Jump to content

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!


Recommended Posts

Posted

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்த்கள் பவுத்த சமயத்தில் சாதி வேறுபாடில்லை என்பதக்காவே அப்படி மாறியதாக பி.பி.சி யில் மதம் மாறியதாக சொன்னார்கள்.

ஆக இவ்மதமாற்றத்துக்கு எல்லாக்காரணத்தையும் பிராமண சாக்கடைகளே ஏற்க வேண்டும்.தமிழில் பூஸை செய்ய பின்னிற்கும் இவர்கள் தமிழரா

  • Replies 102
  • Created
  • Last Reply
Posted

தூயவன்! நான் சொன்னதை மீண்டும் விளங்காமல்தான் துள்ளிக் குதிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

ஆனால் உங்களுக்கு அப்படி என்ன விளங்கியது என்றுதான் எனக்கு புரியவில்லை.

தயவு செய்து சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமணர்களைக் கழு ஏற்றியது என்றும், அது தப்பு என்றும், வெக்கம் போட்ட உம் மனதில் அவ்வாறான ஒரு சிந்தனையிருப்பதைப் பார்க்கின்றபோது, அறிவுரை சொல்லத் தகுதியற்றவர் என்ற நிலையையே இது காட்டுகின்றது.

நீங்களே அவ்வாறு சிந்தனை கொண்டிருககும்போது மற்றவர் பிழை என்று சொல்கின்றபோது முரண்பாடாகத் தெரியவில்லையா?

Posted

அது சரி அப்ப சமணர்கள் அப்பர் பெருமானை(திருநாவுக்கரசர்) என்ன செய்தார்கள்...??? "கூற்றாயினவாறு விலக்ககலீர் , கொடுமை பல செய்தன நானறியேன்" எண்டு ஏன் பாடினாரோ....

ஒருவேளை அவர் சமணக்கடவுளை வேண்டித்தான் அந்த பாடலை பாடினாரோ என்னவோ...

Posted

தூயவன்! நான் நினைத்த மாதிரி நீங்கள் தவறாகத்தான் விளங்கிக்கொண்டிருக்கிறீர்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்எஸ்எஸ் தான் கலவரத்துக்கு காரணம் என்று உங்களால் சொல்ல முடியுமா? சும்மா மேற்கத்தையப் பிரச்சாரங்களுக்கு அடிபணிந்து கதைக்காதீர்கள். கஸ்மீரிலே இந்துக் குடும்பஙங்களை மட்டுமே குறிவைத்து முஸ்லீம்காடையர்கள் தாக்குவதும், கொன்று குவிப்பதையும் அறியாத, அல்லது அவ்வாறு காட்டதா செயற்பாட்டைக் கொண்டபடி, இருப்பதை கண்டு கொள்ளமாட்டீர்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் தான் எல்லாம் பெர்றுப்பு என்று கதை விடுங்கள்.

கோத்ரா ரயில் எரிப்பின் பின்னர் தானே இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது, அவ்வாறு தாவுத் இப்ராகிம் மும்பாய்க் குண்டு வெடிப்புக்களுக்கு காரணமாக இருப்பதை அறியமாட்டீர்களா!

ஆனால் அதற்கு உண்மைக் காரணமே, பாகிஸ்தானின் சதியாகவே இருக்க வேண்டும் என்பது தான் உண்மை. ஏன் என்றால் தாவுப் இப்ராகிம் குண்டு வைத்தது தொடர்பாக சிபுசேரன் இப்போது குற்றவாளி எனக் காணப்பட்டதன் மூலம் இந்தியாவில் கலவரங்களைத் தூண்டி இந்தியாவை அழிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கொள்கையால் தான் இந்தக் கலவரங்கள் வந்தன.

சிபுசேரன் மட்டுமல்ல, நக்மா, கோவிந்தா போன்றவர்கள் தாவுப் இப்ராகிம் கூட நின்று செயற்பட்டார்கள் என்று ஆதாரம் வெளியானது. வழக்கு இப்பவும் நடக்கின்றது. அந்தக் குண்டு nடிப்பு, கலவரங்களில் இனமதபேதமின்றி, பாகிஸ்தானால் விலைக்கு வாங்கப்பட்டவர்களே காரணம் எனலாம்.

ஆனால் கடைசியில் ஆர்எஸ்எஸ் மீது பழி போடும் கபடத்தை பாகிஸ்தானோடு சேர்ந்து இந்து மத விரோதிகளும் செய்கின்றார்கள். இப்படியான சூழ்ச்சியை உணர்ந்து கொண்ட ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹந்து பரிசத் போன்றவை, பிஜேபி பதவி வந்த பின்னர், உணர்ச்சிகர அறிக்கைகளை விடுவதில் இருந்து விலத்தி நிற்கின்றன.

Posted

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று நிரூபிக்கப்பட்டு விட்டது!

அதை நீங்கள் கேள்விப்படவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசுத்தப்பட்ட கோவில்கள், தலை முண்டமாக்கப்பட்ட கடவுள் சிலைகள், ஆபாச கிறுக்கல் வரிகள் தாங்கும் கோவில் சுவர்கள்; சிறுபான்மை இந்துக்களின் தகர்ப்பட்ட வீடுகள் மற்றும் காலனிகள்; இந்து புனித நூல்களின் எரிக்கப்பட்ட பக்கங்கள்; ஜீப்பில் கட்டப்பட்டு இழுக்கப்பட்டு கொலையுண்ட கணவன் மனைவி; "மதவாதி" அல்லாத முஸ்லிம்களால் இந்துக்கள் எனப்படும் "புற்றுநோய்" அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்...

இவை ஆப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ அல்ல.....

இவை, வருத்தம் தரும் ஆனால் உண்மையான காஷ்மீர் புகைப்படங்கள், சமீபத்தில் ஒரு எக்சிபிஷனில் காட்டப்பட்டன.

'Sakshatkar"An encounter with truth' நிஜம் " உண்மையின் நேர்முகம் " என்று பெயரிடப்பட்ட இந்த எக்சிபிஷன் பனூன் காஷ்மீர் என்ற அமைப்பால் நடத்தப்பட்டது.

தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல், அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை; சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.

"ஹரி பர்வத் கோட்டையிலிருந்த இருபது சிலைகளில் சிறந்த மகாகாளியின் கருப்பு சிலை யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டது. விலை மதிப்பற்ற 9வது நூற்றாண்டு சிலை ஆனந்த நாக் லோக்பவனிலிருந்து காணாமல் போய்விட்டது. தேவன் கோவில் சிவலிங்கம் மர்ம்மான முறையில் காணாமல் போனது. இவை மறைந்த சில நாட்களிலேயே, குண்டு வெடிப்புகளும் ஆரம்பித்தன" என்றார் இந்த கண்காட்சிக்கு வந்த சல்மான் ருஷ்டி.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சனையை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இன்றும் அவர் கொலைமிரட்டலில் வாழ்கிறார்.

கண்காட்சியின் ஒரு புகைப்படம் இதயத்தை பிசைந்து வருத்தப்பட வைத்தது. புல்வமாவின் ஹெர்மானில் இருந்த ஒரு இந்து தம்பதிகள் ஜீப்பில் கட்டப்பட்டு உயிர் போகும்வரை இழுத்துச்செல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் 'இந்துக்களாக இருந்ததுதான்.

ஸ்ரீநகர் பஸந்த்பா கோவிலின் நொருக்கப்பட்ட சிவலிங்கம், பாரமுல்லாவின் கோஜ்பாவின் தலை வெட்டிய ஆதிசங்கர்ர் சிலை; ஸ்ரீநகர் பதேஹ்கதலில் உள்ள ரகுநாத் கோவில் அசிங்கப்படுத்தப்பட்ட சிவலிங்கம்; தரைமட்டமாக்கப்பட்ட அழகிய மூன்றடுக்கு குப்த்கங்கா கோவில் பாரமுல்லாவில்; நவ்கதலில் உள்ள தர்பூணி கோவில் நூலகத்தின் எரிக்கப்பட்ட இந்து வேத நூல்கள்.... எல்லாம் பார்வையில் இருந்தன.

ஔரங்கசீப், ந்தீர்ஷா, தைமூர் இவர்களின் அடக்குமுறையை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்த இந்த கண்காட்சி கஷ்மீரின் ஆறு மாவட்டங்களில் மூன்று வருஷமாக ஆராய்ந்து வெளியிடப்பட்டவை.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த படங்கள் எல்லாமே, அநீதி இழைக்கப்பட்டவர்களோ அல்லது வெளி ஆட்களோ தானாகவே எடுத்த அமெச்சூர் புகைப்படங்கள். சில சரியான கேமரா கூட இல்லாமல் காமாசோமா என்று....

இந்துக்கள் காஷ்மீரில் ஜெனோசைட் (இன அழிப்பு) சந்தித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அரசாங்க தரப்பில் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள். இந்த சுய மறுப்புக்கு மாற்றமாக நாங்கள் எடுத்த முயற்சி இது என்கிறார் பனூன் காஷ்மீரின் தலைவர் டாக்டர் அஜய் சுர்ங்கூ.

ஸ்ரீநகர் ஜைனல்கதலில் உள்ள மீர் நியாஸ் அகமத் எழுதிய ஒரு கடிதம் அல்சபா என்ற பத்திரிகையில் வெளி வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அவர் எழுதுகிறார்.

"I claim to be a rational and non-communal Muslim but at the same time, I sincerely feel that we Kashmiri Muslims should try our best to thwart any attempt by Pundits to return to the Valley. Pundits have been a cancer and once this cancer is removed, it should not be allowed to re-appear",

"நான் ஒரு முற்போக்கு இன-சார்பற்ற ஒரு முஸ்லிம். அதே சமயம், காஷ்மீர் இந்துக்கள் திரும்பி வரும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் ஒரு புற்றுநோய். இந்த நோய் அகற்றப்பட்டுவிட்டால், மறுபடியும் வர அனுமதிக்கக்கூடாது"

உலகப்புகழ் வாய்ந்த பாமியன் புத்தர்களை நொறுக்கிய இயக்கத்தினரின் செயல்பாடுகளே இப்பொழுது காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது என்று தெளிவாகிறது.

சண்டையில் இருக்கும் அயோத்தியின் மசூதி இடிப்பு, பரோடாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா இடிப்பு என்று அரசியல் பண்ணும் மதச்சார்பற்றவர்கள் இதைப்பற்றி பேசாதது ஏன்?

தீவிரவாதம் சகிப்புத்தன்மை அற்ற ஒரு மனப்பான்மையை உருவாக்குகிறது. தீவிரவாதம் எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல. இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது. இன அழிப்பு தீவிரவாத்த்தின் உச்ச கட்டம். காஷ்மீரில் அமைதி என்பது காஷ்மீர் இந்துக்கள் தன் மண்ணுக்கு திரும்பாதவரை ஒரு கனவாகவே இருக்கும்.

நன்றி:ஜயராமன்

Posted

சிங்களவர்களும் விடுதலைப்புலிகள் பற்றி இப்படித்தான் எழுதுகிறார்கள்.

Posted

இந்து மதம் எத்தனை இடர் வந்தாலும் மீண்டும் செழிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள்.

முன்பு பௌத்தமும், சமணமும் செழித்து வளர்ந்த பொழுது, அப்போதைய "இந்து மதம்" தாழ்ந்து போயிருந்தது. அதன் பிறகு நாயன்மார்கள், ஆழ்வார்கள் நடத்திய பக்தி இயக்கத்தின் போது, பல இலட்சம் சமணர்களும், பௌத்தர்களும் கொல்லப்பட்டார்கள்.

இந்து சம்யம் என்பதை விடுத்து சைவநெறி என்பது சரியாக இருந்து இருக்கும்... ஏண்டால் சைவம் தளைத்த இடங்களில் சமணமதம்தான் பெருகி இருந்தது... அதுவும் அப்போதைய பாண்டிய நாட்டில் என்பதுதான் வரலாறு... சோழர்க வீழ்ந்து கிடந்த காலத்தில்கூட வீரசைவர்களாகத்தான் அறியப்படுகிறார்கள்...

சமணமத்தில் இருந்த பாண்டியன் வெப்பு நோய் நீக்கியதும், அப்பர் பெருமானின் வயிற்றுவலியை நீக்கியதும் சிவனை நோக்கிய பதிகம்தான்... அதுவும் சுத்தமான தமிழ்பதிகம்... அந்த காலப்பகுதியிலேயே அது நிரூபிக்க பட்டது சிவனுக்கு தமிழ் தெரியும் எண்று... இப்போது ஐயர் மாரை சாகடித்துத்தான் இறைவனுக்கு தமிழ் படிப்பீக்க வேண்டியதில்லை...

மற்றயது பௌத்தம் பெருகிய இடம் மகதநாடு அங்கிருந்துதான் "சாக்த்தம்" தமிழரின் கொற்றவை வளிபாடுகளில் ஒண்றாக்கபட்டு இணைக்கப்பட்டது தமிழரின் காடுகள் வீரத்தின் தேவதையான கொற்றவை மௌரியர்களின் வீரத்தின் கடவுள் காளியின் தோற்றத்தோடு சேர்க்கப்படார்.. அதுக்கு முக்கியமான காரணமாக இருந்தது தமிழர் ஏமாளிகளாய் இருந்ததுதான்... அதுவும் சூலங்களை வைத்து கும்பிட்டவர்கள் ஆயிரம் கைகளுடன் ஆயுதங்களுடன் ஒரு உருவத்தை பார்த்ததும் வாயைபிளந்து விட்டார்கள் அவ்வளவுதான்...

இந்தியாவின் பலமதங்கள் இணைக்கப்பட்டு இந்து மதம் எண்று ஆக்கப்பட்டு இருக்கிறது... எங்களின் சைவம் எண்ற சொல்லை கூட யாராவது வடமொழி எண்று சொல்ல வரலாம்... ஆனால் அதில் உண்மைதன்மை இல்லை... சிவனை வட இந்தியாவில் சுடலை சாம்பலை பூசிய பரதேசி எனும் பாணியில் ஈஸ்வர் எண்று பக்கத்து வீட்டுக்காறனை போலத்தான் பார்க்கிறார்கள்... அங்கு யாரும் திருநீறு பூசுவதில்லை... மேற்க்கில் குங்குமமும், வடக்கில் நாமமும்தான் அவர்களின் வளக்கு... நாங்கள்தான் சந்தணமும் திருநீற்றுக்கும் அடிபடுபவர்கள்...

நல்லதை உள்வாங்குகிறோம் எண்று எங்களவர்களாய் உள்வாங்கிய கடவுள் தொழுகை முறை ஒட்டுமொத்தமாய் எங்களது எதுவும் இல்லை எண்று கட்டி இருக்கும் உடுப்பைகூட களட்டி எறியும் நிலைக்கு நாங்கள் போகவேண்டியது இல்லை...!

இண்றைய சாதிகளுக்கு எல்லாம் தமிழர்களின் அரசியலும் தலைமைகளும்தான் காரணம்... ஏன் பௌத்தத்திலும், (சிங்களவரையே உதாரணம் எடுங்கள்) , கிறிஸ்த்தவகளிலும், அது ஏன் இஸ்லாமியர்களில் சாதியம் வந்ததுக்கு இந்துக்களும் பிராமணர்களும்தான் காரணம் எண்றாவிட்டால் சரி...!

சிங்களவர்களும் விடுதலைப்புலிகள் பற்றி இப்படித்தான் எழுதுகிறார்கள்.

காஸ்மீரையும் ஈழத்தியும் ஒப்பிடாதீர்... காஸ்மீரம் பாக்கிஸ்தானால் இந்தியாவுக்கு தலையிடி குடுக்க எண்றே ஆரம்பித்து ஆதரிக்கிறது பாக்... ஆனால் இந்தியாவின் வரலாற்று பின்னணியுடன் தனித்து போராடுகிறது ஈழம்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே தான் தல!

சேயோன் என்று முருகனையும், மாயோன் என்று திருமாலையும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் பின்னர் வந்த ஆரியர், தங்களுக்கு முக்கியத்துவமில்லாத கடவுளை விஸ்ணு என்று திருமாலோடு சேர்த்து இணைத்து ஒரே வழிபர்டாக்கி விட்டார்கள்.

திருமால் என்ற சொல் கூட தமிழ் தான். ஆரியர் எம் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு, அதை தங்களுக்குரியதாக ஆக்கியது, நிகழ்காலத்தில் கதிர்காமக் கந்தனுக்கு நடப்பதற்கு நிகரானது. தமிழரின் கோவிலாக இருந்த கதிர்காமத்தை தாங்களும் வழிபடத் தொடங்கி இன்று சிங்களமயமாக்கி விட்டார்கள். அவ்வாறு தான் எம் பக்தி முறையையும் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

எமக்குரியதை ஆரியர்களுக்கு உரிமை என்று சொல்லி விட்டுக் கொடுக்க முடியாது.

Posted

சேயோன் என்று முருகனையும், மாயோன் என்று திருமாலையும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் பின்னர் வந்த ஆரியர், தங்களுக்கு முக்கியத்துவமில்லாத கடவுளை விஸ்ணு என்று திருமாலோடு சேர்த்து இணைத்து ஒரே வழிபர்டாக்கி விட்டார்கள்.

திருமால் என்ற சொல் கூட தமிழ் தான். ஆரியர் எம் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு, அதை தங்களுக்குரியதாக ஆக்கியது, நிகழ்காலத்தில் கதிர்காமக் கந்தனுக்கு நடப்பதற்கு நிகரானது. தமிழரின் கோவிலாக இருந்த கதிர்காமத்தை தாங்களும் வழிபடத் தொடங்கி இன்று சிங்களமயமாக்கி விட்டார்கள். அவ்வாறு தான் எம் பக்தி முறையையும் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

எமக்குரியதை ஆரியர்களுக்கு உரிமை என்று சொல்லி விட்டுக் கொடுக்க முடியாது.

ஆரியர்கள் சொல்லி வைத்த விஸ்னு எனும் தெய்வம்கூட தமிழர்களின் வளக்கில் இருந்த விண் தெய்வம்தான் அதாவது நீலநிறமுடைய வருணர்(மழை) "பார்" எண்றும் நிலத்தை அன்னையாக வளிபட்ட தமிழனுக்கு அது பார்வதியாக்கப்பட்டது... எண்றுமே சிவன் என்பது சிவப்பான சூரியனை தான்...! (சுட்டெரிக்கும் வெய்யிலும், நெருப்பும் சாம்பலாக்கியதைத்தான் நாங்கள் உடலிலே திருநீறாய் பூசிக்கொள்கிறோம்) நாங்கள் சிவனை லிங்கத்தோடு சங்கமித்து சிவலிங்கமாக்கிவிட்டோம்... அதுக்கு ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி எண்று வேற முன்னுரை குடுத்தார்கள்...!

கதிர்காமத்தை பற்றி சொல்லவேணும்.. இன்னும் 300 வருசம் களித்து கதிர்காமம் முருகன் சிங்களத்தில் இருப்பதால் முருக கடவுளே சிங்களவனின் தமிழர் மீதான திணிப்பு எண்று சொல்லி எங்கள் சந்ததியினர் முருகனை ஒதுக்கி வைக்க சொல்லி வாதிட முன்வரலாம்...! ஏனெண்றால் வரலாறு அவ்வளவு வேகமாக திரிபடைகிறது...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதங்களைக் கட்டிக் காக்கவும், வளர்க்கவும், அதன்மூலம் சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் விடயங்களையாற்றவும் தற்போது முடிகின்றதா? இந்து/சைவ மதம் நலிவடைந்து போவதற்கு வியாபாரத்தன்மையை புகுத்தியதுதான் முக்கிய காரணம். இது புலத்தில் மட்டுமல்ல, இந்து மதம் கட்டிக் காக்கப்படவேண்டிய இந்தியாவில் கூட நடைபெறுகின்றது. இந்தியாவில் பல கோவில்கள் அழியவிடப்பட்டும், புனருத்தாரணம் செய்யப்படாமலும், வருமானத்தை தனிநபரோ/குழுக்களோ கையகப்படுத்தும் நிலைதான் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் மதம் எப்படி நிலைக்கும்?

Posted

அதே தான் தல!

சேயோன் என்று முருகனையும், மாயோன் என்று திருமாலையும் தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் பின்னர் வந்த ஆரியர், தங்களுக்கு முக்கியத்துவமில்லாத கடவுளை விஸ்ணு என்று திருமாலோடு சேர்த்து இணைத்து ஒரே வழிபர்டாக்கி விட்டார்கள்.

திருமால் என்ற சொல் கூட தமிழ் தான். ஆரியர் எம் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு, அதை தங்களுக்குரியதாக ஆக்கியது, நிகழ்காலத்தில் கதிர்காமக் கந்தனுக்கு நடப்பதற்கு நிகரானது. தமிழரின் கோவிலாக இருந்த கதிர்காமத்தை தாங்களும் வழிபடத் தொடங்கி இன்று சிங்களமயமாக்கி விட்டார்கள். அவ்வாறு தான் எம் பக்தி முறையையும் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

எமக்குரியதை ஆரியர்களுக்கு உரிமை என்று சொல்லி விட்டுக் கொடுக்க முடியாது.

பின்னால் வந்த ஆரியர் என்பது ஆரிய வெறி, ஆரியர் என்பதே திராவிடம் பேசியவர்கள் கூறும் பொய் என்றால் நீங்கள் சொல்லும் ஆரியர் எப்படி, எங்கிருந்து வந்தனர்?ஆரியர் இருந்தனர் வெளியில் இருந்து வந்தனர் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆரியர் ஏன் உங்கள் மதத்தில் உள்ள கடவுளர்களை தமது இந்து மதத்திற்கு உட்படுத்தினார்கள்? ஏன் அப்படிச் செய்தார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்?

Posted

கடைசியாக தலயும், தூயவனும் சொன்ன கருத்துக்களில் பெரும்பாலானவற்றை நான் வரவேற்கிறேன்.

ஆனால் அப்பர், சம்பந்தர் பாடிய தமிழை புரிந்து கொண்ட கடவுளுக்கு எதற்கு சமஸ்கிருதத்தில் பூசை?

எதற்காக சம்பந்தர் தன்னுடைய பாடல்களில் தமிழை வலியுறுத்தினார்?

அதற்கான அவசியம் ஏன் வந்தது?

அவர்கள் சைவ ஆலயங்களில் தமிழில் பூசை நடைபெற வேண்டும் என்று போராடியவர்கள். அவர்களின் காலத்தில்தான் வழிபாடுகளில் சமஸ்கிருத முறை அதிகமாக திணிக்கப்பட்டது. அதற்கு முன்பு சைவத்தில் பெரிதாக சமஸ்கிருத வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோரின் விருப்பப்படி தமிழில் வழிபாடு நடப்பதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

நாங்கள் இந்து மதத்தை பற்றி கதைக்கின்ற பொழுது, கோபம் வருகின்ற உங்களுக்கு, உங்கள் தாய்மொழியை ஆலயங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டது பற்றி கோபம் வரவில்லையே?

தமிழர்களின் அனைத்து சடங்குகளிலும் பார்ப்பனர்கள் புரியாத ஒரு மொழியில் ஆபாசமாக பேசி விட்டு போவது குறித்து உங்களுக்கு கோபம் வரவில்லையே?

நீங்கள் மதம் வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அது சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.

நாம் மதத்தை விட்டு விடு என்கிறோம். நீங்கள் மதத்தை சீர்திருத்துவோம் என்கிறீர்கள்.

சரி! உங்கள் மதம் சீர்திருத்தப்படுவதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அதை நீங்கள் செய்தால், நாமும் வேறு வேலைகளை பார்க்கப் போகலாமே!

Posted

சபேசன்...! சமஸ்கிருத்தை யாரும் இங்கு வரவேற்க்கவில்லை எண்று நம்புகிறேன்... இண்றும் ஆலயங்களில் கருவறைகளில் ஐயரால் சொல்லப்படும் விடயமாக மட்டும்தான் சமஸ்கிருதம் இருக்கிறது... தமிழில்த்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எண்றாலும் பூசை செய்பவர் என்னத்தை சொல்லுகிறார் என்பது உங்களுக்கு கேட்க்க முடியாது... மணியாட்டல் வேறு...!

யார் கோயிலில் பூசை செய்தாலும் கோயிலுக்குள் நீங்கள் செருப்பு அணிந்து செல்பவராக இருக்க மாட்டீர்கள் எண்று நம்புகிறேன்... கோயிலுக்கு போகும் போது புலால் உண்டவரையோ அசுத்தமானவரையோ உள்ளே விட மனம் வராது... அப்படி மனம் வருபவராக இருந்தால் நீங்கள் கோயில் போயும் புண்ணியம் இல்லை வீட்டிலேயே வளிபடலாம்... இந்தனையும் தாண்டி தகுதியான ஒருவரைத்தான் நீங்கள் யாராக இருந்தாலும் கடவுளுக்கு பூசை செய்ய அனுமதிக்க போகிறீர்கள்... அப்படியே நீங்கள் ஊரில் இருக்கும் எல்லாரையும் நேர அட்டவணைப்படி பூசை செய்ய அனுமதிக்க போகிறீர்களா..??? அது உங்களால் முடியுமா

அப்படி பூசை செய்ய வேண்டுமானால் உங்களால் காலக்கிரமத்தில் பூசை செய்ய முடியுமா... அல்லது செய்வீக்க முடியுமா..??? அப்படி முடியும் எண்றால் சொல்லுங்கள் உங்களுக்கு கோயில் நடத்த வேண்டிய தானம் பெற்றுத்தர முயற்ச்சி செய்கிறேன்...

அப்படி உங்களால் முடியவில்லை எண்றால் இதுவரை பூசை செய்தவரை அதுக்கு தயாராக இருக்கும் ஐயரை தமிழில் மந்திரம் சொல்லி பூசை செய்ய சொல்லுங்கள்... அவர் சொல்லாவிட்டால் அவருக்கு கொடுக்கும் தானத்தை நிறுத்துங்கள்...! அதுக்காக இந்து மதம் அது சொன்னது இது சொன்னது எண்று சமாளிக்காதீர்கள்...!

Posted

சைவ சமயத்தை சீர்திருத்துவது என்பது தமிழில் வழிபாடு செய்வதோடு முடிந்து விடாது.

சமஸ்கிருதமும் பிறந்ததில் இருந்து முப்பத்தொன்று அது, இது என்று இறக்கும் வரை வருகிறது. வெறுமனே ஆலயத்தின் கருவறைக்குள் மட்டும் அது நிற்கவில்லை.

இப்படி ஒவ்வொரு விடயத்திலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஆயிரம் குப்;பைகள் இருப்பதால்தான் எத்தனையோ பேர் முயன்றும், அதை சீர்திருத்த முடியவில்லை.

இந்து மதம் அது சொன்னது, இது சொன்னது என்று நான் சொல்லவில்லை.

பார்ப்பனர்கள்தான் சொல்கிறார்கள். ஆகம விதி சொல்கிறது, வேதம் சொல்கிறது என்று அவர்கள்தான் சொல்கிறார்கள்.

நான் சீர்திருத்த முனையவில்லை. நான் அதை செய்யவும் மாட்டேன். நான் மதம் வேண்டாம் என்று சொல்பவன். அவைகள் ஒழிந்து போகட்டும் என்று சொல்பவன்.

மதங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள்தான் மதங்களை சீர்திருத்த வேண்டும்.

Posted

மதத்தை எதிர்க்கும் தவறை நான் எண்றைக்கும் செய்ய மாட்டேன்... இந்து என்பதுக்கும் சைவன் என்பதுக்கும் இருக்கும் வித்தியாசம்தான் தமிழுக்கும், சமஸ்கிருத்துக்கும். இருக்கிறது... தென்னகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது..,. ஆந்திராவில் நிலச்சுவாந்தார் அடிமை முறைகள் கூட இன்னும் வளக்கில்தான் இருக்கின்றது தமிழகம் அந்த நிலையில் இல்லை... கல்வியறிவில் தமிழகம் வளர்கிறது... இதுதான் தமிழர்களை அறிவு இருட்டுக்குள் இருந்து கொண்டு வருமேதவிர வறட்டுத்தனமான ஆரியர் பாப்பணர் எதிர்ப்புக்கள் இல்லை...

கல்வியிலும் பகுத்து அறியும் தன்மையில் வளராத எவரும் நாகரீகத்தில் வளரமுடியாது, அவர்களை எவராலும் மாற்றவும் முடியாது... இந்து மதம் எண்றாலும் சைவம் எண்றாலும். அது போதிப்பது பதி, பசு, பாசம்தான்... அதை தமிழில் அன்பே சிவம் என்கின்றோம்..

ஆணவம், கன்மம், மாயையில் இருந்து விலகி வாழுங்கள் என்பதை சொல்லித்தான் தட்சனாமூர்த்தியாய் சிவன் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கின்றார்... சைவம் தளைத்தோங்க இரண்டுகால் விலங்கை எப்படி மனிதனாக வாழ்வது என்பதுக்கு வளியைத்தான் சைவம் சொல்கிறது... சைவ நெறி சொல்லும் வளக்கின் படி இங்கு சபேசன் வாழவே இல்லை என்கிறாரா..??

எந்த மதமும் எப்போதும் எவரையும் கொல்லவோ அளிக்கவோ சொல்லவில்லை அந்தக்காலத்து அரசியல் நிலைகள்தான் மதங்களின் பெயரால் செய்யப்பட்ட காரணம்... இதுவே தமிழீழ சைவர்களுக்கு நல்ல நிலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறது... அதனால் மத்தை பற்றி கவலை கொள்ளும் நிலையில் என்னவர்கள் என்னை வைக்க வில்லை...

Posted

இப்படித்தான் பொதுவாக மதநம்பிக்கைள உள்ளவர்கள் பதில் சொல்வார்கள்.

ஏதோ ஒன்று கேட்க, ஏதோ ஒன்று சொல்வார்கள்.

நான் சைவத்தின் சித்தாந்தம் குறித்து ஏதாவது கேட்டேனா? அல்லது சைவத்தின் சித்தாந்தங்கள் என்று சொல்லப்படுபவைகள் பற்றியும், அவைகள் தோன்றின விதம் பற்றியும் எனக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

நான் இவைகளை கேட்டேனா?

சைவ சமயத்தில் "நடைமுறையில்" இருக்கின்ற தவறுகளை சரி செய்வது பற்றித்தானே என்னுடைய கேள்வி அமைந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்னால் வந்த ஆரியர் என்பது ஆரிய வெறி, ஆரியர் என்பதே திராவிடம் பேசியவர்கள் கூறும் பொய் என்றால் நீங்கள் சொல்லும் ஆரியர் எப்படி, எங்கிருந்து வந்தனர்?ஆரியர் இருந்தனர் வெளியில் இருந்து வந்தனர் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆரியர் ஏன் உங்கள் மதத்தில் உள்ள கடவுளர்களை தமது இந்து மதத்திற்கு உட்படுத்தினார்கள்? ஏன் அப்படிச் செய்தார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்?

ஆரியர் இந்தியாவிற்கு குடிபுகுந்தவர்கள் என்பது மறுக்கப்படவில்லையே.அது பற்றிய விவாதத்துக்கும் போகவில்லை. இன்று தமிழுலக வரலாற்றில் அவ்வாறு வந்தவர்களின் பங்களிப்பும் ஏராளமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் குறித்த சமூகம் தான் ஜாதி வெறிக்குப் பொறுப்பு என்று கூறிக் கொண்டு, அதே ஜாதி வெறியோடு செயற்படுவது என்ன நியாயம்? இரண்டுக்குமிடையில் வேறுபாடு இல்லையே!

மதம் பரப்பவென வந்த வீரமாமுனிவர், என்ற கிறிஸ்தவப் பாதிரியார், குரு-சீடர் கதை என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில் இருந்த ஆச்சிரம கல்வியை நக்கலடித்தபோது தமிழ்காத்த பெருவீரர் என்று ஆதரிக்க முடிகின்றது. ஆனால் தமிழுலகத்துக்கு சளைக்காமல் பங்காற்றிய பிராமணர்களை ஜாதி போட்டு, வெளியேற்றத் துணிகின்றீர்கள்.

ஆரியருக்கு ஒழுங்கான வழிபாட்டு முறையும், நேர்த்தியான சிந்தனைகளும் இல்லாததால் அவர்கள் புதிய கடவுள் ஒன்றைத் தேட வேண்டி ஏற்பட்டிருக்கும்.அதானல் சதானதர்மத்தை தழுவியிருக்கலாம். அடிப்படையற்று இந்து மதத்தைத் தூற்றுபவர்களின் செயற்பாடும் இவ்வகையான, பிறிதொரு மதம் ஒன்றை கொண்டுவந்து செயற்படுத்தும் முறையாக அமையப் போகின்றது என்பது தான் என் எண்ணம்.

Posted

தமிழுலகத்திற்கு பங்காற்றிய பிராமணர்கள் 10 பேரை குறிப்பிடுங்கள்!

Posted

ஆரியர் இந்தியாவிற்கு குடிபுகுந்தவர்கள் என்பது மறுக்கப்படவில்லையே.அது பற்றிய விவாதத்துக்கும் போகவில்லை. இன்று தமிழுலக வரலாற்றில் அவ்வாறு வந்தவர்களின் பங்களிப்பும் ஏராளமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில் குறித்த சமூகம் தான் ஜாதி வெறிக்குப் பொறுப்பு என்று கூறிக் கொண்டு, அதே ஜாதி வெறியோடு செயற்படுவது என்ன நியாயம்? இரண்டுக்குமிடையில் வேறுபாடு இல்லையே!

மதம் பரப்பவென வந்த வீரமாமுனிவர், என்ற கிறிஸ்தவப் பாதிரியார், குரு-சீடர் கதை என்று சொல்லிக் கொண்டு இந்தியாவில் இருந்த ஆச்சிரம கல்வியை நக்கலடித்தபோது தமிழ்காத்த பெருவீரர் என்று ஆதரிக்க முடிகின்றது. ஆனால் தமிழுலகத்துக்கு சளைக்காமல் பங்காற்றிய பிராமணர்களை ஜாதி போட்டு, வெளியேற்றத் துணிகின்றீர்கள்.

ஆரியருக்கு ஒழுங்கான வழிபாட்டு முறையும், நேர்த்தியான சிந்தனைகளும் இல்லாததால் அவர்கள் புதிய கடவுள் ஒன்றைத் தேட வேண்டி ஏற்பட்டிருக்கும்.அதானல் சதானதர்மத்தை தழுவியிருக்கலாம். அடிப்படையற்று இந்து மதத்தைத் தூற்றுபவர்களின் செயற்பாடும் இவ்வகையான, பிறிதொரு மதம் ஒன்றை கொண்டுவந்து செயற்படுத்தும் முறையாக அமையப் போகின்றது என்பது தான் என் எண்ணம்.

ஆரியர் வெளியால் இருந்து வந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்றீர்கள்.ஜாதி என்பதை ஏற்படுத்தியது ஆரியர் படைத்த வேதங்கள் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? இந்த ஜாதி என்பது எமக்குத் தேவை இல்லை என்று சொல்கிறோம்.இந்த ஜாதியின் உச்சத்தில் ஆரியர் தம்மை வைத்து அதன் மூலம் தாம் இருக்கும் சமூகத்தைக் கட்டுப் படுத்தினர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?தமக்குப் பயன் அற்ற எதையுமே அவர்கள் செய்ய போவதில்லை.இதை நாங்கள் எல்லா ஆக்கிரமிப்பாளர்களிடமும் காணலாம்.ஆங்கிலேயர் எமக்குக் கல்வியைத் தந்தனர் இரயிலைத் தந்தனர் என்றால் அதனால் அவர்களுக்குப் பயன் இருந்ததால் தானே? அதே போல் ஆரியரும் கடவுளைக் கொண்டு தமது அதிகாரத்தை நிலை நாட்டினர்.அதற்குகாக அவர்கள் கையாண்ட யுக்திதான் சைவக் கடவுள்களை இந்துக் கடவுள்கள் ஆக்கியது.ஏற்கனவே மக்களிடம் இருந்த கடவுள்களை தாம் இயற்றிய இந்து மதத்துடன் இணைத்தன் மூலம் அவர்கள் ஏற்கனவே இருந்த மக்களின் நம்பிக்கைகளைத் தமக்குச் சாதமாகப் பயன் படுத்தி அவர்களை தமக்குக் கீழே அடி பணிய வைத்தனர்.

நாம் கூறுவதெல்லாம் எமக்கு ஆரியர் வெளியால் இருந்து வந்தனர் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை.அவர்களின் எச்சமான சாதியமும் அதன் உச்சத்தில் இருக்க அவர்கள் ஏற்படுத்திய பிராமணர் என்னும் கூட்டமும் இல்லாது போக வேண்டும்.தமிழர்கள் முன் நேற இன்று அது தான் தேவையானதாக இருக்கிறது.எல்லோரும் ஒருவரே எவரும் எந்த மதத்தையும் பின் பற்றலாம் என்ற சுதந்திரமும் விரும்பிய எவரும் மத குருக்களாக வரலாம் என்பதுவும் ஏற்படுத்தப்பட வேண்டியவை.ஆகவே இங்கே மதப்போதகர்களாக வர பிறப்பு ஒரு தகுதியாக இருக்கக் கூடாது என்றே சொல்கிறோம்.

இது தான் உண்மையான மதச்சார் பின்மை, பார்ப்பனீயம் ஒழிய வேண்டிய நிலை.

அடுத்தாக மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை எங்கிறோம்.எவரும் எந்த நம்பிக்கையையும் பின் பற்றலாம், பின் பற்றாமல் இருக்கலாம் அதற்கான சுதந்திரம் எல்லோருக்கும் வேண்டும்.பின் பற்றாமை பற்றிய கருதுக்களைக் கூறவும் சுதந்திரம் வேண்டும்.அது தான் மதச் சார்பின்மை என்பது, எந்த மதமும் அரசால் அரியணை ஏற்றபடாமல் இருத்தல்.

அடுத்தது தமிழர்களுக்கு இருக்க வேண்டிய அறிவியற் பார்வை.இது அடிப்படைக் கல்வி அறிவூட்டல் மூலம் விஞ்ஞானரீதியான கல்வி புகட்டலின் மூலம் ஏற்படுத்தப் பட வேண்டும் என்கிறோம். கடவுள் படைத்தார் என்பதுவும் டார்வினின் பரிணாமாக் கூர்ப்புத் தத்துவமும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.அறிவியற் பார்வை வளர ,பொருளாதார நிலை விருத்தி அடைய கடவுள் நம்பிக்கையும் மதங்களின் செல்வாக்கும் இயல்பாகவே வீழ்ச்சியுறும்.பகுத்தறிவு என்பது புகட்டப்பட்ட நம்பிக்கைகளை கேள்விக் குறியாக்கி சுய சிந்தனையின் பாற்பட்டு சிந்திப்பதே.அதனையே ஊக்குவிக்கிறோம் அதற்காகத்தான் இந்தக் கேள்விகள் எழுத்துக்கள் எல்லாம்.விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருந்தே முற்போக்கான சட்டங்களும், நிறுவனங்களும் ஏற்படும்.எல்லாப் போராட்டங்களும் ஆரம்பத்தில் கருத்துக்களாக சிந்தனைகளாகவே உரு வெடுக்கின்றன.இதனை ஊக்குவிப்பதே நாம் எல்லோரும் இங்கே எழுதுவதன் நோக்கம்.இதற்கு வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது.இங்கே வேண்டப்படுவது தமிழரின் முன் நோக்கிய சிந்தனைகளும் செயற்பாடுகளுமே.பழையன கழிதலும் புதியன புகுதலும் வராலாற்றின் நியதி.

தேசியத் தலைவரின் இந்த வருட மாவீரர் உரையில் இருந்து.....

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால், சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி, அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை. சிங்களத் தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாயன்மாரின் காமவெறி

பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே

சம்மந்தர் தேவாரம்.

என்று பாலறாவாயரான சம்மந்தப் பெருமான் (நாயன்மார்களிலேயே வயது குறைந்தவர்) அருள் ஒழுக ஒழுக பாடுகிறார். இதன் அர்த்தம் தெரியுமா? சமயப் போராட்டத்தின் உச்சகட்டத்தில் சைவத்திற்க்கும் எதிரான சாக்கிய, சமணப் பெண்களைக் கற்பழிக்க எல்லாம் வல்ல பெருமானிடம் திருவுள்ளம் தேடுகிறார் சம்மந்தர். நாயன்மாரே இப்படி என்றால்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாயன்மாரின் காமவெறி

பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே

சம்மந்தர் தேவாரம்.

என்று பாலறாவாயரான சம்மந்தப் பெருமான் (நாயன்மார்களிலேயே வயது குறைந்தவர்) அருள் ஒழுக ஒழுக பாடுகிறார். இதன் அர்த்தம் தெரியுமா? சமயப் போராட்டத்தின் உச்சகட்டத்தில் சைவத்திற்க்கும் எதிரான சாக்கிய, சமணப் பெண்களைக் கற்பழிக்க எல்லாம் வல்ல பெருமானிடம் திருவுள்ளம் தேடுகிறார் சம்மந்தர். நாயன்மாரே இப்படி என்றால்?

அந்தளவுக்கு சமணர்கள் சிங்களவர்கள் போல சைவர்களை (இந்துக்களை) வதைத்துள்ளனர்.

வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாண்டிய மன்னனின் வெப்புநோயைத் தீர்த்து அவனை சமணத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்டதாக உள்ளது.

அதற்காகப் பாடிய தோத்திரம்..

கூற்றாயினவாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பரியாது வணங்குவனெப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றி கைப்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேனடியேன் னதியைக் கெடில

வீரட்டானத் துறையம்மானே’

சமணத்தைத் தழுவிய அப்பர் பின்னர் சூலை நோயால் பாதிக்கப்பட்டு தமக்கை திலகவதியாரின் சிவபக்தியால் குணம் பெற்று..சைவத்தைத் தழுவியதும் சமணர்கள் அவரை...

சுண்ணாம்பறையில் அடைத்து கொடுமைகள் பல செய்தனர்..மதம் கொண்ட யானையை ஏவிவிட்டனர்..கல்லோடு கட்டி கடலிப் போட்டனர்..இப்படியெல்லாம் சமணர்கள் சைவர்களை வதைத்தெடுத்தனர். அப்போதுதான் அப்பரைச் சந்தித்து ஞானசம்பந்தர் சமணர்களினால் பட்ட துன்பங்களைக் கேட்டு ஆற்றாமையில் இப்படிப் பாடினார் போலும்.

நாம் இன்று சிங்களப் படையினரைத் திட்டுவது போல. ஆனால் இன்று அது காமவெறியாக இங்கு சித்தரிக்கப்படுவது கொடுமையோ கொடுமை. இந்து மத சைவத்தின் எதிர்ப்பின் பாலான திரிபுச் செய்திகளே இந்த காமவெறிக் கதைகள். இதைத்தான் பெரியார் என்ற சமய விரோதியும் வெறியரும் தனது அரசியலுக்காகச் செய்தார். :icon_idea:

Posted

நன்றி கிருபன்!

இந்தப் பாடலைத்தான் தேடினேன். நீங்கள் தந்து விட்டீர்கள்.

மற்றைய மதங்களை மதிக்க வேண்டும் என்றும்,அனைத்து மதங்களும் ஒரே வழியையே காட்டுகின்றன என்றும் இன்றைய நாகரீக உலகில் சொல்லப்படுகின்ற பொழுது

மற்றைய மதங்களை வதைத்து, இலட்சக்கணக்கானோரை கொலை செய்து, நாட்டை விட்டு விரட்டி அடித்து விட்டு

அதைப் பற்றி பெருமையாக சைவநெறிப் புத்தகங்களில் கற்பிக்கிறோம் என்றால்.......

வெட்கம்! வெட்கம்!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.