Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு

Featured Replies

இவனம் பிரிட்டன்காரனும் மோசமான வேச்க்காரர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா என்றைக்குமே எமது விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கபோவதில்லை.. நாம் அவர்களை கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையும் இல்லை.. கியூபா இன்றுவரைக்கும் அமெரிக்காவை எதிர்த்து வாழவில்லையா? நாமும் அதே போல் வாழலாம்..

அமெரிக்கா வேண்டும் என்றால் மற்றய நாடுகளுக்கு கொம்பாக இருக்கலாம்.. ஆனால் தமிழீழத்திற்கு அல்ல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா தவறு என உணர்ந்த கொண்டது மிகவும் மகிழ்ச்சியான விசயம்

அமெரிக்கா தவறு என்று இன்னும் உணரவில்லை. அமெரிக்கா நிதிமன்றத்தின் தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா அரசாங்கம் மேல்முறையீடு செய்தாலும் செய்யலாம்

வந்துட்டுதடா குகைக்குள்ளால் எட்டப்பவாதம் கர்ச்சனை செய்து கொண்டு.

ஒட்டுமொத்தமாக அவர்களின் சட்டமே நீதி தேவதையால் தான் பரிபாலனம் செய்யப்படுகிறது, கீழ்நிலைப் பரிபாலனத்தின் சிறியதவறுக்கு பொழிப்புரை வழங்கவந்துட்டுது துரோகத்தனங்களுக்கு வெள்ளை அடிக்கும் பிழைப்பு ஒன்று.

அமெரிக்கா என்றைக்குமே எமது விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கபோவதில்லை.. நாம் அவர்களை கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையும் இல்லை.. கியூபா இன்றுவரைக்கும் அமெரிக்காவை எதிர்த்து வாழவில்லையா? நாமும் அதே போல் வாழலாம்..

அமெரிக்கா வேண்டும் என்றால் மற்றய நாடுகளுக்கு கொம்பாக இருக்கலாம்.. ஆனால் தமிழீழத்திற்கு அல்ல..

அவர்களின் நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு சிறிய அளவில் பிரசாரப் பயன்பாடு இருக்கலாம். 300 தொடக்கம் 350 ஆண்டுகளுக்கு முதல் செவ்விந்தியர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த வியாபாரிகளினதும் தங்கம் தேடிப்போன பேராசைகரரர்களின் தேசந்தான் அமெரிக்கா. அந்த செவ்விந்திய தேசத்தின் இன்றைய தேசிய மொழி ஆங்கிலம். அவர்களால் எழுதப்பட்ட சட்டங்கள் ஆக்கிமிப்பையே கொண்டிருக்கும். சில நீதிபதிகள் சட்டங்களை மீறி தீர்ப்பு வழங்குவதுண்டு அல்லது அதன் ஓட்டைகளை கண்டுபிடித்து தீர்பளிப்பார்கள்.

தேவன் நீங்கள் எதற்காக இப்படி எழுதினீர்கள். காரணத்தை தெளிவாக கூற முடியுமா??

கிசானின் கருத்தில் முற்றும் முழுதாக உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகன் வணக்கம்

நான் thamilmahan இன் பொழிப்பிற்க்குத்தான் பதில் எழுதினேன். ஏன் எனில் அவர் தன் உள்நோக்கத்துக்கு மிகவும் விசுவாசமாகத்தான் கருத்தைக் கற்ப்பிதம் செய்வார் அதையிட்டே பதிலளித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் வெறுப்பு, கோபம் இருந்தாலும், எந்தவொரு நாட்டையும், எமக்குச் சார்பாக மாற்றுவதில், அல்லது மாறும்படி அழுத்ததைக் கொடுப்பதில் தான் வெற்றியே இருக்கின்றது.

கந்தப்பு சொல்வது போல அமெரிக்கா மேல்முறையீடு செய்யுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் கருத்துக் கூறுவதில் இருந்து தவிர்ததுக் கொள்ள முனையும். ஏன் என்றால் இத் தீர்ப்பு மற்றய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு எவ்வித தூண்டுகோலையும் தரக் கூடாது என்றே நினைக்கும்.

மேல்முறையீடு செய்யா விட்டால் அடுத்த முறைத் தடைப்பட்டியலில் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் தான், என்ன செய்தது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டுதடா குகைக்குள்ளால் எட்டப்பவாதம் கர்ச்சனை செய்து கொண்டு.

ஒட்டுமொத்தமாக அவர்களின் சட்டமே நீதி தேவதையால் தான் பரிபாலனம் செய்யப்படுகிறது, கீழ்நிலைப் பரிபாலனத்தின் சிறியதவறுக்கு பொழிப்புரை வழங்கவந்துட்டுது துரோகத்தனங்களுக்கு வெள்ளை அடிக்கும் பிழைப்பு ஒன்று.

±§¾¡ ±ÉìÌò¦¾Ã¢ïº¨¾ ¿¡ý ¦º¡ýÉý. «ôÀ ¿£í¸û ¯í¸ÙìÌ ¦¾Ã¢ïº¨¾ ¦º¡øÖí§¸¡Åý §¸ôÀõ. ±Ð Чá¸õ ±Ð §¾ºÀì¾¢ ´ñÎõ Å¢Çí§¸ø¨Ä..¦¸¡ïºõ Å¢ÇôÀÁ¡ ¦º¡ýÉ¡ø ¿øÄ¡ þÕìÌõ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதில் வெறுப்பு, கோபம் இருந்தாலும், எந்தவொரு நாட்டையும், எமக்குச் சார்பாக மாற்றுவதில், அல்லது மாறும்படி அழுத்ததைக் கொடுப்பதில் தான் வெற்றியே இருக்கின்றது.

கந்தப்பு சொல்வது போல அமெரிக்கா மேல்முறையீடு செய்யுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் கருத்துக் கூறுவதில் இருந்து தவிர்ததுக் கொள்ள முனையும். ஏன் என்றால் இத் தீர்ப்பு மற்றய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு எவ்வித தூண்டுகோலையும் தரக் கூடாது என்றே நினைக்கும்.

மேல்முறையீடு செய்யா விட்டால் அடுத்த முறைத் தடைப்பட்டியலில் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் தான், என்ன செய்தது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

¨¾ À¢È󾡸 ÅÆ¢À¢ÈìÌõ. ±¾¢÷ÅÕõ ºÉÅâӾø Ò‰„¢üÌ ±¾¢Ã¡É ¸ðº¢ ¬ðº¢Â¢ø «ÁÕ¸¢ÈÐ. «ó¾ì¸ðº¢Â¢ø ±ÉìÌò ¦¾Ã¢ó¾Å¨Ã ¼É¢ §¸ §¼Å¢Š ¯ðÀ¼ ̨Èó¾Ð ãýÚ ºð¼Å¡Ç÷¸û ±ÁìÌ÷À¡ÉÅ÷¸û þÕ츢ȡ÷¸û. Ò‰„¢ý ¦¸¡ð¼¦ÁøÄ¡õ «¼íÌõ ¿¡û ¦ÅÌàÃò¾¢Ä¢ø¨Ä.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத அமைப்புகள் மீதான தடைக்கு எதிரான வழக்கு புஷ்ஷின் வியூகங்களை கேள்விக்குறியாக்கியுள்ள நீதிமன்றத் தீர்ப்பு

-அ.ரஜீவன்-

அமெரிக்க தேசப்பற்று சட்ட மூலத்தினை பயன்படுத்தி புஷ் நிர்வாகம் சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புகளையும் தனி நபர்களையும் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததையும் சொத்துகளை முடக்கியதையும் பிராந்திய நீதிமன்றமொன்று கடந்த வாரம் அரசியலமைப்பிற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது.

செப்டெம்பர் 11 இற்கும் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நடைமுறைப்படுத்தி வந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தி வருகின்றன.

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தின் போது சொத்துகளை முடக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்தி வந்த சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பிரச்சினைக்குரியதாகவே காணப்பட்டது.

1980, 1990 களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான தீர்ப்பு வழங்கப்படாமலோ அல்லது முறையான குற்றச் சாட்டுகள் எதனையும் சுமத்தாமலே சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என்ற நிலை காணப்பட்டது.

குறிப்பிட்ட சொத்து குற்றச் செயலொன்றிற்கு துணை போனது எனக் காரணம் காட்டி அதனைப் பறிமுதல் செய்யலாம்.

அதன் உரிமையாளர் பின்னர் தனது சொத்துகள் குற்றச் செயலுக்குப் பயன்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

மேலும் சொத்துகளை அதனைக் கைப்பற்றிய பொலிஸாரே தம் வசம் வைத்திருக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. இது போதைப் பொருள் வியாபாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மறைமுக தொடர்புகள் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

எனினும் 2000 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஓரளவு சாதகமானவையாகக் காணப்பட்டன.

அரசாங்கம் சொத்துகளைக் கைப்பற்றும் பட்சத்தில் அதற்கான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டது.

மேலும் சொத்துகளின் உரிமையாளர் தன்னை நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் கீழே சொத்துகளை முடக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுகள் இதிலிருந்து மாறுபட்டவையாக காணப்பட்டன.

ஜனாதிபதிக்கான அவசர அதிகாரங்களின் கீழ் சொத்துகளை முடக்குவதற்காக கொண்டு வரப்பட்டதே சர்வதேச அவசர பொருளாதார சட்டம் IEEPA (International Emergency Economic Powers Act) IEEPA செப்டெம்பர் 11 இற்கும் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் IEEPA இன் கீழ் தனக்கு தரப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி உத்தரவொன்றை பிறப்பித்தார் (Executive Order 13224)

இது குறிப்பிட்ட தனி நபர்களினதும், அமைப்புகளினதும் சொத்துகளை முடக்குவதற்கு அதிகாரத்தை வழங்கியது. இந்த அமைப்புகளே பின்னர் பயங்கரவாத பட்டியலில் விசேடமாக இணைக்கப்பட்டன.

மேலும் இதன் மூலம் வெளிவிவகார அமைச்சரிற்கும், நிதியமைச்சருக்கும், சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மேலும் அமைப்புகளை சேர்ப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

இதன்படி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயமுள்ளது எனக் காரணம் காட்டியோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புடன் தனி நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறியோ தனி நபர்களையும் அமைப்புகளையும் புதிதாக பட்டியலில் சேர்க்கலாம்.

ஒக்டோபர் 26 - 2001 இல் அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த(U.S.A Patriot ACT) சட்ட மூலம் IEEPA யிற்கு மேலும் பல பிரிவுகளை சேர்த்து இதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகளினதும் அவர்களுக்கு உதவும் தனி நபர்களினதும் சொத்துகளையும் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயையும் கைப்பற்றுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டுக் சொத்து கட்டுப் பாட்டு அலுவலகமே இந்தப் பட்டியலை வைத்திருக்கும், இந்த அமைப்பே சொத்துகளை முடக்குவது குறித்துத் தீர்மானிக்கும்.

எனினும், பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பது குறித்து தீர்மானங்களை ஜனாதிபதியோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ, திறைசேரியோ சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம்.

ஜோர்ஜ் டவுன் பேராசிரியர் ஒருவர் தேசப்பற்று சட்டம் வெறுமனே உலகத்தின் அடிப்படையிலேயே ஒருவரின் சொத்துகளை முடக்குவதற்கு வழி வகுக்கின்றது என சுட்டிக் காட்டுகின்றார்.

பயங்கரவாத பட்டியலில் அந்த அமைப்புகளை சேர்த்தமை சரியானது என்றாலோ அல்லது அவர்களுக்குத் தம்மை நிரூபிப்பதற்கான நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டாலோ பிரச்சினைகள் எழாது.

எனினும் பயங்கரவாத அமைப்புகள் என்ற முத்திரையே பிழையானது. மேலும் அவர்களுக்கு தம்மை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எதுவும் வழங்கப்படவில்லை.

வெறுமனே விசாரணைகளை அடிப்படையாக வைத்தும், தனி நபர் விருப்புகளை அடிப்படையாக வைத்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் தீர்மானிக்கப்படுகின்றது.

தனி நபரை அல்லது அமைப்பினை பட்டியலில் சேர்ப்பது என தீர்மானித்த பின்னர் சொத்துகளை எவ்வித நீதிமன்ற விசாரணையும் இன்றி முடக்கலாம்.

2002 இல் பிரதி திறைசேரி அமைச்சர் கெனத் டபிள்யூ டாப் பயங்கரவாதிகளையும், அவர்களது நிதி வழங்குபவர்களையும் பின் தொடரவும், பட்டியலில் சேர்க்கவும், சொத்துகளை முடக்குமாறு உத்தரவிடவும் ஜனாதிபதியின் அவசர உத்தரவொன்று மாத்திரம் போதுமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்ட அமைப்பு நீதிமன்றம் செல்ல முடியுமா? தனக்காக வாதிட முடியுமா? ஆம் எனச் சொல்லப்பட்டாலும், இந்த நடைமுறை என்பது நேர்மையற்றதாக காணப்படுகின்றது.

இரகசிய ஆவணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அமைப்புகளுக்கு முழுமையான விபரங்களைப் பார்வையிடுவதற்காக உரிமை மறுக்கப்படுகின்றது.

மேலும் நிர்வாகத்தின் ஆதாரங்களைப் பயன்படுத்தியே குறிப்பிட்ட அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்றால் நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இதன் காரணமாக உண்மையில் பயங்கரவாத பட்டியலை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.அரசாங்கம் தன்னிடமுள்ள இரகசிய ஆதாரங்களை பயன்படுத்தி தடை செய்யப்பட்டமை. சரியானது என வாதிடலாம். எனினும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் அந்த ஆவணத்தைப் பார்வையிட முடியாது. இதனடிப்படையிலேயே அமெரிக்காவின் முக்கிய முஸ்லிம் தர்மஸ்தாபனங்களின் சொத்துகளை திறைசேரி முடக்கியது.

செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் பல முஸ்லிம் தர்மஸ்தாபனங்கள் முடக்கப்பட்டன.

அமெரிக்க அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்ட தர்மஸ்தாபனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன.

மார்ச் 2006 இல் `வாஷிங்டன் போஸ்டில்' எழுதிய கட்டுரையொன்றும் கைன்டா யு.எஸ்.ஏ. எனும் அமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ளவர்களுக்கு உதவுவது எமது மதக் கடமை என்ற அடிப்படையிலும் அமெரிக்கர்களுக்கான உரிமை என்ற அடிப்படையிலும் நாங்கள் புதிய அமைப்பொன்றை உருவாக்கினோம். 2002 இல் இதனை உருவாக்கிய பின்னர் அரசாங்கத்தின் துன்புறுத்தலுக்கு உட்பட்டோர் பாலஸ்தீன குழந்தைகளுக்காக அனுதாபப்பட்டதும் எமது பிழை" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு பாரிய தர்மஸ்தானங்களை மூடியதால் மனிதாபிமான உதவிகள் அவசரமாக தேவைப்படுபவர்களுக்கு அவை சென்று சேர முடியாத நிலையும் காணப்பட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே அரசியலமைப்பு உரிமைகளுக்கான நிலையம் (Centre For Constitutional Rights) சர்வதேச அவசர பொருளாதார சட்டத்தின் (IEEPA) சில பிரிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

நியூயோர்க்கைச் சேர்ந்த இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்புகள் என பட்டியலிடப்பட்ட அமைப்புகளுக்கு பொருட்கள் சேவைகளை வழங்குவது குற்றச் செயல் என குறிப்பிடப்படும் பிரிவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.

சி.சி.ஆர்.என்பது பல மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கியது. இதில் அமெரிக்க தமிழ் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

2005 ஜனவரியில் அமெரிக்க பிராந்திய நீதிமன்றமொன்று அமெரிக்க தேசப்பற்று சட்டத்தின் மூன்று முக்கிய பிரிவுகளை அமுல்படுத்துவதைத் தடை செய்தது.

குர்திஸ் விடுதலை இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் மூன்று வகையான ஆதரவுகளை வழங்குவதை குற்றமாக்குவதை நீதிமன்றம் இரத்து செய்திருந்தது.

பயிற்சி, நிபுணத்தவ ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குவதை குற்றமாக்குவதையே நீதிமன்றம் தடை செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சி.சி.ஆர். இன்னுமொரு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

ஐ.ஈ.ஈ.பி.ஏ.யின் கீழ் பொருள் உதவி வழங்குவதை தடை செய்யப்பட்டிருப்பதற்கு எதிராகவே இந்த வழக்கை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாகவே கடந்த வாரம் தீர்ப்பு வெளியாகியிருந்தது.

இதன் படி அமெரிக்க பிராந்திய நீதிமன்ற நீதிபதிக்கு அவட்சே கொலின்ஸ் குறிப்பிட்ட தேசப்பற்று சட்ட மூலத்தின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்துள்ளன.

தனி நபர்களையோ அல்லது அமைப்புகளையோ விசேட பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் போதாது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக திறைசேரிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறித்து அது கேள்வி எழுப்பியுள்ளது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.