Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சரவையில் 51 அமைச்சர்கள்?

Featured Replies

புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்களில் இன்னமும் இழுபறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இழுபறிகளால் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது.

ஐதேகவைச் சேர்ந்த 33 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 40 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் 22 பேர் ஐதேகவையும், 18 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்ந்தவர்களாவர்.

அமைச்சரவையின் முதல் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அத்துடன், மீண்டும் மாவட்ட அமைச்சர் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளை, நாளை முதற்கட்டமாக பெரும்பாலும் ஐதேகவினரைக் கொண்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம் வரும் செப்ரெம்பர் முதலாம் நாள் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/08/23/news/9104

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தால் இணைந்த....smiley_emoticons_herzen04.gif சம்பந்தன், சுமந்திரனையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பாவங்கள்.... மிகுந்த எதிர்பார்ப்புடன், யாரும் கூப்பிடுவார்கள் என்று, காத்துக் கொண்டிருக்கும் அவர்களை ஏமாற்றக் கூடாது.:grin:

இதயத்தால் இணைந்த....smiley_emoticons_herzen04.gif சம்பந்தன், சுமந்திரனையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பாவங்கள்.... மிகுந்த எதிர்பார்ப்புடன், யாரும் கூப்பிடுவார்கள் என்று, காத்துக் கொண்டிருக்கும் அவர்களை ஏமாற்றக் கூடாது.:grin:

தமிழ்சிறீ எழுதமுதல் கொஞ்சம் செய்திகளையும் வாசித்திருக்கலாம். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறியிருந்தார்கள் - அரசிற்கு வெளியே இருந்து தேவையாயின் ஆதரவு கொடுப்போம் ஆனால் அரசில் பங்கெடுக்கமாட்டோம், பதவிகள் பெற மாட்டோம் என்று. இருப்பினும் ரணில் கூட்டமைப்பையும் தேசிய அரசாங்கத்தில் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையானது சம்பந்தரினாலும் சுமந்திரனாலும் நிராகரிக்கப்பட்டு அறிக்கையும் வெளிவிடப்பட்டிருந்தது.

இப்போது சொல்லுங்கள் பதவி கூட்டமைப்பிற்கு தேவையா அல்லது வெறும் வாயை மெல்லும் புலம் பெயர்ந்தவர்களிற்கு அவலாக தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், மீண்டும் மாவட்ட அமைச்சர் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாகாணசபைக்கு ஆப்பு வரப்போகின்றது........ஒற்றையாட்சியில் மாவட்ட அமைச்சர்கள் மூலம் தீர்வு .......தேசிய அரசாங்கம் அமைத்து அதாவது மாகாண முதலமைச்சரை விட மத்திய அரசின் மாவட்ட அமைச்சருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்படவுள்ளது போல தெரிகின்றது.....மாவட்ட அபிவிருத்தி சபை மீண்டும்......

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இப்போது சொல்லுங்கள் பதவி கூட்டமைப்பிற்கு தேவையா அல்லது வெறும் வாயை மெல்லும் புலம் பெயர்ந்தவர்களிற்கு அவலாக தேவையா?

புலம் பெயர் தமிழர் என்றால் இழப்பமோ.....அடிமாட்டு எண்ணம் கொண்ட உங்கள் சிந்தனையை  மாற்றுங்கள் ....எமது அர்ப்பணிப்புக்கள் எத்தகையது என்று தெரியாமல் சிங்களவனுக்கு ------கழுவுகிற நீங்கள் தமிழனாக இருக்க முடியாது...எமது கடுமையான உழைப்பும்..இனஉணர்வும்தான்...உங்களைப்போன்றோர் உங்கு இருப்பை தக்க வைத்துள்ளது...ஒரு சிலர் விட்டுள்ள தவறுகள் .....எல்லா புலப்பெயர்வாளர்களையும்....குறுகியவட்டத்துள் யோசிக்கவைக்கிறது...உங்களைபோன்றோர் இப்படிக்கதைக்கவும் வைக்கிறது....நேரம் இருந்தால் விபரமான விளக்கம் தருகிறேன்..

Edited by alvayan
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.