Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி சந்திப்பு

Featured Replies

  • நான் தனிப்பட்ட தேவைக்காக சிட்னி வந்திருந்தேன் வரும் போது சுண்டல் மற்றும் கந்தப்பு ஆகியோரை தொடர்பு கொண்டிருந்தேன்.என்னால் போக்குவரத்து பிரச்சினையாலும் மற்றும் சில தவிர்க்கமுடியாத தனிப்பட்ட வேலையின் காரணமாகவும் இந்த மூறை மாவீரர் தினத்துக்கு செல்ல முடியவில்லை.கந்தப்பு என் தொலை பேசி இலக்கத்தை அரவிந்த அண்னாவிடம் கொடுக்க அரவிந்தன் அண்னா அடிக்கடி தொடர் பு கொண்டுகொண்டு இருந்தார்.நேற்று இரவு 7 மணியளவில் தானும் கந்தப்புவும் புத்தனும் என்னை சந்திக்க வருவதாக கூறினார்.அத்துடன் எனது வீட்டுக்கருகில் சுண்டலின் வியாபார ஸ்தாபனம் இருப்பதாகவும் கூறினார்.
  • உடனே சுண்டலுடன் தொடர்புகொண்டு அவரின் சில விபரங்களை கூறினேன் அவரை சந்திக்க வருகிறேன் எனவும் கூறினேன் சுண்டலை சந்திக்க செல்லமுதல் அரவிந்தன் அண்ணாவை தொடர்பு கொண்டு சுண்டலின் இருப்பிடத்துக்கு வருமாறு கூறி விட்டு நடக்கத்தொடங்கினேன் ஒரு 5 நிமிட நடையின் பின்னர் சுண்டலை அவரின் இருபிடத்துக்கு வெளியே கானக்கூடியதாக இருந்தது என்னை கண்டவுடன் நான் தான் என உறுதி செய்ய தொலைபேசியை அழுத்திக்கொண்டு இருந்தார் நான் என் தொலைபேசியை off பன்னிவிட்டு அவருக்கு அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்தினேன்.சுண்டல் என்னதான் அன்னதானம் சாப்பிட்டாலும் தனுஸ் மாதிரி இருந்தார்.
  • அதன் பின் நானும் சுண்டலும் அருகில் இருக்கும் மசாலா இன் என்ற ஒரு தமிழ் சாப்பாட்டு கடைக்கு அரவிந்தன் அண்னாவை தொடர்பு கொண்டு அவரை அங்கு வரச்சொல்லி விட்டு சென்றோம்.கடைக்குள் செல்லமுதல் சுண்டல் கடை பற்றி சொன்னது உண்மையாக இஉந்தது கடையின் மெனுவில் ஆட்டு தலைக்கறி,ஆட்டு குடல் கறி,ஆட்டு மூளை என்பன இருந்தன இதை சொல்லி சொல்லி சுண்டல் சிரித்துகொண்டும் அன்னதானத்தில் இப்படி எல்லாம் பரிமாறுவதில்லையே என ஆதங்கப்பட்டார்
  • ஒரு 15 நிமிடத்தில் 3 வந்தனர் எனக்கு அவர்கள் அறிமுகப்படுத்தமுதல் அவர்களை நான் இனம் கண்டு கொண்டேன் அரவிந்தன் அண்ணா நான் எதிர்பார்த்த மாதிரி இருந்தார்.கந்தப்பு தாத்தா இளமையாக இருந்தார் ஒரு 33 வயதிருக்கும் புத்தன் போதி மரத்துக்கு கீழே ஜானம் பெற்ரது போல அமைதியாக இருந்தார்.பின் யாழ் களத்தை பற்றி உரையாடினோம் பழையவர்கள் இப்போது வருவதில்லை என எல்லோரும் குறைபட்டனர் குறிப்பாக டக்லஸ் வருவதில்லை என சொன்னார்கள் சில தலைப்புகளை பற்றி யும் கலந்துரை யாடினோம் அப்போது வெய்ரர் வந்தார் என்ன வேணும் எனக்கேட்டார் சுண்டலுக்கோ ஆட்டு தலைக்கறியில் ஒரு கண் ஆனால் அதை காட்டிக்கொள்லாமல் புரியாணி சொன்னார் நானும் அதையே சொன்னேன் மற்றைய மூவரும் மங்கோ லசி கானும் என்றார்கள் ஏன் என்பது ஒரு 1 மணித்தியாலத்தின் பின்தான் எனக்கு தெரிந்தது.பின் சப்பிட்டு கொண்டே உரையாடினோம்
  • சாப்பிட்டு முடிந்த பின் பில் செட்டில் பண்னும் நேரம் வந்தது சுண்டல் இரண்டு சிவத்த தாளை எடுத்தார் நாம் அனைவரும் மஞ்சள் தாலை எடுத்தோம் ஆனால் சுண்டல் விடாப்பிடியாக தான் குடுத்தார்.சுண்டல் அவசரமாக செல்லவேண்டி இருந்ததால் நாம் சுண்டலிடம் இருந்து விடை பெற்றோம்.நாம் நால்வரும் புத்தனின் வீட்டுக்கு சென்றோம் அருமையான நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு மிகவும் அழக்காக இருந்தது புத்தனின் வீடு.அங்கு புத்தன் தன் துணைவியாரை அறிமுகப்படுத்தினார்.அப்போது நாம் ரெஸ்ரோடண்ட் சென்றோம் என புத்தன் சொன்னபோது ஒரு முறைப்பான பார்வை வந்தது உடனே புத்தன் நனில்லை நானில்லை என அழாக்குறையாக சொன்னார் ஒரு மங்கோ லசி மாத்திரம் குடித்தேன் சாப்பிடவில்லை என சொன்னார்.இதனால் தான் கந்தப்புவும் அரவிந்தன் அண்ணாவும் சாப்பிடவில்லை என தெரிந்தது
  • சிரிது நேரம் நாட்டு நடப்புகளையும் யாழ்கலத்தை பற்றியும் கந்தப்புவின் வெட்டி ஒட்டலையும் அலசினோம் திருமதி புத்தன் அவர்கள் அருமையான தேநீர் தந்தார் பின் புத்தனின் மருமகன் வந்தார் எனக்கு முதலீலே அறிமுகமானவர் அவர் இலங்கையில் எனது பாடசாலையில் கல்வி கற்றவர் சில விடயங்களை கதைதுவீடு 10 மணியாகையில் நாம் அனைவரும் புறப்பட்டோம் ப்த்தன் காரோட அரவிந்தன் அண்ணா கந்தப்ஸ் புத்தனின் மருமகன் மற்றும் நான் புறப்பட்டோம் நான் தங்கீருந்த வீட்டை தாண்டி செல்ல நான் சொன்னேன் இங்கையே இறக்கி விடுங்கள் என அதுக்கு ஒருவர் புத்தன் நடு ரோட்டில இறக்கிவிட்டதா எழுதினாலும் எழுதுவீங்கள் என சொல்லொ கமண்ட் அடித்தார் எமது சந்திப்பு இனிதே நிரைவேறியது எனது சொந்தங்களை சந்தித்தது போல ஒரு திருப்தி கிடைத்தது இச்சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் இச்சந்திப்புகே மூல காரணமான யாழ் கள நிறுவுனர் மோகன் அண்ணாவுக்கும் என் நன்றிகள்

என்னை விட்டுவிட்டா புரியாணி சாப்பிட்டிங்க....செமிக்காது..ச

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மிகவும் அருமையான சந்திப்பாக அமைந்தது..பட் என்ன நேரம் தான் போதவில்லை........... :lol::lol:

யாழ் களத்தின் மூலம் அறிமுகமான உறவுகள் சந்தித்து கொண்டதை அறிந்து கொள்ள மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மற்ற உறவுகளும் முடிந்தால் உங்கள் அனுபவத்தினை எழுதுங்களேன்,

பிரித்தானியாவில் இருக்கும் கள நண்பர்களை சந்திக்க எனக்கும் விருப்பம். ஒரு சில நண்பர்களை ஏற்கனவே சந்தித்திருக்கின்றேன். மற்றவர்களை இந்த டிசம்பர் விடுமுறையில் சந்திக்கலாம் என்று ஒரு நப்பாசை. சாத்தியமாகும் என்று நம்புகின்றேன்.

மதண்ணா, நான் வந்தால் உங்களை சந்திப்பேன்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்திப்புத் தான். கானாபிரபா, யமுனா(??), தூயா பையனை எல்லாம் தவற விட்டுவிட்டீங்களே! இருந்தாலும், ஏதாவது கருத்தாய்வு, திறனாய்வு ஒண்டும் செய்யவில்லையா? இப்படி ஒண்டும் செய்யாமல் யாழ்களத்தின் பெயரைப் பாவிப்பது தப்பு எண்டு கண்டண அறிக்கை ரெடி சொல்லிப் போட்டன். ;) :P :P

தூயவன்,,நீங்கள் தான் அவரோ...அவர் தான் நீங்களோ....ச்சா குளப்பீட்டிங்க மத்தவங்கள..

ஆம் மிகவும் அருமையான சந்திப்பாக அமைந்தது..பட் என்ன நேரம் தான் போதவில்லை........... :lol::lol:

உங்களுக்கு எப்படி போதும்..நீங்கள் தான் பெரிய முதலாளி ஆயிற்றே..

அடப்பாவிங்களா

ஆட்டுத்தலைக்கறி எண்டோண்ணை என்னைக் காய் வெட்டீட்டியள்.

சுண்டல்

-இந்த ஞாயிறு நான் பிறீ, என்னமாதிரி ரெஸ்டோரண்டில சந்திப்பமே?

மறக்காம பேர்சையும் கொண்டுவாரும் :lol:

Edited by kanapraba

பச்சை தாள் என்றால் இன்னும் சிறப்பு..இல்லையா கானாபிராபாண்ணா? ;)

  • தொடங்கியவர்

இப்போது தான் இங்கு வந்து சேர்ந்தேன் மிக அருமையான சந்திப்பு கானா பிரபா அண்ணா வேலைகாரணமாக சென்றதினால் சந்திக்கமுடியவில்லை ஆனால் நிச்சயம் ஜனவரி மாதம் மீண்டும் அங்கு வரவேண்டி உள்ளது சிட்னியில் வசிக்கும் அனைத்து யாழ்களத்து உறவுகளை சந்திக்க ஆசை

நல்ல விடுமுறையாக சிட்னி அமைந்தது இப்போது ஒரே விசராக இருக்குது துன்காபி பிரதேசத்துக்கு குடிபெயரலாமா எனக்கூட யோசிக்கின்றேன். :lol:

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சந்திப்பு.

  • தொடங்கியவர்

அடுத்த முறை வரும் போது துயாவையும் சந்தித்தால் நல்லது துயா நீங்கள் பச்சைதாள்களை எடுப்பீர்கள் தானே

பச்சை தாள் என்றால் இன்னும் சிறப்பு..இல்லையா கானாபிராபாண்ணா? ;)

அதில சுண்டல் குறைவிட மாட்டார். :rolleyes:

பச்சை தாள் என்றால் இன்னும் சிறப்பு..இல்லையா கானாபிராபாண்ணா? ;)

b94a1sblkr6.jpg

இந்த பச்சை நோட்டுங்களா...தூயா அம்மா........ஹிஹி... உது காணுங்களா.... :rolleyes::lol:

  • தொடங்கியவர்

உந்த தாள்கள் இப்போது இங்கு புழக்கத்தில் இல்லை :rolleyes:

தற்போது இங்கு புழக்கத்தில் இருப்பவை

dollar.gif

1138585926aEtMDF.jpg

இவை மட்டுமே

துயா சொன்ன பச்சைத்தாள் இதுதான் என நினைகிறேன்

0017-0408-1919-1952_SM.jpg

ஆனால் சுண்டல் எடுத்த 2 தாள்களும் இந்தவகையை சேர்ந்தவை :P :lol:

ist2_323195_fan_of_notes.jpg

அதே, நான் சொன்னது 100 ஐ தான்....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனை நேரில் பார்த்தபோது ' ஆள் நல்ல உயரம்'. சுண்டலினை ஒரு கையினால் தூக்கக்கூடிய பலசாலியாக இருந்தார். மாஜாபஜார் படத்தில் கடோத்கசனாக நடித்த ரங்காராவின் உயரமும் பலமும் இருந்தது. கானாபிரபாவும் ஈழவனைச் சந்திக்கவிரும்பி இருந்தார். மாவீரர் தினத்துக்கு ஈழவன் வருவதாகச் சொல்லியிருந்தார். அங்கே அரவிந்தன் தொலைபேசியில் ஈழவனுடன் தொடர்பு கொண்டபோது 'வாகன வசதி இல்லாததினால் வரமுடியவில்லை' என்றார். மறு நாள் ஈழவனைச் சந்தித்தோம். கானாபிரபாவுக்கு அன்று வானொலியில் அவரது நிகழ்ச்சி. அதனால் அவரால் வரமுடியவில்லை. தூயாவுக்கு தனி மடலில் 'ஈழவன் மாவீரர் தினத்துக்கு வருவார்' என்று சொல்லியிருந்தேன். தூயா பரிட்சை என்று தனி மடலில் சொன்னார். யமுனாவுடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தனது நண்பர்கள், நண்பிகளோடு சந்திப்பு, வேறு அலுவல்கள் (???)இருப்பதினால் வரமுடியவில்லை என்று சொன்னார்.

ஈழவன் கிட்ட பேசுபவர்கள்..கவனமா இருக்க வேணும் போல...

தூயா பரிட்சை என்று தனி மடலில் சொன்னார்.

பச்சைப் பொய், எல்லா யூனியிலும் பரீட்சை முடிஞ்சுது.

கந்தப்பு வயசாளி எண்டதால தூயாவின் றீல் எடுபட்டுடுது. :rolleyes:

  • தொடங்கியவர்

அப்படிதான் நானும் நினைகிறேன் கனாபிரபா அண்ணா

துயா நான் அவ்வளவு பொல்லாதவன் இல்லை என்னை சந்தித்தவர்களுக்கு என்னை பற்றி தெரியும்

அப்படித்தானே கந்தப்ஸ்

  • தொடங்கியவர்

நல்ல சந்திப்புத் தான். கானாபிரபா, யமுனா(??), தூயா பையனை எல்லாம் தவற விட்டுவிட்டீங்களே! இருந்தாலும், ஏதாவது கருத்தாய்வு, திறனாய்வு ஒண்டும் செய்யவில்லையா? இப்படி ஒண்டும் செய்யாமல் யாழ்களத்தின் பெயரைப் பாவிப்பது தப்பு எண்டு கண்டண அறிக்கை ரெடி சொல்லிப் போட்டன். ;) :P :P

ஹிஹி நாங்கள் குருவிகளை பற்றி கதைக்கவில்லை துயவன்

குருவிகளை உரிச்சு சாப்பிட்டு போட்டு என்ன சிரிக்கிறியல் :P :mellow::mellow::huh::huh:

கானா பிரபா அண்ணா இது சரியில்லை....சொல்லிட்டன்..(நாளை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை முதியோர் பாடசாலையில் பரிட்சையோ?

இருக்காது...காரணம் நீங்களுமல்லவா வந்திருபீர்கள் கந்தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சுண்டல் எடுத்த 2 தாள்களும் இந்தவகையை சேர்ந்தவை :P :unsure:

2 புரியணிக்கும் 3 மாம்பழ லசிக்கும் 2 சிவப்புத்தாளா??? அவ்வளவு விலையா??? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.