேர்மனி இவர் சிறந்த கவிதைகளை பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.

இவரின் கவிதையையும் படத்தினையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலிலும் மகிழ்வுடன் பிரசுரித்து பெருமை கொள்கிறோம்.
இவரது கவிதை வழமையான இ.ணையத்தளங்களில் இன்று அல்லது நாளை பிரசுரிக்கப்படும் என்பதுடன், இக்கவிதை முன்னெடுப்பில் பங்குபற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும்.

உலக வல்லரசுகளே!
விண்வெளிக்கு சென்றவர்களே!!
விஞ்ஞான மேதைகளே!
குளாயில் குழந்தை உண்டாக்கியோரே!!
மெஞ்ஞானம் போதிப்போரே!
அணுவை ஆய்வு செய்வோரே!!
கணணிக் கனவான்களே!
உலக மயமாக்கலின் உத்தமர்களே!!
தரவரிசைப் பணக்காரர்களே!!!
இருபத்தியோராம் நூற்றாண்டில்
இது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா?
என் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே
ஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்
விதைகளற்ற வெள்ளரியையும்,
கத்தரியையும் விற்றுப் பிளைக்கும்
விலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே!
கொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை!
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும் என்ற
நம்பிக்கை சாகாதவனின் ஏக்கம்.

வெ. வேலழகன் பண்ணாகம்.

 
Krishnamoorthy Kandasamy's photo.

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின; இருபத்தைந்தாவது (25) கவிதையை எழுதியவர் யேர்மனியைச் சேர்ந்த படைப்பாளி திருமதி. மீரா குகன் அவர்கள்.

இவரின் படைப்புக்கள் தமிழக சஞ்சிகைகளான இலெமூரியா - நந்தவனம் கனடா விலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் இலங்கைப் பத்திரிகையான தினமுரசு யேர்மனியிலிருந்து வெளிவரும் வெற்றிமணிப் பத்திரிகை மண் சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மண் சஞ்சிகை நடத்திய 25வது ஆண்டு விழாவில் சிறுவர் கதைக்கான இரண்டாவது பரிசையும் இவரரல் எழுதப்படட கதை பெற்றிருக்கினறது.

இவர் கவியரங்ககளில் பங்குபற்றி வருவதுடன் இவரது ஆக்கங்கள் தமிழிதல் ஐபிசி ரிரிஎன் காட;சி ஊடகங்களில் ஒலி-ஒளிபரப்பப்பட்டன.
எமது வேண்டுகோளை ஏற்று கவிதைத் திட்டத்தில் பங்குபற்றிய திருமதி.மீரா குகன் அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர் இணைய அகம் பணிவன்பான வணக்கத்தையும் நன்றியைச் செலுத்துவதுடன் இம்முகநு}லிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அக முகநு}லிலும் பதிவு செய்து பெருமை கொள்கின்றது.

வழமையான இணையத்தளங்களில் இன்ற அல்லது நாளை இவரின் இக்கவிதை வெளிவரும்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

மலரும் முகம் பார்க்கும் காலம்

கண் முன்னே துயர்துடைத்து மீளும்
கருத்தை கருவிலே செதுக்கி வந்தாலும்
காத்திருந்த கணநேரத்தில் காவு கொண்ட
களத்தில் பல இன்னுயிர் பலி கொடுத்தும்

கொண்ட கொள்கையை இன்று
கொண்டாட நேரமின்றி காற்றில் பறக்க
கோணல் வழிப் பாதையில்
கொக்கரிக்கும் வீண் மானிடமே

சொந்தங்கள் தனை விலக்கி
சோதனைகள் எனும் மாயையில்
சோகம் எனும் திரைமறைவில்
சோபிக்கவும் மறந்த நிலையில்

சுயநல போர்வையில் சுற்றத்தை மறந்து
சுயம் தனை வாழ்வோட்டத்தில் இழந்து
சுகங்கள் ஒன்றே இன்று குறியாக
சுதந்திரத்தை நாமே பறிகொடுத்த பின்னும்

மாயை அகலும் இறுதி நேரம் வந்தாலும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
மகத்துவம் அறிந்த அந்த ஒரு கணம்
மடிந்தவர் மடிந்தும் வாழ்வர் என்றென்றும்

 
Kandiah Murugathasan's photo.
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்தாறாவது கவிதையை எழுதியவர் ஜேர்மனியைச் சேர்ந்து படைப்பாளி திரு.ஏலையா க.முருகதாசன்

'மலரும் முகம் பார்க்கும் காலம்'
கவிதை:26 எழுதியவர்: ஏலையா க.முருகதாசன்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

மடிநதவர் மடிந்தும் வாழ்வர் என்றென்றும்
மரபணுக்கள் தொடர்தலில் வாழையடி வாழையென
உயிர்ப்பிறப்புக்கள் ஆண் பெண் உயிரணுக்கள் உறவினில்
கருவென உருவெடுக்கையில் உருக்கொடுத்த அன்னை தந்தை
மகிழ்ந்துமனம் குதூகலித்தவர்கள் மகிழ்ந்திடுவர்
நாட்களை எண்ணி காத்திருக்கையில் உதிரம் தோயந்தொரு சிசு
அன்னை உதரம் விட்டேகி பூமியதனை நோக்கி வருiகையில்
இவ்வுலகு மகிழ்வெல்லாம் எமக்கே என பெற்றவர்கள் காற்றில் மிதக்க
சிசு குழந்தையாகி தவழ்ந்து விழுத்தெழும்பி நடக்கையில்
இதுவெல்லோ மலரும் முகம் பார்க்கும் காலம் என சிலிப்பர்
பலபருவம் தாண்டி உணர்வுகள் வேதியல் மாற்றம்கொள்
உணர்ச்சிகள் தேங்கியே விம்மியெழும் உடல் வளர்ச்சி
கண்டு தந்தை தாய் பூரிப்பர் கல்வியில் மேல் நிலை
சமூகத்தில் தன்பிள்ளை போற்றப்படுகையிலும் ஆனந்தம் கொள்வர்
வளர்ந்த பிள்ளை தன்னிலை உணர்ந்தே தனக்கொரு வாழ்வுக்காய்;
உணர்கையில் பிள்ளைகளின் உள உடல் தேவைக்காய்
திருமண பந்தம் தேவையெனத் தேடியே துணை தேடிக் கொடுக்கையில்
திருமணம் கண்டு தொடரும் தொடுகையிலும் உயிரணுக்களின்
உறவினில் உருவாகும் கருவொனறு உதரத்தில் தங்கிடுகையில்
தொடர்ந்திடுமே பிறப்பு தொடராகி தொடர்கதையாய்

 

1982172_1399034230360882_1011978937_n.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.