Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலிலும் இணையத் தளங்களிலுமா முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபை முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரனை கொண்டுவருவது குறித்து மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கலந்துரையாடவில்லை என  மாகாண சபை உறுப்பினர்கள பலர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளனர்...

இது குறித்து நேற்று (10.08.15) கருத்து வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சுகிர்தன், ஆர்னோல்ட் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து நாம் கனவிலும் நினைக்கவில்லை.... அவரே எமது முதலமைச்சர்... அவருக்கு ஈடானவர் தற்பொழுது எவரும் இல்லை.... அது மட்டும் அன்றி அவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை மாற்று கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.... அவரது அறிக்கை தெளிவாக சொல்கிறது கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளன... நான் அனைவருக்கும் பொதுவானவன்... என்ற அடிப்படையிலேயே அவரது கருத்துக்கள் அமைந்தன... அந்த வகையில் முதலமைச்சருடன் எமக்கு எந்ந முரண்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்....

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாகாண சபை உறப்பினரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “முதலமைச்சரை மாற்ற வேண்டிய தேவை மாகாண சபைக்கு இல்லை.... அவரே நமது முதலமைச்சர்.... தேர்தலுக்காக ஏனைய கட்சிகள் முதலமைச்சருக்கும் கூட்டமைப்பிற்கும் முரண்பாடு என அடிப்படையில்லா பிரசாரத்தை கையில் எடுத்துள்ளன.... ஆனால் நானும் (சித்தார்த்தன்) சுரேஸ் பிறேமச்சந்திரனும் முதலமைச்சரைச் சந்தித்தோம்... அதன் போது தான் கூட்டமைப்புதான் எனத் தெரிவித்த அவர்... கூட்டமைப்பில் பலர் போட்டியிடுவதனால் எவருக்குமே தனது ஆதரவை தெரிவிக்க முடியாது என்றும் பொது நிலைப்பாட்டில் இருப்பதாகவும் எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தான் செயற்படப் போவதில்லை எனவும் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்....

இந்த நிலையில் மாகாண சபையின் அமைச்சர் மட்ட தரப்புகளோடு பேசிய போது முதலமைச்சருக்கு எதிரான நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்....

அவ்வாயின் சுகிர்தன், கஜதீபன், ஆனோல்ட், புளொட் அமைப்பின்  தர்மலிங்கம் சித்தார்தன், சிவனேசன், விசு என்ற லிங்கநாதன் மற்றும் 4 அமைச்சர்கள் ஆகியோர் முதலமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில்லை என்பது உறுதியாகி உள்ளது....

மாகாண சபை உறுப்பிரகள் அனந்தி சசிதரன், சிவாஜலிங்கம் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை... எனினும் அவர்கள் முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு எதிராக அல்லாமல் இனப்படுகொலைத் தீர்மானத்தில் முழுவீச்சுடன் ஈடுபட்டவர்கள்... அவ்வாறாயின் 12 பேர் முதலமைச்சருக்கு எதிராக எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார்கள்.... என்பது உறுதியாக உள்ளது


ஏதிர்க்கட்சி வரிசையில் 7 பேர் மாகாண சபையில் அங்கம் வகிக்கின்றனர்... இவர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை பற்றி பேசியதாக எங்கும் செய்திகள் வெளியாகவில்லை...


சபை முதல்வர்  சி.வி.கே சிவஞானத்திடம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வினவியபோது புனைகதைகளுக்கு எல்லாம் தாம் எப்படி விளக்கம் அளிப்பது எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.



இதேவேளை இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்தல் முடியும் வரை நான் “ஊமை” எனத் தெரிவித்துள்ளார்....

இவ்வாறாயின் முதலமைச்சருக்கு எதிராக முகநூலிலும் இணையத் தளங்களிலிமா நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவரப்பட உள்ளது என மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்...
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122835/language/ta-IN/article.aspx

தேரதல் முடிந்தபின் விக்கிதான் அவர்களின் வீட்டின்  ஒரோயொரு நம்பிக்கை நட்சத்திரம் ஆக மாறுவார் பொறுமை நல்லது .

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டார்.

CM.jpg

இந்நிகழ்வில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் தொடுக்க முற்பட்டவேளை,

நான் பேசவில்லை. தேர்தல் முடியும் வரையில் நான் ஊமையாக இருக்கவே விரும்புகிறேன்.  நான் பேசியதாக அண்மையில் இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் என்றார்.

தேர்தலுக்காக தமிழ்த் தேசிய அரசியலில் மிகவும் கீழ்த்தரமான காட்சிகள் அரங்கேறுகின்றன..!

கொள்கை, கோட்பாடு, மக்கள் அபிமானம் என்கிற ரீதியிலேயே தேர்தல்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், இன்று கட்டுக்கதைகள், பொய்யுரைகள், போலிகளின் கோலோச்சுகை என்று பொறுப்பற்ற அடாவடித் தனங்களினால் வெற்றி கொள்ளப்பட வேண்டியது எனும் நிலைக்கு நகர்த்தியிருக்கின்றது.

அதன் ஒரு கட்டம், ‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம். 18 பேர் கையெழுத்திட்டுள்ளனர் உள்ளிட்ட கட்டுக்கதைகள் செய்திகளாக எழுதப்படும் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. அதை எந்தவித உறுதிப்படுத்தல்களுமின்றி பலரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுத் தேர்தலொன்று நெருக்கிய வந்துள்ள நிலையில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுமா? என்கிற குறைந்த பட்ச யோசனையின்றி, இவ்வாறான கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகள் தமிழ்த் தேசிய அரசியலினை படுகுழியில் தள்ளுவதற்கான முயற்சிகளின் போக்கில் நிகழ்த்தப்படுகின்றது.

மக்களை மடையர்கள் எனும் நிலைப்பாட்டோடு அணுகும் தரப்பினரே இவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் முன்வைக்கின்றார்கள்.

இவ்வாறான, நடவடிக்கைகள் மூலம் தேர்தலை வெற்றி கொள்ளலாம் என்று யோசித்து களமாற்றுகின்றவர்கள், தோல்வியின் பின்னர் அழுது புரண்டு அரற்ற வேண்டியிருக்கும். அந்த ஆற்றாமை என்பது, இன்னும் பயங்கரமானதாக இருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில் மிக அவமானகரமான காட்சிகளை அரங்கேற்றும் தரப்புக்களை மக்கள் கண்டறிந்து அகற்ற வேண்டிய தருணமிது… மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. நிச்சயமாக அதைச் செய்வார்கள்!

 

 

http://www.tamilwin.com/show-RUmtyISVSVlo4G.html 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சீவியை முதன்மைப்படுத்தி கட்டுக்கதைகளையும் பொய்ச்செய்திகளையும் வெளியிடுவது விசில் ஆதரவு கஜே கோஸ்டி பதிவு என்னும் சோரம்போன இணையம்

ஏன் வாலி சார் காப்பி பேஸ்ட்  தமிழ்வின் ஒன்றும் போடவில்லையா ?

பின்னால் நின்று எண்ணெய் ஊத்தி பற்ற வைப்பதே அதுதானே ஆதாரங்கள் நான் தரதேவையில்லை அங்கேயே இன்னும் உள்ளது . 

 

இன்னும் ஒரு விடயம் எதுவுமே பொய் என்று முதல்வர் முடிக்கவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.