Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடைபெற உள்ள பொது தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய தமிழ்த் தலைமைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழர்கள் ஒரு சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளன. ஏனெனில் போர்க்குற்ற விசாரணையை யார் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதே இங்கு முக்கியமானதாகும். ஏனெனில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் என்றும் நாட்டின் மீதான சர்வதேச விசாரணையே இன்று தென் சூடான் என்னும் நாடு உதயமாதற்கு காரணமாக இருந்தது. 
 
தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் எண்ணம் என்றுமே எந்தவொரு சிங்களத் தலைமைகளிடமும் இல்லை. அதே போல தலைமைகள்  எவ்வளவு தமிழ் மக்கள் பலத்துடன் வெற்றி வெற்றி பெற்றாலும் அது தேர்தலுடன் மட்டும் நின்று விடுகின்றது. அத் தலைமைகள் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளை சிங்களத் தலைமையிடம் கொண்டு சென்ற போதெல்லாம் அது சிங்கள அரசால் குப்பைக்குள் தான் போடப்படுகின்றது. அத்துடன் தமிழ் தலைமைகள் தமது அரசியல் இருப்பிற்காக எமது மக்களின் பிரச்சனையை கையாளுபவர்களாக இருக்கின்றார்கள். 
 
டக்ளஸ் போன்ற தலைவர்கள் தமிழர் பிரச்சனைக்கு இணக்க அரசியலே சரியானது என்று கூறிகொண்டு தமது பிழைப்பை நடத்துகின்றார்கள். ஆனால் அவர் இணக்க அரசியல் மூலம் ஒரு சிலருக்கு அரச வேலை எடுத்து கொடுத்ததை விட தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு எந்த தீர்வினையும் தேடாத சுயநலத் தலைமையாகவே இருக்கின்றார்கள்.
 
மற்றும் சிலர் வெளிநாடுகளின் நலனுக்காக எமது பிரச்சனையை திசை திருப்பி மக்களை முட்டாள்கள் ஆக்கி விடுகின்றார்கள். இது தொடர்கதையாகவே இருக்கப்போகின்றது.
 
இப்படியான அரசியல் நிலையில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் மக்கள் மிக சரியான நிலைப்பாட்டினை எடுப்பதற்குரிய தேர்தல் இது அமைந்துள்ளது. இத் தேர்தல் நிச்சயமாக எமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல் ஆகும். வழமையான தேர்தல் போலன்றி இம் முறை தமிழர்கள் சரியான வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அது கட்சி என்ற வட்டத்தினைத் தாண்டி சரியான வேட்பாளர்கள் தெரிவாக இருக்கவேண்டும். அதுவே புதிய ஆரோக்கியமான தலைமையை உருவாக்கவும், பலமான கொள்கைபற்றுடைய பேரம் பேசும் சக்தியாக இருப்பதற்கும் முக்கியமானதாக அமையும். 
 
இதற்கு முக்கிய காரணம் யாதெனில், தற்போதைய அனைத்து சிங்களத் தலைமைகளும் மிகத் தெழிவாக அனைத்து தமிழ் தலைமைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தினையும் நிராகரித்து விட்டார்கள். ஆக அனைத்து தமிழ் தலைமைகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் தேர்தல் அறிக்கை நிலைக்கு இன்றே சென்றுவிட்டது. இதன் பின் நாங்கள் சிங்களத்தலைமையுடன் இணக்க அரசியல் செய்து எமக்கு தீர்வினை பெறுவோம் என்று கூறுவதோ, தேர்தலின் பின் தேசிய அரசாங்கத்தில் இணைந்து தீர்வினை பெறுவோம் என்று கூறுவதோ தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை மட்டுமே. இதன் மூலம் மீண்டும் ஒரு சில தனிநபர்களே மந்திரிப்பதவிகளைப் பெற்று நன்மை அடையப் போகின்றார்கள்.
 
புதிய தமிழ் அரசியல் தலைமைகள் என்றால் யார்?
 
தற்போதைய தலைவர்கள் செய்ய முடியாததினை புதிய தலைவர்கள் எதனை புதிதாக செய்து விடப்போகின்றார்கள்? 
 
அப்படியாயின் அவர்கள் யார்?. என்பதே மக்களின் கேள்வியாக இருக்கும் என நினைக்கின்றோம்.
 
எமது 30 வருட ஆயுதப்போராட்டம் இறுதியில் தோற்றுப் போனாலும், அப்போராட்டம் எமது போராட்டத்தினை சர்வதேச மயப்படுத்தியுள்ளது. இறுதிப்போரில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதியை தேடி ஐக்கிய நாடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளது. எனவே இனியும் சிங்கள ஆட்சியாளர்கள் எமக்கான தீர்வினை  தருவார்கள் என்று இருக்கவேண்டியதில்லை.
 
எனவே அநியாயமாக இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்கும் போது சர்வதேசமே எமக்கான அரசியல் தீர்வினை பெற்று தந்துவிடும். 
 
அதனை இலக்கு வைத்தே எமது அடுத்த அரசியல் பயணம் அமைய வேண்டும். ஆனால் தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் அப்படி எமது பிரச்சனையை கையாளும் நோக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள்.
 
இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
 
1. தமிழீழக் கொள்கைகளுக்கு எதிராக நீண்ட காலம் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களே 2009 இறுதியுத்தத்தின் பின்னர், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து சட்டசபையில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் தமிழீழமே ஒரே தீர்வு என்றும் அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தானாக முன்வந்து தீர்மானத்தினை கொண்டு வந்து உலகத்தினையே வியப்பில் ஆழ்த்திய போது, அதற்கு நன்றியோ ஆதரவுக் குரலோ கொடுக்காதது தான் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தலைமை. 
 
2. ஆனால் அதற்கு பதில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை தமிழகத்துக்கு அனுப்பி, நாங்கள் ஒரே குடும்பம் என்றும் எமக்கிடையான பிரச்சனைகளை நாங்களே தீர்த்து வைக்கின்றோம், பிறர் அதில் தலையிடத் தேவை இல்லை என்று கூறவைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் தமிழக மக்களையும் அவமதித்தவர்கள் தான் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தலைமை.
 
3. வடகிழக்கு மக்களின் யதார்தத்தை புரிந்து கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் அவராக முன்வந்து இனப்படுகொலைத் தீர்மானத்தினை வடமாகாணசபையில் கொண்டு வந்து உலகத்தினையே வியப்பில் ஆழ்த்திய போது,  போது அதனை எதிர்த்து அறிக்கையும் விட்டவர் தான் மக்களால் தெரிவு செய்யப்படாமல் தேசியப்பட்டியில் உள்ளே வந்த சுமந்திரன் தலைமையிலான தமிழ் தலைமை.
 
4. இன்று புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களே தமிழர்களின் தற்போதைய பலம். விடுதலைக்கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு அவர்கள் வாழும் தத்தமது நாடுகளில் செய்து செய்து வரும் போராட்டங்கள், இராஜதந்திர நகர்வுகள், சந்திப்புக்கள் பரப்புரைகள் போன்றவையே இன்று ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டுவரத் தூண்டியது. இதற்காக பல வெளிநாட்டு தன்ஆர்வ அமைப்புகள், முக்கியமான வெளிநாட்டு தலைவர்கள், செய்தி ஊடகங்களின் பங்களிப்பு போன்றவை மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அத்துடன் இதற்கு பின்னணியில் புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பே முக்கிய பங்காற்றியது. எனிமேலும் அவர்களே ஈழத்தில் உள்ள மக்களின் குரலாக இருக்கப்போகின்றார்கள்.
 
5. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் சிங்கள அரசுடன் பேரம் பேசி தமக்கான தீர்வினை முன்வைத்த போது, புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து அறிவுசார், துறைசார் அறிஞர்களை ஒன்று சேர்த்து ஆலோசனை பெற்றே தீர்வு திட்டத்தினை உருவாக்கியவர்கள். ஆனால் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தலைமை சுமந்திரன் என்பவரை மட்டும் வைத்துக் கொண்டு இருவர் மட்டும் எடுக்கும் முடிவினை மக்களின் குரல் என்றும் மக்களின் ஆணை என்றும் கூறிவருகின்றனர். இன்று வரை தமிழீழத்தில் உள்ள சிவில் அமைப்புக்களோடோ, மக்களின் ஏனைய பிரதி நிதிகளோடோ புலம் பெயர்ந்து தமிழர்களின் முக்கிய அமைப்புகளோடோ ஆலோசனை பெற்றதோ, பரிசீலத்ததோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஆலோசிப்பது இல்லை. 
 
 
6. சுமந்திரனோ சம்பந்தனோ புலம் பெயர்ந்த மக்களிடம் எந்த உருப்படியான ஆலோசனையையும் பெறாமல் அவர்களை இழிவு படுத்திக்கொண்டு தாமே எமது மக்களுக்கான முடிவை எடுத்தார்கள். ஒப்புவிற்காக தமக்கு சார்பான ஒரு சில புலம் பெயர்ந்த மக்களையும், புலம் பெயர்ந்துள்ள மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யாத அமைப்புக்களுடன் மட்டும் தமது தொடர்புகளைப் பேணி அரசியல் செய்தார்கள்.
 
7. ஒரு தமிழன் என்ற காரணத்தினை மட்டுமே கொண்ட கதிர்காமரை வைத்து சந்தரிக்கா அரசாங்கம் எப்படி புலிகளை சர்வதேச நாடுகளில் பயங்கரவாதிகள் என்று தடைசெய்ததோ,. அதே போன்று தமிழர்களின் மிகப்பலமான புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் சக்தியை அழிப்பதற்காக அல்லது உடைப்பதற்காக சுமந்திரனை பயன்படுத்தியது. சிங்கப்பூரில் ஒரு சில புலம் பெயர்ந்த மக்களை அழைத்து வந்து சிங்கள் அமைச்சர்களுடன் பேசவைத்தார் சுமந்திரன்.
 
8. அத்துடன் சுமந்திரன் வெளிப்படையாகவே புலம்பெயர்ந்த தமிழர்களை புலிவால்கள் என்று சொல்லி அவமானப்படுத்தினார். 
 
9. சுமந்திரன் அவர்கள் ஆரம்பம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரக் கூடாது என்று தனது கொள்ளையில் உறுதியாக இருந்தவர். இதற்காக இன்று வரை இரகசியமாக பல வேலைகளை செய்து அரசாங்கத்தின் விசுவாசியாக மறைமுகமாக செயற்பட்டு வருபவர். எமது மக்களுக்கான தீர்வு விடையத்தில் வெளிநாடுகளை தவறாக கையாளுகின்றார். இதன் ஒரு வெளிப்பாடே ஐ. நா அறிக்கை தாமதப்படுத்தப்பட்டதுவும், பலவீனப்படுத்தப்பட்டு உள்நாட்டுக்குள் விசாரணை என்று சுருங்கவும் காரணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. 
 
ஆனால் தற்போது தேர்தல் காலம் என்பதால் சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றார் சுமந்திரன். தனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவகாரங்களை கையாள்வதற்கு பொறுப்பானவரென்று தனக்குத்தானே, அல்லது சம்பந்தன் மூலம் அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்டு செய்படுகின்றார் சுமந்திரன். ஈழத்தமிழர்களுக்கு உருப்படியான தீர்வினை பெற்றுக்கொடுக்காது, தமது ஆதிக்கத்தினுள் தமிழரை வைத்திருக்கத் துடிக்கும் நாடுகளின் கைப்பொம்மையாக சுமந்திரன் செயற்பட்டுள்ளார்.
 
10. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோது, அனந்தி சசிதரன் அவர்கள் ஒரு போரின் சாட்சியாகவும் இனவழிப்பின் சாட்சியாகவும் சாட்சியம் கொடுத்தால் அது சிங்கள அரசுக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று கூறி அவரை தடுத்தவர் சுமந்திரன் அவர்கள். 
 
இறுதியுத்தத்தில் தனது கணவனைத் தொலைத்துவிட்டு தனது மக்களின் விடிவிற்காக தனியே ஒரு பெண்ணாக அரசியல் கழத்தில் குதித்தார் அனந்தி சசிதரன். அவர் வட மாகண சபைத் தேர்தலில் இரண்டாவது அதிகப்பெரும் பெரும்பாண்மை வாக்குகளை பெற்றார். அவரை இன்று பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் செய்து அரசியல் அநாதை ஆக்க முயன்றுள்ளனர் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளில் ஒருவரான திரு மாவை சேனாதிராயா அவர்கள்.
 
இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை கூட்டமைப்பின் தலைமையின் உண்மை முகத்தினை வெளிக் கொண்டு வந்துள்ளது. தற்போதும், தமிழகத்தின் முன்னைய முதல்வர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி பற்றி அண்மையில் அனந்தி  வழங்கிய செவ்வி போன்றவற்றினை அடிப்படையாகவும் கொண்டு இந்தியாவுக்கு தமது விசுவாசத்தினை காட்டுவதற்கென்றே அவரை பழி வாங்கினார்கள். இதற்கு சம்பந்தன் மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே காரணமாகும்.
 
11. எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ் மக்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும் என்று பொய்யான வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து, ஆட்சி மாற்றம் ஒன்றினை விரும்பிய வெளியுலகத்துக்கும், இதன் மூலம் ஐ. நா அறிக்கையினை ஒத்தி வைத்து பலவீனப்படுத்தி சிங்கள யுத்தக்குற்றவாளிகளை காப்பதற்கும் பின் நின்றவர்கள் சுமந்திரன் தலைமையிலான தமிழ் தலைமை.
 
12. ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டு அதற்கு சன்மானமாக மக்களுக்கான அபிவிருத்தி என்று வெளியில் கூறிக்கொண்டு இலட்சக்கணக்கான பணத்தை சுறுட்டியும், சொகுசு வாகனத்தைப் பெற்றதுமே இவர்களது பணியாக இருந்தது.
 
13. பிரித்தானிய பிரதமர் டேவிற் கமரோன் யாழ்ப்பாணம் வந்தபோது மக்களால் தன்னெழிச்சியாக நடைபெற இருந்த பாரிய போராட்டங்களை வேண்டுமென்றே தடுத்தவர் சுமந்திரன். இதன் மூலம் சர்வதேச அளவில் வெளிக்காட்ட இருந்த மக்களின் உண்மையமான நிலமை அவரால் தடுக்கப்பட்டது.
 
14. அச்சமயம் காணாமல் போனோரின் உறவினர்கள் மேற்கொண்ட பாரிய போராட்டதை பார்த்து விட்டு வாகத்தில் இருந்து இறங்கி கூட ஆறுதல் சொல்லாமல் சொகுசு வாகனத்தில் ஒளித்து ஓடியது இத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்.
 
யார் சரியான தலைவர்கள்?
 
போருக்கு பின்னரான கடந்த 5 வருட அரசியல் ஆட்சியின் பின்னர் தமிழர் தரப்பால் உருப்படியாக எதனையுமே சாதிக்க முடியவில்லை. 30 வருட ஆயுதப்போராட்டத்தின் சொத்தாக தற்போது உள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே ஆகும். ஆனால் அதன் தலைவர்களான சம்பந்தன் மாவைசேநாதிராயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழனை தலைநிமிர வைத்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், புலிகள் அமைப்பையும் இன்று பயங்கரவாத அமைப்பென்றும், படிப்பறிவில்லாத, வேலையின்றி போராட்டத்தில் இணைந்தவர்கள் என்றும் அசிங்கப்படுத்தி வந்துள்ளனர். இது தமிழ் மக்களின் இலட்சியக் கனவை  அவமதிக்கும் ஒரு செயலாகும்.
 
அரசியல் அநாதைகளாக இருந்த இத் தலைவர்களுக்கு மீண்டும் அரசியல் அடையாளம் கொடுத்தவர்கள் புலிகள். ஆனால் அதை மறந்து தமது சுய லாபத்துக்காகவும், அந்நிய சக்திகளுக்காவும் சிங்கள தலைமையின் எலும்பு துண்டுக்காகவும் வாலாட்டுபவர்களாக மாறி விட்டனர். 
 
எனவே இவர்களை இந்த தேர்தலின் மூலம் மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவர்களை எதிர்த்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களை மக்கள் பாரிய வெற்றியடையச் செய்ய வேண்டும். குறிப்பாக யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் சுமந்திரன் மற்றும் மாவை சேநாதிராயா அவர்கள் மற்றும் திருகோணமலையில் போட்டியிடும் சம்பந்தன் அவர்களையும் தோற்கடிக்க வேண்டும்.
 
ஏனைய தமிழ் தலைமைகளில் எமக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் உள்ளனர்.
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: 
இவர் மாமனிதர் என்று தேசியத் தலைவரால் கௌரவிக்கப்பட்ட பொன்னம்பலத்தின் மகன் என்பதோடு ஒரே குறிக்கோளோடு தமிழர்களுக்காக தொடந்தும் குரல் கொடுத்துவரும் தலைவர். இவர் கோகிலவாணி, மற்றும் இராசகுமாரன் போன்ற நல்ல தமிழ்த் தேசியத்தில் பற்ருறுதி, சர்வதேசத்துடன் சரியாக அணுகி விவாதிக் கூடிய தகைமைகள் கொண்ட தலைவர்களை தன்னகத்தில் வைத்துள்ளார்.
 
1. கோகிலவாணி
இவர் 16 வயதிலிருந்து புலிகளின் பாசறையில் வளர்ந்தவள், இதனால் தேசப்பற்று, தியாகம், வீரம், விவேகம், துணிவு, என்பனவைகளில் தேசியத் தலைவரால் புடம்போடப்பட்டவர்.
 
சிறுவயதில் இருந்து ஆங்கிலப் புலமை, ஆழுமையும் மற்றும் நிர்வாகத்திறமை கொண்டவராகவும் இருந்தார். இப்படியான இளைய தலைமுறையினரே எமது மக்களின் துன்பங்களையும், துயரங்களையும், தேவைகளையும் தமக்குரியது என்பதனை புரிந்து கொண்டு நடப்பார்கள். அத்துடன் தூரநோக்கு சிந்தனையும், எதிரியிடம் சோரம் போகாதவர்களாகவும் இருப்பார்கள். மொத்தத்தில் எமது விடுதலைக் கனவை வீரியத்துடன் எடுத்துச்செல்லும் துணிவைக் கொண்டவராக இருப்பார்.
 
2. ஆங்கில விரிவுரையாளர் பேராசிரியர் திரு. இராசகுமாரன்
 
இவர் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்று யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்று சேர்த்து பாரிய அகிம்சைப் போராட்டத்தினை நடத்தியவர். அதில் சுமார் 10000 மேற்பட்டோர் பங்கு பற்றி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அப் போராட்டத்தினை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கி நல்லூரில் தியாகி திலீபன் வீரமரணம் அடைந்த இடத்தில் கொண்டு சென்று முடித்துவைத்தன் மூலம் மீண்டும் அனைத்துலகத்தினையே தமிழர் பக்கமதிரும்பிப் பார்க்க வைத்த பேராசிரியர். இவர் சர்வதேச மட்டத்தில் எமது இனத்திற்காக ஓங்கி குரல் கொடுக்கக் கூடிய ஒருவராகும்.
 
அடுத்த தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன்
இவர் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை என்றும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக கூட்டமைப்பின் தலைமைகளின் சுயநல அரசியல், புலிகளை விமர்சிப்பது போன்றவற்றினை முன்னின்று எதிர்ப்பு தெரிவிப்பவர். இதனால் இவரை கூட்டமைப்பில் இருந்து அப்புறப்படுத்த சுமந்தின் பல தடவை முயன்றுள்ளார். இவரும் முக்கிய தலைவராக இருக்கின்றார். 
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்  சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 7 அல்லது 8 இடங்களில் வெற்றி கொள்வதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமையை மாற்றலாம். இதில் எமது தமிழ் தேசியத்தில் தீவிரமாக உள்ள அரியநேந்திரன், சந்திரநேரு சந்திரகாந்தன் போன்றோரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்.
 
இவ்வெற்றிகளால் ஏற்படுத்தப்படபோகும் மாற்றங்கள் என்ன?
 
இவர்களின் வெற்றியின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புத்துயிர் பெறும். இவர்கள் நிச்சயமாக எமது இன விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுப்பார்கள். எமது மக்கள் மீதான இனவழிப்பு பற்றி முழுயைமான செய்தி மீண்டும் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்டும். தமக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகராத்தினையும், சிங்கள் அரசாங்கம் எக்காலத்திலும் எமக்கான தீர்வினை தரப்போவதில்லை என்பதனையும் போர்க்குற்றத்திற்கு உள்ளக பொறிமுறை என்றுமே நீதியை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பதனையும் ஆதார பூர்வமாக எடுத்துரைப்பார்கள்.
 
அத்துடன் மக்கள் கொடுத்துள்ள வெற்றி மூலம், மக்கள் பிரிந்து போவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்கு மறைமுக அங்கீகாரத்தினை கொடுத்துள்ளனர் என்பதனை வெளிநாடுகளுக்கு எடுத்துரைப்பார்கள். எமது மக்களின் நிரந்தர தீர்வுக்கான சரியான தீர்வாக எது அமைய வேண்டும் என்பதை சிவில் சமூகம், தமிழ்ப் பிரதிநிகள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் மக்கள் தலைவர்கள் என பலதரப்பினரோடு கை கோர்த்து, எமக்கான நீதியை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று சர்வதேசத்திடம் சரியான நீதி வேண்டி நிற்பார்கள். வர இருக்கும் ஐ.நா அறிக்ககையின் பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எமது தமிழ் தேசயம் சார்ந்த செயற்பாடுகளுக்கு இப்புதிய தலைவர்களைக் கொண்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தேவையானதொன்றாகும்.
 
எனவே சுமந்திரனை மக்கள் நிச்சையமாக தோல்வி அடையச்செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் எதிர்காலமே அடிமைத்தனமாக அமைந்து விடும். எமது மக்களின் மாவீரர்களின் தியாகங்கள் மண்ணோடு புதைக்கப்படும். இனப்படுகொலை நடைபெற்றது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கான நீதி கிடைக்காமலே போய் விடும்.
 
புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் எமது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக எம்மால் முடிந்த வரை அனைத்து வழிகளிலும் போராடுகின்றோம். எமக்கு சரியான தலைமையை உருவாக்க பாடு படுகின்றோம். எனவே நீங்களும் எமக்கு ஒத்துழைத்து சரியான முடிவினை எடுங்கள் அனைவரினது முயற்சியும் நிச்சயம் வீண்போகாது. 
 
நன்றி
 
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.
 

Edited by kpkannan

  • கருத்துக்கள உறவுகள்

இனி உந்த அமைப்பைக் கலைச்சுப் போட்டு ஓசிச்சோத்துக்கான தமிழர் அமைப்பு எண்ட பேரில வாங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வெளிப்படையாக இனங்காட்டியபடியால்தான் கஜேந்திரகுமாரையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தமிழ் மக்கள் கவிழ்த்துவிட்டார்கள்.

சிவ சிவ சம்பந்த சம்போ.....

சும் சும் சும் சுமந்திர தெய்யோ ....:grin:

இனி உந்த அமைப்பைக் கலைச்சுப் போட்டு ஓசிச்சோத்துக்கான தமிழர் அமைப்பு எண்ட பேரில வாங்கோ!

இது ஓசி கொத்து கோஸ்டி...

எனக்கு ஒரு சந்தேகம் வாலி, இதுகள் எல்லாம் இதுக்கு பிறகும் ஒமபாமாவுக்கு... அதுக்காகவா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் இருக்கு எண்டு ஒபாமாவுக்குத் தெரியுமோ தெரியாது! ஒபாமாவின் 8 வருட ஆட்சியில் இதுகள் சாதிச்சது என்ன ஓசிச் சோத்தைத் தவிர சொறி ஓசிக் கொத்தைத் தவிர! :grin:

"

அடுத்த தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன்
இவர் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை என்றும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக கூட்டமைப்பின் தலைமைகளின் சுயநல அரசியல், புலிகளை விமர்சிப்பது போன்றவற்றினை முன்னின்று எதிர்ப்பு தெரிவிப்பவர். இதனால் இவரை கூட்டமைப்பில் இருந்து அப்புறப்படுத்த சுமந்தின் பல தடவை முயன்றுள்ளார். இவரும் முக்கிய தலைவராக இருக்கின்றார். 
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்  சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 7 அல்லது 8 இடங்களில் வெற்றி கொள்வதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமையை மாற்றலாம். இதில் எமது தமிழ் தேசியத்தில் தீவிரமாக உள்ள அரியநேந்திரன், சந்திரநேரு சந்திரகாந்தன் போன்றோரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்."
 
 
இவங்க சொன்ன அத்தனை பேருக்கும் நாமம் வைச்சாச்சு... பேசாமல் இந்த அறிக்கை விடாமல் இருந்திருக்கலாம்.. :grin::grin:
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இது ஓசி கொத்து கோஸ்டி...

எனக்கு ஒரு சந்தேகம் வாலி, இதுகள் எல்லாம் இதுக்கு பிறகும் ஒமபாமாவுக்கு... அதுக்காகவா?

இதுகள் இருக்கு எண்டு ஒபாமாவுக்குத் தெரியுமோ தெரியாது! ஒபாமாவின் 8 வருட ஆட்சியில் இதுகள் சாதிச்சது என்ன ஓசிச் சோத்தைத் தவிர சொறி ஓசிக் கொத்தைத் தவிர! :grin:

கட்சி கொள்கை வெற்றி எனும் பெயரில் புலி வாந்தி அப்பட்டமாகவே தெரிகின்றது.

ஏனைய திரிகளிலும் கூட்டமைப்புக்கு ஆதரவு  காட்டுவது போல் காட்டி விடுதலைப்புலிகளையே பலர் நையாண்டி செய்து கொச்சைப்படுத்தியும் இருந்தனர். 

கட்சி கொள்கை வெற்றி எனும் பெயரில் புலி வாந்தி அப்பட்டமாகவே தெரிகின்றது.

ஏனைய திரிகளிலும் கூட்டமைப்புக்கு ஆதரவு  காட்டுவது போல் காட்டி விடுதலைப்புலிகளையே பலர் நையாண்டி செய்து கொச்சைப்படுத்தியும் இருந்தனர். 

மரன்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்.

 

எங்கே புலிகளுக்கு எதிரா எழுதியிருக்கா எண்டு பார்த்து தொரோகி பட்டம் கொடுக்க திட்டமா?

ஒபாமாவுக்கான ...... கூட்டம் என்ன தேவைக்கு வெளிக்கிட்டுதோ அதை செயாமல் சுமந்திரனுக்கு சிண்டு முடியிறதிலேயே காலத்தை போக்கியது. 

அதனால் தெளிவா தெரிவது என்னவெண்டால் இதுவும் ஒன்னொரு பினாமி அமைப்பு. இவர்களால் தயகமக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.