Jump to content

யூடியூப் பகிர்வு


Recommended Posts

யூடியூப் பகிர்வு: உண்மைய சொல்லணும்னா- நலன் குமாரசாமி குறும்படம்

 
short_2295133h.jpg
 

ஒரு படம் எடுக்கறதுன்னா ஏதோ எழுதன ஸ்கிரிப்டுக்க்காக கிடைக்கற எட்டுகோடி பம்பர் பரிசுன்னு நெனைக்கறாங்க சில பேரு. எடுத்துப் பாத்தாதானே தெரியும் என்ன வந்திருக்குன்னு... என்னவா வந்திருக்குன்னு...

தியேட்டர்லயோ, திருட்டு டிவிடிலயோ கண்ணுமுழிச்சி படங்களைப் பாத்துட்டா டைரக்டர் ஆயிடமுடியுமா? அதுக்குன்னு கண்ணுமுழி பிதுங்கற அளவுக்கு டெடிகேஷன் வேணும்னுல.

எப்படிவேணும்னாலும் படம் எடுக்கலாம் யார் வேணும்னா படம் எடுக்கலாம். வாங்கனவன் பாடு, பாக்கறவன் பாடுதானேன்னுதானே சிலர் அள்ளித்தெளிச்சி கோலம்போட்டுட்டு போய்கிட்டே இருக்காங்க.

கதை, பட்ஜெட், ஹீரோ, ஹீரோயின், காமெடி, சோகம் நடிப்பு நடிகருங்க.... கதைக்கான காட்சிகள், ஓப்பனிங் கிளைமாக்ஸ்னு எத்தனை ஆயிரம் ஜல்லிக்கட்டு தெரியுமா இதுல. எல்லாக் காளைகளையும் அடக்கினாத்தான் இங்கே ஜெயிச்சதா அர்த்தம்.

'உண்மைய சொல்லணும்னா' குறும்படத்துல ஜெயிக்கறதுக்கான அந்த ஆயிரம் விஷயத்தை அஞ்சாறு காட்சியில அலுக்காம சொல்றாரு படத்தோட இயக்குநர் நலன்குமாரசாமி.

டைரக்‌ஷனுக்கு என்ன சிலபஸா இருக்கு படிச்சிட்டு வந்து பாஸ் பண்ண? அப்படின்னு கேட்டாலும், ஒரு படத்தை நல்லா எடுக்கறது எப்படிங்கறதைவிட சொதப்பலா ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாதுன்னு சொல்லி சும்மா விளாசித் தள்ளியிருக்கார்.

கருணாகரன் உள்ளிட்ட கதை நாயகர்கள் பங்கேற்ற இந்தக் குறும்படத்தை நீங்களே பாருங்களேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உண்மைய-சொல்லணும்னா-நலன்-குமாரசாமி-குறும்படம்/article6839224.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • Replies 158
  • Created
  • Last Reply

வீடியோ பகிர்வு: 'பெருமித' பலாத்காரருக்கு நேர்ந்தது என்ன?

 
rape1_2315456h.jpg
 

பள்ளி மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குச் சிக்கவைத்து அவர்களது இளமையை சிதைத்து சின்னாபின்னமாக்கும் இந்தப் பாலியல் பலாத்காரருக்கு, அப்பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சூறையாடியது குறித்த எந்தக் கவலையும் இல்லை.

தனியே வரும் இளம்பெண்ணிடம் தன் முழுபலத்தைக் காட்டுவதுதான் இவருக்கு முழுநேர ஒரு பொழுதுபோக்கு. என்றாலும் பொதுமக்களிடம் அடிவாங்கி இப்போது அவர் வந்து விழுந்துகிடக்கும் இடம் அரசு மருத்துவமனை. அங்கு வந்தும்கூட சிகிச்சை செய்ய வந்த பெண் மருத்துவரிடம் ஆணவமான பேச்சு... அகங்காரமான வாக்குவாதம்.

"படிக்கற பொண்ணுங்க பழகுற ஆணுங்ககிட்ட எப்படி நடந்துகிட்டாலும் யாரும் கேட்கறதில்லை. எங்கள மாதிரி ஆளுங்க அவங்க மேலே ஆசைப்பட்டாத்தான் பிரச்சனைய பெரிசாக்குது இந்தச் சமூகம்... அதெப்படி எங்களைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுப்பாங்க? அதுக்கப்பறம் அந்த பொண்ணை யார் கட்டிக்குவாங்க..." என்று நக்கலடிக்கும் இவர் கூறுவது, தங்கள் கலாச்சார காரணங்களுக்காக

வருத்தப்பட வேண்டியது பெண்கள்தானாம். நகரத்தை சுற்றி வருவது, அரைகுறையாய் ஆடை அணிவது என்று ஏடாகூடமான சப்பைக்கட்டுகள்.

ஏன் இப்படியெல்லாம் செய்யறீங்க என பெண் மருத்துவர் கேட்கும்போது, "வந்த வேலைய பாத்துட்டு போய்ட்டே இரு'', "நான் அப்படித்தான் செய்வேன்", "என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது, நான் யார் தெரியுமா? என் பலம் என்ன தெரியுமா?", "நீ கூட தனியா வந்துபாரேன்... நான் யாருன்னு காட்டறேன்" என்றெல்லாம் அவர் திமிரானப் பேச்சுகள் எகிறத்தான் செய்கிறது.

அதற்கு, சிரித்துக்கொண்டே அந்தப் பெண் மருத்துவர் சொல்கிறார்... "கொஞ்சம் அந்த போர்வை விலக்கிட்டு கீழே குனிஞ்சு பார்."

அவர் கையைவிட்டுப் பார்க்கிறார்... திடீரென்று அவருக்கு ஆணவம் அகங்காரம் திமிரெல்லாம் திமிறிக்கொண்டு போகிறது.

அப்படி என்னதான் நேர்ந்தது அந்த 'பெருமித' பலாத்காரருக்கு?

இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்... எண்ணி இரண்டே இரண்டு பாத்திரங்களை வைத்து இயக்குநர், தலைவிரித்தாடும் சமூகப் பிரச்சனையொன்றை அலசிப் பிழிந்து காயப்போட்டது தெரியும்!

http://tamil.thehindu.com/opinion/blogs/வீடியோ-பகிர்வு-பெருமித-பலாத்காரருக்கு-நேர்ந்தது-என்ன/article6912438.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடுங்கிட்டாங்களே

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: நான் ரசித்த முதல் அழுகை!

 
 
kid_2034661h.jpg
 

அழுகையை ரசிப்பது சாடிஸம் என்று உளவியலில் சொல்லக் கூடும். ஆனால், அவள் அழுகை என்னை ரசிக்கவைத்தது. அத்தகைய அழுகையை ரசித்தல் சாடிஸம் அல்ல... அது ஒரு அன்பின் வெளிப்பாடு என்பதை உணர்ந்த தருணம் அது. | வீடியோ கீழே |

உனக்கு தம்பி வேண்டுமா? தங்கை வேண்டுமா? - இரண்டாவது குழந்தையை சுமக்கும் தாய் கேட்கும்போதே அந்தக் குழந்தை மீதான எதிர்பார்ப்பும், ஆசையும் முதல் குழந்தை மனதில் விதைக்கப்பட்டுவிடுகிறது.

காத்திருப்பு, அந்தக் குழந்தை மீதான பாசப் பிணைப்பிற்கு உரு போட்டுவிடுகிறது. காத்திருப்புக்குப் பின், கண் முன் பச்சிளங் குழந்தை கை, கால் அசைக்க ஆர்வம் கூடுகிறது. அது அழகாய் சிரிக்க, தனக்கே தனக்கான 'என் தம்பி பாப்பா', 'என் தங்கச்சி பாப்பா' என்ற பற்று வந்துவிடுகிறது.

இப்படித்தான் தன் தம்பி பாப்பா மீது அதீத பற்று கொண்ட மழலை, அதன் உணர்வுகளை ஆழமாக, அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறாள் இந்த வீடியோ பதிவில்.

அழுகை ஒலியுடன் துவங்குகிறது வீடியோ. ஏன் அழுகிறாள் அந்த அழகு பாப்பா என தெரியுமா? தன் தம்பி கைக்குழந்தையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக. அவனது அழகிய சிரிப்பு அவளை அவ்வளவு வசப்படுத்தியிருக்கிறது. என் தம்பி இப்படியே இருக்க வேண்டும் கடவுளே... என்ற மழலையின் வேண்டுதலைப் பார்த்த பிறகு நம் தம்பி, தங்கையை நாம் எப்படி கவனித்துக் கொண்டோம் என்பதை ரீவைண்ட் செய்யச் சொல்கிறது.

இந்த வீடியோ இரண்டே நாட்களில் 1.25 கோடியை தாண்டியது கவனிக்கத்தக்கது

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-நான்-ரசித்த-முதல்-அழுகை/article6271963.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடியோ பகிர்வு: நொறுங்கிய அவள் இதயம் இதமானது எப்படி?

 
 
disny_2292341h.jpg
 

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் இவை....

நம் ஊர் குடும்பங்களில் டைனிங் டேபிள் கலாச்சாரம் முடிவுக்கே வந்துவிட்டதா?

இப்போதெல்லாம் யாரும் சேர்ந்தே சாப்பிடுவதில்லையா?

அப்படிச் சேர்ந்து சாப்பிட்டாலும் ஒருவரையொருவர் ஈகோ மோதலில் இடித்துக்கொள்ளாமல் ஜாலியாக சாப்பிடுகிறார்களா?

அப்படியே ஜாலியாக சாப்பிட்டாலும், அதில் பெரியவர்களும் மனங்கோணாமல் இணைந்துகொள்வார்களா?

உண்மையில் எல்லாமும் சாத்தியம்தான்.

தலைமுறைகளைக் கடந்த புரிதல் சாத்தியமானால்... சாத்தியமாகும் பட்சத்தில் அதில் நகைச்சுவையும் கொப்பளிக்கும்; இன்ஸ்டண்ட் தத்துவங்களும் எகிறி குதிக்கும்!

ங்கே காதல் முறிவால் இதயம் நொறுங்கிய ஓர் இளம்பெண் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

அப்பா, அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் தாத்தாவோ தன் பேத்தியின் நிலையை சூசகமாகப் புரிந்துகொண்டு கிண்டலடிக்கிறார். இது சந்தோஷமான விஷயம் என்கிறார்.

"உன் அப்பாவும், சித்தப்பாவும் இளம் பிராயத்தினராக இருந்தபோது எத்தனை பெண்களால் நிராகரிக்கப்பட்டார்கள்; அதனால் எவ்வளவு மனம் உடைந்திருக்கிறார்கள் என்று தெரியுமா?" என்கிறார்.

அப்போது குறுக்கிட்ட பாட்டி, தாத்தாவின் இளமை வாழ்க்கையில் நடந்த காதல் முறிவைப் பற்றிக் கூறி அவளைத் தேற்றுகிறார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த தாத்தா, பிறகு மிகவும் அழகான ஓர் உண்மையைத் தனது பேத்திக்குச் சொல்கிறார்.

" 'இதயம் நொறுங்கவில்லை' என்றால், அது இளமைப் பருவமே இல்லை... மேலும் இதயம் நொறுங்கப்போய்த்தான் என் வாழ்க்கையில் எனக்கு மனைவியாக இவள் வந்து சேர்ந்தாள்... இதோ அந்த வழியாக ஒரு பேத்தியாக நீயும்."

எவ்வாறு தன் மனைவி தன்னுடைய வாழ்க்கைக்குள் வந்து, உடைந்துகிடந்த தன் இதயத்தை ஒன்றாக்கினார் என்று கூறும் தாத்தா, "யாரோ ஒருவர் உன் வாழ்க்கைக்குள் நுழைந்து, உன் இதயத்தை நொறுக்கினால்தானே... அதை மீட்டெடுத்து வாழ்வை அழகாக்க மற்றொருவர் வர முடியும்?" என்கிறார் இதமாக.

அப்புறமென்ன இளம்பெண்ணின் இறுக்கம் கலைந்து இன்முகச் சிரிப்பு பூவாக மலர்கிறது.

மொட்டு மலர்ந்த அழகைக் காண, டிஸ்னி சேனலின் இந்த வீடியோவைப் பாருங்கள்...

 

http://tamil.thehindu.com/opinion/blogs/வீடியோ-பகிர்வு-நொறுங்கிய-அவள்-இதயம்-இதமானது-எப்படி/article6830193.ece?ref=relatedNews

வீடியோ பகிர்வு: நொறுங்கிய அவள் இதயம் இதமானது எப்படி?

 
 
disny_2292341h.jpg
 

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் இவை....

நம் ஊர் குடும்பங்களில் டைனிங் டேபிள் கலாச்சாரம் முடிவுக்கே வந்துவிட்டதா?

இப்போதெல்லாம் யாரும் சேர்ந்தே சாப்பிடுவதில்லையா?

அப்படிச் சேர்ந்து சாப்பிட்டாலும் ஒருவரையொருவர் ஈகோ மோதலில் இடித்துக்கொள்ளாமல் ஜாலியாக சாப்பிடுகிறார்களா?

அப்படியே ஜாலியாக சாப்பிட்டாலும், அதில் பெரியவர்களும் மனங்கோணாமல் இணைந்துகொள்வார்களா?

உண்மையில் எல்லாமும் சாத்தியம்தான்.

தலைமுறைகளைக் கடந்த புரிதல் சாத்தியமானால்... சாத்தியமாகும் பட்சத்தில் அதில் நகைச்சுவையும் கொப்பளிக்கும்; இன்ஸ்டண்ட் தத்துவங்களும் எகிறி குதிக்கும்!

ங்கே காதல் முறிவால் இதயம் நொறுங்கிய ஓர் இளம்பெண் சாப்பிடாமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

அப்பா, அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் தாத்தாவோ தன் பேத்தியின் நிலையை சூசகமாகப் புரிந்துகொண்டு கிண்டலடிக்கிறார். இது சந்தோஷமான விஷயம் என்கிறார்.

"உன் அப்பாவும், சித்தப்பாவும் இளம் பிராயத்தினராக இருந்தபோது எத்தனை பெண்களால் நிராகரிக்கப்பட்டார்கள்; அதனால் எவ்வளவு மனம் உடைந்திருக்கிறார்கள் என்று தெரியுமா?" என்கிறார்.

அப்போது குறுக்கிட்ட பாட்டி, தாத்தாவின் இளமை வாழ்க்கையில் நடந்த காதல் முறிவைப் பற்றிக் கூறி அவளைத் தேற்றுகிறார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த தாத்தா, பிறகு மிகவும் அழகான ஓர் உண்மையைத் தனது பேத்திக்குச் சொல்கிறார்.

" 'இதயம் நொறுங்கவில்லை' என்றால், அது இளமைப் பருவமே இல்லை... மேலும் இதயம் நொறுங்கப்போய்த்தான் என் வாழ்க்கையில் எனக்கு மனைவியாக இவள் வந்து சேர்ந்தாள்... இதோ அந்த வழியாக ஒரு பேத்தியாக நீயும்."

எவ்வாறு தன் மனைவி தன்னுடைய வாழ்க்கைக்குள் வந்து, உடைந்துகிடந்த தன் இதயத்தை ஒன்றாக்கினார் என்று கூறும் தாத்தா, "யாரோ ஒருவர் உன் வாழ்க்கைக்குள் நுழைந்து, உன் இதயத்தை நொறுக்கினால்தானே... அதை மீட்டெடுத்து வாழ்வை அழகாக்க மற்றொருவர் வர முடியும்?" என்கிறார் இதமாக.

அப்புறமென்ன இளம்பெண்ணின் இறுக்கம் கலைந்து இன்முகச் சிரிப்பு பூவாக மலர்கிறது.

மொட்டு மலர்ந்த அழகைக் காண, டிஸ்னி சேனலின் இந்த வீடியோவைப் பாருங்கள்...

 

http://tamil.thehindu.com/opinion/blogs/வீடியோ-பகிர்வு-நொறுங்கிய-அவள்-இதயம்-இதமானது-எப்படி/article6830193.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடியோ பகிர்வு: அவள் கன்னத்தில்..?

 
 
hi01_2286020h.jpg
 

பெண்ணின் அழகை ஓர் ஆண் ரசிக்கலாம், கொண்டாடலாம், பாராட்டவும் செய்யலாம், ஆனால், அந்த அழகைச் சிதைப்பது, வன்முறைக்கு உள்ளாக்குவது, தன் அதிகாரத்துக்குள் கொண்டுவர நினைப்பது எல்லாம் எவ்வகையில் சரி..?

பொது இடங்களில் சந்தித்துக்கொண்ட சிறுவர்கள் சிலர் இதோ யதேச்சையாக ஓர் அழகிய சிறுமியை எதிர்கொண்ட விதத்தை 'ஃபேன்பேஜ் டாட் இட்' என்ற வலைதளம் வெளியிட்ட 3 நிமிட வீடியோவை முழுமையாகப் பாருங்களேன்.

இந்த வீடியோ பதிவு உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை கீழே கருத்துப் பகுதியில் தெரிவிக்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/வீடியோ-பகிர்வு-அவள்-கன்னத்தில்/article6811885.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

வீடியோ பகிர்வு: போக்குவரத்துக் காவலர் 'பிரபுதேவா'!

 
 
traficpol_2287437h.jpg
 

பட்டையை உரிக்கும் வெயில் நிலவாக காய்கிறதோ இந்தப் போக்குவரத்துக் காவலர் 'பிரபுதேவா'வுக்கு...

வீட்டில் சொல்லிவிட்டு வந்தவர்கள், சொல்லாமல் வந்தவர்களின் அவசரங்கள் எல்லாம் இவரது நடன அசைவில் காணாமல் போகிறது...

இடது வலது சிகப்பு பச்சை செல்க நிற்க என்று எத்தனை சாலை விதிகள் இருந்தாலும் அடுத்தவர்களை முந்தத் துடிக்கும் வாகனஓட்டிகளின் மனது இவரது பிரேக் டான்ஸ் ஆட்டத்தின் கையசைப்பில் தானாக பிரேக் பிடிக்க, வெயில் வியர்வையும் காற்றில் பறக்கிறது...

தனது வித்தியாசமான பாணியுடன் மக்கள் நலனில் அட இப்படியும் ஒரு டிராபிக் காவலரா என்று சொல்ல வைக்கிறார், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் பணியாற்றும் ரஞ்சித் சிங்.

இந்த வீடியோவைப் பாருங்கள்... உங்கள் எண்ணத்தைப் பகிருங்கள்.

http://tamil.thehindu.com/opinion/blogs/வீடியோ-பகிர்வு-போக்குவரத்துக்-காவலர்-பிரபுதேவா/article6815531.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: அவள் ஏன் அவரை பின்தொடர்கிறாள்?

 
 
aval_2517290h.jpg
 

அப்பா அலுவலகம் கிளம்பும்போது புன்னகை பூத்து டாடா சொல்லி, "வரும் போது அதை மறக்காமல் வாங்கிட்டு வந்திடு... அப்புறம், ஈவினிங் என்னை அங்கே கட்டாயம் கூட்டிட்டுப் போகணும்" என்று நம் குழந்தைகள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

ஆனால், நாம் வாழும் இதே திருநாட்டில் நம் வயிற்றுக்கு சோறு அளிக்கும் விவசாயின் மகளோ/மகனோ ஒவ்வோர் நாளும் தன் அப்பா வயலுக்குச் சென்றுவிட்டு உயிருடன் திரும்புவாரா என்ற அச்சத்துடன் தவிக்கும் சூழலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

பெருமிதத்தோடு 69-வது சுதந்திர தினம் கொண்டாடி முடித்திருக்கிறோம். ஆனால் ஆண்டுகள் வளர்வதைப் போல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?

விவசாயிகளின் தற்கொலை தலைப்புச் செய்தியில் இருந்து சிங்கிள் காலம் செய்தியாகிவிட்டிருக்கிறது.

சுதந்திர தின பேருரையில் பிரதமர் மோடி, "வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேவேளையில் விவசாயிகள் நலனை புறந்தள்ளிவிட முடியாது. எனவே, வேளாண் அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்" என்றார்.

பெயர் மாற்றத்தால் பெரும் மாற்றம் வந்துவிடுமா? கேள்விக் கணைகள் சூழ்ந்து கொள்கின்றன.

இது துனியாவின் கதை. துனியாவுக்கு துள்ளிக்குதிக்கும் வயது. ஏனோ அவள் புன்னகை களவாடப்பட்டிருந்தது. பொய்த்துப் போன பருவ மழையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை நாளும், பொழுதும் இப்படிப்பட்ட செய்திகள் அவள் புன்னகையை களவாடியிருந்தன. அப்பா வயற்காட்டுக்கு கிளம்பும்போதெல்லாம் அவள் மனதில் ஜிவ்வென படர்கிறது ஒரு வித அச்ச உணர்வு.

ஒவ்வொரு நாளும் அவரைப் பின் தொடர்கிறாள்... இரவு நேரத்தில் அப்பாவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்கிறார். எதற்காக என்பதையே இந்த 4 நிமிட குறும்பட வீடியோ விளக்குகிறது.

கயிறுகள் தற்கொலைக்கானது மட்டுமல்ல ஊஞ்சல் விளையாடவும்தான். துனியாக்கள் புன்னகை பூக்க உதவுவதே இந்தப் படத்தை ஆவணப்படுத்திய ஸ்கைமெட் அமைப்பின் இலக்கு. அதற்காகவே தொடங்கப்பட்டிருக்கிறது #HelpTheFarmer விழிப்புணர்வு பிரச்சாரம்.

நாம் 'மேக் இன் இந்தியா' எனப் பேசினாலும், இந்தியா சேவை துறையில் சிறப்பானதொரு இலக்கை எட்டி வந்தாலும் நம் பொருளாதாரம் இன்றளவும் வேளாண் பொருளாதாரமாகவே அறியப்படுகிறது. நம் வேளாண் உற்பத்திக்கு உயிர்நாடியாக பருவ மழை இருக்கிறது.

பருவ மழை பொய்த்ததால் மட்டுமே விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பருவ மழையை கணிப்பது உண்மையிலேயே அவ்வளவு கடினமானதா? இந்த சவாலை ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு துல்லிய வானிலை அறிவிப்புகளை தந்து வருகிறது 'ஸ்கைமெட்' எனும் நிறுவனம். அந்த நிறுவனமே இந்த வீடியோவை தயாரித்துள்ளது.

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: காதல் மட்டுமே போதுமா?

 
short_jpg1_2522346h.jpg
 

மழை இரவு. தனித்திருக்கிறாள் செனதி என்ற இளம்பெண். தான் விரும்பிய இளைஞன் தன் காதலை நிராகரித்த சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்காக அவள் எழுதி வைத்திருக்கும் கடிதமொன்று வீசும் காற்றில் படபடக்கிறது.

அழுது அழுது களைத்துப் போனவள், முடிவாக ஒரு முறை அவனை தொலைபேசியில் அழைக்கிறாள். மறுமுனையில் குரல் கேட்கிறது.

"கோகுல், உன்னை ரொம்ப லவ் பண்றேன்!"

"செனதி, நான் சோமாவை காதலிக்கிறேன்னு எத்தனை தடவை சொல்றது?"

"ப்ளீஸ்.. அப்படி மட்டும் சொல்லாதே.. "

"ப்ச்ச்.. சரி, நாளைக்கு பேசுவோம்.."

"போனை வைக்காதே கோகுல், எனக்கு நாளைன்னு ஒரு நாளே இல்லன்னா? கடைசியா, ஒரே ஒரு தடவை, எனக்காக புல்லாங்குழல் வாசிப்பியா?"

மறுமுனையில் செல்பேசி துண்டிக்கப்படுகிறது.

அழுது முடித்து நிமிர்கிறவள், ஒரு முடிவுடன் வேகமாக கயிற்றை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகிறாள். சமையலறையில் தூக்கு மாட்டிக்கொள்ள எத்தனிப்பவளுக்கு, வெளியே எதோ சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் ஓர் ஆள், வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு திகைக்கிறாள்.

அவளைக் கத்த விடாமல் அவன் வாயைப் பொத்த, அதிர்ச்சியில் மயக்கமடைகிறாள். அவள் முகத்தில் நீர் தெளித்து, அந்த ஆளே எழுப்புகிறான்.

தான் திருடனில்லை எனவும், பசித்து, உணவுக்காகவே வீடு புகுந்ததாய் சொல்கிறான். அவள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவனுக்கு ஒரு வாய் உணவளித்து விட்டுச் சாகலாம் என்று நினைக்கிறாள்.

வீட்டில் உணவில்லாத காரணத்தால், அவனுக்காக பீட்சா ஆர்டர் செய்கிறாள். பீட்சா வீடு வந்து சேர்கிறது. ஆவலாய் உணவைப் பார்த்தாலும் அதை உண்ண மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அவளை உலுக்கியெடுக்கிறது. அந்த ஒற்றைச் சம்பவம்/ கேள்வி/ மெளனம்/ சாபம் அவளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுகிறது. என்ன அது?

பசிக்கொடுமையால் வீடு புகுந்து உணவு தேடும் கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் வாழ்ந்திருக்கிறார். காதலால் நிராகரிக்கப்படும் வலியை, உணர்ச்சிகளைக் கொட்டிக் காண்பித்து நம்மையும் அந்த வேதனைக்குள் அமிழ்த்தி விடுகிறார் தேஜஸ்வினி கோஹ்லப்புரி. இக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் மொஹிந்தர் பிரதாப் சிங்.

காதல் அழகானது; ஆதலால் காதல் செய்வீர். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை அழகாகச் சொல்கிறது 'சால்ட் அண்ட் பெப்பர்'.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-காதல்-மட்டுமே-போதுமா/article7575127.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: மூன்றரை நிமிட பதிவில் சென்னையின் பெருமித முகம்

 
 
chennai1_2524459h.jpg
 

தென்னிந்தியாவின் கோட்டையாகவே திகழ்கிறது. எம்டன் குண்டுவிலிருந்து தப்பித்து ஒரு நூறாண்டாகிவிட்டது... என்றாலும் எந்த சிக்கலுமின்றி சென்னைக்கு நாளுக்கு நாள் வளர்முகம்தான்.

அப்போது மெட்ராஸ் என பெயரிடப்பட்ட சென்னை அன்று பார்த்ததுபோல் இன்று இல்லை. வெவ்வேறு தலைமுறை ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் கதைகள் வேறுவேறாகத்தான் இருக்கிறது.

இன்று இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக உலகில் காணவேண்டிய 52 இடங்களில் 26வது இடத்தை சென்னைக்கு வழங்கியுள்ளது நியூயார்க் டைம்ஸ்..

379 ஆண்டுகளாகிவிட்ட சென்னையைப் பற்றிய அறிமுகப்படுத்தும் மெட்ராஸ் டூ சென்னை இந்தக் குறும்படம் 3.45 நிமிடங்களே ஓடக்கூடியது. ஆனால் அதற்குள்தான் எவ்வளவு அழகான சித்தரிப்புகள்...

கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் தேவலாயம், உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரீனா, உத்வேகத்தை அளிக்கும் சென்னைக் கடற்கரையில் அமைந்துள்ள சான்றோர் பெருமக்களின் ஆளுயர சிலைகள், பழைமையான கவின்கலைக் கல்லூரி, கோட்டையில் உள்ள விலைமதிப்பற்ற அருங்காட்சியகம், பழைமையான ஹிக்கிம்பாதம்ஸ்.. பல வரலாற்று பெருமை மிக்க விஷயங்கள்..

அதேபோல இன்றைய நவீன சென்னையில் பிரமாண்டமான கோயம்பேடு பேருந்து நிறுத்தம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், சமீபத்திய மெட்ரோ ரயில், நவீனப்படுத்தப்பட்டுள்ள சென்னை பண்ணாட்டு விமான நிலையம், மிகப்பெரிய ஐடி பூங்காக்கள், என விரிந்துகொண்டிருக்கும் சென்னையின் நாளும் மாறும் காட்சிகள் நம் விழிகளை உயர்த்த வைக்கிறது...

ஸ்டீவ் ரோட்ரிகியூவ்ஸ் ஒளிப்பதிவில் ஜெராட் பெலிக்ஸ் இசையில் மற்றும் பலர் இணைந்து பணியாற்ற கட் கார்த்திக் இயக்கியுள்ள இக்குறும்படம் சென்னையைப் பற்றிய சிறிய அறிமுகம்தான் என்றாலும் செறிவான அறிமுகமாக அமைந்துள்ளதை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மூன்றரை-நிமிட-பதிவில்-சென்னையின்-பெருமித-முகம்/article7583008.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'புலி' ட்ரெய்லரின் புதிய ரீமிக்ஸ் 'அவதாரம்'

 
remix_2533748h.jpg
 

தொடர்ச்சியாக பல பாடல் மற்றும் ட்ரெய்லர்களின் வெவ்வேறு ரீமிக்ஸ் வடிவங்களை தொகுத்து அளித்து வரும் ரீமிக்ஸ் மாமா-வின் அடுத்த படைப்பு, விஜய் நடிப்பில் வந்திருக்கும் 'புலி' படத்தின் ரீமிக்ஸ் ட்ரெய்லர். (இணைப்பு கீழே)

இம்முறை ரீமிக்ஸுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், ஹாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த 'அவதார்'. பெரும்பாலும் அவதார் படத்தின் இறுதி கட்ட காட்சிகளை வைத்தே தொகுக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லர், முதல் காட்சியிலிருந்தே தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைக்குப் அட்டகாசமாகப் பொருந்திப் போகிறது.

நாயகனுடன் அவதார் நேவிக்களும் இணைந்து சண்டையிடுவது, நாயகியுடன் பேசிச் சிரிப்பது, பாண்டோர கிரக உயிரினத்தின் மேல் சவாரி செய்வது, அங்கிருக்கும் மிருகங்கள் போரில் சண்டை போடுவது என ஓவ்வொரு நொடியுமே ’புலி’ படத்தின் ட்ரெய்லர் இசை மற்றும் சப்தங்களோடு கச்சிதமாக ஒத்துப்போவது ஆச்சரியமாக உள்ளது. கடைசியாக, விஜய் பேசும் பன்ச் டயலாக்கும் இந்த ரீமிக்ஸ் ட்ரெய்லரில் கூடுதல் சுவாரசியம்.

ஒரு வேளை 'புலி' ட்ரெய்லரை விட, இந்த ட்ரெய்லர் நன்றாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

 http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-புலி-ட்ரெய்லரின்-புதிய-ரீமிக்ஸ்-அவதாரம்/article7610876.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 1 month later...

யூடியூப் பகிர்வு: சிவனும் நக்கீரனும் - சிவாஜி தரும் வியப்பு

 
 
sivan_2584363h.jpg
 

'திருவிளையாடல்' திரைப்படத்தில் வந்த சிவனையும் தருமியை நம்மால் மறக்கமுடியாது. அதற்குக் காரணம் சிவாஜியும் நாகேஷும்தான். தங்களது தெறிப்பான நடிப்பில் தமிழ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர்கள் அவர்கள்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், தருமி கதை வந்தது திருவிளையாடல் படத்தில்தான் என்று. உண்மையில், அதற்கும் பல ஆண்டுகள் முன்பே ஒரு திரைப்படத்தில் இக்காட்சி வந்துவிட்டது என்பது தெரியுமா?

தருமி, நக்கீரனுடனான சிவனின் திருவிளையாடலை தமிழ் சினிமா முன்னமே கண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அதிலும் சிவாஜி கலக்கியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

இங்கு வீடியோவில் இடம்பெற்றுள்ள 'நான் பெற்ற செல்வம்' என்ற பழைய திரைப்படத்தில் வரும் இந்த ஒரு காட்சியில் நீங்கள் காணப்போவது ஒன்றல்ல... இரண்டு ஆச்சரியங்கள்!

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/யூடியூப்-பகிர்வு-சிவனும்-நக்கீரனும்-சிவாஜி-தரும்-வியப்பு/article7761835.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: குறும்படம் - பரிதாப 'செல்'ல மனிதர்கள்!

cellll_2590675h.jpg
 

வயிறார சாப்பிடுகிறார்களோ இல்லையோ, வாய்நிறைய பேச, பார்க்க, படிக்க, செல்ஃபிக்க இன்று செல்போன்கள் வந்துவிட்டன. காலாற நடக்கிறார்களோ இல்லையோ... காதுகிழிய செல்போன்களில் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கும் மனிதர்களை அங்கங்கே பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

பெரியவர்கள் என்றில்லை, குழந்தைகள்கூட இந்த மாயமந்திரத்தில் சிக்கிக்கொண்டன. இந்தப் பிரச்சனை எப்போதாவது என்றால் பரவாயில்லை. சூரியன் உதிக்கும் முன்பே ஆரம்பித்துவிடுகிறது. நள்ளிரவு வரை நம்மை உண்டு இல்லையென்று செய்துவிடுகிறது.

சரி, பரபரப்பிலிருந்து தப்பித்து ஓர் இயற்கையின் எழிலான சூழ்நிலைக்குச் சென்று தியானிக்கலாம் என்றால், அங்கேயும் ஊரே கேட்பது போல செல்போன் உரையாடல், ஒரு விழாவின் சுவாரஸ்யத்தைக்கூட உருப்படியாக அனுபவிக்க முடியாது, ஒரு விளையாட்டின் வெற்றியைக்கூட பகிர்ந்துகொள்ளமுடியாது, நண்பர்கள் கூடி சந்தித்துக்கொள்ளும் ஓர் அழகான சந்திப்புகூட முழுமையாக அமைந்துவிடாது, அவ்வளவு ஏன்? கணவன் - மனைவி இக்காலத்தில் அரிதாக சந்தித்துக்கொள்ளும் படுக்கையில்கூட நிம்மதி கிடையாது...

செல்போனின் அத்தியாவசிய பயன்பாடுகள் கூட நமக்கு மறந்துவிட்டது. யதார்த்தமாக எதிரெதிரே உள்ள மனிதர்களிடத்தில்கூட இடைஞ்சலாக கள்ளிச்செடிளாக இந்த செல்போன்கள் என்பதை 'ஐ ஃபர்கெட் மை செல்போன்' என்ற இந்தக் குறும்படத்தில் பொட்டில் அடித்ததுபோல் கூறியுள்ளார் இயக்குநர் மைல்ஸ் க்ராஃபோர்ட்.

மையக் கதாபாத்திரமாக சார்லேனே டெகுஸ்மேன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ள இக்குறும்படத்தில்தான் நாம் சிந்திக்கத்தான் எவ்வளவு விஷயங்கள்... பாவம் மனிதர்கள்... செல்போன்களின் ஆதிக்கத்தில்..!

 http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-குறும்படம்-பரிதாப-செல்ல-மனிதர்கள்/article7780106.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'குற்றம் கடிதல்' பாடலில் நகர வாழ்க்கையின் விடியல்

 
 
kalainila_2432133h.jpg
 

காலங்கள் மாறலாம். பொழுதுகள் ஓடலாம். கணங்கள் மறையலாம். ஆனால் புவியின் காலை விடியலும், இரவுத் துயிலும் மாறியதில்லை. 'கடல் தாண்டிக் கரையேறும் காலை நிலா'வில் தொடங்கும் 'குற்றம் கடிதல்' படப்பாடல் நகர வாழ்க்கையின் வெவ்வேறான வாழ்க்கை நிலைகளில் வாழும் மனிதர்களின் காலை எவ்வாறானதாக இருக்கிறது என்பதை அழகான வரிகளுடன் பொருத்திச் செல்கிறது.

 பகிர்வுக்கு நன்றி நவீனன்

இத்திரியை இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைத்து வீடியோவும் பார்க்கவில்லை. இதைத்தான் இப்போது பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது மிகுதியும் பார்க்க ஆசை.

அழகிய பாடல், படமாக்கப்பட்ட விதம் அதைவிட அழகு. சேரியிலும், நடுத்தரவர்க்க வாழ்கையில்தான் அழகா? என்று யாராவது கேட்டால் அடித்துச் சொல்வேன் - ஆம் என்று. அங்குதான் ஒன்றுமில்லை ஆனால் எல்லாம் இருக்கின்றது. இவ்வசனம் புரியவேண்டியவர்க்கு நிச்சயம் புரியும்.

மறுபடியும் நன்றி

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: மூன்றரை நிமிட பதிவில் சென்னையின் பெருமித முகம்

 

பகிர்வுக்கு நன்றி நவீனன்

சென்னையை 3 நமிடங்களில் காட்டலாமா! வியப்புடன் பார்க்கத் தொடஙகினேன். ஆரம்பமே fast motion வர கொஞ்சம் குழம்பித்தான் போனேன். ஆனாலும் சில வருடங்களை சென்னையிலும் கழித்தவன் என்ற முறையில் இதைப்பார்த்து வியந்துதான் போனேன்.

முயன்றால் எதுவும் முடியும் - சென்னையையும் 3 நிமிடத்தில் காட்டலாம்.  இங்கு எதுவுமே மிஸ்ஸிங் இல்லை.

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: உலகம் சுற்றும் டீக்கடைக்காரர்!

 
 
tea_2595929h.jpg
 

மீறல் எதுவும் இல்லாமல் வீட்டுக்கு நல்லப் பிள்ளையாகவே வீட்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லைதான். ஆனால் கொலம்பஸ் அப்படி நினைத்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்க முடியாது. கடைசிவரை ஜெனோவாவில் ஒரு ஏழை கம்பளி நெசவாளியின் மகனாகவே வாழ்ந்துவிட்டு இவரும் ஒரு நெசவாளியாக வாழ்ந்து முடிந்திருப்பார் அவ்வளவுதான்.

வாஸ்கோடகாமாவும் இப்படியாக போர்ச்சுகலில் ஒரு ராணுவவீரனின் மகனாக உச்சபட்சமாக ஒரு தளபதியாக வந்திருக்கலாம். ஆனால் புதுமையைப் படைக்க நினைப்பவர்கள் வழக்கமான பாதையிலிருந்து விலக வேண்டும். புதிய தடங்களைப் பதிக்கவேண்டும் என்று நினைத்த மெகல்லன்கள், ராகுல சாங்கிருத்தியாயன்கள், எஸ்.ராமகிருஷ்ண்கள் இங்கு அரிதாகவே உள்ளனர்.

உடனே, உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், பெரிய பணக்காரராக இருக்கவேண்டுமோ என்று பயந்துவிடவேண்டாம். கேரளாவின் ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சிறகு விரித்து பறந்துதிரிந்த விஜயன் ஒரு சாதாரண டீக்கடைக்காரர்தான்.

யோசித்துப் பாருங்கள். அவர் மற்றவர்களைப் போலல்ல... நிறைய நாடுகளுக்குச் சென்று தான் பெறும் அனுபவத்தோடு தன் மனைவியையும் அழைத்துச்சென்று அவரையும் தூரதேச பயணங்களின் அனுபவத்தில் பங்கேற்க வைத்துள்ளார்.

இந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இத்தனைக்கும் அவரது ஜீவனம் ஒரு சாதாரண டீக்கடைதான். அந்த வருமானத்தின் சேமிப்பைக்கொண்டுதான் இந்த சாதனையை செய்துள்ளார்.

விஜயனைப் பற்றிய பற்றி ஹரி எம்.மோகனன் இயக்கியுள்ள இந்த சின்னஞ்சிறு ஆவணப்படம் (Docu-Drama) நம்மோடு மிகவும் ஆத்மார்த்தமாக பேசுகிறது... அற்புதமான ஒளிப்பதிவில், அழகான தயாரிப்பிலான இப்படம் வீட்டைவிட்டு வெளியே வர, ஊரைவிட்டு கிளம்ப, உலகை சுற்றிப் பார்க்க மனசிருந்தால் போதும் என்று சொல்கிறது...

 http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உலகம்-சுற்றும்-டீக்கடைக்காரர்/article7800466.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

 பகிர்வுக்கு நன்றி நவீனன்

இத்திரியை இன்றுதான் பார்க்க முடிந்தது. அனைத்து வீடியோவும் பார்க்கவில்லை. இதைத்தான் இப்போது பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது மிகுதியும் பார்க்க ஆசை.

அழகிய பாடல், படமாக்கப்பட்ட விதம் அதைவிட அழகு. சேரியிலும், நடுத்தரவர்க்க வாழ்கையில்தான் அழகா? என்று யாராவது கேட்டால் அடித்துச் சொல்வேன் - ஆம் என்று. அங்குதான் ஒன்றுமில்லை ஆனால் எல்லாம் இருக்கின்றது. இவ்வசனம் புரியவேண்டியவர்க்கு நிச்சயம் புரியும்.

மறுபடியும் நன்றி

 

 

பகிர்வுக்கு நன்றி நவீனன்

சென்னையை 3 நமிடங்களில் காட்டலாமா! வியப்புடன் பார்க்கத் தொடஙகினேன். ஆரம்பமே fast motion வர கொஞ்சம் குழம்பித்தான் போனேன். ஆனாலும் சில வருடங்களை சென்னையிலும் கழித்தவன் என்ற முறையில் இதைப்பார்த்து வியந்துதான் போனேன்.

முயன்றால் எதுவும் முடியும் - சென்னையையும் 3 நிமிடத்தில் காட்டலாம்.  இங்கு எதுவுமே மிஸ்ஸிங் இல்லை.

உங்கள் கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: ஷாரூக் 50 - பிறந்தநாளில் FANகளுக்கு விருந்து!

 
fan_2606588f.jpg
 

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு இன்று பிறந்தநாள். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது குடும்பத்தினரோடு 50-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அதிகாலையிலிருந்து முகநூல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் வரும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் திக்குமுக்காடி வருகிறார்.

ரசிகர்களின் இதயத்தில் ராஜசிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஷாரூக்கின் அன்பு வெறிபிடித்த ரசிக நெஞ்சங்களுக்காகவென்றே 'ஃபேன்' (FAN) படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேன் திரைப்படம் 2016 ஏப்ரலில் வெளிவர உள்ளது. ஆனால், இன்று வெளியாகி உள்ள டீசரைப் பார்த்தால் அவரின் ரசிகர்கள் அப்படம் வரும்நாள்வரை எப்படி பொறுமையோடு காத்துக்கொண்டிருப்பது சிரமம்தான் என்று தோன்றுகிறது.

ஃபேன் படத்தின் டீசர் காட்சிகளில் அந்த அளவுக்கு பளிச்சிடும் புதிய பரிமாணத்தோடு தோன்றுகிறார் ஷாரூக். ரசிகனை கவர்ந்திழுத்த அபிமான நட்சத்திரமாகவும் ஸ்டைலான நடிகன்மீது கட்டுப்பாடில்லாமல் அன்பு வைத்திருக்கும் ஒரு ரசிகனாகவும் அவரே தோன்றியுள்ள பாத்திரங்கள் நம் கண்ளை கூச வைக்கின்றன. தெறிக்கும் நடிப்பாற்றலில் ரசிகனை சுண்டியிழுத்து படம் எப்படி இருக்கப்போகிறதோ என்று பொறுமையை சோதிக்கின்றன.

''இன்று எனக்கு 50 ஆகிறது. ஆனால் 25-க்கு திரும்பிவிட்டேன். எல்லா வருடங்களும் எனக்கு அன்பை வாரி வழங்கினீர்கள்.. நானும் இதயபூர்வமாக எனது படைப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன்... கவுரவ் ஒரு ரசிகன்... நீங்களும் நானும் ஒரு நம்பிக்கையாக திகழ்கிறோம்....'' என்று முகநூலில் தனது பிறந்தநாள் முன்னிட்டு ஷாரூக்கான் பதிவிட்டுள்ள வாசகத்தின் நிஜம் டைனமிக்கான இந்த டீசரைப் பார்க்கும்போதுதான் மேலும் வலுப்படுகிறது...

http://tamil.thehindu.com/cinema/bollywood/யூடியூப்-பகிர்வு-ஷாரூக்-50-பிறந்தநாளில்-fanகளுக்கு-விருந்து/article7833984.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யூடியூப் பகிர்வு: இந்தியாவின் 'ஆர்கோ' ஆகுமா 'ஏர்லிஃப்ட்'?

 

 
22_2625080h.jpg
 

1990-ஆம் ஆண்டு இராக், குவைத் மீது படையெடுத்தது. அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கிட்டத்தட்ட 1,70,000 இந்தியர்கள் 2 மாத காலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால், இதற்கு ராணுவ விமானங்களைப் பயன்படுத்தாமல், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களையே பயன்படுத்தினர். ஏனென்றால் ராணுவ விமானங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மக்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றதாக, இந்தச் செயலுக்கு இந்தியா கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ’ஏர்லிஃப்ட்’ என்ற படம் பாலிவுட்டில் தயாராகியுள்ளது. இதில் ரஞ்சித் என்ற தொழிலதிபர் வேடத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. இராக்கின் ஆக்கிரமிப்பு காட்சிகளும், மற்ற ஆக்‌ஷன் காட்சிகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஆர்கோ’ (Argo) என்ற திரைப்படமும், கிட்டத்தட்ட இதைப் போல கதையம்சம் உடைய திரைப்படமே. இரானில் மாட்டிக்கொண்ட 6 அமெரிக்க அரசு அதிகாரிகளை எப்படி மீட்டனர் என்பதே அந்தப் படத்தின் கதை. சிறந்த த்ரில்லர் படமாக உருவான 'ஆர்கோ', பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றதோடு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது.

தற்போது பாலிவுட்டின் 'ஏர்லிஃப்ட்டும்', மக்களுக்கு 'ஆர்கோ' தந்த அனுபவத்தை தருமா என 2016, ஜனவரி 22-ஆம் தேதி வரை பொருத்திருந்து பார்க்கவேண்டும். ராஜா கிருஷ்ண மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிம்ரத் கவுர் அக்‌ஷய் குமாரின் மனைவியாக நடித்துள்ளார்.

 
Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: பிள்ளைகளிடம் பகிர வேண்டிய 'பகிரங்கங்கள்'!

 
bt_2631134h.jpg
 

விடலைப் பையன்கள் செய்கின்ற பல காரியங்கள் விளையாட்டுத்தனமாகவே பார்க்கப்படுகின்றன. 'சின்னப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க.. போகப்போக சரியாயிடும்!'என்பதுதான் அவர்களைப் பற்றி உறவுகள், நண்பர்கள், குடும்பங்களுக்கிடையே சொல்லப்படுகிற கருத்தாக இருக்கிறது.

கண நேர மகிழ்ச்சிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஒரு பெண்ணைக் கிண்டலடிப்பதில் தொடங்குவது, மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதனால் இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும் தாங்கள் என்ன செய்கிறோம்? அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாகவே வீடுகளில், பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. இந்தச் சுவரைத் தகர்க்க ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது பிரேக்த்ரூ எனும் மனித உரிமைகள் அமைப்பு.

தனக்கு நேரும் அனுபவங்கள் குறித்து, ஒவ்வொரு தாயும் தனது மகனிடம் சொல்ல வேண்டும் என்கிறது பிரேக்த்ரூ. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் சொல்லத் தயங்கும் ஓர் உண்மைச் சம்பவக் காணொலி இதோ.

திருப்புமுனை என்ற பொருள் கொண்ட பிரேக்த்ரூ அமைப்பு, பெண்களும் சிறுமிகளும் சந்திக்கின்ற வன்முறைகளுக்கெதிராக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு பெண், தன்னுடைய தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறாள். சுமார் 90 சதவீத பெண்கள் முக்கியமாகப் பொது இடங்களில் இந்தத் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்கிறது இதன் ஆய்வு.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7908432.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

யூடியூப் பகிர்வு: நிஜ 'கத்தி'யை குத்திக் காட்டும் குறும்படம்!

short_2667938h.jpg
 

ஒவ்வொரு தனிமனித விருப்பங்களும், தேர்வுகளும் சமூகத்தில் வாழும் அனைவரையுமே பாதிக்கிறது.

அலுவலகத்துக்குச் செல்லும் அவசரத்தில், 2 நிமிட நூடுல்ஸையோ, துரித உணவுகளையோ ஆவலாக அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றிருக்கிறீர்களா? முக்கியமாக நீங்கள்தான் இந்தக் குறும்படத்தைப் பார்க்க வேண்டும்.

பேச்சு சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி ஒன்றைப் படம் பிடிக்கும் கேமராவில் தொடங்குகிறது குறும்படம். அதில் விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளிவிவரங்களோடு, விவசாயி ஒருவர் பேச ஆரம்பிக்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளில், விவசாயிகளின் வலியை நகரத்தில் இருக்கும் மக்கள், ஐயோ பாவம் என்று கடந்து செல்கின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறையைப் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவதற்காக இளைஞர்கள் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கின்றனர். தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்கி விவசாயிகளைக் காப்பாற்றச் சொல்லி இளைஞர்களின் குரல், சமூக ஊடகங்களில் உரத்து ஒலிக்கிறது.

பேச்சு சுதந்திரம் நிகழ்ச்சியில், நிகழ்ச்சி இயக்குநர் 'உங்க தண்ணீர்ப் பிரச்சனையைப் போக்க என்னதான் வழி' என்று கேட்க, 'தண்ணீர் ஒரு பிரச்சனையே இல்லை' என்கிறார் அந்த விவசாயி. இந்திய விவசாயிகளுக்காக, ஓயாது குரல் கொடுப்பவர்களால்தான் பிரச்சனை என்று அதிர்ச்சித் தகவலை அளிக்கிறார். விவசாயிகளின் பிரச்சனைக்கு என்னதான் காரணம்? விடை இதோ குறும்படத்தில்.

நிறைய வசனங்கள் சபாஷ் போட வைக்கின்றன. சாம்பிளுக்கு, விற்பவருக்கு உரிமை இருக்கிறது; வாங்குபவருக்கு சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரம் என்பது நம் கையில் பொறுப்பைக் கொடுப்பது மாதிரி; ஆனால் நாம் அதை விடுதலையாகத்தான் பார்க்கிறோம்!

ஸ்ரீனிக்கின் இசை, படத்தில் எழும்பும் உணர்வுகளுக்கு அதிக வலு சேர்க்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்க ஊடகங்கள் பின்பற்றும் முறைகளை, பொட்டிலறைந்தாற்போலக் காட்சிபடுத்தியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த். நுகர்வோருக்குப் பின்னால் செயல்படும் நுண்ணரசியலைப் புடம்போட்டுக் காண்பித்திருக்கிறது குறும்படம்.

நம்முடைய விருப்பங்களே பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கின. ஆனால் இப்போது, பன்னாட்டு நிறுவனங்கள்தான் நம்முடைய விருப்பத்தைத் தேர்வு செய்கின்றன. தனிமனிதர்களாகிய நாம் கொஞ்சம் யோசித்து நம்முடைய விருப்பத்தைத் தேர்வு செய்யலாமா?

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8018221.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யூடியூப் பகிர்வு: இசைக்கருவிகள் இல்லாமலே, இசைப்புயலுக்கு பாட்டு!

 

 
s_2686736h.jpg
 

ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்பெஷலே இசைக்கருவிகளை லாவகமாகக் கையாண்டு, பாடல்களின் தனித்துவத்தை நிரூபிப்பதுதான். ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் இதற்கு சளைத்தவர்களா என்ன?

இசைக் கருவிகள் எதுவுமே இல்லாமல், தங்கள் குரலை மட்டுமே வைத்து, ரஹ்மானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியிருக்கின்றனர் வோக்ட்ரானிகா குழுவினர்.

அவினாஷ் திவாரி, ராஜ் வர்மா, அர்ஜுன் நாயர், வர்ஷா ஈஸ்வர் மற்றும் கிளைட் ரோட்ரிகஸ் ஆகிய இளைஞர்கள் கொண்ட குழு, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜன.6) ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

கண்ணாளனே பாட்டில் தொடங்கும் ஒற்றைக்குரல், சீக்கிரத்திலேயே இருவர், மூவர் மற்றும் ஐவராகிக் கலந்து ஒலிக்கின்றது. ஒலியும் ஒளியும், ரங் தே பசந்தி, லகான், ரோஜா, குரு உள்ளிட்ட பல்ல்வேறு படங்களையும் தொட்டுச் செல்கிறது காணொளி. பொறுக்கி எடுத்தாற்போல சில தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இந்தக் காணொளியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

காணொளியின் இணைப்பு

வெளியிடப்பட்ட மூன்றே நாட்களில் ஒரு லட்சத்தைத் தாண்டிய வியூஸ்கள், காணொளியின் தரத்தைத் தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை ஆளுமைக்கான வீச்சை உணர்த்திச் செல்கின்றன.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8077359.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யூடியூப் பகிர்வு: மனச்சோர்வை போக்க ஹனுமார், புத்தர், சிலுவையை நாடும் ஒபாமா!

 

அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு மனச்சோர்வு ஏற்படும்போது தன் சட்டைப் பையில் உள்ள ஹனுமார், புத்தர் சிலை உள்ளிட்டவற்றை எடுத்து பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

யூடியூப் தளத்துக்கு அவர் சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டியில், தனிப்பட்ட மனச்சோர்வுகளை எப்படி போக்கிக் கொள்வீர்கள் என்று கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, தனது சட்டப் பையை திறந்து அதிலிருந்து சில பொருட்களை எடுத்து வைத்து காண்பித்தார். அதில் வாடிகன் போப் பிரான்சிஸ் அளித்த ஜெப மாலை, சிறிய புத்தர் சிலை, இந்து கடவுளான ஹனுமார் சிலை, எத்தியோப்பியா சென்றபோது அளிக்கப்பட்ட சிலுவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

இந்தப் பொருட்கள் குறித்து அவர் கூறும்போது, "எப்பொழுதும் இந்த பொருட்களை என்னுடனே வைத்து கொள்வேன். இவை மிகவும் சக்திவாய்ந்தவை என்பதற்காக அல்ல.

மனச்சோர்வு அடையும்போதெல்லாம் இந்தப் பொருட்களை பார்க்கும்போது, இந்த செயலை செய்ததற்காக இவை வந்தவை என்பது நினைவில் வரும். அப்போது என்னுள்ள இருக்கும் மனச்சோர்வு நீங்கும். உடனடியாக அடுத்த வேலையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்" என்றார்.

கீழேயுள்ள வீடியோவின் 44-வது நிமிடத்தில் இந்தப் பகுதி இடம்பெறுகிறது:

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/article8114074.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: தமிழுக்கு இளம் பட்டாளத்தின் இசைத் தெறிப்பு

tamilk_2703160f.jpg
 

இன்று கணினி பயன்பாட்டில் வலம் வரும் தமிழ், கல்வெட்டுக் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கிய ஒன்று.

ஓலைச்சுவடி காலத்தையும் கடந்துவந்துகொண்டிருக்கிறது என்பதும் இன்று பெருகியுள்ள பல்வேறு துறைப் பயன்பாடுகளுக்கும் ஒப்பற்ற கலைமொழியாகத் திகழ்கிறது என்பதும் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்ல ஏனோ நாம் மறந்துவிட்டோம்.

உலகின் மிகத் தொன்மைவாய்ந்த செம்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டுமே இன்று தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தவரிசையில் முதல் இடம்பெற்ற ஒருமொழி இன்றும் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் அதன் வலிமையும் அழகும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணரலாம்.

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தங்கள் தாய்மொழியை மறக்காதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால்

தமிழில் பேசுவதற்கே தயங்குபவர்களையும்கூட தமிழகத்திலேயே காணமுடிகிறது. அதற்குக் காரணம் இன்று மாறிவரும் பன்னாட்டு வேலைசார்ந்த வாழ்க்கை என்கிறவர்களும் 'எங்கள் குழந்தைகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது' என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்பவர்கள் இந்தப் பாடலை ஒருமுறைப் பார்க்க வேண்டும்.

நவின் குமாரின் தித்திக்கும் தேனிசையில், சுருதி மற்றும் அர்ச்சனா குரலினிமையில், அபிஅருண் மற்றும் அரவிந்த் பாரதி.ம ஆகியோரின் குளிர்ச்சியான ஒளிப்பதிவில், ஆன்டனி பிரிட்டோவின் உறுத்தாத எடிட்டிங்கில், தமிழ்கூறும் நல்லுலகம் பேசி மகிழும் தமிழ் நம் வாழ்வோடு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது கலந்துஉறவாடுகிறது என்பதை ரேஷ்மன் தனது இயக்கத்தில் 'தமிழுக்குத் தலைவணங்குவோம்' காணொலிப் பாடலை சிறப்பாக தந்துள்ளார்.

கண்ணுக்கினிய இக்காணொலிப் பாடலை கண்டு கேட்ட பிறகும்கூட நம் மொழியைப் புறக்கணிக்கத் தோன்றுகிறதா என நம்மவர்களைப் பார்த்து கேட்கவேண்டும். பார்க்க...

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8129738.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யூடியூப் பகிர்வு: உறவும் முரணும்... கவனிக்கத்தக்க குறும்படம்!

 

 
shortfilm_2714297f.jpg
 

பல நேரங்களில் நாம் எதிர்பார்த்திராத சூழ்நிலைகளில்தான் நாம் பலமுறை சிக்கிக்கொள்ள நேரிடுகிறது பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து வலிகள் கூடலாம் குறையாலாமே ஒழிய அதன் இழப்புகள் சமயத்தில் ஈடுகட்ட முடியாத அளவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவே முடிவு இல்லை என்றுகூறுகிறது 'முரண்' எனும் இக்குறும்படம். | இணைப்பு கீழே |

வாழ்வில் திடீரென விவாகரத்தை எதிர்கொள்கிறாள் ஓர் இளம்பெண். இது அவளுக்கு பேரிடியாக அமைகிறது. அவளால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவனுடன் ஏற்கெனவே வந்த அதே காபிஷாப்புக்கு தன் தோழிகளுடன் வருகிறாள். அங்கு முதன்முதலில் தன் காதல் கணவனை சந்தித்த நினைவுகளைக் கூறி வெதும்புகிறாள்.

எங்கோ இருக்கும் தன் கணவனை நினைத்து ''என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? வினய் ஒருமுறையாவது என்னிடம் பேசு'' என்று கதறுகிறாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் தென்றலைப் போல நுழைந்த காதல் எப்படி புயலாகிப்போனது. கடைசியில் அந்தப் புயலை எதிர்கொள்ளமுடியாமல் வீழ்ந்த எத்தனையோப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அவளும் இன்று!

''வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகளை அலசிப் பார்த்தால் நாம் எல்லோரும் கையாள்கிற விதங்கள் வேறுபாட்டோடும் முரணாகவும் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்'' என்பதை அவர்களின் அருகிலுள்ள மனிதர்களை வைத்தே மிக எளிதாகக் காட்டிச் செல்கிறது குறும்படம். நாம் எடுக்கும் முடிவுகள் வெறும் நம்மை சார்ந்தது மட்டுந்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இக்குறும்படத்தை பார்த்து முடிந்தபிறகு நமது சிந்தனை சிறகுகள் மெல்ல படபடக்கத் தொடங்குகின்றன.

வினய் விஜயகுமார் கச்சிதமான வசனத்தில், ரவிஷங்கர் வாழ்வுக்கு நெருக்கமான ஒளிப்பதிவில் விஜயலட்சுமி ஜிஎஸ், அனுஷா ப்ரவீண், ஸ்ரீவித்யா அனந்தராமகிருஷ்ணன், ப்ரவீண் நெப்பாலி, ஜனனி விஸ்வநாதன், பேபி அனிக்கா உள்ளிட்டோரின் நடிப்பு ஏதோ நமக்குத் தெரிந்தவர்களை ஞாபகப்படுத்துவது போலவே இருக்கிறது.

ஆதித்யா நாராயணன் இயக்கியுள்ள இத்தமிழ்க் குறும்படம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் முதல் பரிசு பெற்றது.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8163471.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.